ஜார்ஜ் பெர்னான்டஸ்
இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்த அக்கால கட்டத்தில் பின்னால் இந்திய இராணுவ அமைச்சராகவிருந்த முன்னால் இந்திய இராணுவ அமைச்சர் திரு ஜார்ஜ் பெர்னான்டஸ் எழுதியது.
இராஜிவ் காந்தியின் இராணுவ சாகசத்தால் இலங்கை இந்தியாவின் வியட்நாமாக மாறும் என்று நான் 1987 ஆகஸ்ட் ஆரம்பத்தில் சொன்னேன். அப்போது இந்திய வியட்நாமிலும் ஒரு மையாய் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இராணுவத்தினர் எங்கும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்று நான் அறிந்திருந்தேன் மீண்டும் மீண்டும் நான் இதை வலியுறுத்தியிருக்கிறேன். அவர்களது பயிற்சியும், கடுமையான வாழ்க்கை முறையும் போர் அவர்களிடம் தூண்டிவிட்ட மிருகத்தனத்துடன் இணைந்து சிக்கலான சமயங்களில் அவர்களை மனிதாபமற்று நடக்கச் செய்கின்றன. இதனால்தான் ஆரம்பக் கால இந்திய இராணுவ நடவடிக்கைகளின் போது கிளம்பிய பாலியல் வல்லுறவு, கொலை கதைகளை இந்திய அரசின் பிரச்சாரகர்கள் மறுத்த போதும். நமது இந்திய இராணுவ வீரர்கள் சாரணச் சிறுவர்கள் போல் போர்களங்களில் தினமும் நற்காரியங்களை குறிப்பாக திக்கற்ற அபலைகளுக்கு செய்து கொண்டிருக்கின்றனர் என்ற வாதங்களை கேள்விக்குள்ளாக்கினேன்.
இன்று வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் தனது மையாயை நிகத்தியிருக்கிறது. இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையில் காட்டிய காட்டுமிராண்டி தனத்தைப் பற்றி லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் தனது தலையாங்கத்தில் விமர்சிக்கிறது. இந்த நாச வேலை மையாயை விட கொடுமையானது. அங்கே அமெரிக்க படைகள் நிதானமிழந்து வெறியாட்டம் ஆடினர். இலங்கையின் கிராமத்தில் இந்தியப் படையினர் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கின்றனர். ஆட்களை படுக்க வைத்து முதுகில் சுட்டு கொன்றிருக்கின்றனர்.
வேற்றுமை அதுமட்டுமல்ல மையாய் அமெரிக்க பத்திரிக்கைகளால் உலகின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டது. மையாய் பொது மக்களுக்கெதிரான அமெரிக்க இராணுவத்தின் அடாவடிச் செயலை அமெரிக்க மக்கள் குறிப்பாக பத்திரிக்கையாளர், மாணவர், இளைஞர்கள் ஒன்று திரண்டு எதிர்தனர். வல்வெட்டித் துறையில் இந்த கோர சம்பவம் நடந்து பதின்மூன்று நாட்களுக்கு புறகு அங்கு சென்ற பைனான்சியல் டைம்ஸ் (லண்டன்) பத்திரிக்கையின் டெல்கி நிருபர் டேவிட் கவுஸ்கோ இச்சம்பவத்தை அறிந்தார். இதைப் பற்றிய அவரது செய்தி ஆகஸ்ட் 17 அன்று அவரது பத்திரிக்கையில் வெளியானது. அதற்கு முன்பே ஆகஸ்ட் 13ம் தேதி லண்டன் டெலிகிராப் பத்திரிக்கை டெல்லியிலிருந்தப்படி தனது நிருபர் ஜெராமி கவ்ரான் தொகுத்தனுப்பிய செய்தியை வெளியிட்டது. இந்திய பத்திரிக்கையாளர்களின் ஒரு சிறு பகுதியினரே அதுவும் செப்டம்பர் 3ம் தேதிக்கு பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் ரீட்ட செபாஸ்டியன் கொடுத்த செய்தியை தொடர்ந்தனர்.
உண்மை என்னவென்றால் வல்வெட்டித்துறை சம்பவம் இந்திய அரசால் திட்டமிட்டு மறைக்கப் பட்டது. இந்திய பத்திரிக்கையாளர்களின் பெரும் பகுதியினர் இதில் கூட்டுச் சேர்ந்துக் கொண்டு புளகாங்கிதம் அடைந்தனர். இந்தியாவின் இராணுவம் புனிதமாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் அடாவடித்தனங்களில் ஈடுபடும்போது இப்புனிதத்தன்மை மேலும் கெடுகிறது. வட கிழக்கு மாகானங்களில் இராணுவ உடையில் நம்மவர்கள் நடத்தும் பாலியல் வல்லுறவுகளையும், கொள்ளைகளையும் பற்றி யாரேனும் வாய்திறப்பதுண்டா? ஒயினம் என்ற இடத்தில் நடந்த கேவலத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் கூட இந்தியாவில் இல்லை. இராணுவ உடையணிந்த கயவர்களும் வக்கிரம் பிடித்தவர்கலும் நடத்திய மிருகமான செயல் அது.
இந்த இடத்தில் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கிறேன். இப்படுகொலை குறித்து ஒரு மாதம் கழித்து செய்திக் கட்டுரை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை " இந்தியப் படைகளால் எரிக்கப்பட்ட வீடுகளில் காந்தி, நேரு, சுபாஸ் சந்திர போஸ் போன்ற இந்தியாவின் தலைச் சிறந்த தலைவர்களின் படங்கள் கூட எரித்து நொறுக்கப் பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது ( செப்டம்பர் 3, 1989) அவர்களது கண்களுக்கு மனிதர்களே மனிதர்களாக தெரியாதபோது படங்களா தலைவர்களாக தெரியப் போகின்றனர். - ஜார்ஜ் பெர்னான்டஸ்
0 Comments
Recommended Comments
There are no comments to display.