புதிய பதிவுகள்2

மட்டக்களப்பில் போலி வைத்தியர் கைது!

2 weeks 3 days ago
மட்டக்களப்பில் போலி வைத்தியர் கைது! Vhg ஜனவரி 23, 2026 வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் நேற்று(23.01.2026) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண் ஓடை பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த கிளினிக் முற்றுகையிடப்பட்டது. இதன்போது குறித்த வைத்தியசாலை அனுமதி பத்திரம் மற்றும் வைத்தியர் அடையாள அட்டைகளை கேட்டு சோதனையில் ஈடுபட்ட போது அவரிடம் எந்தவிதமான பத்திரங்களும் வைத்தியராக அடையாளப்படுத்தும் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது. குறித்த நபர் க.பொ.தர உயர் தரத்தில் மருத்துவ துறையில் கல்வி கற்று வந்துள்ளதாகவும் போதிய புள்ளிகள் இல்லாமல் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் கண்டிக்கு சென்று அங்கு மருத்துவ துறைக்கு கல்வி கற்று வந்த நிலையில் தனது சொந்த ஊரான செம்மண் ஓடையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்து வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையில் ஈடுபடும் போது வைத்தியர்கள் அணியும் ஆடை போல உடையை அணிந்து கொண்டு தன்னை தானே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அதனை தொடர்ந்து போலியாக முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் கண்டி பல்லேகல பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போல போலியான தரவுகள் மற்றும் வைத்தியர் போல உடையணிந்த படங்களை தரவேற்றம் செய்து வீட்டில் ஒரு தனியார் வைத்திய கிளினிக் ஒன்றை ஆரம்பித்து கடந்த 3 வருடங்களாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி இயங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த போலி வைத்தியரைக செயற்பட்டு வந்த 33 வயதுடையவரை கைது செய்ததுடன் அங்கிருந்த சான்று பொருட்களை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை உடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinatham.com/2026/01/blog-post_23.html

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

2 weeks 3 days ago
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு 23 Jan, 2026 | 12:08 PM இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான 'நீல்கல' (Nilgala Forest) காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 40,684.99 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாக்கும் நடவடிக்கை, 2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய வனப்பரிபாலன திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். இந்த பிரகடனத்தின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் சுற்றாடல் சீர்கேட்டைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக இது அமையும். இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு இவ்வாறான வனப்பகுதிகளைப் பாதுகாப்பது சுற்றாடல் சமநிலைக்கு மாத்திரமன்றி, வனவிலங்குகளுக்கான நிலையான வாழ்விடங்களை உருவாக்குவதற்கும் அவசியமானதாகும். மனிதர்களும் இயற்கையும் இணைந்து வாழக்கூடிய பசுமையான தேசத்தை நோக்கிய பயணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது. எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான சூழலை உருவாக்குவதற்கும், நிலையான உயிர்ச்சூழலை கட்டியெழுப்புவதற்கும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த தீர்மானம் மீள உறுதிப்படுத்துவதாக அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/236780

சுவிட்சர்லாந்து மற்றும் டாவோஸ் இலங்கை வர்த்தகச் சமூகத்தினருடன் பிரதமர் சந்திப்பு

2 weeks 3 days ago
சுவிட்சர்லாந்து மற்றும் டாவோஸ் இலங்கை வர்த்தகச் சமூகத்தினருடன் பிரதமர் சந்திப்பு 23 Jan, 2026 | 12:24 PM டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் World Economic Forum வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தின் உறுப்பினர்களையும், அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வர்த்தகத் தலைவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கூட்டுறவைப் பலப்படுத்துதல், நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒத்துழைப்புக்கான நடைமுறைச் சாத்தியமான வழிகளை ஆராய்தல் ஆகிய விடயங்கள் குறித்து இச்சந்திப்புகளின் போது கவனம் செலுத்தப்பட்டது. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்சார் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, வர்த்தகத் தொடர்புகளை வளர்ப்பதிலும், முதலீட்டு வாய்ப்புகளை இலகுபடுத்துவதிலும், சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதிலும் அவர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கினைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தொழில்முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சர்வதேச வர்த்தக வலையமைப்புடன் இலங்கையின் ஈடுபாட்டைப் பலப்படுத்துதல் ஆகியவற்றிலும் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார். அத்தோடு, சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தினருடனான சந்திப்பில், இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் போக்கு, மறுசீரமைப்பு முன்னுரிமைகள் மற்றும் முதலீட்டிற்கான முக்கிய துறைகள் குறித்துப் பிரதமர் விளக்கமளித்தார். பொருளாதார ஸ்திரத்தன்மை, முன்கூட்டியே கணிக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பற்றியும் இதன்போது அவர் எடுத்துரைத்தார். சேவைத் துறை வளர்ச்சி, மூலதனச் சந்தைகள், நிதித் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டது. அத்துடன், இந்த ஈடுபாடுகளை முதலீட்டு ஆர்வம், துறை சார்ந்த கூட்டுறவு மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு போன்ற உறுதியான பெறுபேறுகளாக மாற்றுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. மறுசீரமைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேசக் கூட்டுறவு ஆகியவற்றின் ஊடாகத் தொடர்ச்சியான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை வர்த்தகத் தரப்பினரின் தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236782

வீட்டு திட்டங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற குடியேற தாமதங்கள்: தீர்வு காண விசேட குழு நியமிப்பு - சுசில் ரணசிங்க

