விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
கோல் கீப்பர் கோலை தடுத்துப் பார்த்திருப்பீங்க... கோல் அடிச்சுப் பார்த்திருக்கீங்களா!? கால்பந்து நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விளையாட்டுதான். இரண்டு அணிகள் போட்டியிடும் இந்த விளையாட்டில், ஓர் அணிக்கு 11பேர். அதில், பதினோராவது வீரர்தான் இந்த கோல் கீப்பர். இரண்டு அணிகளுக்கும் நேர் எதிரில் தனித்தனி வலைகள் இருக்கும். அந்த 10 வீரர்களும் எதிர் அணியின் வலைக்குள் பந்தை அடிக்க வேண்டும். அப்போது, கோல் கீப்பர் வலை அருகில் இருந்து, எதிரணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியைத் தடுப்பார். சாதாரணமாக, இந்த இரண்டு அணிகளின் வலைகளுக்கிடையில் உள்ள தூரம், 90ல் இருந்து 120 மீட்டர் வரை இருக்கும். அப்படி இருக்கையில், இந்த கோல் கீப்பர் தன்னுடைய வலை அருகில் இரு…
-
- 0 replies
- 261 views
-
-
18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற ஐ.பி.எல் தொடரின் 11ஆவது பருவகாலப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இம்முறைப் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் பெங்ளுருவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு கடந்த வாரம் முடிவடைந்தது. இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக 1,122 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இதில் 578 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் நேற்று(20) உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். இதன்படி, 578 வீர…
-
- 0 replies
- 365 views
-
-
ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம் இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக வந்துள்ள சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு, வந்த உடனே அற்புதங்களை செய்ய அவர் மயாஜால வித்தைக்கார் அல்ல. எனவே அணியை நெறிப்படுத்த அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா தெரிவித்தார் கடந்த 2, 3 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணி, சர்வதேச அரங்கில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். அதிலும் குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் இலங்கை அணி பங்குபற்றிய 29 ஒரு நாள் போட்டிகளில் 23 போட்டிகளில் தோல்வியை சந்தித்து வரலாற்றில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இவையனைத்துக்கும் விமோசனம…
-
- 0 replies
- 318 views
-
-
அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடுவர்களுடன் வாதிடும் விராட் கோலி. - கோப்புப் படம். | ஜி.பி.சம்பத்குமார் பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி வருவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியில் இருந்தவரும் வரலாற்றறிஞரும் சமூகச் சிந்தனையாளருமான ராமச்சந்திர குஹா வருத்தத்துடன் சாடியுள்ளார். கொல்கத்தா…
-
- 0 replies
- 203 views
-
-
ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி ஜே.பி.டுமினி சாதனை! ஜே.பி.டுமினி. - கோப்புப் படம். | அகிலேஷ் குமார். தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் ஜே.பி.டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி லிஸ்ட் ஏ சாதனை புரிந்துள்ளார். நியூலேட்ண்ட்சில் நடைபெற்ற மொமெண்டம் ஒன் டே கப் போட்டியில் டுமினி லெக் ஸ்பின்னர் எடி லீயி என்பவரை ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசினார். நைட்ஸ் அணியின் 240 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடிய கேப் கோப்ராஸ் அணி 36வது ஓவரில் 208/2 என்று சவுகரியமாக இருந்தது. டுமினி களத்தில் இருந்தார். போனஸ் புள்ளி பெற வாய்ப்பிருக்கிறது என்பதால் டுமினி, எடி லீயி என்ற லெக்ஸ்பின்னரை அடித்து நொறுக்குவது என்று திட்டமிட்டார். முதலில் ஒரு…
-
- 3 replies
- 1k views
-
-
விளையாட்டு: செய்தித்துளிகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 6.30 மணிக்கு மவுண்ட் மவுங்கனுயி நகரில் நடைபெறுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - வடகிழக்கு யுனைட்டெடு அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி 10 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 20 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் வடகிழக்கு அணி 9 ஆட்டத்தில் 2 வெற்றி…
-
- 0 replies
- 208 views
-
-
ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும்; பார்த்திவ் படேலுக்கு இழைத்த துரோகமும்! ரோஹித் சர்மா, பார்த்திவ் படேல். - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். துணைக்கண்டபிட்ச், இந்திய ரக பிட்ச் என்றெல்லாம் வர்ணனையிலும் ஊடகங்களிலும் செஞ்சூரியன் பிட்சைப் பற்றிக் கூறுவது சரியென்றாலும் ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்சில் பந்தின் வேகம் கூடிவிட்டது என்பதும் டுபிளெசிஸ் கூறியது போல் பிட்சில் பந்துகள் எழுச்சியும், தாழ்ச்சியும் பெறும் என்று டாஸின் போது கூறியதும் உண்மையாகியுள்ளது. மார்க்ரம், ஆம்லாவை பும்ரா தனது ‘ஷூட்டர்கள்’ (தாழ்வாக வரும் பந்துகள்) மூலம் வீழ்த்த, ரபாடா வீசிய அதே ரகப…
-
- 3 replies
- 523 views
-
-
2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள்... பல பிரிவுகளில் கில்லியடித்த விராட் கோலி! சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்பதுகுறித்து தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் - விராட் கோலி 2017-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் - ஸ்டீவ் ஸ்மித் 2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் அணி - டேவிட் வார்னர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, பாபர் அசாம், டிவில்லியர்ஸ், டிகாக், பென் ஸ்டோக்ஸ், ட்ரென…
-
- 0 replies
- 337 views
-
-
வயது இரண்டரை தான். இந்தச் சென்னை சிறுவனின் கிரிக்கெட் ஆட்டம் உங்களை கவரக்கூடும் சென்னையைச் சேர்ந்த சனுஷ் சூர்யதேவுக்கு தற்போது இரண்டரை வயதாகிறது. ஐந்து மாத வயது குழந்தையாக இருக்கும்போதே பொம்மைகளுக்கு பதிலாக பந்துகளை வைத்து சனுஷ் விளையாடியதாகவும், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் அவரது தந்தை கூறுகிறார். படத்தின் காப்புரிமைSANUSH தற்போது நெகிழி பந்துகளில் கிரிக்கெட் விளையாடும் சனுஷ், தொழில்முறை கிரிக்கெட்டரைப் போல அழகாக டிரைவ் ஆடுகிறார். இந்தியா புக் ஆஃப் தி ரெக்கார்ட்ஸ் 'இளம் குழந்தை கிரிக்கெட்டர்' என சனுஷை அங்கீகரித்திருக்கிறது. சமீபத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியைச் சந்தித்து வாழ்த…
-
- 0 replies
- 226 views
-
-
கிளிநொச்சியில் களைகட்டியது மஞ்சல் விரட்டு விளையாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜல்லிக் கட்டு போன்று மஞ்சல் விரட்டு பாரம்பாரிய விளையாட்டாக இடம்பெற்று வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலும் யுத்தத்திற்கு முன் பல கிராமங்களில் மஞ்சல் விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது. பின்னர் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற மஞ்சல் விரட்டு இடம்பெறாது இருந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் மஞ்சல் விரட்டும் நிகழ்வு கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேச இளைஞர்களால் நடத்தப்பட்டுள்ளது. தாங்கள் வளர்க்கும் மாடுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒன்றின் கழுத்தில் துணி ஒன்றில் பணம் அல்லது பிடிக்கப்படும…
-
- 2 replies
- 622 views
-
-
இலங்கை வீராங்கனை அமெரிக்காவில் சாதனை ! மரதன் போட்டிகளில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார் இலங்கையின் மரதன் வீராங்கனையான ஹிருணி விஜேரத்ன. டெக்ஸாஸின் ஹொட்சனில் நடைபெற்ற சர்வதேச மரதன் போட்டியின் போதே ஹிருணி இந்த புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன் இலங்கை வீராங்கனை நிலூகா ராஜசேகரவினால் நிலைநாட்டப்பட்டிருந்த இரண்டு மணித்தியாலயம் 40 நிமிடம் 7 வினாடிகளில் அடைந்த பந்தயத் தூரத்தை, தற்போது ஹிருணி விஜேரத்ன இரண்டு மணித்தியாலயம் 36 நிமிடங்கள் 35 வினாடிகளில் கடந்து இலங்கையின் தேசிய சாதனையை புதுப்பித்துள்ளார். இந்த தேசிய சாதனையுடன் எதிர்வரும் ஏப்ரல் மா…
-
- 0 replies
- 243 views
-
-
கோலியின் மகுடத்தில் மற்றொரு வைரம்! கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த டொன் பிராட்மனின் சாதனையொன்றை விராட் கோலி முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியொன்றில், அணித் தலைவராகக் களமிறங்கி எட்டு முறை நூற்றைம்பது ஓட்டங்களைக் குவித்தவர் பிராட்மன். தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, கோலி 153 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இது, டெஸ்ட் அணித் தலைவராக அவர் பெற்ற ஒன்பதாவது நூற்றைம்பது ஓட்டங்களாகும். இதன்மூலம், பிராட்மனின் சாதனையைச் சமன் செய்துள்ளார் கோலி. டெஸ்ட் அணித் தலைவராக நூற்றைம்பது ஓட்டங்கள் கடந்தோர் பட்டியலில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் ஏழு 150 ஓ…
