ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142711 topics in this forum
-
காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு - பண்டார வன்னியன்- நேற்றையதினம் யாழ் தீவகம் ஊர்காவற் துறையைச் சேர்ந்த இளைஞர் வேலைக்குச் சென்ற இளைஞர் காணாமற்போயுள்ளார். இவர் இன்று காலையில் ஒரு கிடங்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற் துறையைச் சேர்ந்த லின்டன் குயின்ரன் (வயது 24) ஊர்காவற்றுறை பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாhளரும் ஒரு பிள்ளையின் தந்தையுமாவார். இன்று காலை மெலிஞ்சிமுனையில் இவரது சடலம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவானின் மரணவிசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. . சங்கதி
-
- 0 replies
- 789 views
-
-
யாழில் கிளேமோர்த்தாக்குதல் இரண்டு பொலிஸார் படுகாயம். - பண்டார வன்னியன் யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 3.00மணியளவில் யாழ் போதனா மருத்துவமனைக்கு அருகாமையில் இடம்பெற்ற கிளேமோர்த் தாக்குதலில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அப்பகுதியில் சென்ற அப்பாவிப் பொதுமக்களை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சங்கதி .
-
- 0 replies
- 746 views
-
-
விநாயகபுரம் பகுதியில் மூன்று குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொலை. ----------------------------------------------------- அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் சக்தி வித்தியாலயப்பகுதியில் நேற்று இரவு 9:00மணியளவில் அப்பகுதியில் நின்ற மூன்று குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளர். நேற்று இரவு இவர்கள் இப்பிரதேசத்தில் நின்றிருந்தபோது அங்கு திடீர் என வாகனம் ஒன்றில் வந்த குழுவொன்றே இவர்கள் மீது சரமாரியான துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் காரணமாக பழைய தபாலக வீதியைச்சேர்ந்த மயில்வாகனம் அருளானந்தம் (28), சபாரட்ணம் ரவீந்திரன் (30) மற்றும் கந்தசாமி காந்தரூபன் (35) என்பவர்களே கொல்லப்பட்டவர்கள் என்று தெரிவிக்க…
-
- 0 replies
- 609 views
-
-
கொழும்பின் மர்ம பிரிவினரே வாகன விபத்தில் கொல்லப்பட்டனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கூட்டுப்படை தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் கொழும்பு பிராந்தியத்தை கவனித்துவரும் பொலிஸ் இராணுவ , புலானாய்வு பிரிவினரின் வாகனமே விபத்துக்குள்ளானதாக அறியமுடிகிறது. அண்மைக் காலமாக கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மர்ம கடத்தல்கள் கொலைகளின் பின்னணியில் இந்த விசேட பிரிவினரே ஈடுபட்டு வருவதாகவும் அறியமுடிகிறது. கொழும்பு பிராந்திய உளவுப்பிரிவு உத்தியோகத்தரான பெண் பொலிஸ் ஊழியர், சுற்றிவளைப்பிலும் கடத்தல்களிலும் ஈடுபடும் விசேட இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் 10 பேர் அடங்கிய குழு ஒன்று விசேட உளவு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது வத்தளையில் குணுபிட்டிய வெடிகன்ட என்ற இடத்தில் உள்ள புகையிரத கடவையை க…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் அரச சமாதான செயலக செயலாளர் பாலித நம்பிக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என தாம் நம்புவதாக அரசாங்க சமாதான செயலகத்தின் செயலாளர் பாலித கோஹன தெரி வித்துள்ளார். விடுதலைப் புலிகள் தாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலக வில்லைஎன காணிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளின் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சு மேசைக்கு வருவார்கள் என நாம் திடமாக நம்புகின்றோம்.பேச்சுக்கள் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முனையும் அரசாங்கத்தின் …
-
- 6 replies
- 1.1k views
-
-
தொடருந்து - படையினரின் ஊர்தி மோதல் - ஐந்து படையினர் பலி, 17பேர் படுகாயம் இன்று காலை 6.30 மணியளவில் கம்பகா மாவட்டத்தின் எதருமுல்ல பகுதியில் ஸ்ரீலங்கா படையினரின் ஊர்தி ஒன்று தொடருந்து ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டும், மேலும் 17 படையினர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் நடவடிக்கை ஒன்றையடுத்து ஊர்தி ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த படையினர் தொடருந்து கடவை ஒன்றை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து எற்பட்டதாக தெரியவருகிறது. இதன்போது ஐந்து படையினர் பலியாகியுள்ளதுடன் மேலும் 17பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். www.sankathi.org .