2 weeks 3 days ago
வீட்டு திட்டங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற குடியேற தாமதங்கள்: தீர்வு காண விசேட குழு நியமிப்பு - சுசில் ரணசிங்க Published By: Vishnu 23 Jan, 2026 | 05:24 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாடளாவிய ரீதியில் நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற பெருமளவு வீட்டு திட்டங்கள் மக்கள் குடியேறாத நிலையில் காணப்படுகின்றன. அதற்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனதுடன் அவ்வாறான வீட்டுத் திட்டங்களில் காணப்படும் சிக்கல்களை இனம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண விசேட குழு வொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் திலின சமரக்கோன் எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமது கேள்வியின் போது, சரியான, தகுதியான நபர்களுக்கு வீடுகளை வழங்கத் தவறியுள்ளதால் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட பல வீட்டுத் திட்டங்கள் இன்னும் மூடிய நிலையிலேயே காணப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பிரச்சினைகள் காணப்படும் இக் காலகட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் மக்கள் குடியேறாத நிலையில் மூடிக் கிடக்கின்றன. அந்த வகையில் அந்த வீடுகளை மீளப் பெற்று அரசாங்கம் தகுதியானவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என்றார். அது தொடர்பில் தொடர்ந்து அமைச்சர் பதிலளிக்கையில், கடந்த அரசாங்க காலத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டங்களில் பெரும்பாலானவர்கள் அன்றைய அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவர்களாகவும் சற்றும் பொருத்தமில்லாதவர்களுக்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை உட்பட பல மாவட்டங்களில் வீட்டுத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் அங்கு குடியேறாத நிலை காணப்படுகின்றது. அந்த வீட்டு திட்டங்கள் பொருத்தமற்ற இடங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் இருப்பதன் காரணமாகவே அவர்கள் அந்த வீட்டுத் திட்டங்களில் குடியேறாமல் உள்ளனர் என்பதை ஊகிக்க முடிகிறது. உண்மையில் வீடு தேவையுள்ளோருக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளதா அல்லது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அதேபோன்று கடந்த காலங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக வீடமைப்பு அதிகார சபை பல்வேறு கட்டங்களில் கடன்களை வழங்கியுள்ளது. அவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்கள் அந்த கடனை மீள செலுத்த தவறியுள்ளதால் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நிதி ரீதியில் பெறும் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த கடன்களை மீள அறவிடுவதில் பெரும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அனுராதபுரம் மாவட்டத்தில் 1656 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதில் 973 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எனினும் அந்த வீடுகளில் இதுவரை எவரும் குடியேற வில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. சில வீட்டு திட்டங்கள் வனப் பகுதியில் அமைந்துள்ளன. வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கு கடன் வழங்கும்போது சம்பந்தப்பட்ட நபர் உண்மையில் அவருக்கு வீடு இல்லாவிட்டால் அந்த இடத்தில் கிடுகு வீடு ஒன்றையாவது அமைத்துக் கொண்டு அங்கு குடியேற முயற்சிப்பார். அவ்வாறானால் வீடு கட்டி முடிந்தும் அங்கு ஏன் மக்கள் குடியேறவில்லை? அதற்கு காரணம் அவர்களுக்கு வேறு இடத்தில் வீடு இருப்பதால்தான் என்பது தெளிவாகிறது. இத்தகைய பிரச்சினைகள் அனுராதபுரம் மாவட்டத்தில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறான பாரிய வீட்டுத் திட்டங்கள் காணப்படுகின்றன. நாம் தற்போது வீடமைப்பு அதிகார சபையில் அது தொடர்பான தகவல்களைக் கோரியுள்ளோம். அந்த தகவல்களைப் பெற்றுக்கொண்டு இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/236750

காணாமல் போன தொடர்பான 11 ஆயிரம் புகார்கள்: 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்

