ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
http://www.tamilnaatham.com/pdf_files/soos..._2006_10_24.pdf
-
- 1 reply
- 2.9k views
-
-
கடலிலும் தரையிலும் இலக்கு வைக்கப்படும் கடற்படை காலி துறைமுகத்துக்கு வரவிருந்த ஆயுதக் கப்பல் வடக்கு - கிழக்கில் தரைவழி மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடல்வழி மோதல்களும் கடற்படையினர் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள் மேலும் மேலும் விரிவடையும் நிலை தோன்றி வருகிறது. கடற்படையினருக்கு இணையாக கடற்புலிகளும் பலமுற்றுள்ளனர். கடற்படை பீரங்கிப் படகுகள், அதிவேக டோரா தாக்குதல் படகுகள், `வாட்டஜெற்' போன்ற கடற்படையினரின் தாக்குதல் படகுகளுக்கு இணையாக கடற்புலிகளின் கடற்கலங்களும் விரைந்த கடற்சமருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் மிக நீண்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
தொடரும் தாக்குதல்களும் ஆங்கில ஊடகங்களின் அதிர்வலைகளும் தமிழர் தாயகத்தில் முகாமலை, சிறிலங்காவின் ஹபரணை, காலி உள்ளிட்ட தாக்குதல்களால் சிறிலங்கா தரப்பினர் எப்படியெல்லாம் நிலைகுலைந்துள்ளனர் என்பதை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. சில ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு: சண்டே ரைம்சில் இக்பால் அத்தாஸ்: காலி துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைக்கு அழிவை ஏற்படுத்திய தாக்குதலாளிகள் இலங்கைத்தீவின் தெற்கு முனையிலும் தாக்குதல் நடத்தும் இராணுவப் பலம் தம்மிடம் உள்ளது என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர் என்பது முக்கியமான விடயம். அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலும் சுற்றுலாவுக்காக வரும் வெளிநா…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகள் குரல்" இராணுவ நிலையல்ல: சிறிலங்காவுக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" இராணுவ நிலையல்ல. அதன் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தியமை கண்டனத்துக்குரியது என்று சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகள் குரல்" மீது சிறிலங்கா விமானப் படையினர் கடந்த ஒக்ரோபர் 17ஆம் நாளன்று குண்டுத் தாக்குதல் நடத்தியமைக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவிக்கி…
-
- 0 replies
- 935 views
-
-
சிறிலங்காவில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தை நிறுவ வேண்டும்: ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பரிந்துரை சிறிலங்காவில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறுவ வேண்டும் என்று ஐ.நாவின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பிலான பிரிவின் சிறப்பு பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கடந்த ஒக்ரோபர் 20 ஆம் நாள் அவர் பேசியதாவது: அண்மைய காலத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதோடு நீதிக்குப் புறம்பான படுகொலைகளும் நீண்டு செல்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் புதியதான ஒரு பிரச்சனையில் மூழ்கவில்லை. நீண்டகாலமாக தொடர்ச்சியான தீர்க்கப்படாத பிரச்சனையாக இது உள்ளது. இது சர்வதேச சமூகத்தின் பார்வை…
-
- 0 replies
- 756 views
-
-
Text of the Agreement This Memorandum of Understanding between the Sri Lanka Freedom Party and the United National Party represents the inauguration of a new political environment eagerly awaited by the public of this country, which replaces the hitherto existing politics of confrontation with the politics of active cooperation on national issues, in the interests of the nation. 1. On October 12, 2006, H.E. the President Mahinda Rajapaksa, who is the Head of the Government and the Leader of the SLFP, and the Hon. Ranil Wickremesinghe, Leader of the Opposition in Parliament and the Leader of the UNP, after careful and sustained deliberation have agreed to collab…
