விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழா நியூஸிலாந்தில் இவ் வார இறுதியில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனத் தலைவர் டெபி ஹொக்லி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப் போட்டியில் பங்குபற்றும் 16 நாடுகளினதும் வீரர்களும், க்றைஸ்ட்சேர்ச் மாநகர சபை உறுப்பினர் ஆரொன் கெயோனும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். நியூஸிலாந்தின் கலாசாரத்தைப் பிரதி பலிக்கும் மயோரி நடனமும் இடம்பெற்றது. ‘‘சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொழில்சார் வீரர்களை உருவாக்குவதில் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டி முக்கிய பங…
-
- 3 replies
- 488 views
-
-
டி20 வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! ரிஷாப் பாண்ட் சாதனை டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பாண்ட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் 32 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். Photo Courtesy: BCCI சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இந்த தொடரின் வடக்கு மண்டலம் பிரிவில் டெல்லி - ஹிமாச்சலப்பிரதேச அணிகள் மோதிய போட்டி இன்று நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹிமாச்சலப் பிரதேச அணி 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரிஷாப் பாண்ட் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் டெல்லி அணியின்…
-
- 0 replies
- 402 views
-
-
2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் 2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள், பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்தது. இதில் கிரிக்கெட், கால்பந்து, மெய்வல்லுனர் என பல்வேறு விளையாட்டுகளில் முக்கியமாக இடம்பெற்ற நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஜனவரி இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் T-20…
-
- 0 replies
- 322 views
-
-
யுவராஜ், கம்பீர், ஹர்பஜன்.... ஐ.பி.எல் ஏலத்துக்கு வரும் 1,122 வீரர்கள்! Chennai: 11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளன. மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல் ஏலம் வருகிற 27, 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 1,122 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏலத்திற்கு வரும் வீரர்கள் பட்டியல் 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களை அதிக விலை கொடுத்து அணிகள் வாங்கும் என்று …
-
- 1 reply
- 402 views
-
-
அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் செய்திகள் பிராட், ஆண்டர்சனுக்கு வயதாகி விட்டது; ஆஸி. 3-1 என்று வெல்லும்: ஸ்டீவ் வாஹ் கருத்து இங்கிலாந்தால் ஆஷஸை வெல்ல முடியாது என்கிறார் ஸ்டீவ் வாஹ். - கோப்புப் படம். | ஜி.பி.சம்பத்குமார் பிரிஸ்டல் தெருச்சண்டையில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடர் ஆடாததையடுத்து இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வெல்வது மிகக் கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் வானொலியில் ஸ்டீவ் வாஹ் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி கூறியதாவது: பென் ஸ்டோக்ஸ் வரவில்லையெனில் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல முடியாது எ…
-
- 110 replies
- 6.4k views
-
-
தென்னாப்பிரிக்கா டெஸ்ட்டில் இந்தியா தோற்றதுக்கான விதை... பி.சி.சி.ஐ போட்டது! #SAvsIND 2017 பிப்ரவரி - ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்திறங்கியது. 2 வாரங்களுக்கு முன் ஹைதராபாத்தில் வங்கதேசத்தை நசுக்கிவிட்டு ஆஸி அணியை எதிர்கொள்ள ஆயத்தமானது இந்தியா. ரவீந்திர ஜடேஜாவும் ரவிச்சந்திரன் அஷ்வினும் பட்டையைக் கிளப்ப, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்தியா. கேப்டனாக கோலி வானில் பறந்துகொண்டிருந்தார். இலங்கையிடம் வைட்வாஷ், தென்னாப்பிரிக்க தொடரில் தோல்வி என வரிசையாக சரிவுகளையே கண்டிருந்த ஸ்மித்மீது எக்கச்சக்க நெருக்கடி. 10 மாதங்கள் முடிந்துவிட்டது. மிகப்பெரிய ஆஷஸ் தொடரை 4-0 என வென்று, தொடரின் நாயகனாகவும் ஜொலித்து டெஸ்ட் அரங்கின் அரசன…