2 weeks 3 days ago
காணாமல் போன தொடர்பான 11 ஆயிரம் புகார்கள்: 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் காணாமல் போனோர் தொடர்பாக பெறப்பட்ட 11 ஆயிரம் புகார்கள் மீதான விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். தற்போதைய சட்டமா அதிபரை நீக்குவது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் இல்லை. பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆரம்ப விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் விசாரணைக் குழுக்களின் முதல் குழு உறுப்பினர்களை உணர வைப்பதற்கான முதல் பயிற்சித் திட்டம் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்கேற்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை(22) அன்று நடைபெற்றது. காணாமல் போனோர் அலுவலகத்தின் கட்டமைப்பிற்குள் விசாரணைகளின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது, விசாரணைக் குழுக்களின் பங்கு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறுவன ஆதரவு, விசாரணைச் செயல்பாட்டின் படிகள், விசாரணை நடவடிக்கைகள் மற்றும் ஆரம்ப விசாரணை வினாத்தாள் போன்ற பிரச்சினைகள் குறித்து விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் விசாரணைக் குழுக்களின் உறுப்பினர்களை உணர வைப்பதற்காக இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பயிற்சி நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்: காணாமல் போனோர் அலுவலகம் பெறும் புகார்களை முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முக்கிய காரணம், இந்த அலுவலகத்தில் உள்ள பிரச்சனை அல்ல, அப்போதைய அரசியல் சூழ்நிலை. காணாமல் போனோர் அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாததால், 65 அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் விசாரணைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ. 375 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான பதினொரு ஆயிரம் புகார்கள் இதுவரை இந்த அலுவலகத்திற்கு வந்துள்ளன. இந்த ஐயாயிரம் புகார்களின் விசாரணைகள் இந்த ஆண்டு நிறைவடையும் என்றும், அனைத்து புகார்களின் விசாரணைகளும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புகார்களை விசாரிப்பதன் முதன்மை நோக்கம் காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல. அவர்கள் தங்கள் உயிருக்கு நீதியை விரும்புகிறார்கள். போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தேவைப்பட்டால் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வலிகளைத் தவிர்த்து, இந்த மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கேள்வி - தற்போது புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? அகழ்வாராய்ச்சிகள் தொடர்பாக டி.என்.ஏ சோதனைகள் குறித்தும் விவாதங்கள் உள்ளன. இதுகுறித்த கருத்து என்ன? பதில் - இந்தப் புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி தொடர்பாக நாங்கள் சிறப்பு ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறோம். தேவையான ஏற்பாடுகளை முறையாக வழங்கவும், இந்த அகழ்வாராய்ச்சிகளை வெளிப்படையாக நடத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாடுகளிலிருந்து அறிவியல் உதவிகளைப் பெற்று தேவையான விசாரணைகளை நடத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். விசாரணைகளின் போது தவறு செய்தவர்கள் தெரியவந்தால், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் டி.என்.ஏ மற்றும் பிற தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பெறவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கேள்வி - காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக இந்த பயிற்சி பட்டறையில் ஒரு தரவுத்தள அமைப்பு விவாதிக்கப்பட்டது. ஒரே காணாமல் போனவர் தொடர்பாக இரண்டு அல்லது மூன்று புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பதில் - இந்த அலுவலகத்திற்கு ஒரு தரவுத்தள அமைப்பு அவசியம். இந்த அலுவலகம் 2018 இல் நிறுவப்பட்டது. காணாமல் போனவர்கள் தொடர்பாக பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. எனவே, ஒரு தரவுத்தள அமைப்பு தேவை. கேள்வி - இந்த விசாரணைகள் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மட்டுமே நடத்தப்படுகின்றனவா, மேலும் தெற்கில் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றனவா? பதில் - வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் குறித்து மட்டுமல்ல. தெற்கிலும் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சிகளுடன், தெற்கிலும் விசாரணைக் குழுக்கள் நிறுவப்படுகின்றன. 1988-89 இல் நடந்த காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. வடக்குக்கும் தெற்கிற்கும் இடையில் ஒரு பிரிவு இருக்கக்கூடாது. விசாரணைகள்நடத்தப்பட வேண்டும். விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கேள்வி - தற்போதைய சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்வது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கதைகள் பரவி வருகின்றன. நீதி அமைச்சர் என்ற முறையில் உங்கள் கருத்து என்ன? பதில் - . தற்போதைய சட்டமா அதிபரை இன்று பதவியில் இருந்து நீக்குவது குறித்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்களில் எந்த வகையான அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. சட்டமா அதிபர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவர் நீக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகக் செய்திகள் வெளியிடப்படுகின்றன. சட்டமா அதிபரை மட்டுமல்ல, நீதி அமைச்சரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சில சமூக ஊடகக் செய்திகள் வெளியிடப்பட்டன. இதைத்தான் நான் சொல்ல வேண்டும். நீதி அமைச்சர் அல்லது வேறு யாரையாவது பற்றி புகார்கள் இருந்தால், இந்த நாட்டில் உள்ள சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும். நீங்கள்புகார் செய்யலாம். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விஷயங்களுடன் அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. சட்டமா அதிபரை நீக்குவது அல்லது பதவி நீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/காணாமல்-போன-தொடர்பான-11-ஆயிரம்-புகார்கள்-2-ஆண்டுகளுக்குள்-முடிக்கப்படும்/175-371404

2026 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – இந்தியாவின் சுரானா & சுரானா சட்ட நிறுவன இணைப்பு

2 weeks 3 days ago
2026 யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – இந்தியாவின் சுரானா & சுரானா சட்ட நிறுவன இணைப்பு Published By: Vishnu 23 Jan, 2026 | 04:31 AM யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் 2024ம் ஆண்டில் முதல்முதலாக கரம்கோர்த்து முதலாம் யாழ்ப்பாண சட்ட மாநாட்டை ஒழுங்கு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது, 2025ம் ஆண்டில் சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து அதனை யாழ்ப்பான சர்வதேச சட்ட மாநாடாக பரிணாமிப்பதில் வெற்றி கண்டதுடன், தொடர்ந்து இவ்வாண்டு மூன்றாவது முறையாக இச்சர்வதேச சட்ட மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில் இம்மூன்றாவது சர்வதேச சட்ட மாநாடானது இரு தினங்களும் மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலைவரை இடம்பெறவுள்ளது. ஆய்வு, மறுவடிவமைப்பு. மீள்நிர்மாணம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்துகொண்டு மாநாட்டின் தொனிப்பொருள் சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புகள் தொடர்பில் உரையாடவுள்ளனர். மாநாட்டின் முதல் நாளன்று பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரம்பிள்ளை துரைராஜாவும், கௌரவ விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தலைவர் நீதிபதி ரோகத்த அபேசூரியவும் சிறப்பு விருந்தினராக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளருமான சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மேலும் அன்றைய தினத்தின் பிரதம உரையாளர்களாக இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் நிர்வாக இயக்குனரான கலாநிதி மரியோ கோமெஸிம், பாரிஸ்டர் ஸாரா மண்டிவல்லா அக்பரால்டும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். முதல்நாள் நிகழ்வின் மற்றுமொரு பிரதான அம்சமாக “சட்டத்தின் எதிர்காலம் ஆட்சி நிர்வாகம், தொழிநுட்பம், சமூகம் மற்றும் உலக பொருளாதாரம்” எனும் தொனிப்பொருளின் கீழான குழுக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலானது ஆட்சி நிர்வாகமும் சட்டவாட்சியும், சட்டமும் தொழிநுட்பமும், சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்கள், சூழலும் காலநிலை மாற்றமும், வணிகமும் எண்ணியல் பொருளாதாரமும் எனும் தலைப்புகளின் கீழ் நடைபெறவுள்ளதோடு குறித்த தலைப்புகள் தொடர்பில் முறையே சட்டத்தரணி லூவி கணேசநாசன், இலங்கை ஜிரிஎன் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஜிரிஎன் குழுமத்தின் உலகளாவிய பகிரப்பட்ட சேவைகள் தலைவர் அர்ஜுன நாணயக்கார,கலாநிதி பகீரதி ரசனென், பேராசிரியர் அ.சர்வேஷ்வரன் மற்றும் ஷெலானி.சி.டயாஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். அதனை தொடர்ந்து யாழ் மண்ணின் பண்பாட்டுச்சுவடுகளை பிரதிபலிக்கும் பண்பாட்டு நிகழ்வொன்றும் அன்றைய நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது, அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவும், கௌரவ விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி, பிராங்க் குணவர்தனவும், சிறப்பு விருந்தினராக அரசாங்கத் துணைத் தலைமை வழக்குரைஞர் ஹரிப்ரியா ஜயசுந்தரவும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர். மேலும் அன்றைய நாளின் சிறப்புரைகளை ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரனும் பேராசிரியர் சாந்தி செகராஜசிங்கமும் வழங்கவுள்ளனர். இரண்டாம் நாளின் மற்றொரு பிரதான நிகழ்வாக ஆட்சி நிர்வாகமும் சட்டவாட்சியும், சட்டமும் தொழிநுட்பமும், சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்கள், சூழலும் காலநிலை மாற்றமும், வணிகமும் எண்ணியல் பொருளாதாரமும் எனும் தலைப்புகளின் கீழ் ஆய்வாரள்கள். தங்களின் ஆய்வுக்கட்டுரை சுருக்கங்களை முன்வைக்கவுள்ளனர். மாநாட்டின் ஓரங்கமாக “செயற்றிட்டங்களிலிருந்து பங்காளித்துவத்திற்கு தூண்டுகோலாக மக்கள் பங்கேற்பு” எனும் தொனிப்பொருளின் கீழான மாநாட்டு முன் சிறப்பு அமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது தை மாதம் 23ம் திகதி பிற்பகல் 3மணி முதல் 6 மணி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், பொறியியலாளர் அ. ரொபர்ட் பீரிஸ்,யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர் வைதேகி நரேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநாட்டு ஒழுங்கமைப்புக்குழுவினர் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/236743

