Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கேப்டனாக கோலி நீண்ட காலம் நீடிப்பார் என்று தோன்றவில்லை: தெ.ஆ. முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கருத்து விராட் கோலி. - படம். | ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவின் வெற்றிகரமான கேப்டனான கிரேம் ஸ்மித், கோலியின் அணுகுமுறை அவரை நீண்ட கேப்டன்சி தெரிவாக வைத்திருக்க முடியுமா என்பதை உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். கோலி அடிக்கடி அணியை மாற்றுவதும், தன் மனம்போன போக்கில் முடிவுகளை எடுப்பதும் பல விமர்சனங்களை தருவித்துள்ளது. கிரிக்கெட் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, பிசிசிஐ-யில் கோலியின் அதிகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். கோலியை எதிர்த்து அவரைக் கண்டித்து அடக்கும் பயிற்சியாளர், நிர…

  2. 47-0ல் இருந்து 96-க்கு ஆல்அவுட்: 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஆஸி. ஸ்பின்னர்! - வீடியோ ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. Photo: Twitter/ICC நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாகக் கேப்டன் ஜேசன் சங்கா 58 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பாம்பர், பென்னிங்டன் மற்றும் ஜேக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றிபெற்று அரையிற…

    • 1 reply
    • 189 views
  3. இரவு விடுதியில் ரசிகரை தாக்கியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி!!! இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளித்த பின்னரே நியூஸிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைய முடியும் என்று சகலதுறை ஆட்டவீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் பிறிஸ்ரோல் இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விளக்கமளிப்பதற்காக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் பென் ஸ்டொக்ஸ் ஆஜராகவுள்ளார். இந்நிலையில் "நீதிமன்றில் அஜராகும் வரை அணியின்…

  4. முதல் டி 20 ஆட்டம் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி சான்ட்னர் பந்தில் ஸ்டெம்பிங் ஆன பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது. - படம்: ஏஎப்பி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெலிங்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 5.4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கடும் சரிவை சந்தித்தது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரர்களான பஹர் ஸமான் 3, உமர் அமின் ரன் ஏதும் எட…

  5. செய்தித்துளிகள்: லண்டனுக்கு சென்ற உலகக் கோப்பை டிராபி! சென்னையில் நடைபெற்று வரும் மெக்பெரன் கோப்பைக்கான தேசிய கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை எப்சி பி - பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஜெரின் 2 கோல்களும், தவா ஒரு கோலும் அடித்தனர். இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் இன்று தொடங்குகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாதினியுடன் மோதுகிறார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் ஜூல்பட்லி ஜூல்க…

  6. தோல்வியை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல கோலி: தோனி குறித்து ஆகாஷ் சோப்ரா சூசகம்? கோலி, தோனி - கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே. தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சந்தித்த தோல்வி வழக்கமானதோ, எதிர்பார்க்கப்பட்டதோ அல்ல என்று முன்னால் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார், அதில் விராட் கோலி தோல்விகளை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல என்று கூறியதோடு முன்னாள் கேப்டன் தோனி அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு விஷயங்களை அவர் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். …

  7. ஆரம்பமும் முடிவும் மும்பையில் ! ஏப்ரல் 7 முதல் மே 27 வரை ஐ.பி.எல். கொண்டாட்டம் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்ப போட்டியும் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்படும் ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளை சிறப்பாக கடந்துள்ளது. 11 ஆவது சீசன் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தன. அதில் வீ…

  8. லா லிகா: டெபோர்டிவோ அணியை 7-1 என துவம்சம் செய்தது ரியல் மாட்ரிட் ரொனால்டோ, கரேத் பேலேயின் சிறப்பான ஆட்டத்தால் டெபோர்டிவோ அணியை 7-1 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட். #Laliga #garethBele #Ronaldo #realMadrid லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் புகழ்வாய்ந்த ரியல் மாட்ரிட், டெபோர்டிவோ அணியை எதிர்த்து விளையாடியது. இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சொந்த மைதானத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் சாம்பியன் பட்டத்தை இழக்கும் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண…