-
- 0 replies
- 948 views
-
-
தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக் கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும்: போஸ்ரன் குளோப் தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக்கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் போஸ்ரன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கம்: இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களுக்கும் பிரிவினைவாத இயக்கமான தமிழ் புலிகளுக்கும் இடையே விட்டுவிட்டு நடைபெறும் யுத்தமானது கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து 65 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் கொடூரமான யுத்தமாக இது இருப்பினும் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிற மற்ற யுத்தங்களைக் காட்டிலும் குறைவான கவனத்தையே ஈர்த்துள்ளது. இருதரப்பிலும் இரத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
செம்மணி பகுதியில் 5 நாட்களில் 6 தமிழர்களை காணவில்லை யாழ். செம்மணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் 5 நாட்களில் 6 பேரை காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது. வலிகாமத்துக்கும் தென்மராட்சிக்கும் இடையே நுழைவு வாயிலாக செம்மணி உள்ளது. கந்தர்மடத்தைச் சேர்ந்த சகோதரர்களான மோகனதாஸ் கண்ணதாஸ் (வயது 29) மற்றும் ராஜாஜி தவராஜ் (வயது 28) ஆகியோர் தென்மராட்சி செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. செம்மணியின் மேற்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 51-4 ஆம் படையணி உள்ளது. அரியாலை தெற்கு மற்றும் கிளாலிப் பிரதேசங்களில் முன்னரங்க நிலைகளில் சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆம் படையணி இயங்கி வர…
-
- 5 replies
- 1.6k views
-
-
போருக்கும் தயார் அமைதிக்கும் தயார் இலங்கை அரசுக்குப் புலிகள் எச்சரிக்கை. ----------------------------------- போருக்கும் தயார் அமைதிக்கும் தாயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங் கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். புலிப் படைத்துறைப் பேச்சாளர் இளந் திரையன் அவர்கள் ஏஎப்பி செய்தி நிறு வனத்துக்குப் பேட்டி அளித்தார். இலங்கை அரசு போருக்கான முனைப்பு களில் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ளத் தமிழீழப் படைகள் தயாராக உள்ளன. அரசாங்கம் தாக்குதலைத் தொடங்கினால் அது இலங்கைத் தீவில் அனைத்து பகுதி களிலும் உணரப்படும் எனவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மாறாக அரசாங்கம் அமைதியை விரும்பி னால் தமிழ் மக்களும் பூரணமாக அனுபவிக் கும் வகையில் அமைதி அமைய வேண…
-
- 0 replies
- 1.2k views
-
-
தூதுவர் இல்லம் உடைப்பு: சிறிலங்கா மீது ஐ.நாவில் யேர்மனி முறைப்பாடு [ஞாயிற்றுக்கிழமை, 22 ஒக்ரொபர் 2006, 18:48 ஈழம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தனது தூதரக அதிகாரிகளில் ஒருவரது இல்லம் உடைக்கப்பட்டு சட்ட விரோத தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் யேர்மனி முறைப்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கடந்த ஏப்ரல் 29-30 ஆம் நாட்களில் யேர்மன் தூதரக அதிகாரியின் பாதுகாப்பு மிக்க வீட்டுக்குள் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் உள்நுழைந்து சட்டவிரோதமாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவிடமிருந்து ஐக்கிய நாடுகள் சபையானது பதிலை எதிர்பார்த்து…
-
- 6 replies
- 2k views
-
-
சு.க.-ஐ.தே.க. இடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது [திங்கட்கிழமை, 23 ஒக்ரொபர் 2006, 14:54 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. 6 அம்சங்களைக் கொண்ட பொதுத் தேசிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் மகிந்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.13 மணிக்கு சுதந்திரக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். செப…