🏏 யாழ்ப்பாணம் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! 🏆

2 weeks 3 days ago
🏏 யாழ்ப்பாணம் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! 🏆 adminJanuary 23, 2026 இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உத்தியோகபூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படும் இந்த உலகக்கிண்ணம், வடபகுதி ரசிகர்களின் பார்வைக்காக யாழ்ப்பாணத்திற்கும் எடுத்துச் செல்லப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 📅 கடந்த 21-ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி 21 முதல் 24-ஆம் திகதி வரை இலங்கையின் முக்கிய நகரங்களான கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இக்கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது. பெப்ரவரி 07, 2026 அன்று கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் தொடர் ஆரம்பமாகிறது. 🏟️ இந்த உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் 20 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. • கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் (8 போட்டிகள்) • கொழும்பு SSC மைதானம் (5 போட்டிகள்) • கண்டி பல்லேகலை மைதானம் (7 போட்டிகள்) பாகிஸ்தான் அணி பங்கேற்கும் அனைத்து லீக் போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறவு உள்ளதோடு, அவ்வணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் பட்சத்தில் இறுதிப்போட்டியும் கொழும்பிலேயே நடைபெறும் என்பது விசேட அம்சமாகும். யாழ். மண்ணுக்கு செல்லும் உலகக்கிண்ணத்தை நேரில் கண்டு மகிழவும், அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாகும்! 😍🔥 https://globaltamilnews.net/2026/227228/

இலங்கையில் கடந்த வருடம் 1,550 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

2 weeks 3 days ago
நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம்; 10 சதவீதமானோர் சிறுவர்கள் Published By: Vishnu 23 Jan, 2026 | 04:36 AM (செ.சுபதர்ஷனி) சமூகத்தில் உள்ள ஒவ்வொரு 10 ஆயிரம் பேரிலும் ஒருவர் தொழுநோயாளியாகக் காணப்படுகின்றார். அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 சதவீதமானோர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் சமூக வைத்திய நிபுணர் யசோதா வீரசேகர தெரிவித்தார். சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தொழுநோய் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் எதிர்வரும் 25ஆம் திகதி சர்வதேச தொழுநோய் தினமாகும். தொழுநோய் இன்னும் சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்படவில்லை. கடந்த வருடம் மாத்திரம் நாட்டில் 1282 புதிய தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 10 சதவீதமானோர், அதாவது 123 பேர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 8 சதவீதமானோர் நோயின் நாட்பட்ட நிலையில் அங்கவீணர்களாக அல்லது உடல் பலவீனமடைந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர். தொற்றுக்குள்ளான ஒருவரிடம் நோய் தாமதமாகக் கண்டறியப்படும்போது, அவரிடமிருந்து ஏனையவர்களுக்கும் நோய் பரவுகிறது. நாட்டில் பரவி வரும் இந்தத் தொற்றைத் தடுக்கப் புதிய நோயாளர்களை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தொற்றாளருடன் நீண்டகாலமாக நெருங்கிப் பழகும் குடும்பத்தினர், அயலவர்கள் மற்றும் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களே இத்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தொழுநோய் தொடர்பாகச் சமூகத்தில் நிலவி வரும் தவறான புரிதல்கள் காரணமாக, தொற்றாளர்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், நோயாளர்கள் தயக்கங்களை விடுத்துத் தாமாக முன்வந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றார். இதேவேளை, சமூக வைத்திய நிபுணர் திலினி சிறிவர்தன குறிப்பிடுகையில், தொழுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் சருமத்தை மாத்திரமல்லாது நரம்பு மண்டலத்தையும் பாதிப்பதால், நோயின் நாட்பட்ட நிலையில் உடல் பலவீனமடைந்து நோயாளர்கள் அங்கவீனர்களாகின்றனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்படுகின்றனர். தொழுநோயால் ஒருவர் உயிரிழப்பதில்லை என்றாலும், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாத நிலைக்கும் மன உளைச்சலுக்கும் தள்ளப்படுகின்றனர். இலங்கையில் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் மட்டக்களப்பு, குருநாகல் ஆகிய 5 மாவட்டங்களிலேயே அதிகளவான தொழுநோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/236744

