ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
அம்பாறை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வாக்கு மோசடியில் ஈடுபட முயற்சி மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பரவான மத்திய மாகாவித்தியாலத்தில் உள்ள வாக்கெடுப்பு மையத்திற்கு அருகில் வைத்து காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பட்டுக்குழு தெரிவித்துள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளில் ஒருவரான குடு லால் உள்ளிட்ட ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் உள்ளிட்ட ஆயுதம் தரித்த சிலரை தெஹியத…
-
- 6 replies
- 1.9k views
-
-
மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகரச் சிந்தனைகளோடு மாணவர்கள் உருவாக வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாநகர எல்லைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய புறநகர்ப் பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு கிளிவெட்டி பிரதேசத்தில் வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்காளர் அட்டைகளை பறித்துச் சென்றதாகத் தெரியவருகிறது. பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அநேக வாக்களிப்பு மையங்களிலிருந்து வாக்காளர்களை வான், மற்றும் முச்சக்கர வண்டிகளில் பலவந்தமாக அழைத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதற்கு எதிராக பாதுகாப்பு படையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக…
-
- 1 reply
- 1.3k views
-
-
நிலத்திற்குள்ளிருந்து வாயு வெளியேறியதை தற்செயலாக கண்டுகொண்டதனையடுத்து எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணியை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலுக்கு சமீபமாக வாயு வெளியேற்றம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்த
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈரானுடன் இலங்கை ஏற்படுத்தியிருக்கும் உறவுமுறைகுறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதுடன், அமெரிக்காவுடனான நட்புறவை முறித்துக்கொள்ளாதவகையில் செயற்படுவதற்கு இலங்கை தீர்மானித்திருக்கதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய ஜனாதிபதி மகமூட் அமதிநிஷாட் கடந்த மாதம் இலங்கை வந்திருந்ததுடன், இலங்கையின் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் சுத்திகரிப்பு போன்றவற்றுக்குப் பெரும் பணம் வழங்கியிருந்தார். இந்த நிலையில் இலங்கையும், ஈரானும் இரகசிய இராணுவ ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக .................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_1977.html
-
- 0 replies
- 1.5k views
-
-
மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் ரீ.எம்.வீ.பீக்கும் இடையில் இன்று காலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் சேதவிபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
-
- 0 replies
- 2k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாக சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்குப் பதிவுகள் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத முறையில் சுமுகமானமுறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் கள்ளவாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நண்பகலின் பின்னர் வா…
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளால் ஏறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை காலை அம்பாறை பன்னல்கம பகுதியில் நோக்கி இந்த மோட்டார் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. மோட்டார்த் தாக்குலில் 4 அகவைக் குழந்தை உட்பட 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா படையினர் தெரிவித்துள்னர். இப்பகுதியில் 8 மோட்டார் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன என சிறீலங்காப் படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை நகர மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த சம்பவமானது பலத்த சந்தேகத்துக்கு இடமளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அம்பாறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்த நாயக்க எம்.பி.யினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ....... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4928.html
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜனநாயகம் என்ற சூத்திரத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட ஆட்களின் கூட்டுப்பலம் பலம் என்கின்ற கணித வாய்ப்பாடு இருக்கும் வரைக்கும் ஓர் இன மேலாதிக்க உணர்வு கொண்ட பெரும்பான்மை எண்ணிக்கையுடன் இணைந்து ஜனநாயகப் பயிற்சியினை மேற்கொள்வதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ................ தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_524.html
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : 2008-05-10 கேலிக்கூத்து தேர்தல் அரங்கேறுகிறது பெரும் உள்நாட்டு யுத்தமாக வெடித்திருக்கும் இலங்கை இனப்பிரச்சினை இப்போது சூடுபிடித்து உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. யுத்தம் தீவிர மடைந்திருப்பதுபோல யுத்தப் பிரசாரமும் உச்ச ஸ்தா யியை எட்டியிருக்கின்றது. யுத்தத்தில் சாதிக்கப்படா தவை எல்லாம் யுத்தத்தை ஒட்டிய பிரசாரத்தின் மூலம் சாதிக்கப்பட்டவை போல விஸ்வரூபமாக்கப்பட்டுக் காட்டப்படுகின்றன. நிஜத்தில் விடயங்கள் நடக்கின் றனவோ, இல்லையோ"நாளொரு சாதனை, பொழுதொரு வெற்றி' என்ற முழக்கங்கள் மட்டும் எந்நேரமும் கேட்டபடி இருக்கின்றன. யுத்த களத்திலே போர் புரிய வேண்டியவர்கள், சமர் குறித்து பிரசாரப் போர் நடத்திக் கொண்டிருக்கின் றார்கள். மறுபுறத்திலே, அரசியல் களத்திலே பிரசா ரப…
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பாறையில் பாரிய குண்டு வெடிப்பு!!!! [ த.இன்பன் ] - [ மே 09, 2008 - 01:50 PM - GMT ] அம்பாறை நகரப்பகுதியில் சற்று முன்னர் பாரிய குண்டுவெடிப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை நகரில் உள்ள நியு சிற்றி கபே என்ற விடுதியிலேயே இந்தக் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளதாக அறியவருகிறது. எனினும் இது பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...2&Itemid=67
-
