விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனானார் ஷகிப் அல் ஹசன் Chennai: வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கத் தொடரில், வங்கதேச அணி மிகமோசமாக செயல்பட்டு, அனைத்து ஃபார்மட்களிலும் வைட்வாஷ் ஆனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷகிப் இதற்கு முன்பே 2009, 2010 ஆண்டுகளில் 9 டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். அப்போது 8 போட்டிகளில் அணி தோற்றுவிட, அன்றைய வங்கதேச கிரிக்கெட் சங்கத் தலைவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், இவரது பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் முஸ்ஃபிகூர் ரஹ்மான் அணியின் கேப்டனாகப் பதவியேற்றார். அவரது தலைம…
-
- 0 replies
- 415 views
-
-
2020-க்குப் பிறகு ஐ.பி.எல். தொடரின்போது சர்வதேச போட்டிகளில் கிடையாது: பிசிசிஐ முயற்சி ஐ.பி.எல். தொடரின்போது வெளிநாட்டு அணிகளுக்கு இடையிலான இருநாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த லீக்கிற்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐ.பி.எல். கடந்த 10 வருடங்களாக ரசிகர்களின் பேராதரவோடு வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் 11 சீசன் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். …
-
- 0 replies
- 261 views
-
-
இலங்கை அணியின் புதிய விடியல் தனஞ்ஜெயா தனஞ்ஜெயா டி சில்வா - PTI இந்திய மண்ணில் அதிலும் 4-வது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கும் மேலாக எதிர்கொண்டு டெல்லி பெரோஷா கோட்லா டெஸ்ட் போட்டியை கடைசி நாளின் இறுதி மணித்துளிகள் வரை கொண்டு சென்று டிரா செய்து வியக்க வைத்துள்ளது இலங்கை அணி. பலவீனமான அணி என வர்ணிக்கப்பட்ட இலங்கை, இந்திய மண்ணில் 4-வது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை (295) குவித்தும் சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியை காற்று மாசுபாட்டின் ஊடாகவே சந்தித்திருந்தது. காற்று மாசால் சில வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு களத்திலும், ஓய்வறையிலும் வாந்தி எடுத்தனர். ஒட்டுமொத்த அணியும் முகமூட…
-
- 0 replies
- 433 views
-
-
ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளினதும் தலைவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் வழிநடத்தலால் விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்தது. இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டாலும், அண்மைக்கால ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தால் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ஓட்டக்குவிப்பில் அசத்தி வருகின்ற சந்திமால், ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்காக…
-
- 0 replies
- 270 views
-
-
உடற்பயிற்சியும், உபாதையும் விளையாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான சரிவுப் பாதையில் பயணிக்கின்றமை யாவரும் அறிந்த உண்மை. அத்தகைய வீழ்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் வீரர்களின் தொடர்ச்சியான உபாதைகளினால் ஒரு நிலையான அணியை தெரிவு செய்ய முடியாமல் போனமையும் ஒரு முக்கிய காரணம் என்பது நிதர்சன உண்மையாகும். பொதுவாக உலக விளையாட்டு அரங்கினை நோக்கும்போது அவ்விளையாட்டுக்களில் ஜாம்பவான்களாக கொடி கட்டிப் பறந்த மற்றும் பறக்கின்ற பல வீரர்களை நோக்கினால், அவர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் வீதம் மிக மிகக் குறைவு. அதற்கு உதாரணங்களாக இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் விராத் கோஹ்லி, கால்பந்து உலக…
-
- 0 replies
- 549 views
-
-
51 பந்துகளில் 126 ரன்கள், 14 சிக்ஸ், 6 பவுண்டரி: கிறிஸ் கெய்ல் மேஜிக் கிறிஸ் கெய்ல். - படம். | கெட்டி இமேஜஸ். வங்கதேச பிரீமியர் லீக், டாக்காவில் நடைபெற்ற டி20 போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெய்ல், குல்னா டைட்டன்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி சதம் கண்டார். இதனால் ரங்பூர் ரைடர்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 15.2 ஓவர்களில் இலக்கை ஊதித்தள்ளியது. முதலில் பேட் செய்த குல்னா 6 விக், இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ரங்பூர் அணியில் மலிங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மஷ்ரபே மோர்டசா 4 ஓவர்களில் 23 ரன்களையே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார். இந்தச் சதம் பங்களாதேஷ் பிரீமியர் லீ…
-
- 2 replies
- 806 views
-
-
