புதிய பதிவுகள்2

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 4 days ago
🤣 ஓம் யேர்மன் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தண்டனை வரிவிதிப்பு பயமுறுத்தலை ரம்ப் வாபஸ் பெற்றுள்ளார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் மூலம் பணிய வைத்துள்ளார்கள் 👋

கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்

2 weeks 4 days ago
கிரின்லாந்து விடயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது. கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்கியே தீருவோம் என அடம்பிடித்த டிரம்ப் சுவிஸ்லாந்தில் டவோசில் நேட்டோ பிரதானியுடன் நடந்த பேச்சின் பின் - நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் ஒப்பந்தம் செய்வோம், பாதுகாப்பு வளையத்தை அமைப்போம் என நிலையை மாற்றியுள்ளார். டிரம்ப் ஏலவே இருந்த டென்மார்க்-அமரிக்கா ஒப்பந்தபடியே நடக்க ஒப்புகொண்டிருப்பதாக தெரிகிறது. கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்குவது பற்றி முன்னர் கூறினீர்களே என பத்திரிகைகள் கேட்க, மழுப்ப்பல் பதில் சொன்ன டிரம்ப்👇 டிஸ்கி மார்க் கார்னியும், ஐரோப்பிய தலைவர்களும் போட்ட போட்டில், தம்பர் கிரின்லாந்து வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளார். டவோசில் ஆளை வரவேற்க எவரும் போகவில்லை. ஆளை எந்த தலைவரும் சந்திக்கவில்லை. நேட்டோ தலைமை அதிகாரி மூலம் பேசி பணிய வைத்துள்ளார்கள். சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் கோமணத்தை கனடா+ஈயூ உருவிய நாள் இன்று😂.

கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை

2 weeks 4 days ago
என்னே அருமையான உரை! கார்னிதான் இப்போ மேற்கின் தலைவர். கார்னி அடி எடுத்து கொடுக்க ஏனைய ஐரோப்பிய தலைவர்கள் போட்டு வெளுக்க… தம்பர் கிரீன்லாந்து ஐடியாவையே கை விட்டு விட்டார்😂

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.

2 weeks 4 days ago
வாழ்த்து. வழமை போலவே இதுவும் நம்மவர்களால் ஊதி பெருப்பிக்கப்படுவதாக எனக்கு படுகிறது. நான் அறிந்த வகையில்.… மாநிலம் என நாம் இந்திய, அமெரிக்க, கனடா வில் காண்பது போல் அல்ல சுவிசில். அங்கே கண்டோன் என்பது ஒரு நகரம் அளவிலான சமஸ்டி அலகு. உதாரணமாக சூரிக் ஒரு கண்டோன். St. Gallen உம் இப்படி ஒரு நகர-சமஸ்டி அலகு. அதேபோல் முதல்வர் என்பதும் தமிழில், சீப்மினிஸ்டர், மேயர் இரு பதவிக்கும் பயன்படுகிறது. ஆனால் இவர் தவிசாளராகத்தான் தேர்வாகியுள்ளார் என நினைக்கிறேன். அதாவது சிவிகே சிவனாஞானம் வடமாகாண சபையில் வகித்த சேர்மன், பதவி போன்றது. இந்த சென் கலான் சமஸ்டி அலகின் பாராளுமன்றின் (ஏனைய நாடுகளில் இதை மா நகரசபை என்பார்கள், ஆனால் சுவிசில் இவற்றின் அதிகாரம் கூட) தவிசாளராக/சேர்மனாக இவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். எய் சபாநாயகர் போல அவை நடவைக்கையை கட்டுப்படுத்தும் வேலை. சீப்மினிஸ்டரோ, மேயரோ இல்லை என நினைக்கிறேன். பிழையாயின் திருத்தவும்.

'நல்ல சம்பளம், போட்டி குறைவு' - கப்பல் வேலையில் சேர்வது எப்படி?

2 weeks 4 days ago
இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் களவாக தகுதி சான்றிதழ் பணத்தை கொடுத்தால் இலகுவாக எடுக்கலாம் அதன் பின் .கீல் உள்ளவாறு நிறைய செய்திகள் உலகிற்கு வரலாம் . "அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் மார்ச் 2024-ல், டாலி என்ற சரக்குக் கப்பல் சக்தி இழந்து பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூணில் மோதியதால், பாலம் இடிந்து விழுந்தது" அந்த டாலி சரக்கு கப்பலில் வேலை பார்த்த வட இந்தியர்களே .