-
- 3 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகளிடம் அனைத்துலக யூறிகள் சபை இன்று ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகளின் அமைப்பிடம் விடுத்த கடுமையான வேண்டுகோளில் இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படும் இந் நிலைமையை வெகு உன்னிப்பாக அவதானித்து உடன் நடவடிக்கை எடுக்கும் படியும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான மனிதஉரிமைகள் ஆணைக்குழு ஒன்றை இலங்கையில் நிறுவும்படியான தங்களின் கடுமையான நிலைப்பாட்டை மீளவலியுறுத்தியுமுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் மனிதஉரிமை மற்றும்இ மனிதாபிமான பேரவலம் குறித்தும் கட்டுப்பாடற்ற படைகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் (ICJ) பெரும் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் அமைப்பு வாளாதிருக்க முடியாது. இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சர்வதேச அபிப்பிராயத்துக்கு சிங்கள அரசு இடங்கொடுக்கவில்லை இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கும் கண்டனங்களுக்கும் மகிந்த அரசு பணிந்துகொடுக்குமா? என்ற வினா பலமானமுறையில் எழுப்பப்படுகின்றது. நோர்வே அனுசரணை - இணைத்தலைமை நாடுகளின் பங்குபற்றல் என்ற வகையில் இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகிவிட்டது. ஜெனீவா - 2 பேச்சுக்கு சர்வதேச செய்திநிறுவனங்கள் அளித்த முக்கியத்துவம் பாரியது. பேச்சுக்கள் ஜெனீவாவில் நடந்தபோது இணைத்தலைமை நாடுகளின் பெரும்பாலான பிரதிநிதிகள் கொம்பில் தங்கிநின்றனர். இலங்கை இனப்பிரச்சினையில் சர்வதேச அக்கறை அதிகரித்துவிட்டது| என்று ஊடகங்கள் இதற்கு வியாக்கியானம் செய்தன. பேச்சு தோல்வியில் முடிந்தபின் புலிகள் பிரதிநிதிகள் கொழும்பு…
-
- 0 replies
- 881 views
-
-
இணைந்த சுற்றுக்காவல் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு. இலங்கை-இந்திய கடல் எல்லைகளில் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்திய அரசு நிராகரித்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவுக்கு சென்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக புதுடில்லியின் முக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தமது கடல் எல்லைகளை வழமைபோல் கண்காணிக்கும். ஆயினும் சிறிலங்கா அரசுடன் இணைந்து கடல் கண்காணிப்புக்களையு…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஹன்சன் பவர் எதிர்வரும் திங்கள் கிளிநொச்சி பயணம். நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஜோன் ஹான்சன்பவர் எதிர்வரும் திங்கட் கிழமை கிளிநொச்சி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரையின் பின்னர் இவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது. நேற்றிரவு இலங்கை வந்த இவர் கொழும்பிலும் அரசின் முக்கியஸ்த்தர்களைச் சந்திக்க உள்ளார். ஏற்கனவே அரச சமாதானக் குழுத் தலைவர் நிமால் சிறீபாலடீ சில்வாவைச் இன்று சந்தித்துள்ளார். சுகாதார அமைச்சில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாhடலில் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப…
-
- 0 replies
- 690 views
-
-
'தமிழீழம் ஆனாலும் மகிழ்ச்சி மாற்றுத் தீர்வானாலும் மகிழ்ச்சி'- கருணாநிதி இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியான தமிழீழம் ஒன்று உருவானால் தான் மகிழ்ச்சியடைவேன் என்றும் ஆயினும் அனைத்துத் தரப்பாலும் ஏற்கக்கூடிய மாற்றுத்தீர்வு ஒன்று ஏற்பட்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தற்போது தனி ஈழம் ஒன்றே வழி என்று விடுதலிப்புலிகள் அமைப்பின் தலைவர் வே, பிரபாகரன் அவர்கள், கூறியது குறித்து அவரது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதிலளிக்குமுகமாகவே கருணாநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுபற்றி தான் முன்னரே கூறியிருப்பதாகக் குறிப்பிட்ட கருணாநிதி அவர்கள், தற்போதைய நிலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி…