-
- 1 reply
- 683 views
-
-
முத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து அ-அ+ துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. துபாய்: துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன. யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. …
-
- 0 replies
- 226 views
-
-
தந்தை வழியில் மகன்: ராகுல் திராவிட் வாரிசு சமித் அடித்த வெற்றிச் சதம் ராகுல் திராவிட் மகன் சமித். சச்சின் மகன் அர்ஜுன் தற்போது ராகுல் திராவிட் மகன் சமித் ஆகியோர் தந்தையர் கிரிக்கெட் வழியில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதே போல் சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தன் தந்தை வழியில் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி ஒன்றில் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுத்தந்தார். விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தார் …
-
- 2 replies
- 477 views
-
-
T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார Image Courtesy - Cricinfo இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல் 11 வரை ஹொங் கொங்கில் நடைபெறவுள்ள T-20 பிலிட்ஸ் போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார். டெஸ்ட் அரங்கில் 12,400 ஓட்டங்களையும், ஒரு நாள் அரங்கில் 14,200 ஓட்டங்களையும் குவித்துள்ள 40 வயதான சங்கக்கார, இத்தொடரில் கலந்துகொண்டு ஹொங் கொங் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், அந்நாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 514 views
-
-
சர்வதேச பனிச்சறுக்கல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சர்வதேச பனிச்சறுக்கல் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையை 21 வயதான யுவதி அன்ச்சல் தக்கூர் தனதாக்கிக்கொண்டார். துருக்கியில் நடைபெற்ற அல்பைன் எஸ்டர் 3200 கிண்ண பனிச்சறுக்கல் போட்டியில் அன்ச்சல் தக்கூர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இப் போட்டி சர்வதேச பனிச்சறுக்கல் (ஸ்கி) சம்மேளனத்தினால் நடத்தப்பட்டது. இந்தியாவில் பனிப்பொலிவு இடம்பெறுவது அரிது என்பதால் குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. வெண்கலப் பதக்கம் வென்ற அன்ச்சலை முதலாவதாக பாராட்டியவர்களில் இந்தியப் பிரதமர…
-
- 0 replies
- 331 views
-
-
வார இறுதி ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டி செய்திகள் வென்றது மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எவ்.எல்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியொன்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி வென்றுள்ளது. மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், மாற்று வீரராகக் களமிறங்கிய சேர்ஜியோ அகுரோ, போட்டியின் இறுதிக் கணங்களில் பெற்ற கோல் காரணமாகவே, ஆரம்பத்தில் ஒரு கோல் பின்தங்கியிருந்தபோதும் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது. காலிறுதிப் போட்டியில், மன்செஸ்டர் யுன…
-
- 0 replies
- 474 views
-
-
பிரதான நாடுகள் ஒன்றிணைந்தால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க முடியும்: குமார் சங்கக்கார கிரிக்கெட் விளையாடும் பிரதான நாடுகள் ஒன்றிணைந்தால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க முடியும் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மெல்போன் கிரிக்கெட் குழு உறுப்பினர்களின் தலைமையில் அவுஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே குமார் சங்கக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவில் கிரிக்கெட் இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தாம் இருப்பதாகவும், அவ்வாறு இடம்பெறாவிட்டால் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவினை இலக்காகக் கொண்டு செயற்படவுள்ளதாகவும் குமார் சங்கக்கார கூற…
-
- 0 replies
- 325 views
-
-