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 3 days ago
இரஸ்சியா உக்கிரேன் போர் ஆரம்பித்த காலப்பகுதியிலேயே யாழ்களத்தில் விவாதிக்கப்பட்ட அந்த போரின் விளைவால் ஏற்ப்ட போகும் புதிய உலக ஒழுங்கு விவாதத்தில் கூறப்பட்ட விடயங்கள் அப்போது வெறும் சதிக்கோட்பாடாக பார்க்கப்பட்டது, 10 வருடங்கள் கூட இல்லை 4 வருடத்திலேயே உலக நிகழ்வுகள் கள யதார்த்தினை சொல்கிறது. ஐரோப்பாவில் இரஸ்சியாதான் ஒரு பலச்சமனிலை, அது வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாத உணமை. இரஸ்சியாவின் நீண்ட கால நோக்கம் ஐரோப்பிய பிராந்தியத்தில் பிராந்திய வல்லரசாக தன்னை நிலை நிறுத்துவதே, அதற்கு சமமான ஒரு இரஸ்சிய முதன்மையான ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு பொறிமுறையினை உருவாக்கவேண்டும் என்பதே, கடந்த காலத்தில் நேட்டோ - இரஸ்சிய கவுன்சில் போன்றவையோ அல்லது சாதாரண கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பாணியிலான நேட்டோ உறுப்புரிமையினை இரஸ்சியா விரும்பவில்லை. இரஸ்சியாவின் எதிர்ப்பார்ப்பு நேட்டோ பொறிமுரையில் சாத்தியமாகாது என கருதியமையாலேயே 2008 இல் ஐரோப்பாவிற்கு தனியான பாதுகாப்பு பொறிமுறை வேண்டும் என புட்டின் கூறினார், தற்போது மேற்கு ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளே கோருகிறார்கள். ஐரோப்பிய பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரத்தில் இரஸ்சியா தவிர்க்க முடியாத சக்தி, தற்போது அமெரிக்காவிற்கு ஐரோப்பாவில் இருக்கும் துருப்பு சீட்டு இரஸ்சியா எனும் நிலையினை ஐரோப்பிய நாடுகள் வலிந்து உருவாக்கி விடக்கூடாது. ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகாரப்பேணலிற்காக இரஸ்சியாவினை எதிர்த்தரப்பில் வைத்தால் ஐரோப்பாவிற்குத்தான் நட்டம், அல்லது மேற்கு எப்போதும் கனவு காணும் பொறிஸ் எல்சின் போன்ற ஒரு ஆட்சியாளர் ஒரு தற்கால தீர்வு மட்டுமே. இந்த பல்துருவ உலக ஒழுங்கில் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியில் இரஸ்சியா முதன்மை நாடாக வருவது இயல்பான விடயம், ஆனால் இரஸ்சியாவினை தவிர்த்து ஐரோப்பா; இரஸ்சியா அற்ற ஐரோப்பா என தற்போது போல செயற்பட்டால் அது ஒரு நெருக்கடி நிலையினை தொடர்ந்து காணப்படும் அது ஐரோப்பிய நலனிற்கு நீண்டகால அளவில் நல்லதல்ல. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் ஒரு நெருக்கமான தொடர்பாடலை உருவாக்க முனைகிறது(அண்மைய நடவடிக்கைகள்), இது ஆசிய பிராந்திய வல்லரசான சீனாவிற்கான ஒரு பலச்சமனிலையினை மட்டும் பேணுவதற்கல்ல, இரஸ்சியாவினை பலவீனமாக்குவதற்கும், இனிவரும் காலங்களில் ஊசலாடும் பலமான இந்தியாதான் பிராந்தியத்தில் அரசியல் ரீதியான செல்வாக்கினை செலுத்த போகிறது. இதனாலேயே நாங்களும் இந்தியாவுடன் எமது தொடர்புகளை அதிகப்படுத்தவேண்டும் என கருதுகிறேன், இந்தியா ஆசிய பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத சக்தி, ஐரோப்பாவில் உக்கிரேன் தன்னை ஒரு ஊசலாடும் பலமாக (இந்தியா போல்) மாற்றினால் நிலமை மாறலாம் ஆனால் உக்கிரேன் வேண்டுமென்றே தவறினை செய்வது போல இருக்கிறது (அதற்கு பின்னால் ஏதாவது உள்குத்து இருக்கலாம்).

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

2 weeks 3 days ago
கம்பிகட்டி பிளேற் போட்ட சம்பளம் 18000 ரூபா (4பேர் செய்தவை) அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி 5000 ரூபா பழைய கொமட் கழட்டி, புதிய கொமட் பூட்டிய கூலி 8000 ரூபா மொத்தம் 31000 ரூபா, மட்டமாக 30000 ரூபா தருவதாக கேட்டேன், சம்மதித்துள்ளார். 4 லீற்றர் அசிற் காசு 3200 ரூபா இன்று தெரிந்த பாமசி நண்பரின் வங்கிக் கணக்கிற்கு 32400 ரூபா மாற்றி பணத்தை பெற்றுக் கொடுக்கிறேன்.

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

2 weeks 3 days ago
தமிழரசு கட்சியின் அருவருப்பான செயல்களால்… மக்கள் அவர்களை விட்டு விலகி தேசியக் கட்சியான, அனுரா கட்சிக்கு போய் சேர்ந்து… யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களையும், ஒரு சுயேச்சை உறுப்பினரையும் தேர்ந்து எடுத்து விட்டார்கள். சும்மா கிடந்த வைத்தியர் அர்ச்சுனாவை… பாராளுமன்றத்துக்கு அனுப்பி விட்டதே இவர்கள் தான். அர்ச்சுனாவின் கௌசல்யா எடுத்த வாக்கை கூட…. சுமந்திரனால் எடுக்க முடியவில்லை. இதற்குள் மாகாண முதல்வர் கனவு வேறை. இப்படிப் பட்டவர்கள் பொங்கலுக்கு அழைப்பு விடுத்தால்… ஒருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதால்.. பம்மிக் கொண்டு இருந்து விட்டு… அனுரா கொண்டாடும் பொங்கலைப் பார்த்து, வயிறு எரிகின்றார்கள். மக்கள் உசாராகி விட்டார்கள். இவர்களின் சுத்துமாத்து அரசியல் இனி… எடுபடாது. தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்ட கட்சி என்றால்…. சுமந்திரன், சிவஞானத்தின் தமிழரசு கட்சிதான்.

"வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன?

2 weeks 3 days ago
விகாரைக்குரிய காணியை தவிர்த்து, பொதுமக்களின் காணியில் விகாரை கட்ட வேண்டிய தேவை என்ன? அது இந மத நல்லிணக்கமா அல்லது அதிகார தோரணையா? தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை, எல்லாவற்றையும் அடித்து பிடுங்குவது என்பதே இவர்களின் அரசியல் கொள்கை.

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

2 weeks 3 days ago
இலச்சினை முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டு செயற்பாடு. யாழ் இணைய உறவுகள் ஒருங்கிணைக்கும் சுகாதார வசதி திட்டம் www.yarl.com @goshan_cheஅண்ணை, @valavanஅண்ணை, @வாத்தியார் அண்ணை மற்றும் @நிழலி அண்ணை, @இணையவன் அண்ணை, மோகன் அண்ணையிடமும் ஒரு வார்த்தை கேளுங்கோ. உங்கள் கருத்தைச் சொல்லுங்க.

ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் - தயாசிறி

2 weeks 3 days ago
தயாசிறிக்கே பொறுக்கவில்லை, இராணுவ பின்புலம் கொண்ட இருவரின் நியமனத்திற்கு சிறிதரன் ஆதரவளித்தது. அப்போ மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவத்தினரை தண்டிக்க தயாசிறி ஆதரவு வழங்குவாரா? அல்லது யாரோ சொல்லிக்கொடுத்து கதைக்கிறாரா? அது இருக்கட்டும், தமிழருக்கெதிரான இந அழிப்பின் தளபதியான பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதையும் தயாசிறி தெரிவிக்க வேண்டும்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

2 weeks 3 days ago
எல்லாப்புகழும் இறைவனுக்கே (இளையராஜாவிற்கே). இளையராயாவிற்கெதிராக இறக்கிய இருவரும் ஒஸ்கார் விருது வாங்கியுள்ளார்கள் (ரகுமான் மற்றும் தமிழில் மரகதமணி என அழைக்கப்பட்ட கீரவானி).