-
- 4 replies
- 1.2k views
-
-
காலி தாக்குதலில் கடற்புலிகள் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது: அவுட்லுக் வெள்ளிக்கிழமை 20 ஒக்ரொபர் 2006 19:36 ஈழம் ச.விமலராஜ சிறிலங்காவின் காலி கடற்படைத்தளம் தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தங்களது வலிமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று இந்தியாவின் ஆங்கில வார ஏடான "அவுட்லுக்" தெரிவித்துள்ளது. அவுட்லுக்கில் இந்திய றோ முன்னாள் அதிகாரியான பி. இராமன் எழுதியுள்ள கட்டுரை விவரம்: தென் சிறிலங்காவின் காலி வர்த்தக துறைமுகத்தில் அமைந்துள்ள கடற்படை தளத்துக்குள் கடந்த ஒக்ரோபர் 18 ஆம் நாள் அதிகாலையில் வெற்றிகரமாக உள்நுழைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் 3 கடற்படை படகுகளை அழித்தமை முற்றிலும் சிறிலங்கா கடற்படைக்கு ஆச்சரியமளித்துள்ளது. …
-
- 2 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவுக்கான எமது வலுவான ஆதரவு சமிக்ஞையை தெரிவித்துள்ளோம்: நிக்கோலஸ் பர்ன்ஸ் சிறிலங்கா அரசாங்கத்துக்கான எமது வலுவான ஆதரவு சமிக்ஞையை தெரிவித்துள்ளோம் என்று அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். தெற்காசிய ஊடகவியலாளர்கள் குழுவினரிடம் அவர் கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கத்துடன் எமக்கு சிறப்பான உறவு உள்ளது. மகிந்த ராஜபக்சவை நான் சந்தித்துப் பேசியுள்ளேன். சிறிலங்கா அரசாங்கத்துக்கான எமது வலுவான ஆதரவு சமிக்ஞையை தெரிவித்துள்ளோம். தமிழ் புலிகளை நாம் அங்கீகரிக்கமாட்டோம். நாம் அவர்களை ஆதரிக்கமாட்டோம். அவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பினர். தமிழ் மக்களுக்கு துன்பத்தைத்தான் தருவார்கள். சிறிலங்கா அரசாங்கத்த…
-
- 0 replies
- 916 views
-
-
. ஆஸ்பத்திரியில் கொல்லப்பட்டோர் நினைவுதினம் இன்று யாழ்ப்பாணம், ஒக்.21 யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையின் போது படுகொலை செய்யப்பட்ட 21ஊழியர்களினது 19ஆவது நினைவுதினம் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21ஆம் திகதியன்று இந்திய அமைதிப்படையினரால் கடமையில் இருந்த டாக்டர்கள், தாதியர்கள், சிற்×ழியர்கள் உட்பட 21 ஊழியர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று காலை 10மணிக்கு அவர்களின் நினைவாக திருவுருவப்படங்களுக்கு 21ஈகச் சுடரரேற்றி மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுக் கூட்டமும் நடைபெறும். யாழ். போதனா வைத்தியசாலையில் நடை பெறும் மேற்படி நிகழ்வுகளின் முடிவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்திருக்கும், இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் ஆத்ம சாந்…
-
- 12 replies
- 2.9k views
-
-
வடக்கு கிழக்கின் இணைப்பு நீக்கம்; செயலும் அதன் விளைவுகளும் பற்றிய ஓர் நோக்கு -பீஷ்மர் தென்கிழக்கு முஸ்லிம் கோரிக்கையின் எதிர்காலம் யாது? * பிரிக்கப்படும் வடக்கு கிழக்கில் நிர்வாக இயந்திரங்கள் யாவை? வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பானது இலங்கையின் சட்ட நிலைப்படி செல்லாது என்பதனை ஐவரைக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் குழு தீர்மானித்துள்ளது. இலங்கையின் நீதியமைப்பில் ஆட்சியாப்பு விடயங்கள் பற்றி தீர்மானிப்பதற்கென ஒரு குறிப்பிட்ட நீதிமன்று இல்லையெனினும், நமது உச்ச நீதிமன்றம் இந்நாட்டின் மிக உயர் நீதிமன்றம் என்ற வகையில் இதுபற்றிய வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பது அதன் இயல்பான கடமையே என்று கூறப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்புக் குறிப்பில் அது இவ்விடயத்தின…
-
- 0 replies
- 751 views
-
-
விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் "சர்ச்சை"கள்! கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் அத்தனை நடவடிக்கைகளும் பார்ப்பனரல்லாத தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகின்றன என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. பெரியார் திராவிடர் கழகம் இந்த செயல்பாடுகளைப் பாராட்டி வரவேற்றும் இருக்கிறது. ஆனாலும், சாதனைகளுக்கிடையே களங்கமாகி நிற்கும், தி.மு.கவின் அண்மைக்கால நடவடிக்கை ஒன்று தமிழினத்தின் உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்தியிருக்கிறது. இதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு - "வைகோ"வினால் உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளித்த மனுவ…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஞாயிறு 22-10-2006 16:06 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப் புலிகளுகளுக்கு அதியுச்ச பாதுகாப்பை வழங்குவோம் - ரம்புக்வெல ஜெனீவாப் பேச்சுக்களில் கலந்துகொள்ளும் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு கொழும்பினூடாப் பயணிக்கும் போது அதியுச்ச பாதுகாப்பை வழங்குவோம் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் அமைச்சருமான கேஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் நோர்வே தரப்பினரிடமும் ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் சர்வதேச மட்டத்திலான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இருந்தும் பாதுகாப்புத் தொடர்பில் இதுவரையில் அரசாங்கத்திற்கு உத்தியோபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் விடுதலைப் புலிகளுக்கான பாதுகாப்பை ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
யுத்தத்திற்கு திரும்பிச் செல்ல மறுக்கும் சிறிலங்கா படையினர் (WSWS interviews: Sri Lankan soldiers oppose return to war) இலங்கையில் உள்நாட்டு சண்டை வெடித்ததைத் தொடர்ந்து இராணுவம் பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பாரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. "சிங்களத் தாய்நாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பது வீரபுருசர்களின் கடமை" என்ற அறிவித்தலின் மூலம் அரசாங்கமானது இனவாத வேண்டுகோளை வெளிப்படையாகவே விடுத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு எண்ணிக்கை இன்னமும் எட்டப்படவில்லை. இராணுவத்தினரிடையே வெறுப்பும் மற்றும் போரிடும் உளஉரண் அற்ற தன்மையே நிலவுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பரில் மகிந்த ஆட்சியை பிடித்த பின்பு பரந்த யுத்…
-
- 4 replies
- 2.8k views
-
-
கந்தளாயில் சிறிலங்காப் படையினரின் உலங்குவானு}ர்தி வீழ்ந்தது. - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 22 ழுஉவழடிநச 2006 16:40 திருகோணமலை கந்தளாய்ப் பகுதியில் சிறிலங்காப் படையினருக்கு சொந்தமான உலங்கு வானு}ர்தியொன்று வீழ்ந்துள்ளது. இச் சம்பவம் கந்ததளாய்கும் மாவிலாறுக்கும் இடைப்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது தீடிரென பறப்பில் ஈடுபட முடியாமல் வீழ்ந்துள்ளது. இச் சம்பவம் நேற்று பிற்பகல் 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானி தரையிறக்கவென தாழப்பறந்தபோது தரையிறக்க முன்பாகவே வீழ்ந்துள்ளது. அதன் பின்னர் அந்த உலங்குவானு}ர்தியை மேலெழுப்ப முடியவில்லை அதனால் கனரக ஊர்திகள் அப்பகுதிக்கு வந்து அதனைக் கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது http://sankathi.org/news/inde…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசியத்தையும் அதன் தலைமையையும் சந்தேகத்துக்கு இடமின்றி ஆதரிப்போரில் நானும் ஒருவன் என்றவகையில்தான் இங்கு கருத்துகளை எழுதுகிறேன். நானும் எனது மனைவியும் செய்யும் தொழில் வருமானம் எமது குடும்பத்துக்கு தாரளமாக போதும்..தமிழ் தேசியத்துக்காக எனது குடும்பத்து பொருளாதர பங்களிப்பு கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலானது. இந்நிலையில் நோர்வேயின் பிச்சைக்காசுக்கு எடுபிடியாக **** போல் நான் இங்கு கருத்து எழுதவரவில்லை என்பதை நாரதர் போன்றோர் தெரிந்து கொள்ளவேண்டும், இங்கு கருத்து எழுதும் சிலரைப்போல என்னால் எமது தேசிய விடுதலையின் போராட்டத்தொடர்ச்சியை பார்க்க முடியாது இருக்கும் பல காரணங்களில் எனது தொழில் பின்னணி அதில் முதன்மையானது. ''எடுத்தோம்.....கவிழ்த்தோம்..'' என்பதே இங்…