அமெரிக்காவின் அரைவாசி இடத்தில் கொட்டப்போகும் பனி.

2 weeks 4 days ago
டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 18 கோடிக்கும் மேற்பட்ட மக்களை இலக்காகக் கொண்டு, சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பனி மற்றும் கனமழையுடன் கூடிய ஒரு பெரும் குளிர்காலப் புயல் தாக்கவுள்ளது. தெற்குப் பகுதி முதல் வடகிழக்கு வரை பரவலான பனிப்பொழிவு மற்றும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பனிக்கட்டிப் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின் நேரம் மற்றும் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பது பற்றிய விவரங்கள் இங்கே உள்ளன. தெற்கு, மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை பெரிய, பரவலான குளிர்கால புயல் தாக்கும். நியூ மெக்ஸிகோ மற்றும் டெக்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்தின் சில பகுதிகள் வரை மில்லியன் கணக்கான மக்களுக்கு பனிக்கட்டி மற்றும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு தி வெதர் சேனல் குளிர்கால புயல் ஃபெர்ன் என்று பெயரிட்டுள்ளது. தி வெதர் கம்பெனி முன்னறிவிப்பாளர்களின் கூற்றுப்படி, ஃபெர்ன் அமெரிக்காவில் 180 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பனிப்பொழிவால் பாதிக்கக்கூடும். https://weather.com/storms/winter/news/2026-01-21-winter-storm-fern-ice-snow-forecast-south-northeast-midwest வெள்ளிக்கிழமை மேற்குக் கரையிலிருந்து கிழம்பி நியூயோர்க் வந்துசேர சனி இரவு ஆகலாம். பென்சில்வேனியா நியூயேர்சி சில இடங்கள் 2-3 அடி என்கிறார்கள். இன்னும் நாட்கள் இருக்கிறபடியால் காற்றோடு இழுபட்டு பாதை மாறலாம். @Justin ஆயத்தமாக இருங்கள்.

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

2 weeks 4 days ago
மோகன் அண்ணையின் துணைவி சுமதி (பூமா) அக்காவின் இறுதி நிகழ்வு இன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. வாழ்வின் மீது பிடிமானம் கொண்டு அதனை நேசிக்கின்ற எல்லோருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடுவதில்லை. இத்துயர உண்மையை மனிதவாழ்வு அவ்வப்போது நினைவூட்டிவிடுகிறது. பூமா அக்கா வாழ்வின் தருணங்களை நேசித்து ரசித்து மகிழ்ந்து வாழ்ந்தவர். சுற்றியிருப்பவர்களையும் மகிழ்வித்து வாழ்ந்த ஒருவர். நம்பிக்கையும் Positive energy உம் கொண்ட ஒருவர். மோகன் அண்ணை, வைதேகி, ஆதிரை, மற்றும் குடும்பத்தாருக்கு பெரும் இழப்பு.ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. மோகன் அண்ணை நீண்ட காலமாக நோர்வேயில் சமூகப் பணிகளிலும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த ஒருவர். கணினித் தொழில்நுட்பம், நூல் வடிவமைப்புகள், இணைய ஊடகம் என அவருடைய பணிகள் பன்முகப்பட்டவை. அவருடைய பொதுப்பணிகள் பூமா அக்காவினுடைய ஒத்துழைப்பும் புரிதலும் இன்றி சாத்தியமாகியிருக்காது. மோகன் அண்ணையின் பொதுப் பணிகளில் முதன்மையானது Yarl.com இணையத்தளத்தினை நிறுவி இயக்கியமை. புலம்பெயர் தமிழ்ச் சூழலின் இணையத் தளங்களில் முன்னோடியானது அது. இன்றைய சமூக ஊடகங்களின் வருகைக்கு முந்தைய நிலையென இணையத் தளங்களின் ஊடான chatting எனப்படுகின்ற நிகழ்நேர உரையாடல், தகவற்பகிர்வுகளையும் கருத்தாடல்களையும் குறிப்பிடலாம். இணையவெளியில் புலம்பெயர்/உலகத் தமிழர்களுக்கான கருத்துப்பகிர்வுத் தளமாகவும் யாழ் இணையம் 1998களின் ஆரம்பத்திலிருந்து இருந்துள்ளது. ஆர்வமுள்ள எவரும் எழுதலாம், கருத்துகளைப் பகிரலாம் என்ற நிலைக்கு வித்திட்ட தளங்களில் யாழ் இணையத்தின் இடம் தனித்துவமானது. செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் ஆய்வுகள், கதைகள், கவிதைகள், பகிர்வுகள், ஓவியங்கள் எனப் பல்வகையான ஆக்கங்களுக்கான தளமாக விளங்குகின்றது. புலம்பெயர் சூழலில் எழுத்தாளர்களாக உள்ள பலரின் ஆரம்பக் களமும் தளமுமாகவும் யாழ் இணையம் திகழ்ந்திருக்கின்றது. பூமா அக்கா மனிதர்களோடு இயல்பாகப் பழகக்கூடியவர். துணிந்து தன் உணர்வுகள், கருத்துகள், எண்ணக்களைச் சொல்லக்கூடியவர். ஒரு அம்மாவாகப் பிள்ளைகளின் நலன்களில் மட்டுமல்லாமல் அவர்கள் சுயதெரிவுகளுடனும் தமக்கான சுதந்திரங்களுடனும் வாழ்வில் உயர வேண்டுமென்ற எண்ணங்களைக் கொண்டவர். நோய்க் காலத்திலும் மனோபலத்தோடு அதனை எதிர்கொண்டிருக்கின்றார் என்று அறியும் போது அவரது அவர் மீது மதிப்புக் கூடுகிறது. மோகன் அண்ணையும் பிள்ளைகளும் அவரைத் தாங்கியிருந்திருக்கிறர்கள். பெரும் காதலோடும் கரிசனையோடும் நோய்க்காலத்தில் அவரைப் பராமரித்திருக்கிறார்கள். ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. https://www.facebook.com/share/p/1BgkDMANcf/?mibextid=wwXIfr