-
- 11 replies
- 2.7k views
-
-
யாழ் குடாநாட்டில் பெண் உளவாளிகளின் நடமாட்டம் அதிகரிப்பு. யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் அசாதாரண சூழ் நிலையைத் தொடர்ந்து பெண் உளவாளிகளின் நடமாட்டங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பெண்கள் ஈ.பி.டி.பி ஒட்டுப்படையுடன் இனணந்து செயல்பட்டு வருகின்றார்கள் என்பது அண்மைக் காலத்தில் பொது மக்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மூன்று பெண் உளவாளிகள் பொங்கியெழும் மக்கள் படை மற்றும் எல்லாளன் படையினால் சுடப்பட்டு உரிமை கோரப்பட்டுள்ளார்கள். தென்மராட்சிப் பகுதியில் சமுர்த்தி அலுவலராக கடமையாற்றியவரும் கோப்பாயில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் மற்றும் அண்மையில் பல்கலைக்கழக அயலில் உதயகுமார் றஜீதா என…
-
- 3 replies
- 2.3k views
-
-
ராமதாஸ் - மனோகணேசன் நேற்று சந்திப்பு தமிழகம் சென்றிருக்கும் மேலக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று புதன்கிழமை இரவு திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்து சிறிலங்கா தமிழர் பிரச்சினை குறித்து விரிவாக உரையாடியுள்ளார். குறிப்பாக வடக்கு,கிழக்கு பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவித்த டாக்டர் ராமதாஸ், சிறிலங்காவின்; வடக்கு,கிழக்கிற்கு அப்பால் பரந்துபட்டு வாழும் வேறுபட்ட தமிழ் சமுதாயப் பிரச்சினைகளை மிகவும் அந்நியோன்யமாக கேட்டறிந்தார். இலங்கைப் பிரஜையான தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதும் இதற்கப்பால் தமிழ் வர்த்தகர்கள் மீதான அச்சுறுத்தல், கடத்தல், கப்பம், கொலைகள் பற்றி எடுத்துர…
-
- 1 reply
- 979 views
-
-
திருமலை மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைப்பு திருகோணமலை, மூதூர் கிழக்கு ஆலங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சிறிலங்கா இராணுவத்தினர் சிதைத்து அழித்துள்ளனர். கனரக ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் உதவியுடன், இந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் கடந்த நவம்பர் 25 ஆம் நாள் நுழைந்த இராணுவத்தினர், மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஈன இரக்கமற்ற தாக்குதலை உறுதிப்படுத்திய திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், நாகரிகமடைந்துள்ள தற்போதைய உலகில், எந்த நாட்டின் இராணுவமும் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபடாது என்றும் தெரிவித்தார். மாவீரர் நாள் கடைப்பிடிப்பிற்கு இரு நாட்களே இருந்த நிலையில், திட்…
-
- 13 replies
- 2.6k views
-
-
குடாநாட்டில் மாதாந்தம் 50 பேர் வரை படுகொலை யாழ்.குடாநாட்டில் மாதந்தோறும் ஐம்பது பேருக்குக் குறையாமல் படுகொலை செய்யப்பட்டு வருவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் கூறுகையில், எமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தப் படுகொலைகள் குறித்த புள்ளிவிபரத்தை தெரிவிக்கின்றோம். இதேநேரம் பல சந்தர்ப்பங்களில் இந்தப் படுகொலைகள் தொடர்பாக எமக்கோ அல்லது வேறு எந்த மனித உரிமைகள் அமைப்புக்கோ சம்பந்தப்பட்டவர்கள் முறையிடுவதில்லை. அவை எமது புள்ளி விபரங்களிலும் உள்ளடக்கப்படுவதில்லை. இவ்வாறு மனித உரிமைகள் குழுக்களிடம் அந்தப் படுகொலைகள் குறித்து முறையிடப்படாது போவதால் அவை குறித்துப…
-
- 0 replies
- 724 views
-
-
இணைந்த வட, கிழக்கே இந்தியாவின் விருப்பம் - மன்மோகன்சிங் ஜனாதிபதி மகிந்தவிடம் தெரிவிப்பு; அரசியல் தீர்வுக்கு முயற்சிக்குமாறு வலியுறுத்தல் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்பட்ட அலகாக இருப்பதையே இந்தியா விரும்புவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்கிறார். அத்துடன், மனித உரிமை துஷ்பிரயோகங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியிருக்கிறார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று புதன்கிழமை மதியபோசன விருந்துபசாரமளித்த பின் மன்மோகன் சிங் அவருடன் பேச…
-
- 0 replies
- 968 views
-
-
115 சிங்கள மாணவர்கள் வவுனியாவிலிருந்து வெளியேறினர் [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 19:06 ஈழம்] [க.நித்தியா] வவுனியா கல்விக் கழகத்தைச் சேர்ந்த 115 சிங்கள மாணவர்கள், நேற்று புதன்கிழமை இரவு 9.00 மணியளவில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் தங்களைத் தேடி கல்விக் கழகத்துக்கு வந்ததாக தம்மிடம் முறையிட்டனர் என்று கழகத்தின் தலைவர் கே.பேர்னாட் தெரிவித்துள்ளார். தங்கள் உயிருக்கு ஆபத்து என அவர்கள் அச்சப்பட்டதால், நேற்றிரவு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வவுனியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்திடம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார். பின்னர் இன்று இராணுவத்தினரின் பாதுகாப்புடன் அனைவரும் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்கள் மீது விடுக்கப்பட்ட மிரட்டல…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்: சர்வதேச சட்ட நிபுணர் குழு வேண்டுகோள் [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 20:40 ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் மிகவும் மோசமாக நசுக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சட்ட நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் மனித உரிமையை முழுமையாக நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டும் எனக் கோரியுள்ள அக்குழு, இக்கோரிக்கையை ஐ.நா மனித உரிமை மன்றம் தட்டிக்கழிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகளும் மனிதாபிமான சட்டங்களும் மிக மோசமாக மீறப்படுவதை நிறுத்துவதிலும் மேலும் சிதைவுறாமல் தடுப்பதிலும் மனித உரிமை மன்றம் ஆ…
-
- 0 replies
- 867 views
-
-
தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் உள்ள கலாசார ஒற்றுமைகளை ஆராய நிதி உதவி தேவை [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 20:01 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடபகுதிக்கும் பண்டைக்காலம் முதல் இருந்து வரும் கலாசார தொடர்புகள் மற்றும் ஒற்றுமைகள் குறித்து வடக்குப் பகுதியில் ஆராய்ச்சி செய்ய தமிழகத்தைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சிக் குழு ஒன்று நிதி உதவி கேட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவின் மத்திய அகழ்வாராய்ச்சிப் பிரிவின் முன்னாள் நிர்வாகி பேராசிரியர் டி.சத்தியமூர்த்தி, ஈழத்தில் கலாசாரம், இலக்கியம், எழுத்துரு, நாணயங்கள், கிராமியக் கலைகள் அனைத்திலும் பண்டைய தமிழ் நாட்டின் தாக்கம் உள்ளதென்பதை இலங்கையின் மாந்தைப் பகுதியில் நடைபெற்ற அகழ…
-
- 0 replies
- 762 views
-
-
கொழும்பு ஊடக செய்திக்கு விடுதலைப் புலிகள் மறுப்பு [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 16:26 ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது உரையைத் தொடர்ந்து கொழும்புக்கு விடுதலைப் புலிகள் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளார்கள் என கண்காணிப்புக் குழுவை மேற்கோள் காட்டி வெளிவந்த கொழும்பு ஊடகமொன்றின் செய்திக்கு விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவனும், இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனும் மறுப்பு தெரிவித்துள்ளனர். எங்களது தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடன உரையில், கொழும்புக்குத் தெரிவிக்க வேண்டிய அனைத்துத் தகவலையும் தெளிவாக விளக்கியுள்ளார் என்று இளந்திரையன் கூறினார். சமாதான உடன்படிக்கையைக் கிழித்தெறியாமலேயே அதற்கு ஈமச்சடங்கை கொழும…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் http://www.petitiononline.com/Tforum00/petition-sign.html? or http://www.tamilsforum.com
-
- 0 replies
- 888 views
-
-
பிரபாகரனின் உரையினை உதாசினப்படுத்தி எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டாம் - அனுரா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் வாய்மூலமாக யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இதனூடாக சிக்கலான நிலைமைகளை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பது மட்டும் உண்மை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க சபையில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக சிறி லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர…
-
- 9 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் சிறிலங்கா படையினர் நாளை முதல் முத்த வெளியை அண்டிய பண்ணை பகுதியில் புதிய பேரூந்து நிலையம் செயல்படும் என யாழ் மாவட்ட இராணுவ தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது. இதன்பிரகாரம் வட பிராந்திய போக்குவரத்து சபை பேரூந்துகளது தரிப்பிடங்கள் மற்றும் தனியார் பேரூந்து தரிப்பு நிலையங்கள்;; பண்ணை பகுதிகளிலேயே அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறிலங்கா இராணுவ தலைமையகத்தினால் இந்த புதிய ஏற்பாட்டுக்கான காரணங்களை வெளியிப்படவில்லை ஏற்கனவே யாழ் நகரின் ஸ்டேன்லி வீதி மற்றும் பருத்திதுறை வீதி ஆகியன வாகனப் போக்குவரத்திற்க்கு தடை போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி - சங்கதி http://www.sankathi.org/news/ind…
-
- 1 reply
- 945 views
-
-
தீர்வுக்குத் தயார் எனக் கூறிக்கொண்டு தமிழர்களை தீர்த்துக்கட்டுகிறது அரசு! - எஸ்.துரைரட்ணசிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தயாராகவிருப்பதாக சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டு சிங்கள அரசு இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருமலை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: பல்குழல் பீரங்கிகள், ஷெல்கள், மோட்டார்கள், விமானத்தாக்குதல்கள் மூலம் தமிழ்மக்களும் அவர்களது இருப்பிடங்களும் வகை தொகையின்றி அழிக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கில் இன்று நடப்பது என்ன? ஆட்கடத்தல், காணாமற்போதல், …
-
- 0 replies
- 591 views
-
-
பிரபாவை நேரடியாக சந்தித்துப் பேச இப்போதும் தயார் என்கிறார் மஹிந்த! மாவீரர் தின உரை குறித்து தாம் அக்கறைப்படவே மாட்டாராம் இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சு மூலமாகவே தீர்வு காணப்படவேண்டும் என்றே தாம் நம்புகிறார் எனவும் அதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு இப்போதும் தாம் தயாராகவே இருக்கிறார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் சில தனியார் தொலைக் காட்சிகளுக்கு வழங்கிய செவ்வியில் தெரி வித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாகத் தமது செவ்வியில் கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மஹிந்த இதனைக் கூறினார். ""பிரபாகரனின் உரையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். இப் படிப் …
-
- 14 replies
- 2.8k views
-