- 15 replies
- 3.9k views
-
-
Posted on : Sat May 10 6:32:27 EEST 2008 கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்! அரசு நேற்று அறிவிப்பு "தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.'' இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது. ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு மேலு…
-
- 0 replies
- 1k views
-
-
ஈரான், சிரியா போன்ற நாடுகள் தொடர்பாக அமெரிக்க மற்றும் அனைத்துலக ஊடகங்களும் காட்டி வரும் அக்கறையுடன் ஒப்பிடும் இடத்து, இலங்கை விவகாரத்தில் மிகவும் மெத்தனமான போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படையான உண்மை என்று கனடிய ஏடான "த ஸ்ரார்" தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 974 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையான ஜிஎஸ்பி பிளஸ் நீடிப்பை பெறுவதற்கான தகுதியை சிறிலங்கா அரசாங்கம் பெற்றால் அது வர்த்தக சலுகை நீடிப்பைப் பெறும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 760 views
-
-
கிழக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தோடர்பான செய்திகளைச் சேகரிக்க முயற்சித்த அனைத்துலக ஊடகவியலாளர்கள் இருவரை சிறிலங்காப் படையினர் தடுத்தது தொடர்பில் அரசு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சுதந்திர ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 557 views
-
-
யாழ். மாநகர மேயராக இருமுறை பொறுப்பு வகித்த சின்னதம்பி நாகராஜா (வயது 77) நேற்று வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 905 views
-
-
மனித உரிமைகளின் பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை என யு.என். வொச் உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை, பாகிஸ்தான், செம்பியா மற்றும் பஹ்ரேனில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுவவருவதாக குறித்த அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனால் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வழங்கப்படக்கூடாதென அரச சார்பற்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டில் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெறுகின்ற போதிலும் சர்வதேச ரீதியில் குறித்த நாடுகள் அங்கீகரிக்கப்படுவதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. பஹ்ரேனைத் தவிர்ந்த ஏனைய மூன்று நாடுகளும்…
-
- 0 replies
- 976 views
-
-
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.5k views
-
-
தமிழக மீனவர் படகு மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுகுடியில் வசிக்கும் 30வயதான செல்வம், புதுகோட்டை மணல்மோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான செல்வராஜ் ஆகியோர்.............. தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8874.html
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னாரில் தொடரும் மோதல்களையடுத்து இடம்பெயர்ந்த 23,000 மக்கள் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருப்பதாக மனிதாபிமான உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சில அகதிகள் தற்போது நோய்கள், மற்றும் போதிய ஊட்டச்சத்தின்மையின் காரணமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும், இவர்கள் அனைவருக்கும் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் மனிதாபிமான உதவி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் கூடுதலாகத் தேவைப்படுவதாகவும், யாழ் குடாநாட்டுக்கான தரை வழிப்போக்குவரத்து தடைப்பட்டிருப்பதன் காரணமாக, ஆகாய மற்றும் கடல் மார்க்கவே மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு…
-
- 0 replies
- 913 views
-
-
நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தையும் அதன் கூட்டாளிகளையும் கிழக்கு மக்கள் தோற்கடிக்கவேண்டும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இணைந்த வடக்கும் கிழக்கும் சமாதானத்திற்கான மையக்கல் எனக் குறிப்பிட்டிருக்கும் மாவை சேனாதிராஜா, இருப்பினும் அரசாங்கம் 18 வருடங்களுக்குப் பின்னர் இரு மாகாணங்களையும் பிரிப்பதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். "இந்த தேர்தலில் நாம் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடிக்க வேண்டும். ஆகவேதான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டாம் என நாம் மக்களிடம் கேட்கிறோம்" எனவும் அவர…
-
- 0 replies
- 928 views
-
-
பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையைச் சேர்ந்த கருணா, சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டதாக நேற்று இரவு செய்திகள் பரவின. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
மட்டக்களப்பில் குடும்பப் பெண் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது. 09.05.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு தேத்தாதீவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குடும்பப்பெண் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணவனை இழந்த இந்தப்பெண்ணுக்கு கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் மறுமணம் நடைபெற்றநிலையிலேயே அவரைப் பயங்கரவாதத் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சண்முகநாதன் கலைவாணி (அகவை-32) என்ற ஒருபிள்ளையின் தாயாரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளே இந்தப் பெண்ணை கைதுசெய்ததாக பிரதி …
-
- 0 replies
- 994 views
-
-
சர்வதேசத்தின் பொருளாதார உதவிகள் வருட இறுதிக்குள் நிறுத்தப்படும் அபாயம் -ரணில் எச்சரிக்கை;கோட்டா முறையை கைகோர்க்குமாறும் அழைப்பு வீரகேசரி நாளேடு 5/9/2008 8:36:16 AM - சர்வதேச சந்தைகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கான கோட்டா முறை நவம்பர் மாதத்திற்குள் காலாவதியாகவுள்ள நிலையில் சர்வதேச ஒப்பந்தங்கள் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகள் மூலமாக பாதுகாக்கப்படல் வேண்டும். அவ்வாறு சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்படாவிடின் வருட இறுதிக்குள் இலங்கைக்கான சர்வதேச பொருளாதார உதவிகள் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சி தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பு அதிகாரத்தின் மூலமாக உயர்நீதிமன…
-
- 0 replies
- 1k views
-