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

2 weeks 4 days ago
விடை கொடுக்கிறோம், சோதரியே! நண்பர் மோகனின் மனைவி சுமதியின் (பூமா) இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று (21.01.26) ஒஸ்லோவில் நடைபெறுகிறது. நான் நோர்வேயில் இல்லாத காரணத்தினால் இந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத மிகுந்த கவலையுடன் இப்பதிவை எழுதுகிறேன். பிரியமானவர்கள் பலரின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை; எனது அம்மா அப்பாவின் இறுதி வணக்க நிகழ்வுகள் உட்பட. சுமதி, நண்பர் மோகனின் மனைவியாகத்தான் எனக்கு அறிமுகமானார். காலப்போக்கில் நாம் குடும்ப நண்பர்கள் ஆகி விட்டோம். அவருடன் பழகிய காலங்களில் அவர் துணிச்சலானதொரு பெண்ணாகவும், குழந்தை உள்ளம் கொண்டவராகவும், நகைச்சுவை உணர்வு மிகுந்தவராகவும், வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் விருப்பம் கொண்டவராகவும், எவரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்பண்புமிகுந்தவராகவும் இவரை நாம் உணர்ந்து கொண்டோம். சுமதி இளகிய மனம் படைத்தவர். கலையுள்ளம் கொண்டவர். கலைகளை நன்கு ரசிப்பார். இயற்கையை நேசிப்பவர். பயணங்கள் செல்வதிலும், சுற்றுலா போவதிலும் விருப்பம் கொண்டவர். கணவனையும் பிள்ளகளையும் நன்கு நேசித்தவர். நண்பர்களையும் அன்பால் அரவணைத்தவர். வயதின் மூப்பில், வாழும் கால எல்லையெல்லாம் வாழந்து இயற்கையாய் கண் மூடும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இரசித்தபடியே வாழ்ந்திருக்க வேண்டியவர். 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நம் எல்லோரையும் அதிர வைத்த அந்தச் சேதி கிடைத்தது. சுமதியை கொடிய புற்றுநாய் தாக்கியுள்ளது என்பதே அந்தச் சேதி. இந்தச் செய்தியினை அவரேதான் சொன்னார். பலரும் புற்றுநோயை மறைப்பதுபோல அவர் அதனை மறைக்க முயலவில்லை. இவரை இக் கொடும் நோய் தாக்கும் என்று எவர் தான் கற்பனை பண்ணினோம் ! புற்றுநோய் என்றாலே உயர் ஆபத்து என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் உண்மைநிலை அவ்வாறு இல்லை. புற்றுநோய் எந்த இடத்தில் வருகிறது, எப்போது கண்டு பிடிக்கப்படுகிறது, எவ்வளவு தீவிரத்தன்மை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்து நோயின் பாதிப்பு வருகிறது. சிகிச்சை முறையிலும் பாரிய முன்னேற்றங்கள் வந்துள்ளன. நோயால் பாதிக்கப்பட்ட பலர் பூரண குணமாகியுள்ளனர். சுமதிக்கு வந்தது பித்தக் குழாய் புற்றுநோய்( ஆங்கிலத்தில் Bile duct cancer, நோர்வேஜிய மொழியில் Gallegangskreft). இது ஒப்பிட்டளவில் அரிதாக வருகின்ற, ஆனால் ஒரு ஆபத்தான புற்றுநோய் நோய் என்றும் கூறுவார்கள். பித்தக் குழாய் மிக மிக சிறிய உறுப்பாக இருப்பதன் காரணமாகவும், அது அமைந்திருக்கின்ற இடம் பல உறுப்புகளுடன் தொடர்புபட்டிருப்பதன் காரணமாகவும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கடினமான ஒரு புற்று நோயாகவும் இதனைக் கூறுவார்கள். இந்த நோய் வரும்போது அதனை எதிர்த்துப் போராடுகின்ற போராட்டம் வாழ்வா சாவா என்கின்ற ஒரு போராட்டம் தான். இந்த நோயிலிருந்து போராடி மீண்டும் வருவது மிகவும் கடினமான ஒரு விடயமாக இருக்கப் போகின்றது என்பதனை ஏதோ ஒரு வகையில் சுமந்து உணர்ந்து கொள்கிறார். எனக்கு இந்த இடத்தில் ஏன் இந்த நோய் வந்தது என்கின்ற கவலை ஒரு புறமும், இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்ற தேடல் மறுபுறமாகவும்அந்த நோயை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறார். இந்நோய் தொடர்பாக ஒரு வெளிப்படையான அணுகுமுறையை அவர் மேற்கொள்கிறார் தனது நோயின் தன்மை பற்றி தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ஏறத்தாழ பதினைந்து - பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிப் போராடி, ஒவ்வொரு காலடியை முன்னோக்கி வைப்பதற்கு முயன்று முயன்று தோற்றுப் போக போக இறுதிக் கணம் வரை மனந் தளராமல் அவர் போராடினார். எமது கண் முன்னால் நாம் நேசித்த ஒரு சோதரி ஒவ்வொரு மருத்துவ முயற்சிகளிலும் முன்னேற்றத்தை காணாமல் போராடிக் கொண்டிருப்பது நம்ம எல்லோருக்கும் மிகுந்த மிகுந்த மனவருத்தத்தை தந்து கொண்டிருந்தது. இறுதியில் இயற்கையின் விதிப்படி 14.01.26 அன்று அவர் இயற்கை எய்தி விடுகிறார். ஏது தான் செய்ய முடியும் எம்மால். சாவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான நோயுடன் போராடி மருத்துவமனையில் இருக்கின்ற போது அதற்கு மிகுந்த ஒரு மன உறுதி தேவை. அந்நேரத்தில் குடும்ப உறவுகளதும், நண்பர்களதும் அரவணைப்பு ஒரு நோயாளிக்கு மிகுந்த மனபலத்தை தரும். அதனை அனுபவரீதியாக உணர்ந்தவன் நான். நண்பர் மோகனும் பிள்ளைகள் வைதேகி, ஆதிரையும் சுமதியைக் காப்பாற்ற தம்மால் முடிந்ந அனைத்தையும் செய்தார்கள். சிகிச்சை தொடர்பாக நோர்வேயில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லா வாய்ப்பைக்களையும் தேடினர். எதனையும் விட்டு விடாமல் எல்லாக் கற்களையும்ப புரட்டினார்கள். எதுவும் நோர்வேயினை விட மேம்பட்டதாக இருக்கவில்லை. தனது மனைவி பதினைந்து -பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்ற போது கண்ணை இமை பாதுகாத்தது போல கிடைக்கக் கூடிய ஒவ்வொரு கணமும் தன் மனைவியின் அருகிலேயே நின்றார் நண்பர் மோகன். பிள்ளைகளும் தமது அம்மாவை நோயில் இருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்று துடி துடிப்புடன் தாயுடன் தமிக நெருங்கி நின்றார்கள். தான் அருகாமையில் இருக்கின்ற போது சுமதி பாதுகாப்பாக உணர்கிறார் என்பதை புரிந்து கொண்டு மோகன் தனது மனைவியை பராமரித்த விதம் எல்லோருக்கும் மிக மிக உன்னதமான முன்னுதாரணம். சுமதி எம்மை விட்டு பிரிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனது மனைவியும் (அவர் சுமதியின் ஒரு நல்ல நண்பர்) சுமதியின் ஏனைய இரு நண்பர்களும் வைத்தியசாலையில் சுமதியியைப் பார்க்கச் சென்றோம். அவர் இருந்த அறையின் உள்ளே சென்று அவரோடு சிறிது நேரம் கதைத்து விட்டு நான் நண்பர் மோகனுடன் அறையின் வெளியிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். உள்ளே சுமதியும் எனது மனைவியும் நண்பர்களும் பேசி சிரித்து உற்சாகமாக கதைக்கின்ற சத்தம் எமக்குக் கேட்கிறது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் போயிருக்கும். நாங்கள் மீண்டும் அறைக்குள் போகும்போது ‘ நல்ல energy உடன் சுமதி இருந்தால் பல விடயங்களையும் கதைத்தோம்’ என என் மனைவியும் நண்பர்களும் சொன்னார்கள். நான் அப்போது சுமதியிடம் ‘நீங்கள் energy யான ஆள் தானே, energy யா இருங்கோ’ என்று சொன்னேன். உடன் அவர் விம்மி அழத் தொடங்கி விட்டார. ‘நானும் எல்லாத்தையும் positive ஆகத்தான் பாக்கிறன், அண்ணா. ஆனால் நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்குதில்லை’ என்று கவலையுடன் சொன்னார் . அவர் இதனைச் செல்லும் போது இவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற மருத்தவர்களின் தகவல் எமக்குத் தெரிந்திருந்தது. பாசத்துடன் அவரது இரண்டு கன்னங்களையும் எனது இரு கைகளாலும் தடவி விட்டதனைத் தவிர எந்தப் பதிலையும் கூற என்னால் முடியவில்லை. சுமதியின் பிரிவுத்துயரைக் காலம்தான் ஆற்ற வேண்டும். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பார்கள். அதனை நம்புவோம். நணபர் மோகனதும் பிள்ளகளதும் தோழணைத்து நாம் நிற்போம். விடை கொடுக்கிறோம், சோதரியே. https://www.facebook.com/share/p/1DbBE4ME6h/?mibextid=wwXIfr

📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!

2 weeks 4 days ago
இதில் உள்ள அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். இருந்தும்... தமது தோல்விக்கு காரணத்தை தேடாமல், மற்றவரை தாக்கும் கூட்டை அடிக்கடி மாற்றி வருகின்றனர். இவர்களின் கூட்டுக்கு தோல்வியடைந்தோர் கூட்டமைப்பு என பெயரிட்டால் நல்லாக இருக்கும். Inthunathan SivaNathan

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 4 days ago
நடந்துவிட்டது. வங்காளதேசத்துக்கு ஒருநாள் அவகாசம் குடுத்திருக்கினம். ஒத்து வராவிட்டால், ஸ்கொட்லாந்து அணியை உள்ளே கொண்டுவருவார்கள். எல்லா அங்கத்தவர்களும் இதுக்கு ஆதரவு தெரிவுத்துள்ளார்கள், பாகிஸ்தானைத் தவிர.

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.

2 weeks 4 days ago
இன்றைய Tages Blatt கட்டுரையின் தமிழாக்கம். ஜெயகுமார் துரைராஜா – செங்காலனின் புதிய உயரிய தலைவர் «20 முறை இறந்திருக்கலாம்» புதிய ஆண்டின் முதல் அமர்வில் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பல பதவிகள் புதிதாக நிரப்பப்பட்டன. இதில், பசுமைக் கட்சி (Grüne) சார்ந்த ஜெயகுமார் துரைராஜா, நகர பாராளுமன்றத்தின் புதிய தலைவராக – அதாவது செங்காலனின் உயரிய பதவியாக – தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அகதியாக வந்த, ஒருகாலத்தில் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லாத ஒரு தமிழர், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் செங்காலன் நகர பாராளுமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் ஜெயகுமார் துரைராஜா. தேர்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது: «என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை இதுவே.» ஜெயகுமார் துரைராஜா 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்றார். 2016ஆம் ஆண்டு முதல் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் சார்பில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மூன்று உறுப்பினர்கள் விலகியதைத் தவிர, எந்த எதிர்ப்பு வாக்குகளும் இன்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன், பசுமைக் கட்சி மற்றும் இளைய பசுமைக் கட்சியின் பிரிவு தலைவர் கிறிஸ்டியான் ஹூபர், தேர்தல் பரிந்துரையை வழங்கினார். அவர் கூறியதாவது: «செங்காலன் நகரில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமானோர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு குடியேற்றப் பின்னணி உள்ளது. எனவே இன்று ஒரு ‘கெல்லர்’ அல்லது ‘முல்லர்’ அல்லாமல், ஒரு ‘துரைராஜா’ செங்காலனின் உயரிய பதவிக்குத் தேர்வாகுவது விசேஷமான ஒன்றல்ல. இது இந்த நகரத்தின் மற்றும் இந்த நாட்டின் உண்மையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.» இந்த யதார்த்தம் எளிதாக உருவானதல்ல; அது முன்பும் இன்றும் போராட்டங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெயகுமார் துரைராஜாவின் அனுபவங்கள் தனிப்பட்டவை அல்ல; அவை சுவிட்சர்லாந்தின் குடியேற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும். 