  9. தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடும் பார்சிலோனா: ரியல் பெட்டிஸ் அணியை 5-0 என வீழ்த்தியது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றும் வரும் கால்பந்து லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் பார்சிலோனா பயணம் செல்கிறது. #Laliga #Barcelona லா லிகா தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் பெட்டிஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் அசுர பலத்துடன் விளையாடிய ரியல் பெட்டிஸ் அணி முதல் பாதி நேரம் வரை பார்சிலோனா அணியை கோல் அடிக்க விடவில்லை. 2-வது பா…

  10. ஆஸ்திரேலிய ஓப்பன் பதக்கம் யாருக்கு? - கலக்கத் தயாராகும் புதுமுகங்கள் வருடம் தொடங்கினாலே, டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு வருடத்தின் டென்னிஸ் போட்டிகளை பிள்ளையார்சுழி போட்டு தொடங்கிவைப்பது ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர். கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர் இன்று தொடங்கி (ஜனவரி 15), ஜனவரி 28-ம் தேதி வரை நடக்கிறது. அழகிய மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் 49 நாடுகளிலிருந்து 256 வீரர்கள் பங்கேற்கின்றனர். 50 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசுத்தொகையாகக்கொண்ட வருடத்தின் மாபெரும் முதல் கிராண்ட்ஸ்லாம், வீரர்களின் அந்த வருடத்துக்கான டென்னிஸ் பயணத்தைக் கணிப்பதாகவே அமையும். இந்த…

  11. கோல் கீப்பர் கோலை தடுத்துப் பார்த்திருப்பீங்க... கோல் அடிச்சுப் பார்த்திருக்கீங்களா!? கால்பந்து நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விளையாட்டுதான். இரண்டு அணிகள் போட்டியிடும் இந்த விளையாட்டில், ஓர் அணிக்கு 11பேர். அதில், பதினோராவது வீரர்தான் இந்த கோல் கீப்பர். இரண்டு அணிகளுக்கும் நேர் எதிரில் தனித்தனி வலைகள் இருக்கும். அந்த 10 வீரர்களும் எதிர் அணியின் வலைக்குள் பந்தை அடிக்க வேண்டும். அப்போது, கோல் கீப்பர் வலை அருகில் இருந்து, எதிரணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியைத் தடுப்பார். சாதாரணமாக, இந்த இரண்டு அணிகளின் வலைகளுக்கிடையில் உள்ள தூரம், 90ல் இருந்து 120 மீட்டர் வரை இருக்கும். அப்படி இருக்கையில், இந்த கோல் கீப்பர் தன்னுடைய வலை அருகில் இரு…

  12. 18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற ஐ.பி.எல் தொடரின் 11ஆவது பருவகாலப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இம்முறைப் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் பெங்ளுருவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு கடந்த வாரம் முடிவடைந்தது. இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக 1,122 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இதில் 578 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் நேற்று(20) உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். இதன்படி, 578 வீர…

  13. ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம் இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக வந்துள்ள சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு, வந்த உடனே அற்புதங்களை செய்ய அவர் மயாஜால வித்தைக்கார் அல்ல. எனவே அணியை நெறிப்படுத்த அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா தெரிவித்தார் கடந்த 2, 3 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணி, சர்வதேச அரங்கில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். அதிலும் குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் இலங்கை அணி பங்குபற்றிய 29 ஒரு நாள் போட்டிகளில் 23 போட்டிகளில் தோல்வியை சந்தித்து வரலாற்றில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இவையனைத்துக்கும் விமோசனம…

  14. அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடுவர்களுடன் வாதிடும் விராட் கோலி. - கோப்புப் படம். | ஜி.பி.சம்பத்குமார் பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி வருவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியில் இருந்தவரும் வரலாற்றறிஞரும் சமூகச் சிந்தனையாளருமான ராமச்சந்திர குஹா வருத்தத்துடன் சாடியுள்ளார். கொல்கத்தா…