பார்முலா-1 கார்பந்தயம்: உலக சாம்பியன்ஷிப் மகுடத்தை சூடினார் லிவீஸ் ஹாமில்டன் பிரான்சில் உள்ள அரண்மனையில் பார்முலா-1 கார்பந்தய வீரரான லிவீஸ் ஹாமில்டனுக்கு உலக சாம்பியன்ஷிப் டிராபி வழங்கப்பட்டது. பாரிஸ்: கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஹாமில்டன் பட்டம் வென்றார். 32 வயதான ஹாமில்டன் பார்முலா1 சாம்பியன்ஷிப் பட்டத்தை ருசிப்பது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2008, 2014, 2015 ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தா…
-
- 0 replies
- 270 views
-
-
பெண்கள் பிக் பாஷ்: சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணியின் அலிசா ஹீலி, எலிசே பெர்ரி ஆகியோர் த…
-
- 0 replies
- 383 views
-
-
ஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ! உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d’Or விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார். Photo Credit: Twitter/Cristiano கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இந்த விருது முக்கியமானது. 32 வயதான ரொனால்டோ ஏற்கெனவே, இந்த விருதை 2008, 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வென்றிருந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை முந்தி சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றிருக்கிறார் ரொனால்டோ. இதன்மூலம், அதிக முறை (5)…
-
- 2 replies
- 769 views
-
-
மும்பை ஐபிஎல் அணியை விட்டு விலகினார் ஜான்டி ரோட்ஸ்! புதிய பயிற்சியாளர் நியமனம்! கடந்த 9 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ், சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்தின் ஜேம்ஸ் பம்மெண்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டு வரும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோட்ஸ் கூறியுள்ளார். 2009 முதல் மும்பை ஐபிஎல் அணிக்காகப் பணியாற்றியுள்ள ரோட்ஸ் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: மும்பை அண…
-
- 0 replies
- 243 views
-
-
இம்மாத இறுதியிலிருந்து ஹத்துருசிங்க இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை சந்திக்க ஹத்துருசிங்க இம்மாத இறுதியில் ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தலைமைப் பயிற்சியாளராகவிருந்த கிரஹம் போர்ட், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருடன் இராஜினாமா செய்ததையடுத்து நிரந்தர தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் இலங்கை அணி தொடர்களில் பங்கேற்று வருகிறது. இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக்க ஹத்துருசிங்கவை இலங்கை அணுகியது. தற்போது ஹத்துருசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் அவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.…
-
- 1 reply
- 607 views
-
-
2019 வரை திஸரதான் தலைவர் : மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர் ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு அணித் தலைவரை நியமிக்கும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை திஸர பெரேராவே தலைவராக நீடிப்பார் என்றும் அவர் தலைமையிலான உலகக் கிண்ண அணியை உருவாக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அடுத்தடுத்த பல தோல்விகளால் அணி ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் மூன்றுவகை கிரிக்கெட் …
-
- 0 replies
- 265 views
-
-
பொரிசியா டொட்டமுண்டை வென்றது றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லிவர்பூல் ஆகிய அணிகள் வென்றுள்ளதுடன், மன்செஸ்டர் சிற்றி, நாப்போலி, மொனாக்கோ ஆகிய அணிகள் தோற்றுள்ளன. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக பொர்ஜா மயோரல், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகாஸ் வஸ்கூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார். இங்கிலாந்து…
-
- 2 replies
- 330 views
-
-
தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்! இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில…
-
- 1 reply
- 642 views
-
-
இந்தியாவுடனான தொடரில் மெதிவ்ஸ், அசேல மற்றும் குசல் இலங்கை அணியில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்கள் மீண்டும் களமிறங்கவுள்ளதாக இலங்கை ஒரு நாள் அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டித் தொடர் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு இன்று (31) இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழு…
-
- 64 replies
- 5.9k views
-
-
