இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எம்மையும் எமது இனத்தையும் அடையாளம் செய்யும் கலைகள் என நாம் கருதி எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் எமது கலைகள், மிக செலவு கூடிய கலைகளாக எம்மிடையே காணப்படுகின்றனவா? ஆசிரியர்களிடையேயான கலை வியாபாரப் போட்டிகளும், பெறோர்களிடையே இருக்கின்ற கெளரவ போட்டிகளும் இந்த விலையேற்றத்தை தூண்டிவிட்டிருக்கின்றனவா? மாதாந்த கலை நிகழ்வுகளில் இருந்து, ஆண்டு விழா, அரங்கேற்ற விழா என்ற தொடர் பட்டியலில் செலவுகளை கூட்டிவிட்டிருக்கும் எமது கலைகளைக் காட்டிலும், செலவில் குறைந்த மேற்புலத்து கலைகளைப் பயில்வதில் எமக்கான ஈர்ப்பு அதிகரிக்கின்றதா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைக்காக தாயகம் செல்லும் எம்மவர்கள் அங்கு நடந்துகொள்ளும் முறைமை இப்போது பல விமர்சனங்களுக்கு உட்பட்டு வருகின்றது. ?வெளிநாடுகள் பற்றிய போலியான ஒரு மாயை அங்குள்ளவர்களுக்கு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? ?விடுமுறைக்காலங்களில் மட்டும் இவர்கள் அங்கு அனுபவித்துக் காட்டும் கோலாகல ஆடம்பரங்களே, இவர்களின் நாளாந்த வாழ்வாக வெளிநாடுகளில் இருக்கின்றது என்ற தவறான புரிதலை அங்குள்ள எமது இளைஞர்களுக்கு ஏற்படுத்துகின்றதா? ?ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரைக்கட்டினை ஐநூறு ரூபாய்க்கு மாற்றிவிட்டுச் சென்ற பெருமைக்குரியவர்கள் என நாம் கருதப்படுவதில் உண்மையிருக்கின்றதா? ?உழைப்பதற்கு பஞ்சிப்படும் ஒரு சமுதாயத்தை அங்கு உருவாக்குவதற்கு நாங்கள் காரணமானவர்களாய் இருக்கி…
-
- 0 replies
- 283 views
-
-
பிள்ளைகள் தமது பதின்ம வயதை அடையும் போது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு மெளனப் பெருமதில் இங்கு இயல்பாய் எழுப்பப்பட்டு விடுகின்றது. தமது சந்தோசங்களை கவலைகளை எண்ணங்களை பெற்றோருடன் பகிர்ந்து கொள்வதை இளைஞர்கள் விரும்புகிறார்கள் இல்லை. பெற்றோர்களின் அவசர பொருளீட்டும் ஓட்டம் அதை நின்று நிதானித்து செவிமடுக்க சந்தர்ப்பம் தருவதாயும் இல்லை. இந்த முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்ச்சியில் கட்டுடைப்பு செய்யப்பட முயன்றிருந்தது. பெற்றோர்கள் கேட்கிறார்கள் ஆனால் செவிமடுப்பதில்லை(They are hearing but not listening) என்பதும் பெற்றோரிடம் சொல்ல முடியும் ஆனால் நண்பரிடம் தான் கதைக்க முடியும் (just they can tell to the parents but only discussions is possible with their f…
-
- 0 replies
- 989 views
-
-
