பழம் பெரும் மொழி எனச் செருக்கு 'மட்டும்' கொள்வார் சிலர்
பழசு தானே எனப் பழித்துச் செல்வார் இன்னும் சிலர்
மொழியின் அழகும், வளமும் உணர்ந்து
அழியாமல் காத்திடவே அயராது உழைப்பார் எவர்?
பயன்பாடில் அருகி, வழக்கொழியும் மொழியின்
'பழம் பெருமை மட்டும்' பேசி என்ன பயன்?
அருங்காட்சியகப் பொருள் தானா தமிழ்? - மென் மேலும்
அழகுபடுத்தி ரசிக்க வேண்டிய அழகன்றோ தமிழ்!