-
- 211 replies
- 27k views
-
-
யாழில் படையினரால் 6 பலசரக்கு கடை திறப்பு யாழில் ஸ்ரீலங்கா படையினர் பொதுமக்கள் நலன் கருதி 6 உணவுப்பொருட்க்கள் விற்பனை நிலையங்களைத் திறந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட மோதலினையடுத்து A9 நெடுஞ்சாலை மூடப்பட்டமையால் மட்டுப்படுத்தப்பட்டமையால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு உணவு விநியோகமே யாழ் குடாநாட்டிற்க்கு இடம்பெற்றது. இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகமாகவும், குறைந்தளவிலுமே கிடைத்தமை எனவே மக்களின்ம் நலன் கருதி இவ் விற்பனை நிலையங்களை திறந்ததாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்து. அதேவேளை இவ் விற்பனை நிலையங்கள் யாழ் நகரிலும், தெல்லிப்பளை, தனங்கிழப்பு, சாவக்கச்சேரி மற…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஓருபேப்பர் தனது உடைந்த தமிழில் கருணாநிதியை திட்டியிருந்தார்கள். அதற்கு அவர் எழுதிய பதில் http://edigitallab.com/karu.pdf
-
- 16 replies
- 5k views
-
-
தேசியத் தலைவரால் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுற்றது - தமிழ்ச்செல்வன் கடந்த மாவீரர் நாளன்று, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம், பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்திருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்று தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், மகிந்த ராஜபக்சவிற்கு தமிழீழ தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட கால அவகாசம், இவ்வருட மாவீரர் நாளுடன் நிறைவடையும் எனக் கூறப்படுவது மிகவும் தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார். மாறாக சிறீலங்கா அதிபருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், கடந்த பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்து, தற்போது யுத்த …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை: ஹபரணையில் வெடித்துச் சிதறிய சாரதியின் முகம் புன்சிரிப்புடன் காணப்பட்டதாம். கடந்த 16 ஆம் திகதி ஹபரணை பிரதேசத்தில் திகம்பொத்தான பகுதியில் கடற்படை வீரர்களை பலிகொண்ட வெடிபொருட்கள் ஏற்றி வந்த கொள்கலன் லொறியைச் செலுத்தி வந்த சாரதியின் சிதறிய உடல் பகுதிகள் மேற்படி சம்பவத்தின் பின்னர் படையினரால் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அந்த உடல் பகுதிகள் குருநாகல் வைத்தியசாலையில் இறந்த சடலங்கள அறையில் வைக்கப்பட்டுள்ளன. புலிகள் இயக்க தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பிய லொறி மூலமான இந்தப் பயங்கரமான தாக்குதலின் போது சாரதியின் உடல் வேறு, தலைவேறு, கை, கால்கள் வேறாக வெடித்துச் சிதறி விட்டதாகவும் பின்னர் உடலின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டு ஒன்றாகச் சேர்த்…
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கையில் புலிகளின் இரு பிரதான தாக்குதல்களை அடுத்து இராணுவ மோதல்கள் உக்கிரமடைகின்றன 0000 இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த மூன்று நாட்களுக்குள் தொடுத்த இரு பிரதான தாக்குதல்கள், கடந்த ஜூலையில் இருந்து துரிதமடைந்துவரும் பகிரங்க உள்நாட்டு யுத்தம் மேலும் உக்கிரமடையும் ஆபத்தை தோற்றுவித்துள்ளது. கடந்த திங்களன்று, தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கு கிழக்காக 170 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹபரனை பிரதேசத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 102 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கடற்பனையினராகும். இந்த இடம், கிழக்குத் துறைமுகமான திருகோணமலையில் உள்ள க…
-
- 1 reply
- 1.4k views
-