அது நல்லயிருக்க ஏதாவது செய்யினும்ணே
ஒழுங்கா மரியாதையா அடிமையாக இருந்தா இப்படி நடக்குமா? இனவெறின்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அது கடுமை குறைய கொஞ்ச நாள் ஆகும் குறையாம கூட இருக்கும். பட்டினியும் படுகொலையும் இருக்கத்தான் செய்யும்.
பயங்கரமா இருக்குங்க, அவங்கள பார்த்தா பரிதாபமா இருக்குங்க, நெஞ்சு துடிக்குதுங்க.
இருக்கும் இருக்கும் இருக்காத பின்னே! அதுக்கு என்ன செய்யிறது, ஆனாலும் பாதகமில்லையே, ஒட்டு மொத்தமா கொல்லலியே அங்கே இங்கேன்னு 100ம் 200மாகதானே கொல்கிறாங்க. இப்போது இருக்கிற இந்த அமைப்பு மட்டும் இல்லாம வேற அமைப்பு இருந்திருந்தா அடடா?
என்னங்க சொல்றீங்க?
அசடு!, ஈழத்தமிழர் நிலமய முதல்ல பார்த்ததும் சத்தியமாச் சொல்றேன், நான் பயந்துதான் போனேன். ஏன் இனவெறி அப்படி இருந்தது. பிறகுதான் அமைப்பை பார்த்தேன், அது தானே முக்கியம். நல்ல வேலை அது நல்லாத்தான் இருக்கு, அதனால ஒரே அடியா அழிஞ்சிடமாட்டாங்க, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கும், இந்த அமைப்பு மாறுச்சுன்னா ஒட்டுமொத்தமால்ல அழிஞ்சிடுவாங்க!
என்னன்னமோ சொல்றீங்க, ஒன்னும் புரியல
அசடு! அசடு! நானா சொல்றேன் நாட்டு நடப்பு அப்படித்தானே. அந்த நாட்டிலேயும் அப்படித்தானே இருக்கு இந்த நாட்டிலேயும் அப்படித்தானே இருக்கு, இருக்காதா பின்னே, அதுதானே முக்கியம். நான் என்ன மத்தவங்கள போல உலக அறிவு இல்லாதவனா? அல்லது மூலை சலவை செய்யப்பட்டவனா? நான் சொல்கிறேன் இப்ப இருக்கிறதும் ரொம்ம மோசமில்லை. பிறந்தவங்க எல்லாம் ஒருநாள் சாகத்தானே போறாங்க. எல்லாரும் என்ன கல்லும் சாந்தும் போட்டு கட்டி வச்சிருக்க முடியுமா? அது அவங்க அவங்க விதிப்படிதானே நடக்கும். அண்ணன் தம்பிக்குள்ளேயே அடிச்சிகிறது இல்லையா? அதோட இது கொஞ்சம் பெரிசு அவ்வளவுதான். அதுக்கு ஏன் அலட்டிகிறீங்க. அளவுதான் பெரிசு மத்தபடி எல்லாம் ஒன்னுதான். நாட்டிலே நடக்குறதுதான்.
நம்மளுக்கு அந்த நாட்டிலேயும் இந்த நாட்டிலேயும் நடக்கிறத பத்தி ஒரு மண்ணும் புரியல. ஆனாலும் அந்த அண்ணன் தம்பி பிரச்சனையின்னு சொல்லுறது சரியாத்தான் படுது. இருக்காதா பின்னே அவரு எவ்வளவு கணக்கு போட்டு கச்சிதமா சொல்லுறாரு!. அவருக்கு தெரியாதா? அவர் சோர(ர)ம் போ(ன்)றவங்க பத்திரிக்கையெல்லாம் படிக்கிறாங்க, ஆங்கிலமெல்லாம் அழகாத்தான பேசிறாங்க. ஆனாலும் அங்க ஒரு அண்ணன் வேற மாதிரி சொல்றாரே! அதனால கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கு! பார்ப்போம்.
ஆனாலும் ஈழத்தமிழருக்கு அவர் சொன்னதுல அவ்வளவு நம்பிக்கையோ திருப்தியோ இல்லை! சாவு விழுவது அவங்க வீட்டிலல்ல. ஆனாலும் யார் மீதும் நம்பிக்கை இழக்கவில்லை. எல்லோரையும் நம்புறவர்தான் அவர்கள். அனால் அவர் சொல்வது சரியல்ல என்பது தான் ஈழத்தமிழரின் எண்ணம். அது மட்டும் தானா இதோ இன்னொன்று.
எல்லாம் தெரிந்த ஏகாம்பர ஆய்வாளர் முழங்குகிறார்.
சீனாவின் ஆயுதம்
இந்தியாவின் ரேடார் தெரிஞ்சு கொடுத்தது தெரியாம என்னன்னவோ!