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 3 days ago
டாவோஸில் ஐரோப்பாவை ஜெலென்ஸ்கி விமர்சித்தார்: "நீங்கள் 40 வீரர்களை கிரீன்லாந்திற்கு அனுப்பினீர்கள். அது என்ன செய்தியை அனுப்புகிறது?" Olha Kovalchuk, Alona Mazurenko - 22 ஜனவரி, 17:04 டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 80398 - டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் தனது உரையின் போது, கிரீன்லாந்து உள்ளிட்ட பாதுகாப்புப் பிரச்சினைகளில் ஐரோப்பாவின் அணுகுமுறையை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்தார் . ஆதாரம்: ஐரோப்பிய பிராவ்தா விவரங்கள்: நேட்டோ தனது இராணுவ வலிமையை நடைமுறையில் ஒருபோதும் பயன்படுத்தாத போதிலும், அமெரிக்காவின் கீழ் நேட்டோ பாதுகாப்பை ஐரோப்பா நம்பியிருப்பதாக ஜெலென்ஸ்கி விமர்சித்தார். " இன்று, ஐரோப்பா ஆபத்து வந்தால், நேட்டோ செயல்படும் என்ற நம்பிக்கையை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால் உண்மையில் கூட்டணி செயல்படுவதை யாரும் பார்த்ததில்லை . புடின் லிதுவேனியாவைக் கைப்பற்றவோ அல்லது போலந்தைத் தாக்கவோ முடிவு செய்தால், யார் பதிலளிப்பார்கள்? " என்று ஜனாதிபதி கேட்டார். கிரீன்லாந்திற்கான சமீபத்திய ஐரோப்பிய இராணுவப் பணியைப் பற்றியும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார். மூலோபாய ரீதியாக முக்கியமான பிரதேசத்தைப் பாதுகாக்க 40 வீரர்களை அனுப்புவது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது என்று அவர் கூறினார். மேற்கோள்: " ஐரோப்பா தன்னை எப்படி தற்காத்துக் கொள்வது என்று தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் 14 அல்லது 40 வீரர்களை கிரீன்லாந்திற்கு அனுப்பினால், அது எதற்காக? அது என்ன செய்தியை அனுப்புகிறது? புடினுக்கும் சீனாவுக்கும் என்ன செய்தி? இன்னும் முக்கியமாக, அது டென்மார்க்கிற்கும் என்ன செய்தியை அனுப்புகிறது? விவரங்கள்: கிரீன்லாந்து அருகே ரஷ்ய போர்க்கப்பல்களை அழிக்க உக்ரைன் ஐரோப்பாவிற்கு உதவ முடியும் என்று ஜனாதிபதி பரிந்துரைத்தார். " கிரீன்லாந்தைச் சுற்றி ரஷ்ய போர்க்கப்பல்கள் சுதந்திரமாகப் பயணித்தால் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும். உக்ரைன் உதவ முடியும். அந்தக் கப்பல்களில் ஒன்று கூட எஞ்சியிருக்காமல் பார்த்துக் கொள்ளும் நிபுணத்துவமும் ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன. கிரிமியாவிற்கு அருகில் மூழ்குவது போல் கிரீன்லாந்திற்கு அருகிலும் அவை மூழ்கக்கூடும். எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களிடம் கருவிகளும் மக்களும் உள்ளனர் ," என்று ஜெலென்ஸ்கி கூறினார், உக்ரைன் இதைச் செய்யும்படி கேட்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டார். ஈரானில் நிலவும் சூழ்நிலை குறித்து ஐரோப்பா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். சுயாதீனமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அயதுல்லாக்களின் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா செயல்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்று ஜெலென்ஸ்கி கூறினார். " ஈரானைப் பொறுத்தவரை, அமெரிக்கா என்ன செய்யும் என்பதைப் பார்க்க அனைவரும் காத்திருக்கிறார்கள். உலகம் எதையும் வழங்கவில்லை. ஐரோப்பா எதையும் வழங்கவில்லை, இந்தப் பிரச்சினையில் நுழைய விரும்பவில்லை ... ஆனால் சுதந்திரத்திற்காகப் போராடும் மக்களுக்கு நீங்கள் உதவ மறுக்கும் போது, விளைவுகள் திரும்பும், அவை எப்போதும் எதிர்மறையாகவே இருக்கும். 2020 இல் பெலாரஸ் ஒரு உதாரணம். யாரும் தங்கள் மக்களுக்கு உதவவில்லை, இப்போது ரஷ்ய ஓரெஷ்னிக் ஏவுகணைகள் பெலாரஸில் பெரும்பாலான ஐரோப்பிய தலைநகரங்களின் எல்லைக்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 2020 இல் பெலாரஷ்ய மக்கள் வெற்றி பெற்றிருந்தால் அது நடந்திருக்காது ," என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார், பெலாரஷ்ய ஆட்சிக்கு எதிராக செயல்பட ஐரோப்பிய தலைவர்களை பலமுறை அழைத்ததாகக் கூறினார். பின்னணி: அதே உரையில், அமெரிக்கா செய்தது போல், ரஷ்ய நிழல் கடற்படை டேங்கர்களை நிறுத்துமாறு உக்ரேனிய ஜனாதிபதி ஐரோப்பியர்களை வலியுறுத்தினார் . ரஷ்ய ஆட்சியாளர் விளாடிமிர் புடினை பொறுப்புக்கூற வைக்க ஐரோப்பா மிக மெதுவாக நகர்வதாகவும் ஜெலென்ஸ்கி விமர்சித்தார் . https://www.pravda.com.ua/eng/news/2026/01/22/8017403/ டிரம்பின் முன்மாதிரியைப் பின்பற்றி ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்களை முற்றிலுமாக நிறுத்துமாறு ஐரோப்பாவை ஜெலென்ஸ்கி வலியுறுத்துகிறார். Olha Kovalchuk, Alona Mazurenko - 22 ஜனவரி, 16:35 டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 57728 க்கு விண்ணப்பிக்கவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்துமாறு ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார், மேலும் அதில் ரஷ்யாவின் நிழல் கடற்படையில் இருந்து டேங்கர்களை நிறுத்துவதும் அடங்கும். ஆதாரம்: ஐரோப்பிய பிராவ்தா விவரங்கள்: டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் தனது உரையின் போது, ஐரோப்பா தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்த்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறினார், குறிப்பாக ரஷ்ய எண்ணெயை கண்டத்திற்கு கொண்டு செல்லும் நிழல் கடற்படையைக் குறிப்பிடுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய டேங்கர்களை தடுத்து நிறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். " ஐரோப்பா எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க விரும்புகிறது, ஆனால் இன்று நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கிறது - நமக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கும் என்பதை வரையறுக்கும் நடவடிக்கை. அதுதான் பிரச்சனை. ஜனாதிபதி டிரம்ப் ஏன் நிழல் கடற்படையில் இருந்து டேங்கர்களை நிறுத்தி எண்ணெய் [விநியோகங்களை] நிறுத்த முடியும், ஆனால் ஐரோப்பா ஏன் அவ்வாறு செய்யவில்லை?" என்று ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவதன் மூலம், ஐரோப்பா தனது சொந்த மக்களைப் பாதுகாக்கும் என்று அவர் வலியுறுத்தினார். மேற்கோள்: " ரஷ்ய எண்ணெய் ஐரோப்பிய கடற்கரைகள் வழியாக நேரடியாக கொண்டு செல்லப்படுகிறது. அந்த எண்ணெய் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கிறது; அந்த எண்ணெய் ஐரோப்பாவை சீர்குலைக்க உதவுகிறது. எனவே ரஷ்ய எண்ணெய் நிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு ஐரோப்பாவின் நலனுக்காக விற்கப்பட வேண்டும். ஏன் கூடாது? புடினிடம் பணம் இல்லையென்றால், ஐரோப்பாவிற்கு போர் இல்லை." பின்னணி: மன்றத்தில் தனது உரையை நிகழ்த்துவதற்கு முன்பு ஜெலென்ஸ்கி டிரம்பை சந்தித்தார் . இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது. ஜெலென்ஸ்கியின் குழு அதை "நல்லது" என்று வர்ணித்தது . Ukrainska PravdaZelenskyy urges Europe to follow Trump's example and comp...Ukrainian President Volodymyr Zelenskyy has called on Europe to completely stop the supply of Russian oil, and that includes stopping tankers from Russia's shadow fleet.

