Jump to content
  • entries
    27
  • comments
    0
  • views
    48007

ஈனமான தொழிலே - உங்களுக்கு இசைவதாகும் போடா!


PSIVARAJAKSM

1372 views

இக்கரை இருந்தே

சக்கரை சொல் சொல்கின்றீர்

அக்கரை மீதென்ன

அக்கரையா? அதனால் வருவதோ

இக் கறை படிந்த வாதங்கள்?

அலைந்திடும் மனமென்றே

கலைத்திடவே கான்போர்

மலத்திடவே; மொழிபெயர்ப்பால்

வலைத்திடவே; மானத்தின்

காலை எடுத்துவிட்டு

மனத்தின் பெயரால் மருட்டுகின்றார்

மனத்தின் குணத்தை கூறிடுவார் - நம்மை

கணத்தில் சுருட்டிடவே

சூது செய்தே வாது செய்வார்

வம்பலப்பார் அவர்

நம்பலம் வேண்டாமென்பார்

மனபலம் போதுமென்பார் அவரை

அம்பலம் செய்திடுவோம்

நம்பலத்தை நம்பலாமே

நம்பலத்தை நம்பினால் வென்றிடுவோம்

பிறர் பலமென்றால் வெம்பிடுவோம்

மனமென்பார் ஆத்மபலமென்பார்

கர்ம பலனென்றே கடைசியி கவிழ்த்திடுவார்

பாதை இதுவென்று பகர்ந்திடுவார்

பற்பலவாக கதை விரித்திடுவார்

நம் ஒற்றுமைச் சிதைத்திடுவார்

தலைகாலிங் கறியாதே

நிலைபாடு எடுத்திடுவார் - அவர்

வலை விரித்திடுவார்

பல கட்சியென்பார் மலை உச்சியென்பார்

குச்சியில் இருக்கும் கோமனதுண்டே போதுமென்பார்

கச்சிதமாய் நம்மை கவிழ்திடவே

திரை மரைவில் திட்டஙகள் செய்து

உரைத்திடுவார் நம் பெருமை குலைத்திடுவார்

கரைத்திடுவார் நம் மனத்தை இல்லையெனில்

குரைத்திடுவார் குற்றம் கூறிடுவார்

இரையுறும் பொய்க்கு உலகென்றே

குறைத்து கூறிடுவார்; குற்றம் கண்டிடுவார்

மறையென்றே மருட்டியவர் ஏற்றம் கண்டிருந்தார்

கூறிடுவார் எப்போதும் அகிம்சையென்றே

கூடுவது சாது சங்கம் வேதாந்தமென்பார்

அடிமை கொள்ள அலைந்திடுவார் ஏனையோரை

அப்படியும் உலகத்தில் அனேகம் பேர்

கழன்றிடுவோம் அவர் அடிக்கும் கூத்தை

கணக்கில் கொள்ளார் சிங்களவன் அடிக்கும் கூத்தை

கானாமல் தமிழர் நிலையை; புரட்டு பேசி கூத்து

ஏணிந்த உலகத்தில் மாய கூத்து!

துனிந்து தமிழா நீ இந்த நிலையை மாத்து

ஏங்கினார் சீரழிந்தார்

வீடிழந்தார் மனையிழந்தார்

மாணவர்கள் படிப்பிழந்தார்

மங்கையர்கள் மானமிழந்தார்

துணைக்கு அங்கு யாருமில்லை

சூழ்ச்சியினால் பிரிந்திருந்தார்

மாட்சியினால் அரசாண்ட அவர் மண்ணில்

சூழ்ச்சியினால் சிங்களவர் குடியேற்றம்

தெளிவாக சூட்டசமத்தை தெளிந்ததனால்

சொல்லாத மெளனமுதல் அகிம்சை வரை

அத்தனையும் செய்துபார்த்தார் அழிக்கப்பட்டார்

ஒளிப் பிறக்குமென்றே உறுதிக் கொண்டு

அடிமையாய் இருந்து அழிவதைவிட

போராடி வீழ்வதென்றே புகுந்தார் சமர்களத்தே

வலிமையொன்றே இனி வாழவைக்குமென்று உணர்ந்துவிட்டார்

மானம் போற்றும் மறவர் முன்னின்று

மங்கையர் மானமிழந்தால் பாதகமில்லை

மகத்தான மானத்தில் கால் எடுத்து விக்கினமாக்கி

மனத்திலே வலியனாகி; மானம் போக்கி

பேரான வறுமையும் அச்சமும் போக்கிடாமல்

வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துகின்றார் - அவர்

வாய்மைப் பாரீர்; அவரின் தூய்மை பாரீர்

அச்சத்தினால் உறுதி அசைத்திடவே

அச்சத்தினால் அவர் அமெரிக்கர் கால்பிடித்தால் - என்றே

கூசாமல் பகர்ந்திடுவார்

அமெரிக்காருக்கு அடைமையாவதை விட

அருகிலிருக்கும் சிங்களவருக்கு அடிமையாவதே மேன்மையென்பார்

சிறப்பென்பார் சிந்திக்கச் சொல்வார்

யாருக்கு அடிமையென்பதே பிரச்சனையாக்கி

ஊருக்கு உபதேசம் செய்தால் - அவர்

பேருக்கு சுதந்திரம் வேண்டுபவர் என்றே

பாருக்கு பாரதியின் பாட்டினாலும் பறையறைவோம்!

தொண்டு செய்யும் அடிமை - உனக்குச்

சுதந்திர நினைவோடா?

பண்டு கண்டதுண்டோ? - அதற்கு

பாத்திரமாவாயோ?

ஜாதிச் சண்டைப் போச்சோ? - உங்கள்

சமயச்சண்டைப் போச்சோ?

நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்

நிற்கொணாது போடா!

அச்சம் நீங்கினாயோ? - அடிமை

ஆண்மை தாங்கினாயோ?

பிச்சை வாங்கி பிழைக்கும் - ஆசை

பேணுதலொழித்தாயோ?

கப்பல் லேறுவாயோ! - அடிமை!

கடலைத் தாண்டுவாயோ?

குப்பை விரும்பும் நாய்க்கே- அடிமை!

கொற்றத் தவிசுமுண்டோ?

ஒற்றுமை பயின்றாயோ? - அடிமை!

உடம்பில் வலிமையுண்டோ?

வெற்றுரை பேசாதே! -அடிமை

வீரியம் அறிவாயோ?

சேர்ந்து வாழுவீரோ -உங்கள்

சிறுமை குணங்கள் போச்சோ?

சோர்ந்து வீழ்தல் போச்சோ?- உங்கள்

சோம்பரை துடைத்தீரோ?

வெள்ளை நிறத்தைக் கண்டால்- பதறி

வெறுவலை ஒழித்தாயோ?

உள்ளது சொல்வேன் கேள்- சுதந்திரம்

உனக்கில்லை மறந்திடடா!

நாடு காப்பதற்க்கே - உனக்கு

ஞானம் சிறிதுமுண்டோ?

வீடுகாக்கப் போடா! - அடிமை!

வேலை செய்யப் போடா!

சேனை நடத்துவாயோ! - தொழும்புகள்

செய்திட விரும்புவாயோ?

ஈனமான தொழிலே - உங்களுக்கு

இசைவதாகும் போடா!

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.