உலகத்தின் தாரள கடன்,
அமெரிக்காவின் ஆதரவு
அய்ரோப்பாவின் பார்வை
பாகிஸ்தானின் பார்வை
ஆள்பலம், மிக்29, மல்டி பரல் பீரங்கிகள்
கூட்டி கழிச்சி பார்த்தா ஈழத்தமிழர்கள் அடிமையா இருக்கிறதே நல்லதா படுது. என்ன நான் சொல்றது? ஒரே அடியா அழியாம, கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சி போறது நல்லதுதானே! இனவெறி அப்பப்ப கூடும் குறையும் அதுக்கு பேரு சமூகவியல்ல என்னமோ சொல்லுவாங்க, சட்டுன்னு நினைவுக்கு வரல, மனசிலேயே இருக்கு வாயில வரல. ஏகாம்பரத்துக்கும் ஊர்ல நல்ல பேரு.
ஈழத்தமிழர்கள் சோர(ர)ம் போ(ன்)றவங்க கணக்கு, ஏகாம்பரத்தின் கணக்கு இரண்டையும் தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு அல்ல என கருதி அடிக்கடி மெல்லிய குரலில் ஆனாலும் தீர்மானமான குரலில் இதனால என்ன நடக்கும். இவைகள் எப்படி என் பிரச்சனையை தீர்க்கும் என்று கூறுவார்.
ஆதோ நம்ம இனவெறி அண்ணன் தன் தம்பிகிட்ட என்னவோ சொல்றார் என்னன்னு கேட்போம். நம்ம நிலம மோசமா இருக்கும்போல இருக்க என்ன செய்யலாம்
மிக்29ம் ஆயுதங்களும் வாங்கனும்ண
யாரு கடன் கொடுப்பா?
இப்படி சொல்வோம்ண
எப்படி
குடு..குடு...குடு..குடு..................
ஓம் மலையாள பகவதி......
குடு..குடு...குடு..குடு..................
சக்கம்மா சட்டுன்னு வந்து சொல்லு
எல்லாருக்கும் கெட்ட காலம் தொடங்கிடுச்சு...
அதோ நாராயணன் வந்து சொல்றார் நமக்கும்தான்னு...
இந்தியாவுக்கு ஆபத்து!......
ஆசியாவுக்கும் ஆபத்து!...............ஏன்
உலகத்துக்கே ஆபத்து.... ஆனாலும்
வரப்போற ஆபத்த பத்தி கவலைபடாதீங்க...
நான் இருக்கன்ல நான் எல்லோரையும் காப்பாத்துரேன்...
எனக்கு காணிக்கையை வெட்டுங்க........
இல்லன்னா நீங்களெல்லாம் அழிஞ்சிடுவீங்க...........
சக்கம்மா சொல்றா.........
நம்புலன்னா நாராயணன கேட்டுப் பாருங்க..............
இதுவும் ஒர்கவுட் ஆகுத தம்பி. ஆனாலும் அங்க இருக்க அவனுங்க சொந்த கார பசங்க அழுது அழிச்சாட்டியம் பன்ன மாட்டாங்களா..
அத பத்தி நமகென்னண்ணே கவலை..அவங்களுக்கு ஆறுதல் சொல்லதான் நம்மக்கிட்ட சோர(ர)ம் போ(ன்)றவங்க இருங்காங்க இல்ல...அத அவங்க பார்த்துப்பாங்க..
அது சரி தம்பி அவங்க வீரனுங்களா இருக்காங்களே நம்மை ஓட ஒட விரட்டுராங்களே நம்மால அவங்கள அழிக்க முடியுமா?
முடியும்னே அதுக்கு 3 ஆண்டு திட்டம் இருக்குன்னே?
என்ன தம்பி சொல்றே
அங்கே ஈழத்தம்பி ஒருத்தன் இருக்காண்ணே, அவன மூன்று ஆண்டுல முடிச்சுட்டு. அவங்ககுள்ள போட்டிய உருவாக்கி விட்டுட்டா அவனுங்கக்குள்ளேயே அடிச்சுக்குவானுவ.. அதையும் நம்மகிட்ட சோரம் போனவங்க துவக்கி வச்சிடுவானுங்க. அந்த கவலைய விட்டுடுவோம்ன...
இவ்வளவு நடக்கும் போதும் அந்த நண்பர் எதோ சொன்னபிறகு ஈழத்தமிழர் கொஞ்சம் பயம் கொறஞ்சாபோல இருக்கிறார் என்னனு கேட்போம்
என்ன சொன்னார் அந்த நண்பர்?
அதுவாண்ணே, நம்ம தம்பி புத்திசாலியாகவும், திறமையாகவும் இருப்பதாலே அவங்க எங்கேயிருந்து ஆயுதம் வாங்கினாலும் அதுல பலது நம்ம தம்பிக்கிட்ட வந்துடும்ன்னு சொல்லுண்ணே..இல்லியாண்ண பின்னே!
தம்பிங்க இருக்கிற வரைக்கும் எங்களுக்கு நிம்மதி அண்ணே! அது நல்லயிருக்க ஏதாவது செய்யினும்ணே!.
0 Comments
Recommended Comments
There are no comments to display.