என் இனமே என் சனமே
கூடு சேரும் பறவைகளே
நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும்
தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது
சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே
அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம்
மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம்
மரணித்த மங்கையர் மீது சத்தியம்
வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம்
பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம்
மானம் காத்த மறவர் மீது சத்தியம்
சகோதரி சகொதரன் மீது சத்தியம்
என் இனமே என் சனமே
கூடு சேரும் பறவைகளே
நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்
அதுவும் தானைத் தலைவன் காலத்திலே
என் இனமே என் சனமே
பூக்கள் பூத்துக் குலுங்கும்
தேனீக்கள் இசை பாடும்
நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து
முற்றத்து ஒற்றை பனை காத்திருக்கும்
மேன்பட்ட இனமாக
நாம் எல்லோரும்
கூடு சேரும்போது
ஒன்றுபட்ட இனமாக
எங்கள் தலைவன் பிரபாகரனின்
ஆணைப்படி
என் இனமே என் சனமே
Recommended Comments