  15. ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி ஜே.பி.டுமினி சாதனை! ஜே.பி.டுமினி. - கோப்புப் படம். | அகிலேஷ் குமார். தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் ஜே.பி.டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி லிஸ்ட் ஏ சாதனை புரிந்துள்ளார். நியூலேட்ண்ட்சில் நடைபெற்ற மொமெண்டம் ஒன் டே கப் போட்டியில் டுமினி லெக் ஸ்பின்னர் எடி லீயி என்பவரை ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசினார். நைட்ஸ் அணியின் 240 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடிய கேப் கோப்ராஸ் அணி 36வது ஓவரில் 208/2 என்று சவுகரியமாக இருந்தது. டுமினி களத்தில் இருந்தார். போனஸ் புள்ளி பெற வாய்ப்பிருக்கிறது என்பதால் டுமினி, எடி லீயி என்ற லெக்ஸ்பின்னரை அடித்து நொறுக்குவது என்று திட்டமிட்டார். முதலில் ஒரு…

  16. விளையாட்டு: செய்தித்துளிகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 6.30 மணிக்கு மவுண்ட் மவுங்கனுயி நகரில் நடைபெறுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - வடகிழக்கு யுனைட்டெடு அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி 10 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 20 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் வடகிழக்கு அணி 9 ஆட்டத்தில் 2 வெற்றி…

  17. ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும்; பார்த்திவ் படேலுக்கு இழைத்த துரோகமும்! ரோஹித் சர்மா, பார்த்திவ் படேல். - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். துணைக்கண்டபிட்ச், இந்திய ரக பிட்ச் என்றெல்லாம் வர்ணனையிலும் ஊடகங்களிலும் செஞ்சூரியன் பிட்சைப் பற்றிக் கூறுவது சரியென்றாலும் ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்சில் பந்தின் வேகம் கூடிவிட்டது என்பதும் டுபிளெசிஸ் கூறியது போல் பிட்சில் பந்துகள் எழுச்சியும், தாழ்ச்சியும் பெறும் என்று டாஸின் போது கூறியதும் உண்மையாகியுள்ளது. மார்க்ரம், ஆம்லாவை பும்ரா தனது ‘ஷூட்டர்கள்’ (தாழ்வாக வரும் பந்துகள்) மூலம் வீழ்த்த, ரபாடா வீசிய அதே ரகப…

  18. 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள்... பல பிரிவுகளில் கில்லியடித்த விராட் கோலி! சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்பதுகுறித்து தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் - விராட் கோலி 2017-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் - ஸ்டீவ் ஸ்மித் 2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் அணி - டேவிட் வார்னர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, பாபர் அசாம், டிவில்லியர்ஸ், டிகாக், பென் ஸ்டோக்ஸ், ட்ரென…

  19. வயது இரண்டரை தான். இந்தச் சென்னை சிறுவனின் கிரிக்கெட் ஆட்டம் உங்களை கவரக்கூடும் சென்னையைச் சேர்ந்த சனுஷ் சூர்யதேவுக்கு தற்போது இரண்டரை வயதாகிறது. ஐந்து மாத வயது குழந்தையாக இருக்கும்போதே பொம்மைகளுக்கு பதிலாக பந்துகளை வைத்து சனுஷ் விளையாடியதாகவும், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் அவரது தந்தை கூறுகிறார். படத்தின் காப்புரிமைSANUSH தற்போது நெகிழி பந்துகளில் கிரிக்கெட் விளையாடும் சனுஷ், தொழில்முறை கிரிக்கெட்டரைப் போல அழகாக டிரைவ் ஆடுகிறார். இந்தியா புக் ஆஃப் தி ரெக்கார்ட்ஸ் 'இளம் குழந்தை கிரிக்கெட்டர்' என சனுஷை அங்கீகரித்திருக்கிறது. சமீபத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியைச் சந்தித்து வாழ்த…