1960களில் வந்த இத்தாலிய காலாண்டுத் தொழிலாளர்கள் முதல், 1980களின் அகதி கொள்கைகள், பால்கன் நாடுகளிலிருந்து வந்த அகதிகள், இன்றைய போர் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் வரை—குடியேற்றம் பெரும்பாலும் ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டதே தவிர, ஒரு செல்வமாக அரிதாகவே கருதப்பட்டது. இருந்தாலும், குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அது இன்றைய சமூகத்தின் இயல்பான ஓர் அங்கமாக உள்ளது. «என் இலக்கு வாழ்க்கைத் தப்பிப்பதே» பதவியேற்பு உரையில், பயிற்சி பெற்ற செவிலியராக இருந்து தற்போது சமூக ஆலோசகராக புதிய பாதையில் தன்னை அமைத்துக்கொண்டு வரும் ஜெயகுமார் துரைராஜா, உள்நாட்டுப் போர் நிலவிய தனது தாயகத்திலிருந்து தப்பியோடிய ஒரு இளைஞனின் கதையை கூறினார். அது உண்மையில், அவர் இளமையில் அனுபவித்த தனது சொந்தக் கதையே. «நான் என் குடும்பத்தை, நண்பர்களை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் விட்டுவிட்டு புறப்பட்டேன். பெற்றோர்களும் இல்லை, உடன் பயணிக்க யாருமில்லை. என் இலக்கு ஒரு பதவி அல்லது தொழில்முறை வாழ்க்கை அல்ல; உயிர் தப்பிப்பதே என் ஒரே நோக்கம்.» அவர் தொடர்ந்து கூறினார்: «போரின் நடுவிலும், தப்பியோடும் பயணத்திலும், அறியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்ற வழியிலும், நான் 20 முறை இறந்திருக்கலாம். இருந்தும் உயிர் தப்பினேன்.» அவரது வார்த்தைகள் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தின. அவை பாராளுமன்ற உறுப்பினர்களின் மனங்களை ஆழமாகத் தொட்டன. செங்காலனில் அவர் தன்னை வளர்த்துக்கொள்ளவும், ஒரு குடும்பத்தை அமைக்கவும் முடிந்தது. அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. தன்னை நம்பிய மனிதர்களை அவர் சந்தித்தார்; அந்த நம்பிக்கையே அவரை இன்று செங்காலனின் உயரிய பதவிக்கு கொண்டு வந்தது. «இந்த நாட்டிலும், இந்த நகரமான செங்காலனிலும் வாழ முடிவது ஒரு பெரும் பாக்கியம். நன்றி, செங்காலன்» என்று அவர் கூறினார். அவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் இலக்கிய வரியை (திருக்குறளை) மேற்கோள் காட்டி, அதன் பொருளை விளக்கினார்: «நன்றி உணர்வு கொண்டவர்களே முன்னேற முடியும்; மற்றவர்கள் முன்னேற முடியாது.» பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக நோக்கி அவர் கூறினார்: «உங்கள் இந்தத் தேர்வின் மூலம், நீங்கள் எனக்கு ஒரு பெரிய மரியாதையை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளீர்கள்.» பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதோடு, செங்காலன் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடமையும் தன்னிடம் இருப்பதாக அவர் நினைவூட்டினார். செங்காலன் ஒரு குடும்பநேய நகரம் என்றும், சமூக உணர்வும், விளையாட்டு-பண்பாட்டு சங்கங்களும், புதுமை, பசுமை, நிலைத்தன்மை மற்றும் பல்வகைத் தன்மையும் கொண்ட நகரம் என்றும் அவர் பாராட்டினார். «இந்த பல்வகைச் செங்காலனையும், செங்காலனுக்குள் உள்ள பல்வகைத் தன்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்» என்று அவர் கூறினார். மரியாதை, நம்பிக்கை, மதிப்பு மற்றும் நன்றி – இவைதான் நம்மை முன்னேற்றும் என்று அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் துரைராஜாவுக்கு நீண்ட நேரம் கரகோஷம் எழுந்தது. நன்றி: Tages Blatt தமிழில்: AI உதவியுடன் இணுவையூர் மயூரன். Inuvaijur Mayuran

யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.

2 weeks 4 days ago
அன்றைய பரமேசுவரா கல்லூரிதான் இன்றைய பல்கலைக்கழகம். அது சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் கட்டப்பட்ட கட்டிடம். அந்தக் கட்டிடக் கல்லூரியில்தான் நானும் படித்தேன். அக்கட்டிடத்தில் ஏதோ புரியாத அதிசயம் இருப்பதுபோல் இந்த மாணவியின் சம்பவமும் என்னைச் சிந்திக்க வைக்கிறது. நான் எட்டாவது வகுப்பு படிக்கும்போது வடமாகாண ஆசிரியர் சங்கத்தால் நடாத்தப்பட்ட ஒரு பரீட்சையில் பங்குபற்றுவதற்கான மாணவர்கள் தகுதி பார்க்கப்பட்டது. அதுசமயம் அங்கு நடைபெற்ற உள்ளகப் பரீட்சையின் பெறுபேறுகளைக் கொண்டு மாணவர்கள் தெரிவுசெய்யப் பட்டனர். அப்பரீட்சையில் கணக்கும், தமிழும் பிரதான பாடங்களாக இருந்தன. அவை இரண்டும் மிகவும் கடினமாக இருந்ததால் பலமாணவர்கள் அவற்றில் சித்திபெறவில்லை. ஏனைய பாடங்கள் மிகவும் சுலபமானது. ஆகவே மாணவர் தெரிவில் கணக்கும், தமிழும் சித்தியடைந்தோரை ஆசிரியர் சங்கத்தால் நடாத்தப்படும் பரீட்சைக்கு அனுமதிப்பதாக ஆசிரியர்கள் கூடி முடிவெடுத்தனர். நானும் தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் நான் கணக்கிலும், தமிழிலும் மட்டுமே சித்திபெற்றிருந்தேன், மற்றும் அனைத்திலும் சித்திபெறாது கோட்டை விட்டிருந்தேன். எங்கள் வகுப்பு ஆசிரியர் இதைப் பின்னர் கவனத்தில் கொண்டு “இவன் அந்த இரண்டு பாடங்களைத் தவிர மற்ற அனைத்திலுமே சித்தி பெறவில்லை இவனை எப்படி அனுப்பலாம்?” என்று ஆட்சேபனை எழுப்பினார். அச்சமயம் எங்கள் கல்லூரி அதிபர் அந்த ஆட்சேபனையை ஏற்க மறுத்து இது உங்கள்தவறு இதனை நீங்கள் முன்பே கவனித்திருக்க வேண்டும். அறிவித்தபின்பு மாற்றக் கூடாது எனக் கூறிவிட்டார். நான் வடமாகாண ஆசிரியர் சங்கம் வைத்த பரீட்சையில் பங்குபற்றி 2ம் தரத்தில் சித்தி பெற்றேன். எங்கள் வகுப்பு ஆசிரியர் முதற்கொண்டு அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். இந்த மாணவியும் தடைக்கு உட்படாது எதிர் காலத்தில் சிறந்த வைத்தியராக வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Checked
Mon, 02/09/2026 - 14:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed