தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
முதல்வர் பழனிசாமி - தினகரன் இடையே விஜயபாஸ்கர் விவகாரத்தில் வெடித்தது மோதல் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில், முதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. 'அமைச்சர்கள் அனைவரும், தங்கள் துறையில் எடுக்க வேண்டிய முடிவுகளை, அவர்களே எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்' என, தினகரன் சமீபத்தில் அறிவித்தார். இதனால், முதல்வருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டது. பெயரளவுக்கு முதல்வராக இருப்பதை, பழனிசாமி விரும்பவில்லை. தினமும் தலைமை செயலகம் வந்தாலும், எந்தப் பணியையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். இடைத்தேர்தலில், தினகரன் தோற்றுவிட்டால், …
-
- 0 replies
- 352 views
-
-
டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம் டெல்லியில் 32-வது நாளாகப் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று சேலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன்களை தள்ளுபடி, தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 32-வது நாளாகப் போராடி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன முறையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முன்னரே அறிவித்ததைப் போல பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து சந்திக்கும் வரை, இம்மாதிரியான போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு…
-
- 1 reply
- 270 views
-
-
சசிகலா கும்பலை 'கழற்றிவிட' அமைச்சர்கள்...ஆலோசனை!: கட்சியை காப்பாற்ற முடிவெடுக்க வேண்டிய நெருக்கடி பிளவுபட்ட, அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, பழனிசாமி - பன்னீர் என, இரு தரப்பிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள், ரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர். கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சசிகலாவையும், அவர் உறவினர்களையும் ஒட்டுமொத்தமாய் புறக்கணிக்க ஆலோசித்து வருகின்றனர். ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏ.,க்கள், 33 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்ட…
-
- 0 replies
- 290 views
-
-
’ஆபரேஷன் தமிழ்நாடு' பி.ஜே.பி-யின் திட்டம்... ஓ.பன்னீர்செல்வம் சம்மதம்! தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா காரணங்களினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அதிரடியாக ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். இது களத்தில் இருந்த பல்வேறு வேட்பாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தன. ''தேர்தல் ரத்து என்பது ஜனநாயகப் படுகொலை. இது திட்டமிட்ட நாடகம்'' என்று அ.தி.மு.க (அம்மா) வேட்பாளர் டி.டி.வி.தினகரன் கடுகடுத்துள்ளார். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ''ஒரு மாணவன் காப்பி அடித்தார் என்பதற்காக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வீர்களா? அதுபோலவே ஒருவர் தவறு செய்தால் எப்படி ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்யலாம்'' என்று அதிருப்தி கருத்துகளை வெளியிட அ.தி.மு.க…
-
- 0 replies
- 542 views
-
-
‘மாவட்டச் செயலாளர்களுக்கு டி.டி.வி.தினகரன் திடீர் உத்தரவு!’ - ‘ஸ்டாம்ப்’ பேப்பர்களுடன் அலையும் சசிகலா அணி #VikatanExclusive சசிகலா அணியில் உள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு, டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து திடீரென ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, அனைத்து நிர்வாகிகளிடமும் உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்து பெற்று கட்சித்தலைமையிடம் ஏப்ரல் 17க்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகார மோதலால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக அ.தி.மு.க. பிரிந்து செயல்பட்டுவருகின்றது.. சசிகலா தரப்பு அணியினர் ஆட்சியைப் பிடித்தாலும், அடுத்தட…
-
- 0 replies
- 374 views
-
-
அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தால், தேர்தல் நின்றதால் மக்கள் கொதித்தெழுந்து உள்ளது; குடியிருப்பு பகுதிகளில், 'டாஸ்மாக்' கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு என, ஆளுங்கட்சி மீது, பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினர் வீதியில் இறங்கினாலே, மக்களின் சுடுசொற்களை எதிர்கொள்ள முடியாமல், அவமானத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆங்காங்கே வெடித்து கிளம்பும் போராட்டங்களால், அமைச்சர்கள் பீதியடைந்து உள்ளனர். பெரும்பாலானோர், கட்சியை காப்பாற்ற, பன்னீர் அணிக்கு மாற ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை அருகே, கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க் களை அடைத்து வைத்திருந்த போது, அவர்களுக்கு, 4கோடி ரூபாய் பணம்; அரசு பணிகளில், 'டெண்டர்' தருவதாக, சசி தரப்பில் உறுதி அளி…
-
- 0 replies
- 873 views
-
-
கீதா லட்சுமி... துணைவேந்தர் பணவேந்தர் ஆன கதை! அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையைக் காட்டிலும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனை, அரசியல் அரங்கையே அதிரவைத்துள்ளது. மருத்துவத் துறை வட்டாரத்தில், கடந்த சில ஆண்டுகளில், டாக்டர் கீதா லட்சுமி குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகள் வலம் வந்தன. இந்த நிலையில், அவருடைய வீட்டில் தற்போது நடந்துள்ள வருமானவரிச் சோதனை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கீதா லட்சுமி மீது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எழுப்பிவரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘மருத்துவத் துறையில், மிகக் குறுகிய காலத்தில்…
-
- 0 replies
- 917 views
-
-
குழந்தைகளுடன் ராமேஸ்வரம் வந்த இலங்கைத் தமிழ்ப் பெண்! மாமியார் கொடுமையில் இருந்து மீள்வதற்காக, குழந்தைகளுடன் அகதியாக வந்த இலங்கைத் தமிழ் பெண் ஒருவர், ராமேஸ்வரம் வந்துள்ளார். அவரிடம் கடலோர பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இலங்கை, பண்டாரநாயகபுரம் ராஜகிரி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர், வெளிநாட்டில் வசித்துவருகிறார். இவரது மனைவி தங்கம், குழந்தைகள் லக்ஷிகா, ஐஸ்நிகா, சுதிசன் ஆகியோருடன் கொழும்பில் உள்ள மாமியார் வீட்டில் வசித்துவந்துள்ளார். அங்கு, தங்கத்தை அவரது மாமியார் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால், தூத்துக்குடி அருகே உள்ள மணியாச்சியில் வசித்துவரும் தனது பெற்றோரிடம் சேர்ந்து வாழ தனது குழந்தைகள் மூவருடன் நேற்றிர…
-
- 0 replies
- 854 views
-
-
சரத், ராதிகாவிடம் வரித்துறை துருவி துருவி விசாரணை நடிகை ராதிகா மற்றும் கணவர் சரத்குமாரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்; பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியிடம், ஏழு மணி நேரம், துருவித் துருவி விசாரணை நடத்தினர். மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் குவாரி தொழிலில், பங்குதாரராக இருந்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, நண்பர்கள், உதவியாளர்கள் வீடுகள், தொழில் நிறுவனங்களிலும், 7ம் தேதி வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின; மேலும், 5 க…
-
- 0 replies
- 404 views
-
-
முதல்வர், 10 அமைச்சர்கள் 'டிஸ்மிஸ்' : கவர்னரிடம் ஸ்டாலின் சார்பில் கடிதம் சென்னை: 'முதல்வர் பழனிசாமி உட்பட, 10 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார். தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவை, தி.மு.க., முதன்மைச் செயலர் துரைமுருகன், ராஜ்யசபா எம்.பி.,க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகிய மூவரும், மும்பையில் சந்தித்தனர். அப்போது, கவர்னருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, வித்யா சாகர் ராவிடம் வழங்கினர். கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ஆர்.கே. நகர் தொகுதி யில், முதல்வர் பழனிசாமி மற்றும் அவரதுஅமைச்…
-
- 0 replies
- 309 views
-
-
அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை அமைச்சர் பதவியில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்க, முதல்வர் ஆலோசித்து வருகிறார். சென்னையில், நேற்று நடந்த, அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங் கள் சிக்கின.அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த, …
-
- 0 replies
- 1.1k views
-
-
’ஈஸ்வரியைத் தாக்கிய போலீஸ் என்ன சொல்கிறார்?’ - வைரலாகும் குரல்பதிவு! திருப்பூர் மாவட்டத்தில், மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரை போலீஸ் அதிகாரி தாக்கிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நியாயம் கேட்டு, போலீஸ் அதிகாரியின் செல்போனுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதை எதிர்த்து, அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தினர். இதில், போராட்டத்தில் பங்கேற்ற ஈஸ்வரி என்ற பெண்ணை, போலீஸ் அதிகாரி பாண்டியராஜன், சரமாரியாக…
-
- 4 replies
- 4.5k views
-
-
ரூ.89 கோடி எப்படி வந்தது? - ஐ.டி ரெய்டுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டவர்கள்! ஜூவி லென்ஸ் ‘ஆபரேஷன் வி.’ இதுதான் அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து நடந்த ரெய்டுகளுக்கான சங்கேத வார்த்தை. சேகர் ரெட்டி குரூப் இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன் ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட லிஸ்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம் குடும்பப் பிரமுகர்... இப்படி சிலரின் பெயர்கள் இருந்தன. கடைசி நிமிடத்தில் டெல்லி ரெட் சிக்னல் காட்டியதால், விஜயபாஸ்கர் தப்பித்தார். ஆனாலும், அவர் மீது எப்போதும் கண்காணிப்பு இருந்தது. ‘கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது ஒவ்வொருவருக்கும் சுமார் மூன்று கோடி ரூபாய் பணம், ஒர…
-
- 0 replies
- 935 views
-
-
வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்? அமைச்சர் விஜயபாஸ்கர் படம்: க.ஸ்ரீபரத். அவ்வளவு தத்ரூபமாக ஜெயலலிதாவின் படத்தை அதற்கு முன் யாரும் வரைந்திருக்க முடியாது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வரையப்பட்டிருந்த அந்த கோலமாவு ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த ஜெயலலிதா அப்போது அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் யார் இந்த ஏற்பாட்டையெல்லாம் செய்தது என்று கேட்கிறார், அதற்கு இந்த ஏற்பாடுகளை மருத்துவ மாணவரான தனது மகன் அண்ணாமலையும், அவரது நண்பரும் மருத்துவ மாணவரான விஜயபாஸ்கரும் ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். அப்போது தொடங்கியது, விஜயபாஸ்கரின் அரசியல் அத்தியாயம். …
-
- 0 replies
- 688 views
-
-
எடப்பாடி பழனிசாமியும் 7 அமைச்சர்களும்! -தினகரனை குறி வைக்கும் தோட்டா #VikatanExclusive ' தேர்தல் ரத்துக்கு அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்' என்ற தலைப்பில் இன்று சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேநேரம், வருமானவரித்துறையின் சோதனை வளையம் அமைச்சர்களை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ' ஆய்வில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு ஆதாரத்தைக் கொடுக்க இருக்கிறார் விஜயபாஸ்கர். அதன்பிறகே மற்ற அமைச்சர்கள் வளைக்கப்படுவார்கள்' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 'ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து' என்ற அறிவிப்பைவிடவும், அமைச்சர்களை நோக்கிப் பாயும் வருமான வரித்துறை சோதனைகளால் கலக்கம் அடைந்துள்ளனர் கார்டன் தரப்பினர். சுகாதாரத்துறை அமைச்சர் …
-
- 0 replies
- 275 views
-
-
வளைக்கப்பட்ட விஜயபாஸ்கர்... காட்டிக்கொடுத்தது அமைச்சரா? ‘‘அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்பதில் ஆட்டத்தைத் தொடங்கி... ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து என்ற பிரேக்கிங் நியூஸ் மூலம் தற்காலிகமாக தனது ஆட்டத்தை மத்திய அரசு முடித்துள்ளது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடைசி நான்கு நாள்களில் ஆர்.கே. நகர் தொகுதி நிலவரம் அடியோடு மாறிவிட்டது. ஆரம்பத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷும் முன்னணியில் இருப்பதாக வந்த கணிப்புகளை எல்லாம் கடைசி நேரத்தில் தினகரன் நொறுக்கி எடுத்துவிட்டார். ஒட்டுமொத்தமாக ஆர்.கே. நகர் தினகரன் வசம் வந்துவிட்டது. சி.ஆர்.சரஸ்வதி, தம்பிதுரை மீது தக்காளி வீசியவர்கள், தினகரன் போனபோது ஆரத்தி எடுத்த…
-
- 1 reply
- 2.3k views
-
-
தேர்தல் ஆணையத்தில் 17-ம் தேதி விசாரணை: அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் யாருக்கு? - தொண்டர்கள் ஆதரவை திரட்டும் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை பெறு வதற்கான முயற்சியில் அதிமுக வின் இரு அணிகளும் தீவிரமாகி உள்ளன. அதிமுகவின் பொதுச்செய லாளராக சசிகலா தேர்வு செய் யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த னர். இதையடுத்து, சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் கடிதம் மூலமும் நேரிலும் விளக்கம் பெற்றது. இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்…
-
- 1 reply
- 322 views
-
-
ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது முதல் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து வரை...பி.ஜே.பி-யின் பின்னணி என்ன? தமிழகத்தில் ஜெயலலிதா மரணம் முதல் ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து வரை கடந்த 4 மாதங்களில் நடந்த எத்தனையோ அரசியல் நிகழ்வுகளுக்கும் பி,ஜே.பி-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அதிரடியான அரசியல் நிகழ்வுகளுக்கும் பி.ஜே.பி அல்லது மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வரை எத்தனையோ பி.ஜே.பி தலைவர்கள் பலமுறை தங்கள் கருத்துகளை உறுதிபடத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசி…
-
