Events
- With 'நாட்காட்டி'
- Download iCalendar export
- Subscribe to iCalendar feed
ALL
DAY
-
20 April 2017
அருட்திரு கருணாரட்ணம் அடிகளார் நினைவு நாள்.அருட்திரு கருணாரட்ணம் அடிகளார் நினைவு நாள்.
ஆன்மீகப் பணியை விடுதலைக்காக பயன்படுத்தியவராக கருணாரட்ணம் அடிகளார் விளங்கினார்.
தமிழ் மக்களின் அவலங்களை அனைத்துலக சமூகத்தின் முன் எடுத்துச் சென்றவர் என்ற வகையில் சிறிலங்கா அரசு கருணாரட்ணம் அடிகளாரை கிளைமோர்த் தாக்குதல் மூலம் படுகொலை செய்த நாள்..
சிறிலங்கா அரசு புரிந்து வரும் மனித உரிமை மீறல்களை வடக்கு - கிழக்கு மனித உரிமை செயலகம் ஊடாக அனைத்துலக சமூகத்தின் முன் எடுத்துச் செல்வதில் கருணாரட்ணம் அடிகளார் பெரும் பங்காற்றினார். யாழ்ப்பாண இடப்பெயர்வுடன் மக்கள் பேரவலத்தை சுமந்து நின்ற நேரத்தில் மக்களின் துயர் துடைப்பதில் பெரும் பங்காற்றினார்.
வெரித்தாஸ் வானொலி ஊடாக தமிழர்களின் அவலங்களை அனைத்துலக நாடுகளுக்கு எடுத்துச் செல்வதில் கருணாரட்ணம் அடிகளார் சிறப்புடன் பணியாற்றினார்.இதன் காரணமாக ஒரு ஆன்மீகப் பணியைப் புரிகின்றவர் தனது சக்திக்கு அப்பால் துயர் சுமந்து நின்ற தமிழ் மக்களின் அவலங்களை வெளியுலகிற்கு கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றினார்.