-
- 0 replies
- 250 views
-
-
ஊன்றுகோல் உதவியுடன் அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யா! இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மூட்டுப் பகுதியில் ஏற்பட்டக் காயத்தால் நடக்க முடியாமல் தவித்து வருகிறார். அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, தான் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். இலங்கை அணி கடந்த 1996-ல் உலகக் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜெயசூர்யா, அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை ஜெயசூர்யா குவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கெதிராகக் கொழும்புவில் குவித்த 340 ரன்களும் அடங்கும். கடந்த …
-
- 1 reply
- 515 views
-
-
பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்தது லிவர்பூல் அ-அ+ பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மான்செஸ்டர் சிட்டி அணிக்கு முற்றுப் புள்ளி வைத்தது லிவர்பூல். #PremierLeague #mancity #Liverpoo இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முதல் போட்டியில் பிரைட்டன் அணியை 2-0 என வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அதன்பின் நேற்று லிவர்பூல் அணியை சந்திக்கும் வரை தோல்விய…
-
- 0 replies
- 167 views
-
-
கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில், அணியொன்றினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக நேபாள கட்புலனற்றோர் அணியுடன் இன்று (13) நடைபெற்ற லீக் போட்டியில் 494 ஓட்டங்களைப் பதிவுசெய்த இலங்கை அணி புதிய உலக சாதனை படைத்தது. கட்புலனற்றோருக்கான 40 ஓவர்கள் கொண்ட 5 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் டுபாய் மற்றும் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்றன. டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 10 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சந்தன தேஷப…
-
- 0 replies
- 251 views
-
-
19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழா நியூஸிலாந்தில் இவ் வார இறுதியில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனத் தலைவர் டெபி ஹொக்லி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப் போட்டியில் பங்குபற்றும் 16 நாடுகளினதும் வீரர்களும், க்றைஸ்ட்சேர்ச் மாநகர சபை உறுப்பினர் ஆரொன் கெயோனும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். நியூஸிலாந்தின் கலாசாரத்தைப் பிரதி பலிக்கும் மயோரி நடனமும் இடம்பெற்றது. ‘‘சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொழில்சார் வீரர்களை உருவாக்குவதில் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டி முக்கிய பங…
-
- 3 replies
- 481 views
-
-
டி20 வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! ரிஷாப் பாண்ட் சாதனை டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பாண்ட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் 32 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். Photo Courtesy: BCCI சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இந்த தொடரின் வடக்கு மண்டலம் பிரிவில் டெல்லி - ஹிமாச்சலப்பிரதேச அணிகள் மோதிய போட்டி இன்று நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹிமாச்சலப் பிரதேச அணி 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரிஷாப் பாண்ட் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் டெல்லி அணியின்…
-
- 0 replies
- 385 views
-
-
2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் 2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள், பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்தது. இதில் கிரிக்கெட், கால்பந்து, மெய்வல்லுனர் என பல்வேறு விளையாட்டுகளில் முக்கியமாக இடம்பெற்ற நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஜனவரி இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் T-20…
-
- 0 replies
- 316 views
-
-