தனது தொழில் நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல வருடன்கள் கடினமாக வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு ஒரு உயர் பதவி கிடைக்க இருக்கும் தருணத்தில், - பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு வேலைக்கு இனிமேல் செல்ல வேண்டாம் என கூறும் ஒரு கணவன். - தன் வளர்ச்சியை பொறுக்க முடியாத தாழ்வுச் சிக்கலால் அந்தரிப்பதால் தான் இப்படி வேலைக்கு செல்ல தடை விதிக்கிறார் என எண்ணும் ஒரு மனைவி. - தான் இன்னும் அதிக நேரம் வேலை செய்து போதிய பணத்தை கொண்டு வருவேன் அதனால் மனைவி பணத்திற்காக வேலக்கு செல்ல தேவையில்லை என கருதும் ஒரு கணவன். - வேலை என்பது வெறும் பொருளீட்டலுக்கானது மட்டுமல்ல, அது ஆளுமை வளர்ச்சிக்கான ஒரு களமும் சந்தர்ப்பமும் கூட. நாலு பேரை சந்தித்து நானூறு விடயங்களை பேசிப் புரிந்துகொள்ளும் …
-
- 0 replies
- 753 views
-
-
கலாசாரம் என்பது பற்றியதும் பண்பாடு சார் விழுமியங்கள் பழக்க வழக்கங்கள் பற்றியதுமான எமது இனத்தின் புரிதல்கள் மறு வியாக்கியானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியதா? என்ற நெருடல் இப்போது பல தரப்புகளிலும் இருந்து எழத் தொடங்கியிருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர் எதிர்நோக்கும் இன்னுமொரு சவால் தமது பிள்ளைகளின் பதின்மவயது சார்ந்து ஆரம்பிக்கின்றது என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். ஏனைய நாட்டுப் பிள்ளைகளின் சாதாரண வாழ்வியல் பொழுது போக்கு அம்சமான "இரவுக் களியாட்ட விடுதிகளுக்கு செல்லுதல்" (NIGHT CLUB) என்ற விடயம் எமது பிள்ளைகள் இவ்வயதை அடையும் போது எமது பெற்றோருக்கு முள்ளாக உறுத்தத் தொடங்கும் பெரும் விடயமாகின்றது. அங்கு தமது நண்பர்களுடன் செல்ல வேண்டும் என்…
-
- 0 replies
- 1.6k views
-
-
புலம்பெயர் தேசங்களில் நுண்கலை சார்ந்த அல்லது தற்காப்புக் கலை போன்ற பயில் நெறிகளைக் கற்றுக் கொள்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களின் மீது ஒருவித மேலாதிக்கத்தை பிரயோகிக்க முயல்கிறார்களா? அல்லது ஆசிரியர்களிடம் ஏற்கனவே இருக்கின்ற மேலாதிக்கத்தின் மீது தம்மை பாதுகாத்துக் கொள்ளவே நடத்தையியல் மாற்றத்தை தம்மிடத்தே உருவாக்குகின்றனரா?இந்த முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் சிலாகிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: M.T.செல்வராஜா ராம்தாஸ் தர்மினி சிவதீஸ் தொழில்நுட்பம்: சுரேஷ்கரன் முத்துராமன் எண்ணக்கரு, தயாரிப்பு : சாம் பிரதீபன்
-
- 0 replies
- 1.5k views
-
-
பிள்ளைக்களுக்கு முன்பு நிகழும் பெற்றோர்களின் மோதல் அல்லது கருத்து வேறுப்பாட்டால் பிள்ளைக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? பெற்றோரின் கருத்து வேறுப்பாடுகளும் குடும்ப சூழலும் பிள்ளைக்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 372 views
-
-
-
- 0 replies
- 680 views
-
-
-
- 0 replies
- 638 views
-
-
இல்லத்தரசிகளின் எதிர்ப்பார்ப்புகளை வெறுக்கும் ஆண்கள்
-
- 0 replies
- 401 views
-
-
