Jump to content
  • entries
    24
  • comments
    7
  • views
    97636

சிறுத்தை


கறுப்பி

1865 views

தேசிய விலங்காக சிறுத்தை

IPB Image

சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு.

இந்த சிறுத்தை மஞ்சள் உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டது. பூனை இன பெரிய விலங்குளான சிங்கம், புலி போல அல்லாமல் சிறுத்தை தங்க என்று குறித்த இடமும் தேவையில்லை. பாறை, குன்று அல்லது ஒரு திட்டோ, பள்ளமோ, பற்றையோ, மரமோ எங்கும் ஒரு சிறு இடம் சிறுத்தைக்குப் போதும். தமிழர் தாயகக் காட்டுச் சிறுத்தை சிறயமான், குரங்கு மயில், காட்டுக்கோழி, முள்ளம், பன்றி, முயல் என்பனவற்றை வேட்டையாடிச் சாப்பிடும். இந்தச் சிறுத்தை மூக்குநுனி தொடக்கம் வால் நுனி வரையான நீளம் ஐந்தரை அடி. ஆகக்கூடியதாக 8 அடி நீளமான சிறுத்தைகளும் உள்ளன. நிறை 100 கிலோ வரைக்கும் இருக்கும்.

சிறுத்தைக்குரிய உயிரியல் பெயர் பாந்ரா பார்டஸ் கொட்டியா (pathera pardus kotiya). புலிக்குரிய சிங்களப் பெயர் தான் கொட்டியா. இலங்கை சிறுத்தைக்குரிய உயிரியல் பெயரிடலில் சிங்கள அறிஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததலால் கொட்டியா என்பது இறுதியில் வந்துவிட்டது. புலி, சிங்கம் பதுங்கிப் பாய்ந்துதான் பிராணிகளை வேட்டையாடும். ஆனால் சிறுத்தை என்ன செய்யும் என்றால், அது பிராணிகளை வேகமாகத் துரத்திச் சென்று வேட்டையாடும். வேட்டைத்தந்திரம் சிறுத்தைக்குத் தான் கூட இருக்கின்றது என்றும் சிறுத்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சிறுத்தை 25, 30 கிலோ கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது. சிறுத்தைக்கு ஒடுங்கிய அல்லது மெல்லிய நீண்ட உடல் இருப்பாதால் வேகமாகச் சுழுன்று திரும்புதல், பாய்தல், ஓடி வேட்டையாடதுல் என்பன அதன் திறனாகும். தமிழர் தாயகக் காட்டுகதாநயாகன் தான் சிறுத்தை. இதற்குத் துல்லியமான கேட்டல் திறமை, கூர்மையான பார்வைப்புலன் உண்டு.

சிறுத்தையின் வண்ணம் காரணமாக இங்குள்ள வரண்ட காடுகள் அதற்கு நல்ல உருமறைப்பு. அதனால் சிறுத்தையைக் காடுகளில் இலேசாகத் தனித்துப் பார்க்கமுடியாது. அதோடு சிறுத்தை அதிகம் கர்ச்சிக்காது. மிக அரிதாக அடித்தொண்டையால் உறுமும், அவ்வளவும் தான். இங்கு வன்னியில் "சருகுபுலி" என்று சிறய காட்டுப்பூனையைக் காட்டுவார்கள். ஆனால் சருகுப்புலி என்று சிறுத்தைத்தான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர் தாயகத்திலோ சிங்களத் தேசத்திலோ காட்டுப்புலி இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. புலி இந்தியாவின் தேசிய விலங்கு.

சிறுத்தை பெலிடே என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. இங்கு இருக்கின்ற தேசியத்தன்னைம வாய்ந்த தனித்துவ விலங்கு சிறுத்தை தான். சிறுத்தையை ஆங்கிலத்தில் பெலிபேட் என்று அழைப்பார்கள். சிறுத்தையின் வேறு இனங்கள் உலகத்தின் வேறு நாடுகளில் வாழ்கின்றன. பாந்தர், சீற்றா என்ற இனங்களில் எல்லாம் உலகத்தில் சிறுத்தைகள் இருக்கின்றன. அவற்றைவிட இங்குள்ள காட்டுச்சிறுத்தைகள் தனித்துவமானவை.

உலகத்தில் மிக அருகி வரும் விலங்கு சிறுத்தை. தமிழர்தாயகத்தேசிய விலங்காக இருக்கின்ற பாந்ரா பாடஸ் கொட்டியா இன சிறுத்தையும் உலகின் முழுதாக அழியும் தறுவாயில் இருக்கின்ற மிக அரிதான விலங்கு. இதனை வேட்டையாடாமல் அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். வேட்டைக்காரர்கள் பல்லுக்காகவும் தோலுக்காகவும் சிறுத்தையை வேட்டையாடுவார்கள். உணவுச்சங்கிலியில் மோசமான பாதிப்பு வரும். இந்த சிறுத்தை தமிழரின் தொன்மை சங்க இலக்கியங்களிலும் வருகின்றது. அதுவே தமிழீழத்தின் தேசிய விலங்ககாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1 Comment


Recommended Comments

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கறுப்பி அக்கா! உங்கள் இரண்டாவது வலைப்பூ படைப்பை எனக்கு ஈமெயிலில் அனுப்பியதிற்கு நன்றி.சிறுத்தையை பற்றிய இந்த விவரண ஆக்கம் மிகவும் நன்றாக உள்ளது.மேன்மேலும் உங்கள்படைப்புகள் வளர என் கோடி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.