மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...
மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...
[Monday, 2013-02-11 21:54:06]
எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம்.
step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
(வீடியோவின் URL ஐ Adress Bar இல் காணலாம்). அதாவது Adress Bar இல் உள்ள URL லில் உள்ள www. என்பதை மட்டும் அழித்துவிட்டு, அதற்கு பதிலாக ss என type செய்த பின் ENTER ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் இப்போது உங்கள் பக்கம் http://en.savefrom.net/ என்ற தளத்திற்கு தானாகவே திருப்பப்படும்.
step 2. அங்கு, எந்த 'format' இல் [eg.g. 3GP, MP4, FLV etc] வீடியோவை தரவிறக்க வேண்டுமென்பதை தெரிவு செய்துவிட்டு Download இனை 'CLICK' செய்தால் போதுமானது. இப்போது வீடியோ தரவிறக்கமாகத் தொடங்கியிருக்கும்.
0 Comments
Recommended Comments
There are no comments to display.