  20. கிளிநொச்சியில் களைகட்டியது மஞ்சல் விரட்டு விளையாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜல்லிக் கட்டு போன்று மஞ்சல் விரட்டு பாரம்பாரிய விளையாட்டாக இடம்பெற்று வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலும் யுத்தத்திற்கு முன் பல கிராமங்களில் மஞ்சல் விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது. பின்னர் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற மஞ்சல் விரட்டு இடம்பெறாது இருந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் மஞ்சல் விரட்டும் நிகழ்வு கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேச இளைஞர்களால் நடத்தப்பட்டுள்ளது. தாங்கள் வளர்க்கும் மாடுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒன்றின் கழுத்தில் துணி ஒன்றில் பணம் அல்லது பிடிக்கப்படும…

  21. இலங்கை வீராங்கனை அமெரிக்காவில் சாதனை ! மரதன் போட்­டி­களில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்ளார் இலங்­கையின் மரதன் வீராங்­க­னை­யான ஹிருணி விஜே­ரத்ன. டெக்­ஸாஸின் ஹொட்­சனில் நடை­பெற்ற சர்­வ­தேச மரதன் போட்­டியின் போதே ஹிருணி இந்த புதிய சாத­னையை படைத்தார். இதற்கு முன் இலங்கை வீராங்­கனை நிலூகா ராஜ­சே­க­ர­வினால் நிலை­நாட்­டப்­பட்­டி­ருந்த இரண்டு மணித்­தி­யா­லயம் 40 நிமிடம் 7 வினா­டி­களில் அடைந்த பந்­தயத் தூரத்தை, தற்­போது ஹிருணி விஜே­ரத்ன இரண்டு மணித்­தி­யா­லயம் 36 நிமி­டங்கள் 35 வினா­டிகளில் கடந்து இலங்­கையின் தேசிய சாத­னையை புதுப்­பித்­துள்ளார். இந்த தேசிய சாத­னை­யுடன் எதிர்­வரும் ஏப்ரல் மா…

  22. கோலியின் மகுடத்தில் மற்றொரு வைரம்! கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த டொன் பிராட்மனின் சாதனையொன்றை விராட் கோலி முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியொன்றில், அணித் தலைவராகக் களமிறங்கி எட்டு முறை நூற்றைம்பது ஓட்டங்களைக் குவித்தவர் பிராட்மன். தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, கோலி 153 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இது, டெஸ்ட் அணித் தலைவராக அவர் பெற்ற ஒன்பதாவது நூற்றைம்பது ஓட்டங்களாகும். இதன்மூலம், பிராட்மனின் சாதனையைச் சமன் செய்துள்ளார் கோலி. டெஸ்ட் அணித் தலைவராக நூற்றைம்பது ஓட்டங்கள் கடந்தோர் பட்டியலில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் ஏழு 150 ஓ…

  23. ஊன்றுகோல் உதவியுடன் அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யா! இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மூட்டுப் பகுதியில் ஏற்பட்டக் காயத்தால் நடக்க முடியாமல் தவித்து வருகிறார். அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, தான் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். இலங்கை அணி கடந்த 1996-ல் உலகக் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜெயசூர்யா, அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை ஜெயசூர்யா குவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கெதிராகக் கொழும்புவில் குவித்த 340 ரன்களும் அடங்கும். கடந்த …

  24. பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்தது லிவர்பூல் அ-அ+ பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மான்செஸ்டர் சிட்டி அணிக்கு முற்றுப் புள்ளி வைத்தது லிவர்பூல். #PremierLeague #mancity #Liverpoo இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முதல் போட்டியில் பிரைட்டன் அணியை 2-0 என வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அதன்பின் நேற்று லிவர்பூல் அணியை சந்திக்கும் வரை தோல்விய…

  25. கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில், அணியொன்றினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக நேபாள கட்புலனற்றோர் அணியுடன் இன்று (13) நடைபெற்ற லீக் போட்டியில் 494 ஓட்டங்களைப் பதிவுசெய்த இலங்கை அணி புதிய உலக சாதனை படைத்தது. கட்புலனற்றோருக்கான 40 ஓவர்கள் கொண்ட 5 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் டுபாய் மற்றும் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்றன. டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 10 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சந்தன தேஷப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.