- 0 replies
- 269 views
-
-
தேர்தல் செலவினப் பட்டியல் விவகாரம்! எடப்பாடி பழனிசாமிடம் விசாரணை? சென்னை ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி நடப்பதாக இருந்த இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கியது, குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அனைத்துக்கும் உச்சமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் முதல்வர் உள்பட அமைச்சர்களுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. வருமான வர…
-
- 0 replies
- 201 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆட்சியைக் கவிழ்க்க அடுக்கடுக்கான அஸ்திரங்கள்! வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்த கழுகார், ‘‘அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலைத் தாண்டி ஆபீஸுக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. டி.டி.வி.தினகரனின் நாற்காலிக் கனவில் விழுந்த ஓட்டை மாதிரி, மெட்ரோ ரயில் பணிகளால் அண்ணா சாலையில் பெரும் பள்ளம் விழுந்திருக்கிறது’’ என்றார். ஜில்லென மோர் கொடுத்து உபசரித்தோம். ‘‘நீர் சொன்னமாதிரியே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தள்ளிப்போய்விட்டதே?” என்று கேட்டுவிட்டு, 5.4.17 தேதியிட்ட ஜூ.வி இதழைக் காட்டினோம். ‘ஃபெரா பொறியில் தினகரன்! தள்ளிப்போகுமா ஆர்.கே. நகர் தேர்தல்?’ என்ற தலைப்பிலான கவர் ஸ்டோரியைப் புரட்டினார். பிறகு, ‘‘இப்போது ஆர்.கே. நகர் ஓவர். சனிக் கிழமையிலிருந்…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப் பட்டதால், பழனிசாமியை பதவியிறக்கி விட்டு, தினகரனை முதல்வராக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு இறங்கியுள்ளது. 'கூஜா துாக்கி' களின் இந்த திட்டத்தை முறியடிக்க, சசி எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், அமைச்சர் கள் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக அறிவிக்கப்பட்ட சசிகலா, சிறையில் அடைக்கப் பட்ட பின், கட்சியின் முழு கட்டுப்பாடும், தினகரன் கைக்கு வந்து விட்டது. சசிகலாவை ஆதரித்த அதே கும்பல், இப்போது தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அவரை நிறுத்தி வெற்றி பெற வைக்கவும், பண பலத்துடன் களமிறங்கி யது. தினகரன் வெற்றி பெற்ற பின், அவரை முதல்வராக்கவும…
-
- 0 replies
- 409 views
-
-
டெல்லி சாலையில் மண்சோறு சாப்பிட்டு தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம் Image captionஜந்தர் மந்தர் சாலையில் மண் சோறு டெல்லியில் கடந்த 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், தங்களது நூதனப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மண்சோறு சாப்பிட்டனர். நேற்று திங்கட்கிழமை, பிரதமர் அலுவலகத்தில் மனுக்கொடுப்பதற்காக, காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர். வெளியே வந்ததும், வாகனத்திலிருந்து குதித்த சில விவசாயிகள் தங்கள் ஆடைகளக் களைந்து நடுரோட்டில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல தொடர்ந்து அவர்கள் நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்…
-
- 0 replies
- 415 views
-
-
‘அவசரம் காட்டியதால்தான் ஆபத்து!’ - தினகரனிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர்கள் ஆளும்கட்சி வட்டாரத்தை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை. 'எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகும், கார்டனில் உள்ளவர்கள் அவசரப்படுவதால்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது' என வெளிப்படையாகப் பேசியுள்ளனர் அமைச்சர்கள் சிலர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டு துண்டுகளாகிவிட்டது. சசிகலா தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். 'அ.தி.மு.கவின் ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். அவகாசம் இருந்திருந்தால், அத்தனை பேரின் கையெழுத…
-
- 0 replies
- 583 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? - அதிரவைத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 'அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொகுதி காலியாக இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது, ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாளை (ஏப்ரல்-12) நடப்பதாக இருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இந்நிலையில்,…
-
- 0 replies
- 281 views
-
-
ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறு வந்த நிலையில், வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து, அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் …
-
- 1 reply
- 477 views
-