பிராட்மேன் சாதனையை முறியடித்த 18 வயது ஆஃப்கானிஸ்தான் வீரர்! கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்தவர் என்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயது வீரர் முறியடித்துள்ளார். Photo Credit: Afgan Cricket board ஆஃப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பீன்கர் பகுதி அணிக்காக விளையாடி வருபவர் பஹீர்ஷா மெஹ்பூப். கடந்த 2017 சீசனில் அறிமுகமான 18 வயது வீரரான பஹீர்ஷா, இதுவரை 7 முதல்தர போட்டிகளில் (12 இன்னிங்ஸ்கள்) 1,096 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆமோ ரீஜன் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே 256 ரன்கள் குவித்தார். உலக அளவில் அறிமுகப் போட்டி…
-
- 0 replies
- 347 views
-
-
மீண்டும் கேப்டனாகக் களமிறங்கப்போகும் மேத்யூஸ்... தோல்வியின் பிடியிலிருந்து மீளுமா இலங்கை! இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த ஓர் ஆண்டாகவே தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மெட்களிலும் தோல்வி மேல் தோல்வி. விளைவு, தொடர்ச்சியாக கேப்டனை மாற்றி, புதுப்புது உத்திகளைக் கையாண்டுவருகிறது அணி நிர்வாகம். ஆனால், எந்த உத்திக்கும் பழைய ரிசல்ட் மட்டும்தான் கிடைக்கிறது. இந்நிலையில், எல்லாம் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி, ஒருநாள் தொடரில் மண்ணைக் கவ்வியவுடன், அணியின் கேப்டனாக இருந்த மேத்யூஸ் பதவி விலகினார். அதன் பின்னர், உபுல்…
-
- 4 replies
- 533 views
-
-
மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் ஒட்டுமொத்த போட்டிகளுக்கான தலைவராக செயற்பட்டுவந்த மெத்தியூஸ் கடந்த வருடம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரையடுத்து தனது இராஜினாமாவை அறிவித்தார். பின்னர் இலங்கை அணியின் டெஸ்ட் தலைவராக தினேஸ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டதுடன், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டார். …
-
- 0 replies
- 519 views
-
-
பிக் பாஷ் டி20 லீக்: வெயின் பிராவோ 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் காயத்திற்குப் பின் களம் இறங்கியுள்ள வெயின் பிராவோ ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்திள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரின்போது காயத்திற்குள்ளானார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சுமார் ஆறேழு மாதங்கள் ஓய்வில் இருந்த பிராவோ, தற்போது கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் கூட விளையாடவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் …
-
- 9 replies
- 1.3k views
-
-
அணியைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்ற ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவை கிரிக்கெட் சுற்றுப் பயணங்களின் போது தெரிவுக்குழு உறுப்பினராக நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அனுமதி வழங்கியது. மூன்று பிரதான விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று (07) எஸ்.எஸ்.சி மைதான கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்துறை சட்டவிதிகளுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பு விதிகளை திருத்தி அமைத்தல், புதிய செயலாளரைத் தெரிவு செய்தல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கட்டமைப்…
-
- 0 replies
- 313 views
-
-
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி வெலிங்டன் நகரில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.#NZvPAK வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி இன்று வெலிங்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவருக்கு 7 விக்கெட் இழ…
-
- 0 replies
- 178 views
-
-
2017: மறக்க முடியுமா? - விளையாட்டு ஜனவரி ஜன. 4: ஒரு நாள் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி விலகினார். பிப்ரவரி பிப். 20: ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸை ரூ.14 கோடிக்கு புனே அணி ஒப்பந்தம்செய்தது. ஏப்ரல் ஏப். 30: சென்னையில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் சாம்பியன் பட்டம் வென்றார். மே மே. 21: ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணி புனே அனியை ஒரு ரன்னில் வீழ்த்தி 3-வது முறையாகக் கோப்பையை வென்ற…
-
- 0 replies
- 676 views
-
-
ரெய்னாவுக்கு 'எஸ்'... அஷ்வினுக்கு 'நோ'... சி.எஸ்.கே முதல் மும்பை இந்தியன்ஸ் வரை யாரை ரீடெய்ன் செய்யலாம்? #IPL2018 #CSK Chennai: 'தி பாய்ஸ் ஆர் பேக்' பி.ஜி.எம்தான் இப்போது வைரல். சென்னை சூப்பர் கிங்ஸின் கம்பேக் கிரிக்கெட் ரசிகர்களின் எனர்ஜியை அதிகரித்துள்ளது. நேற்று கூடிய ஐ.பி.எல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதனால் தோனி, மீண்டும் மஞ்சள் ஜெர்சி அணிந்து, சேப்பாக்கத்தில் வலம் வருவது உறுதியாகிவிட்டது. வேறு யாரையெல்லாம் சென்னை தக்கவைத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும். மற்ற அணிகள் யாரையெல்லாம் தக்கவைத்துக்கொள்வார்கள்? #IPL2018 Player retention-யைப் பொறுத்தவரை…
-
- 4 replies
- 799 views
-
-
மெஸ்சியின் மதிப்பு 5343 கோடி ரூபாய்: இழக்கும் அபாயத்தில் பார்சிலோனா மெஸ்சியின் மதிப்பு 5343 கோடி ரூபாயாக உள்ள நிலையில், வேறு கிளப்பிற்கு ப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #Messi #Barcelona #Catalonia அர்ஜென்டினாவைச் சேர்ந்த 30 வயதாகும் மெஸ்சி, கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து அதாவது 16 வயதில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் மெஸ்சி, பார்சிலோனா கிளப்பிற்காக பல்வேறு சாம்பியன் பட்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இவரும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பார்சிலோனா …
-
- 0 replies
- 236 views
-
-
தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித் தலைவராக செயற்பட்டு வந்த சகலதுறை வீரர் திசர பெரேரா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உப தலைவரும் சர்வதேச கிரிக்கெட்டிற்கான பொறுப்பாளருமான K. மதிவனன், இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஏஷ்லி டி சில்வா, தெரிவுக் குழுவின் தலைவர் கிரேம் லப்ரோய், இலங்கை …
-
- 1 reply
- 563 views
-
-
இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர் அவுஸ்திரேலிய அணியின் பிரபல விளையாட்டு உளவியல் நிபுணர் Dr. பில் ஜோன்சி, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் தரத்தை முன்னேற்றும் நோக்கோடு அவர்களுக்கு உதவி ஆலோசனைகள் வழங்க இலங்கை வந்திருக்கின்றார். அந்த வகையில் ஜோன்சி அவர்களின் முதல் ஆலோசனை முகாம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்றது. “நாங்கள் எமது புதிய பயிற்றுவிப்பளார் சந்திக்க ஹதுருசிங்கவின் வேண்டுகோளின் நிமித்தம் ஜோன்சியினை எங்களுக்காக வேலை செய்ய அழைத்திருக்கின்றோம். ஹதுருசிங்கவுக்கு எங்களது வீரர்களுடன் ஜோன்சி இருந்து வேலை செய்வது தேவையாக இருந்தது“ என இலங்கை கிரிக்கெட் வாரிய…
-
- 0 replies
- 224 views
-
-
தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்! டெல்லி வீரர்களைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் டெல்லி - விதர்பா அணிகளுக்கிடையிலான ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற விதர்பா, ரஞ்சிக்கோப்பையை வென்றது இதுவே முதல்முறை. Photo Credit: Insta/bleed.dhonism ஏழு முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ள டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணி வென்றது. முதல்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ள விதர்பா அணிக்கு, டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அந்த இரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின்போது, பவுன்சர் பந்து தாக்கியதால் வேதனையில் துடித்த விதர்பா…
-
- 1 reply
- 1.5k views
-
-
மீண்டும் படுதோல்வியடைந்த மே.இ. அணி: மன்ரோவின் உலக சாதனையால் தொடரை வென்ற நியூஸிலாந்து! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நியூஸி. தொடக்க வீரர் காலின் மன்ரோ அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதமடித்தார். நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் கப்திலும் மன்ரோவும் மே.இ. அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தார்கள். முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் குவித்தார்கள். பவர்பிளே முடிந்தபிறகும் இருவருடைய அதிரடி ஆட்டம் நிற்கவில்லை. தொடர்ந்து சிக்ஸும் பவுண்டரிகளுமாக அடித்து ரன் ரேட்…
-
- 0 replies
- 291 views
-