சமூக கட்டுமானங்கள் யாவற்றின் விளைவுகளுக்கும் பெண்களின் மீது பழி போட்டு கடந்து செல்லும் ஒரு போக்கு எம்மிடையே வலுப்பெற்று வருகின்றதா? கோவில்களுக்கு கூந்தலை விரித்துவிட்டு தாம் விரும்பியபடி அழகுபடுத்தி வருவதில் இருந்து, யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் வீரரை பொது இடத்தில் கட்டி அணைத்து தன் விளையாட்டு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தெரிவித்தமை வரைக்கும், பெண்கள் மீது ஒருவித பாலியல், வக்கிர, பால் சார் ஒடுக்குமுறையாய் எமது விமர்சனங்கள் நீளுகின்றனவா? நாங்கள் வளர்ச்சி அடைந்த தேசங்களில் வாழ்கின்றோம்! பெண்கள் குறைவற்ற ஒரு சுதந்திர வாழ்வை புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றார்கள்! யாரும் ஆதிக்கம் செலுத்தமுடியாத அளவுக்கு சட்டப் பாதுகாப்பை பெண்கள் கொண்டுள்ளார்கள்! என்றெல்லாம் நாங்கள் மார…
-
- 0 replies
- 327 views
-
-
-
மண முறிவுகளும், மன முறிவுகளும், காதல் பிரிவுகளும் எமது முதல் சந்ததியினரிடம் இல்லாத அளவுக்கு, இன்றைய எமது இளம் சந்ததியினரிடம் அதிகரித்துக் காணப்படுகின்றதா? மேல்நாட்டு சூழலில் பிறந்து வளரும் இவர்களுக்கு இந்த நாட்டு நெளிவு சுழிவுகளும், இந்த வாழ்வு போக்குகளும் பரீட்சயப்பட்டிருப்பதால் ஜதார்த்தத்தின் வழி நின்று சிந்திக்கும் இவர்களிடம் எம்மிடம் இல்லாத மிகப் பெரும் புரிந்துணர்வு இருக்கும் என்ற எமது நம்பிக்கைகள் பொய்த்துக் கொண்டிருக்கின்றனவா? புலம் பெயர் நாடுகளின் வாழ்வுப் போக்கில் தம்மையொத்த, தம் வயதையொத்த எதிர்ப்பால் பிரிவினரின் பலங்களையும் பலவீனங்களையும் இவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் மிக இலகுவாக இவர்களிடம் புகுந்து கொள்ளும் சந்தேகங்களையும் மனப் புரள்வுகளையும் தடு…
-
- 0 replies
- 597 views
-
-
பெற்றோர்களின் சுமையில் பங்கெடுப்பு பிள்ளையிடம் எதிர்பார்க்கப்படுகிறதா?
-
- 0 replies
- 591 views
-
-
முரணும் முடிவும்... (நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)
-
- 0 replies
- 783 views
-
-
11+ பரீட்சை சந்தை பொருளாதாரமாக மாறியிருக்கிறது
-
- 0 replies
- 465 views
-
-
அரசியல் மற்றும் கலைத் துறைகளுக்கு தகுதியானவர்கள் யார்? |
-
- 0 replies
- 464 views
-
-
முரணும் முடிவும்... தந்தையின் கனவை நிறைவேற்றாத பிள்ளைகள்
-
- 0 replies
- 661 views
-
-
முரணும் முடிவும்... மரணம் ஒருவனை தண்டிக்கிறதா... மன்னிக்கிறதா?
-
- 0 replies
- 693 views
-
-
முரணும் முடிவும்.... அரசை ஏமாற்றும் ஒருவர்!! நம்பிக்கையை ஏமாற்றும் இன்னோருவர்!!
-
- 0 replies
- 492 views
-
-
முரணும் முடிவும்.... ஆளுமைக்கு அந்தஸ்த்து வழங்காத முதலாளித்துவம்!!
-
- 0 replies
- 518 views
-
-
முரணும் முடிவும்.... எல்லா கைகளுக்கும் தெரியும்படி கை நீட்டி உதவி செய்வது சரியா?? தவறா??|
-
- 0 replies
- 558 views
-
-
முரணும் முடிவும்.... கணவனுக்கு இயலாத விடயத்தை மனைவி செய்யக்கூடாது!!
-
- 0 replies
- 424 views
-
-
முரணும் முடிவும்.... குறையும் காதல் திருமணமும்!! திருமணத்துக்கு தயக்கம் காட்டும் புலம்பெயர் பிள்ளைகளும்!!
-
- 0 replies
- 546 views
-
-
முரணும் முடிவும்.... தாயகம் சென்ற புலம்பெயர் தமிழர்களின் கவலைநிலை!!
-
- 0 replies
- 644 views
-