யுவராஜ், கம்பீர், ஹர்பஜன்.... ஐ.பி.எல் ஏலத்துக்கு வரும் 1,122 வீரர்கள்! Chennai: 11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளன. மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல் ஏலம் வருகிற 27, 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 1,122 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏலத்திற்கு வரும் வீரர்கள் பட்டியல் 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களை அதிக விலை கொடுத்து அணிகள் வாங்கும் என்று …
-
- 1 reply
- 396 views
-
-
அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் செய்திகள் பிராட், ஆண்டர்சனுக்கு வயதாகி விட்டது; ஆஸி. 3-1 என்று வெல்லும்: ஸ்டீவ் வாஹ் கருத்து இங்கிலாந்தால் ஆஷஸை வெல்ல முடியாது என்கிறார் ஸ்டீவ் வாஹ். - கோப்புப் படம். | ஜி.பி.சம்பத்குமார் பிரிஸ்டல் தெருச்சண்டையில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடர் ஆடாததையடுத்து இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வெல்வது மிகக் கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் வானொலியில் ஸ்டீவ் வாஹ் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி கூறியதாவது: பென் ஸ்டோக்ஸ் வரவில்லையெனில் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல முடியாது எ…
-
- 110 replies
- 6.4k views
-
-
தென்னாப்பிரிக்கா டெஸ்ட்டில் இந்தியா தோற்றதுக்கான விதை... பி.சி.சி.ஐ போட்டது! #SAvsIND 2017 பிப்ரவரி - ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்திறங்கியது. 2 வாரங்களுக்கு முன் ஹைதராபாத்தில் வங்கதேசத்தை நசுக்கிவிட்டு ஆஸி அணியை எதிர்கொள்ள ஆயத்தமானது இந்தியா. ரவீந்திர ஜடேஜாவும் ரவிச்சந்திரன் அஷ்வினும் பட்டையைக் கிளப்ப, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்தியா. கேப்டனாக கோலி வானில் பறந்துகொண்டிருந்தார். இலங்கையிடம் வைட்வாஷ், தென்னாப்பிரிக்க தொடரில் தோல்வி என வரிசையாக சரிவுகளையே கண்டிருந்த ஸ்மித்மீது எக்கச்சக்க நெருக்கடி. 10 மாதங்கள் முடிந்துவிட்டது. மிகப்பெரிய ஆஷஸ் தொடரை 4-0 என வென்று, தொடரின் நாயகனாகவும் ஜொலித்து டெஸ்ட் அரங்கின் அரசன…
-
- 1 reply
- 676 views
-
-
முத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து அ-அ+ துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. துபாய்: துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. …
-
- 0 replies
- 221 views
-
-
தந்தை வழியில் மகன்: ராகுல் திராவிட் வாரிசு சமித் அடித்த வெற்றிச் சதம் ராகுல் திராவிட் மகன் சமித். சச்சின் மகன் அர்ஜுன் தற்போது ராகுல் திராவிட் மகன் சமித் ஆகியோர் தந்தையர் கிரிக்கெட் வழியில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதே போல் சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தன் தந்தை வழியில் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி ஒன்றில் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுத்தந்தார். விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தார் …
-
- 2 replies
- 468 views
-
-
T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார Image Courtesy - Cricinfo இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல் 11 வரை ஹொங் கொங்கில் நடைபெறவுள்ள T-20 பிலிட்ஸ் போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார். டெஸ்ட் அரங்கில் 12,400 ஓட்டங்களையும், ஒரு நாள் அரங்கில் 14,200 ஓட்டங்களையும் குவித்துள்ள 40 வயதான சங்கக்கார, இத்தொடரில் கலந்துகொண்டு ஹொங் கொங் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், அந்நாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 506 views
-
-
சர்வதேச பனிச்சறுக்கல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சர்வதேச பனிச்சறுக்கல் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையை 21 வயதான யுவதி அன்ச்சல் தக்கூர் தனதாக்கிக்கொண்டார். துருக்கியில் நடைபெற்ற அல்பைன் எஸ்டர் 3200 கிண்ண பனிச்சறுக்கல் போட்டியில் அன்ச்சல் தக்கூர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இப் போட்டி சர்வதேச பனிச்சறுக்கல் (ஸ்கி) சம்மேளனத்தினால் நடத்தப்பட்டது. இந்தியாவில் பனிப்பொலிவு இடம்பெறுவது அரிது என்பதால் குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. வெண்கலப் பதக்கம் வென்ற அன்ச்சலை முதலாவதாக பாராட்டியவர்களில் இந்தியப் பிரதமர…
-
- 0 replies
- 321 views
-