விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7849 topics in this forum
-
இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20தொடரின் முதல் போட்டி டிரம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு அடுத்த இரண்டு போட்டிகளும் முறையே டிசம்பர் 22, 24 ஆம் திகதிகளில் நடைபெறும். சகலதுறை வீரர் திசர பெரேரா தலைமையிலான இலங்கை குழாமில் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் மாற்றமாக அனுபவ வேகப்பந்து விச்சளர் லசித் மாலிங்க இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மாலிங்க கடைசியாக இந்தியாவுக்கு எ…
-
- 14 replies
- 1.4k views
-
-
ஐ.சி.சி தூசு மாசு சட்டத்தை தூசு துடைத்து நெறிப்படுத்துமா? இந்திய உபகண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டை துதிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் காணப்படுகின்றனர். பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டைப்போல வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து,அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து வீரர்கள் உட்பட கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த பலவீரர்கள் (ஐ.பி.எல்) எனப்படும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி கோடானு கோடி இந்திய ரூபாக்களை அள்ளிச் செல்கின்றனர். முன்னொரு காலத்தில் இங்கிலாந்து சென்ற…
-
- 0 replies
- 431 views
-
-
‘அவுட் ஆவார் போல் தெரியவில்லை’: ரோஹித் ட்வீட்டும், சச்சின் சாதனையை முறியடித்த ஸ்மித்தும் பெர்த்தில் இரட்டைச் சதம் விளாசிய ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். பெர்த் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று தனது 22-வது டெஸ்ட் சதத்தை எடுத்ததில் ஸ்மித், மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது சச்சின் டெண்டுல்கர் 114 இன்னிங்ஸ்களில் 22 டெஸ்ட் சதங்களை எடுத்தார், ஸ்மித் 108-வது இன்னிங்ஸில் 22-வது சதத்தை எடுத்து முறியடித்தார். முதலிடத்தில் 58 இன்னிங்ஸ்களீல் 22 சதங்களை எடுத்த டான் பிராட்மேனும், 101 இன்னிங்ஸ்களில் எடுத்த சுனில் கவாஸ்கர் 2-ம் இடத்திலும் உள்ளனர். ‘அருமையான …
-
- 0 replies
- 767 views
-
-
குஜராத்: உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஜடேஜா குஜராத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். புதுடெல்லி: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ளது சவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம். இங்கு ஜாம்நகர் மற்றும் அம்ரேலி ஆகிய அணிகளுக்கு இடையில் மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜாம்நகர் அணி முதலில் விளையாடியது. ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். …
-
- 1 reply
- 449 views
-
-
இந்திய வீரர்களின் சம்பளம் 100% உயர்கிறது: கேப்டன் விராட் கோலி ரூ.10 கோடி பெற வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 100 சதவீதம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பல மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்தும் அதேவேளையில் இங்…
-
- 0 replies
- 338 views
-
-
20 இருபது இந்திய தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்க இல்லை இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டித் தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி இந்திய இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இப்போட்டியில்,நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்,லசித் மலிங்கவுக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் ஜீவன் மெண்டிஸ் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை கிரிகெட் வாரியம் கூறியுள்ளது.இதுவரை 68 போட்டிகளி…
-
- 0 replies
- 318 views
-
-
ஐ.சி.சி.யை கேள்வி கேட்ட இலங்கை பெண் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.-யிடம் டுவிட்டரில் இலங்கைப் பெண் எழுப்பிய கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.-யும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது. இதனை கவனித்த இலங்கை பெண் ஒருவர் ஐ.சி.சி.யிடம் -நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், கோஹ்லி–-அனுஷ்கா திரும…
-
- 0 replies
- 798 views
-
-