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 3 days ago
12.6 ரில்லியனில் அமெரிக்க கருவூல பணமுறி 2.34 ரில்லியன் என கூறுகிறார்கள், அந்த 2.34 ரில்லியன் கருவூல பணமுறியினை மட்டும் விற்றாலே 2008 பொருளாதார நெருக்கடியினை விட மோசமான விளைவுகள் ஏற்ப்படும் என கூறப்பட்ட்ட கட்டுரை வேறு திரியில் இணைந்த நினைவுள்ளது. இதற்கிடையில் ஜப்பான் தனது குழப்படியினை ஆரம்பித்துள்ளது. கிரீன்லாந்து ஒப்பந்த கட்டமைப்பு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்க மாட்டோம் என்றும் டிரம்ப் உறுதியளிக்கிறார். Olha Kovalchuk, Tetyana Oliynyk — 21 ஜனவரி, 21:44 டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 42033 க்கு விண்ணப்பிக்கவும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே உடனான சந்திப்பின் போது, கிரீன்லாந்து தொடர்பான எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மூலம்: ஐரோப்பிய பிராவ்தா அறிக்கையின்படி, உண்மை சமூகத்தில் டிரம்ப் . விவரங்கள்: ரூட்டேவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் விளைவாக, சில ஐரோப்பிய நாடுகள் மீது இனி வரிகளை விதிக்கத் திட்டமிடவில்லை என்று டிரம்ப் கூறினார். இந்த ஒப்பந்தம் குறித்த எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை, ஆனால் அது அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் "சிறந்ததாக" இருக்கும் என்றார் . மேற்கோள்: "நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் நான் நடத்திய மிகவும் பயனுள்ள சந்திப்பின் அடிப்படையில், கிரீன்லாந்து மற்றும் உண்மையில் முழு ஆர்க்டிக் பிராந்தியத்திற்கும் ஒரு எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த தீர்வு, நிறைவேறினால், அமெரிக்காவிற்கும், அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்." மேலும் விவரங்கள்: கிரீன்லாந்தையும் உள்ளடக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான "கோல்டன் டோம்" சுற்றி விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டிரம்ப் கூறினார் . இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் கையாள்வார்கள். பேட்ரியனில் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவை ஆதரிக்கவும் ! https://www.pravda.com.ua/eng/news/2026/01/21/8017283/ இப்போது முக்கிய பிரச்சினை கிரீன்லாந்து அல்ல, உக்ரைன் என்று நேட்டோ பொதுச் செயலாளர் கூறுகிறார். Iryna Kutielieva - 21 ஜனவரி, 13:41 ஸ்டாக் புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 573 (ஆங்கிலம்) கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள சூழ்நிலையை விட, தற்போது நேட்டோவின் முக்கிய பிரச்சனை ரஷ்ய-உக்ரைன் போர் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியுள்ளார். மூலம்: டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் ரூட், தி கார்டியன் மேற்கோள் காட்டி ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: " இந்த மற்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவதால் நாம் பந்தை இழந்துவிடுவோம் " என்று தான் கவலைப்படுவதாக ரூட் கூறினார் . மேற்கோள்: " இங்குள்ள ஆபத்து என்னவென்றால், நீங்கள் நிச்சயமாக கிரீன்லாந்தில் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அந்தப் பிரச்சினை ஒரு இணக்கமான வழியில் தீர்க்கப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். ஆனால் முக்கிய பிரச்சினை கிரீன்லாந்து அல்ல. இப்போது, முக்கிய பிரச்சினை உக்ரைன். " விவரங்கள்: கடுமையான உறைபனிக்கு மத்தியில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தற்போது உக்ரைனின் எரிசக்தி துறையை அழித்து வருவதாக ரூட் சுட்டிக்காட்டினார். மேற்கோள்: " கெய்வில் இப்போது -20 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். உக்ரைன் அதன் சொந்த மின்சாரத்தில் 60% மட்டுமே கவனித்துக் கொள்ள முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆம், டிசம்பரில் ரஷ்யர்கள் ஒரு நாளைக்கு 1,000 பேரைக் கொன்றுள்ளனர் - பலத்த காயம் அடையவில்லை, ஆனால் இறந்துள்ளனர் - உண்மைதான். டிசம்பர் மாதத்தில் அது 30,000 க்கும் அதிகமாகும்... ஆனால் அவர்கள் இன்னும் தாக்குதலைத் தொடர்கிறார்கள், இன்னும் தாக்குதலை அதிகரிக்கிறார்கள். " விவரங்கள்: உக்ரைனுக்கு இப்போது மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை என்று அவர் வலியுறுத்தினார், மேலும் எதிர்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து எந்தவொரு சாத்தியமான சவால்களுக்கும் தயாராக இருக்க ஐரோப்பா அதன் தொழில்துறை தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் படிக்க: உக்ரைனைத் தாக்கும் கிரீன்லாந்து நெருக்கடி: ஐரோப்பாவுடனான டிரம்பின் மோதல் உக்ரைனின் ஆயுதப் படைகளை எவ்வாறு பாதிக்கலாம் பின்னணி: முன்னதாக, கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் ஐரோப்பாவிற்கு முன்னுரிமையாக உள்ளது என்று நோர்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் எய்ட் கூறினார். கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள பதட்டங்கள், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை சர்வதேச சமூகம் மறந்துவிட்டதாக அர்த்தமல்ல என்று போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி கூறினார். https://www.pravda.com.ua/eng/news/2026/01/21/8017200/

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

2 weeks 3 days ago
சென்ற ஜனாதிபதி தேர்தலில்….. சங்கு கூட்டணி தமிழன் அரியநேந்திரனுக்கு வாக்கு சேகரித்த போது, சுத்துமாத்து சுமந்திரன்…. சிங்களவன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு சேகரித்த ஆள். சிங்களவன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு சேகரித்த சுமந்திரனுக்கும்… யாழ்.களத்தில், ஒரு லூசு கூட்டம் ஆதரவு கொடுத்துக் கொண்டு இருந்தது. இப்போ அவர்கள் ஓடி ஒழிந்து கொண்டார்கள். வர இருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கு, தனக்கு வாக்குப் பிச்சை கேட்டு… சங்குடன் ஐக்கியமாகியுள்ளது சுத்துமாத்து சுமந்திரன். பச்சோந்தி ஓணான் கூட… இவ்வளவு விரைவாக தனது தோலின் நிறத்தை மாற்றாது. இவர்களின் பதவி வெறி பிடித்த அரசியல்… இனி தமிழ் மக்களிடம் எடுபடாது. சுத்துமாத்து சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதால்…. எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும், அனுர கட்சிக்கு விழுந்து, தேசிய மக்கள் முன்னணி வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை… இலகுவாக வெல்லப் போகின்றது. உள்ளதையும் கெடுத்தான் நொள்ளிக் கண்ணன் நிலையில்… சுத்துமாத்து சுமந்திரன் உள்ளார். அடுத்த செருப்படி தோல்விக்கு… இப்பவே ஆள் ரெடியாகி உள்ளார்.
Checked
Mon, 02/09/2026 - 05:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed