ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142652 topics in this forum
-
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு யாழில் செய்தித் தணிக்கை. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு மாவீரார் நாள் நிகழ்வுகளை செய்திகளாகப் பிரசுரிக்கக் கூடாதென அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாகக தெரியவருகின்றது. மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றுடன் ஐந்தாம் நாள் இடம் பெறுகின்ற போதிலும் யாழ் குடாநாட்டில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளான எந்த வொரு பத்திரிகையும் வன்னியில் இடம்பெறும் நிகழ்வுகளை பிரசுரிக்கவில்லையென பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். அரசாங்கம் தாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு எந்த வகையான தடைகளையும் ஏற்படுத்தப் போவதில்லையென்று கூறிக் கொண்டு யாழ் குடாநாட்டுப் பத்திரிகைகளுக்கு வெளியிடப்படாத தணிக்கையொன்றை துப்பாக்கி முனையில் மேற்கொ…
-
- 0 replies
- 694 views
-
-
யாழ் மாவட்ட பாடசாலைகளில் மாவீரர் நாள் பதாதைகள். யாழ் குடாநாட்டுப் பாடசாலை வளாகங்களில் மாவீரர் நாள் பதாதைகள் மாணவர்களினால் கட்டப்பட்டு வருகின்றது பல பாடசாலைகளில் கட்டப்பட்ட பதாதைகள் இன்று இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் தொடர்ந்து இத்தகைய பதாதைகளை தொடர்ந்து கட்டிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்கள் கட்டும் பதாதைகளை அறுக்கும் நடவடிக்கையில் படைத்தரப்பினர் முழு மூச்சாக ஈடுபடுகின்ற போதிலும் மாணவர்களும் தமது முயற்சியை கைவிடாது பதாதைகளை தொடர்ந்து கட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் பாடசாலைகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் எழுச்சிகரமாக நடத்த மாணவர்கள் முன்முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 722 views
-
-
ஏ-9 பாதையினை திறக்கும்படி மகிந்த நிர்ப்பந்திக்கப்படுவார். -வை.கோவிடம் மன்மோகன்சிங் உறுதி- யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஏ-9 வீதியை திறக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்துவேன் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று புதுடில்லியில் வைகோவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போதே ஏ 9 வீதியை திறக்குமாறு வலியுறுத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்போது இலங்கையில் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் குறித்து வைகோ எடுத்துக்கூறியுள்ளார். ஏ 9 வீதி மூடப்பட்டுள்ள…
-
- 0 replies
- 856 views
-
-
தமிழரின் சுனாமி பணத்தில் படைவீரர்களுக்கு 20,000 வீடுகள். தமிழரின் சுனாமி பணத்தில் படைவீரர்களுக்கா முதன் முறையாக 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டவுள்ளன 4 கட்டமாக இவ் நிர்மாண பணிகள் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்மாண பணிக்கான தமிழரின் சுனாமி பணமான 30,000 மில்லியன் ரூபாவினை இலங்கை வங்கி வழங்கவுள்ளது. அநுராதப்புரம் இப்பொல்லாகமவில் முதற்கட்டமாக 2000 வீடுகள் நிர்மாணிக்க தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழன் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது... இக் கலந்த்ரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பு செயலாளார் கோதாய ராஜபக்ஷ நிதி அமைச்சின் செயலாளார் …
-
- 1 reply
- 1k views
-
-
தாயகத்தில் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ தாயகத்தில்; தமிழீழ மாவீரர்நாளின் ஆரம்பநாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பாமாகி உள்ளன தமிழீழ அரசியல்துறை நடுவகப்பணியகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் ஆரம்ப நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர்தூயவனின் சகோதரனும், சிற்பக்கலைஞருமான விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுப் படதிற்கான சுடர் ஏற்றிவைக்கப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் வித்துக்களான மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான ஈகைச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன. நினைவுரையினை தூயவன் அரசறிவியற்க் கல்லூரி அதிபர் அரசன்னா ஆற்றினார். புகைப்படங…
-
- 0 replies
- 675 views
-
-
கிபிர் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன. இதன்போது மக்களிற்கு பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
-
- 0 replies
- 761 views
-
-
தீர்வுத திட்டத்தை விரைந்து முன்வைக்க இலங்கை அசுக்கு இந்தியா அழுத்தம்! சமாதான முயற்சியை முன்னகர்த்த இதையே புதுடில்லி எதிர்பார்க்கிறது. இலங்கைத் தமிழர்பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த அரசு வழங்கவிருக்கும் தீhவு என்ன என்பதை இனிமேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து வெளிப்படுத்த வேண்டும் என்று கொழும்பு அரசுத் தலைமையிடம் புதுடில்லி நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாக அறியவருகிறது. கொழும்புக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மஹிந்தவுடன் சுமார் ஒருமணி நேரம் தனியாக நடத்திய மந்திராலோசனையின் போது டில்லியின் இந்த வேண்டுகோளையே வற்புறுத்தினார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மஹிந்தவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம…
-
- 0 replies
- 855 views
-
-
முகமாலைப் பகுதியில் இருதரப்பும் பரஸ்பரம் கடும் ஷெல் தாக்குதல். தென்மராட்சி முகமாலைப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பரஸ்பரம் கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பத்து மணியளவில் ஆரம்பமான இந்த ஷெல் தாக்குதல்கள் நேற்று நண்பகல் வரை கடுமையாகத் தொடர்ந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. புதன்கிழமை இரவு இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதலில் மூன்று படையினர் படுகாயமடைந்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை நள்ளிரவும் நேற்று அதிகாலையும் இந்த பரஸ்பர ஷெல் தாக்குதல்கள் நடைபெற்று நண்பகல் வரை இந்த மோதல் தொடர்ந்தது. விடுதலைப்புலிகளே முகமாலையில் தங்கள் முன்னரங்கக் காவல் நிலைக…
-
- 0 replies
- 762 views
-
-
மனித அவலங்களும் இராணுவ அனுகூலங்களும். -அருஸ்- (வேல்ஸ்)- இராணுவ மேலான்மையை நிலைநிறுத்துவதற்காக சிங்கள அரசு யாழ். குடாவில் உள்ள ஆறு லட்சம் மக்களையும், கிழக்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களையும் படுகொலை செய்யத் தயாராகி வருகின்றது. இதன் அங்கமாகவே ஏ-9 பாதையை மூடியதுடன், வாகரையிலும் திட்டமிட்ட மனித அவலங்களை உருவாக்கி வருகின்றது. போரில் ஈடுபடும் தரப்புக்கள் துப்பாக்கி, வெடிமருந்துகளுக்கு இணையான ஆயுதமாக உணவையும்; பயன்படுத்துவதுண்டு. சாதாரண காலத்தைவிட போரின் போது அல்லது ஒரு அழுத்தமான சூழ்நிலையில் ஏற்படுத்தப்படும் உணவுத்தடைகள் அங்கு வாழும் மக்களுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தவல்லது. ஏனெனில் போரின்போது மக்களின் விவசாய மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் பாதிப்பட…
-
- 0 replies
- 606 views
-
-
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் இதனையடுத்து காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை விவசாயக் கல்லூரிக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தினர் மாணவர்களைச் சுட்டுக் கொன்றனர். வவுனியா திருநாவற்குளம் சிறிலங்கா காவல்துறை சோதனைச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவில்தான் விவசாயக் கல்லூரி அமைந்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் படுகொலைக்காக திருநாவற்குளம் சோதனைச் சாவடி காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். வவுனியா மாவட்ட நீதிப…
-
- 1 reply
- 847 views
-
-
வாகரையில் தொடரும் வான்படைத் தாக்குதல் [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 05:26 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] வாகரைப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகலில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு கிபிர் விமானங்கள் முற்பகல் 11.45 மணியளவில் வாகரைப்பகுதி மீது தாக்குதல் நடத்தின. அதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியிலிருந்து வாகரை மருத்துவமனையை இலக்குவைத்து கரடிக்குளம், வாழைச்சேனை, கல்லாறு சிறிலங்கா இராணுவ முகாம்களில் இருந்து தொடர் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் தணிகாசலம் செல்வரத்தினம் (வயது 35) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். http://www.eelampage.com/?cn=29906
-
- 0 replies
- 784 views
-
-
சிறிலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானம் ஒத்திவைப்பு [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 06:00 ஈழம்] [பா.பார்த்தீபன்] சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஐ.நாவின் மனித உரிமை சபையில் ஐரோப்பிய ஓன்றியத்தால் கொண்டுவரப்படவிருந்த சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, மனித உரிமை மீறல்களை கட்டுப்படுப்படுத்துவதற்கும
-
- 0 replies
- 1k views
-
-
தமிழக முதல்வருடன் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் ஆலோசனை. ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். சிறிலங்காவிலிருந்து சென்னை வழியாக இந்தியா திரும்பிய சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணனுடன் இணைந்து தமிழ்நாடு முதல்வர் கலைஞரை சந்தித்துப் பேசினார். சிறிலங்காவின் அரச தலைவர் உள்ளிட்டோருடன் நடத்திய ஆலோசனைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் கலைஞருடன் சிவசங்கர் மேனன் விளக்கம் அளித்தார். இச்சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய சிவசங்க…
-
- 0 replies
- 710 views
-
-
மகிந்தவின் டேராடூன் மாநாட்டை தமிழக மேயர்கள் புறக்கணிக்கவுள்ளனர். இந்தியாவின் டேராடூனில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தொடங்கி வைக்கவுள்ள மேயர்கள் மாநாட்டை தமிழ்நாட்டை சேர்ந்த 6 மேயர்களும் புறக்கணிக்கவுள்ளனர். ஆசிய நாடுகளின் மேயர்கள் மாநாடு டேராடூனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 32 ஆசிய நாடுகளை சேர்ந்த மேயர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தொடங்கி வைக்கவுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அவர் தொடங்கி வைக்கும் மேயர்கள் மாநாட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்த மேயர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று பா.ம.க உள்ளிட்ட கட்…
-
- 2 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் தாக்குதல் - மூன்று படையினர் பலி. வவுனியா மாவட்டம், கல்மடுக்குளம் பகுதியில் இன்று மாலை 6.35 மணியளவில் நடைபெற்ற மோதல் ஒன்றில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் சிறிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், படையினர் பதில் தாக்குதல் நடத்தி சம்பவ இடத்திலிருந்து அவர்களை பின்வாங்கச் செய்ததாகவும் ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் விடுதலைப் புலிகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வழமைபோன்று தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம், படையினர் மூவர் இந்த மோதலில் உயிரிழ…
-
- 0 replies
- 772 views
-
-
மாவீரர்நாள் 2006 கார்த்திகை 27 இலட்சியம் கொண்ட வேங்கை அவரின் இறப்பை கண்டு வியந்து நிக்கும் வீரர் நாள் எங்கள் மா வீரர் நாள்...!!
-
- 2 replies
- 1.8k views
-
-
மாவீரர் தினம் முடியும் வரை முகமாலையில் மிதிவெடிகள் அகற்றப்படமாட்டாது. - சிறிலங்கா படைத் தளபதி. விடுதலைப் புலிகளால் அனுஸ்டிக்கப்படும் மாவீரர் நாள் காலப் பகுதியில் குடாநாட்டில் புலிகள் எத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் அதனை முறியடிக்கக் கூடிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு யாழ் குடா படைத்தளபதி டி.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார் இன்று பலாலிபடைத்தளத்தில் படைஉயர்மட்ட மாநாடு ஒன்றை நடத்திய தளபதி கீழ்நிலை அதிகாரிகளிற்கு இந்த உத்தரவை வழங்கி உள்ளனர். அத்துடன் ஏ-9ஊடாக குடாநாட்டிற்கு மாவீரர் தினம் முடியும் வரை உணவுப் பொருட்கள் கொண்டுவர அனுமதிக்க முடியாது எனவும் சிறிலங்கா படைத்தளபதி தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தின் பின்னரே பாதையிலுள்ள மிதிவெடிகளை அகற்று…
-
- 0 replies
- 886 views
-
-
வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரால் 6 இளைஞர்கள் சுட்டுப் படுகொலை [வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2006, 18:50 ஈழம்] [ம.சேரமான்] வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரால் 6 இளைஞர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரிலிருந்து மேற்குப் பகுதியில் 30 கிலோ மீற்றர் தொலைவில் வவுனியா-மன்னார் வீதியில் கணேசபுரத்துக்கு அருகில் உள்ள கன்னட்டி என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் சிறிலங்கா இராணுவமோ வழமை போல் கைக்குண்டுத் தாக்குதல் நடத்த ஊடுருவியவர்களே இந்த இளைஞர்கள் என்றும் 5 பேர் தங்களது பதில் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் ஒரு இளைஞர் கைக்குண்டை வெடிக்க வைத்து இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இளைஞர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை கைப்…
-
- 0 replies
- 985 views
-
-
கொழும்பில் தற்கொலை போராளிகள் ஊடுருவியுள்ளனராம் - அரச புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை கொழும்பில் 20 பேர் அடங்கிய தற்கொலை போராளிகள் குழுவொன்று ஊடுருவியுள்ளதாக புலனாய்வுப் பிரிவு பொலிஸார் அறிவித்துள்ளனர். இக்குழுவில் 15 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள்,பெண்கள் உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். இந்த தகவலையடுத்து கொழும்பில் பாதுகாப்பு அதிகளவில் கண்காணிக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். நன்றி - பதிவு இணையம் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& ஏலுமெண்டால் ஒரு தற்கொலை போராளியை பிடிச்சுக்காட்டட்டும் பாப்பம்? சும்மா சும்மா அப்பாவி தழிழ் பெடி பெட்டையளை ப…
-
- 0 replies
- 1k views
-
-
மாவீரார் நினைவுநாள் சோடனைகள் படையினரால் அறுத்தெரியப்பட்டன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு நாளையொட்டி சோடனை செய்யப்பட்ட கொடிகள் காட்டு மிராண்டித்தனமான முறையில் இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அறுத் தெறியப்பட்டுள்ளன பல்கலைக் கழக மாணவர்களினால் கடந்தாண்டு மாவீரர் நினைவுத் தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் நுழைந்த இராணுவத்தினர் மாவிரார் நினைவுத் தூபியை உடைத்து தமது வெறியை வெளிப்படுத்தி சென்றார்கள் இத்தகைய நிலமையில் மாணவர்கள் கடந்த வாரம் மாவிரர் நினைவுத் தூபியை திருத்தம் செய்து இந்தாண்டும் குறிப்பிட்ட இடத்தில் மாவீரார் நினைவு நாளை கொண்டாடி வருகின்றார்கள் இத்தகைய நிலமையில் நேற்று பிற்ப…
-
- 0 replies
- 861 views
-
-
தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்க இந்தியா கோரும் இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா கோரும் என இந்துஆசிய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்படலாம் என இந்திய அரசியல் தரப்புக்களை கோடிட்டு அச்சேவை தெரிவித்துள்ளது. அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்க போவதில்லை என்றும், இலங்கை ஜனாதிபதி இந்திய தலைவர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் போது அதில் தமிழீழ விடுதலைப்புலிகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாது ஏனைய தமி…
-
- 0 replies
- 974 views
-
-
இந்திய அரசாங்கத்தின் ஆதரவு எமக்குத் தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: இந்திய அரசாங்கத்தின் ஆதரவு எமக்குத் தேவை. இந்திய அரசாங்கமானது எமது விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். ராஜீவ் விவகாரத்தைப் பொறுத்த வரையில் நாம் ஒருபோதும் அதற்கு உரிமை கோரவில்லை என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன். http://www.eelampage.com/?cn=29890
-
- 1 reply
- 849 views
-
-
மகிந்தவின் அலரி மாளிகையில் தீ விபத்து. மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையின் மின்மாற்றி தீப்பிடித்ததால் கரும்புகையுடன் அப்பகுதி காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்கசிவின் காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இத்தீவிபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.puthinam.com
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஊடுருவி தாக்குவதற்காகவே பாதையைத் திறக்கக் கோருகின்றனர் புலிகள் அத்துரலிய ரத்ன தேரர் சொல்கிறார். யாழ். குடா நாட்டில் ஊடுருவி தாக்குதலை நடத்தவே புலிகள் ஏ9 வீதியைத் திறக்கும்படி கோரிக்கை விடுக்கின்றனர் என ஜாதிக ஹெலஉறுமய எம்.பி. அத்துரலிய ரத்ன தேரர் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றை விடுத்துப் பேசும்போது குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றில் அவர் தொடர்ந்துபேசும்போது கூறியதாவது: ஏ9 வீதியைத் திறந்து கப்பம் பெறவும் புலிகள் முயற்சிக்கின்றனர். ஏ9 வீதி திறப்பது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? இது குறித்து பிரதமர் இச்சபையில் விளக்கமளிக்க வேண்டும். வாகரைக்கு அனுப்பப்படும் பொருட்களை புலிகள் அபகரித்துச் செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் …
-
- 1 reply
- 1.4k views
-
-
வட-கிழக்கு மக்களுக்கு மனிதபிமான உதவிகளை உடன் மேற்கொள்ள இந்தியா வேண்டுகோள். ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து உரையாடிய மேனன் இன்று சென்னையில் கருணாநிதிக்கு விளக்குவார் வடகிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடன் மேற்கொள்ளவும் உணவுப்பொருட்களையும் துரிதகதியில் அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைவந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.இருநாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இரவு இலங்கைவந்துள்ள சிவ்ங்கர் மேனன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்க தரப்பினரை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சு வார்த்தைகளின்…
-
- 0 replies
- 772 views
-