4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம் உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கு அல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் டி20 போட்டிகளுக்கும், அதனையடுத்து பகலிரவு டெஸ்ட், தற்போது டி10 போட்டிகள் என மாற்றம் பெற்ற கிரிக்கெட், தற்போது நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக அற…
-
- 0 replies
- 422 views
-
-
சமநிலையில் முடிந்த சென் ஜோன்ஸ் – புனித தோமியர் இடையிலான மோதல் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் மற்றும் கொழும்பு, கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கு இடையில் பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியின் இம்முறை போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டி சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று (13) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். அனுபவம் மிக்க பந்து வீச்சாளர்களான கபில்ராஜ் மற்றும் அபினாஷ் ஆகியோரது அபாரப் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் கொழும்பு தரப்பினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர். …
-
- 0 replies
- 269 views
-
-
FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி @Getty Images கரேத் பேல் மாற்று வீரராக வந்து கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் FIFA கழக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் அல் ஜஸீரா அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 14ஆவது கழக உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதியிலேயே ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தேர்வான ரியல் மெட்ரிட் அணி புதன்கிழமை (13) ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் ஜஸீரா அணியை எதிர்கொண்டது. எனினும், பிரேஸில் முன்கள வீரர் ரொமரின்ஹோ போட்ட கோல…
-
- 2 replies
- 365 views
-
-
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம் ஐபிஎல் போட்டித் தொடரின் அணிகளில் ஒன்றாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் திகழ்கிறது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், அந்த அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். மேலும், டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 42 வயதாகும் ஹாட்ஜ், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் புகழ்பெற்ற பிக்பாஷ் டி20 லீக்கில் மெல்போர்ன் ரெனெடாக்ஸ் அணிக்காக அடுத்த சீசனில் களமிறங்கவுள்ளார். …
-
- 0 replies
- 248 views
-
-
விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 06 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாறு படைத்த திஸர பெரேரா தலைமையிலான இலங்கை அணி, வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான பெலான் டி ஓர் விருதை 5ஆவது தடவையாகவும் தட்டிச்சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட கிரிக்கெட், கால்பந்து மற்றும் ரக்பி களம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இந்த வார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.
-
- 0 replies
- 369 views
-
-
'146 ரன்; 18 சிக்ஸர்' - டி20-யில் எதிரணியை மிரளவைத்த கெய்ல்! இந்தியன் பிரிமியர் லீக்கான ஐபிஎல் போல வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் (பிபிஎல்) தொடர் ஒவ்வோர் ஆண்டும் நடக்கிறது. வங்க தேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் இன்று தாக்கவில் நடந்து வருகிறது. இதில், தாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராங்பூர் ரைடர்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்கு போட்டா போட்டிப் போட்டு வருகின்றன. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற தாக்கா டைனமைட்ஸ், ரைடர்ஸை பேட்டிங் ஆடச் சொல்லி பணித்தது. அந்த அணி சார்பில், கிறிஸ் கெய்ல், தொடக்க வீரர்களில் ஒருவராகக் களமிறங்கினார். கடைசி வரை நின்றாடிய கெய்ல், 69 பந்துகளுக்…
-
- 4 replies
- 695 views
-
-
'ஓய்வு நெருங்கியுள்ளதால் இறுதிப் போட்டிகளை அனுபவித்து விளையாடுவேன்" என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் என்னுடைய இறுதிப் போட்டிகள் சிலவற்றை அனுபவித்து விளையாடுவேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீற்றர்சன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ‘பிக் பாஷ்’ இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த 37 வயதான கெவின் பீற்றர்சன், அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப்பின் சர…
-
- 0 replies
- 372 views
-
-
இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி 15 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான “சிங்கர் கிண்ண” மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியொன்றில் மொரட்டுவ ஸ்ரீ சந்திரசேகர மஹா வித்தியாலய அணி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றது. கண்டி பல்லேகல சிறைச்சாலை மைதானத்தில் திங்கட்கிழமை (11) தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரீ சந்திரசேகர வித்தியாலய அணி யாழ்ப்பாண இளம் வீரர்களுக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியது. இதன்படி களமிறங்கிய யாழ்ப்பாண சென் ஜோன்ஸ் கல்லூரி அணியி…
-
- 0 replies
- 656 views
-
-
இங்கிலாந்து அணியின் ‘குடி’ பிரச்சினை ஜோக் அல்ல: ஆஸி.பயிற்சியாளர் டேரன் லீ மேன் டேரன் லீ மேன். - கோப்புப் படம். | கே.முரளி குமார் இங்கிலாந்து பந்து வீச்சு சாதனையாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலையில் மதுவை ஊற்றிய சக வீரர் பென் டக்கெட், 2 நாள் பயிற்சி ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையடுத்து இங்கிலாந்தின் இந்தப் பிரச்சினை சிரிப்பதற்குரியதல்ல என்று கூறியுள்ளார் ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன். கடந்த செப்டம்பரில் பிரிஸ்டலில் மதுபான விடுதி அருகே பென் ஸ்டோக்ஸ் குடித்துவிட்டு இருவர் மீது பலப்பிரயோகம் செய்தது பிரச்சினையாகி இன்னமும் முடியாத நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது டக்கெட் மது ஊற்றி விளையாடும் சம்பவம் நடந்துள்ளது. இன்ன…
-
- 0 replies
- 345 views
-
-
2023 உலகக்கோப்பை கிரிக்கெட், 2021 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவில் நடைபெறுகிறது உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி. - படம். | ஐசிசி. 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. பிசிசிஐ இதனை சிறப்பு பொதுக்கூட்டத்தில் உறுதி செய்தது. முதல் முறையாக முழுதும் இந்தியாவே ஏற்று நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட்டாகும் இது, இதற்கு முன்னதாக, நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா மற்ற நாட்டு வாரியங்களுடன் சேர்ந்தே நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2023-ல் முதல்முறையாக தனித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. அதேபோல் 2021 சாம்…
-
- 0 replies
- 320 views
-
-
UEFA சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பரபரப்பு போட்டிகள் Getty Images உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள UEFA சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் மோதும் சுற்றுக்கான போட்டிகள் விபரம் இன்று (11) வெளியானது. இதன்மூலம் இந்த சுற்றில் பரபரப்பான சில முக்கிய போட்டிகள் இடம்பெறவுள்ளன. UEFA சம்பியன்ஸ் லீக்கின் இந்த ஆண்டு குழு நிலைப் போட்டிகளில் இரு முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டன. ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்து குழு நிலைப் போட்டிகளிலும் கோல் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்தார். பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) குழுநிலையில் மொத்தம் 25 கோல்களை போட்டு அதிக கோல்கள் பெற்ற அணியாக சாதனை படைத்தது. முன்னர் 21 கோல்கள் போட்ட போர்ஷியா டொர்மு…
-
- 1 reply
- 329 views
-
-
ஜஸ்ப்ரீத் பும்ராவைச் சந்திக்க முடியாத ஏக்கத்தில் தாத்தா மரணம்! இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங், சபர்மதி ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ராவைப் பார்க்க அகமதாபாத்துக்கு வந்த அவரை ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாயார் தல்ஜித் சிங் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமையில் இருந்து சந்தோக் சிங் காணாமல் போனார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சபர்மதி ஆற்றில் அவர் சடலமாக மிதந்துள்ளார். குஜராத்தின் மிகச்சிறந்த வர்த்தகராக திகர்ந்த சந்தோக் சிங்கின் வியாபாரம் நஷ்டத்தைச் சந்தித்தையடுத்து, ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆங்கில நாளிதழ் ஒன்ற…
-
- 0 replies
- 344 views
-
-
வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனானார் ஷகிப் அல் ஹசன் Chennai: வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கத் தொடரில், வங்கதேச அணி மிகமோசமாக செயல்பட்டு, அனைத்து ஃபார்மட்களிலும் வைட்வாஷ் ஆனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷகிப் இதற்கு முன்பே 2009, 2010 ஆண்டுகளில் 9 டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். அப்போது 8 போட்டிகளில் அணி தோற்றுவிட, அன்றைய வங்கதேச கிரிக்கெட் சங்கத் தலைவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், இவரது பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் முஸ்ஃபிகூர் ரஹ்மான் அணியின் கேப்டனாகப் பதவியேற்றார். அவரது தலைம…
-
- 0 replies
- 415 views
-
-
மிலன் – ஜுவென்டஸ் போட்டி சமநிலை இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள இன்டர் மிலன், நடப்பு சீரி ஏ சம்பின்களான ஜுவென்டஸுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போட்டியில் ஜுவென்டஸின் மரியோ மண்டுஸிக்கின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டிருந்ததுடன், இவரின் பல உதைகளை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் சமிர் ஹன்டனோவிக் தடுத்திருந்தார். இந்நிலையில், நடப்பு பருவகாலத்தில் அதிக கோல்களைப் பெற்றவரான இன்டர் மிலனின் அணித்தலைவர் மெளரோ இகார்டியின் உதையொன்றை ஜுவென்டஸின் கோல்…
-
- 3 replies
- 491 views
-
-
2020-க்குப் பிறகு ஐ.பி.எல். தொடரின்போது சர்வதேச போட்டிகளில் கிடையாது: பிசிசிஐ முயற்சி ஐ.பி.எல். தொடரின்போது வெளிநாட்டு அணிகளுக்கு இடையிலான இருநாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த லீக்கிற்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐ.பி.எல். கடந்த 10 வருடங்களாக ரசிகர்களின் பேராதரவோடு வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் 11 சீசன் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். …
-
- 0 replies
- 261 views
-
-
இலங்கை அணியின் புதிய விடியல் தனஞ்ஜெயா தனஞ்ஜெயா டி சில்வா - PTI இந்திய மண்ணில் அதிலும் 4-வது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கும் மேலாக எதிர்கொண்டு டெல்லி பெரோஷா கோட்லா டெஸ்ட் போட்டியை கடைசி நாளின் இறுதி மணித்துளிகள் வரை கொண்டு சென்று டிரா செய்து வியக்க வைத்துள்ளது இலங்கை அணி. பலவீனமான அணி என வர்ணிக்கப்பட்ட இலங்கை, இந்திய மண்ணில் 4-வது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை (295) குவித்தும் சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியை காற்று மாசுபாட்டின் ஊடாகவே சந்தித்திருந்தது. காற்று மாசால் சில வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு களத்திலும், ஓய்வறையிலும் வாந்தி எடுத்தனர். ஒட்டுமொத்த அணியும் முகமூட…
-
- 0 replies
- 433 views
-
-
ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளினதும் தலைவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் வழிநடத்தலால் விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்தது. இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டாலும், அண்மைக்கால ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தால் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ஓட்டக்குவிப்பில் அசத்தி வருகின்ற சந்திமால், ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்காக…
-
- 0 replies
- 270 views
-
-
உடற்பயிற்சியும், உபாதையும் விளையாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான சரிவுப் பாதையில் பயணிக்கின்றமை யாவரும் அறிந்த உண்மை. அத்தகைய வீழ்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் வீரர்களின் தொடர்ச்சியான உபாதைகளினால் ஒரு நிலையான அணியை தெரிவு செய்ய முடியாமல் போனமையும் ஒரு முக்கிய காரணம் என்பது நிதர்சன உண்மையாகும். பொதுவாக உலக விளையாட்டு அரங்கினை நோக்கும்போது அவ்விளையாட்டுக்களில் ஜாம்பவான்களாக கொடி கட்டிப் பறந்த மற்றும் பறக்கின்ற பல வீரர்களை நோக்கினால், அவர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் வீதம் மிக மிகக் குறைவு. அதற்கு உதாரணங்களாக இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் விராத் கோஹ்லி, கால்பந்து உலக…
-
- 0 replies
- 549 views
-