இளம் வயதில் மேன் ஆஃப் தி மேட்ச் 16 வயதில் சாதித்த ஆப்கானிஸ்தான் அறிமுக வீரர் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் ஜர்தான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். Photo Credit: ICC அயர்லாந்து- ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. 239 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தான் சுழல் தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல், 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 138 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஃப்கா…
-
- 0 replies
- 426 views
-
-
`விராட் கோலி வேற லெவல்’ - சங்ககரா சொல்லும் ரகசியம்! இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககரா மனம் திறந்துள்ளார். டெல்லி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 287 பந்துகளைச் சந்தித்த விராட் கோலி, 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், நடப்பு 2017-ம் ஆண்டில் அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் சேர்த்து விராட் கோலி சேர்த்த ரன்கள் 2,818 ஆனது. இந்த வகையில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சங்ககாரா 2,868 ரன்கள் (2014) மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2,833 (2005) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர். டெஸ்ட் தொடருக்குப் பிந்தைய ஒருநாள் மற்று…
-
- 0 replies
- 478 views
-
-
FIFA உலகக் கிண்ணத்தில் ஆடும் 32 அணிகளும் இவைதான் நியூசிலாந்துடனான இரண்டாவது கட்ட பிளே ஓப் (play-off) போட்டியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய பெரு அணி ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு கடைசி அணியாக தேர்வாகியுள்ளது. இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகெங்கும் 206 நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 869 போட்டிகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் ஆடும் 32 அணிகளும் தேர்வாகியுள்ளன. இதில் உலகக் கிண்ணத்திற்கான கடைசி தகுதிகாண் போட்டி நியூசிலாந்து மற்றும் பெரு அணிகளுக்கு இடையில் இலங்கை நேரப்படி இன்று (16) நடைபெற்றது. மண்டலங்களுக்கு இடையிலான பிளே ஓப் போட்டியாகவே தென் அமெர…
-
- 9 replies
- 1.7k views
-
-
டி20 கிரிக்கெட்: விராட் கோலிக்கு ஓய்வு; தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விளையாடி வந்த விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையி…
-
- 1 reply
- 604 views
-
-
அடுத்தாண்டு ஒலிம்பிக்கிலும் ரஷ்யா இல்லை தென்கொரியாவின் பியொங்சங்கில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்குபற்றுவதற்கு, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், தாம் குற்றமில்லாதவர்கள் என நிரூபிக்கும் ரஷ்ய தடகள வீரர்கள் சுயாதீனக் கொடியொன்றின் கீழ் பியொங்சங்கில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்ற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது குறித்த தடகள வீரர்கள் ரஷ்யாவிலிருந்தான ஒலிம்பிக் தடகள வீரர்கள் என்றவாறு பங்குபற்றமுடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவால் 2014ஆம் ஆண்டு சோச்சியில் நடத்தப்பட்ட குளிர்கால ஒலிம்பின்போது அரச ஆதர…
-
- 0 replies
- 393 views
-
-
பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம்! பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட் பைபஸ் பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு தனது திட்டத்தினை முன்வைத்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் புதிய பயிற்றுவிப்பாளராக பில் சிமன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை புதிய பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் டாக்காவுக்கு வருகை தரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் நேற்று (06) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதேவேளை புதிய பயிற்றுவிப்பாளர…
-
- 0 replies
- 307 views
-
-
பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது பெயார்ண் மியூனிச் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், பெயார்ண் மியூனிச், பார்சிலோனா, ஜுவென்டஸ், மன்செஸ்டர் யுனைட்டெட், றோமா ஆகிய அணிகள் வென்றதோடு, செல்சி, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச், 3-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, கொரென்டின் டொலிஸோ இரண்டு கோல்களையும் றொபேர்ட் லெவன்டோஸ்கி ஒரு கோலையும் பெற்றனர். பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே …
-
- 1 reply
- 349 views
-
-
நான் ஒன்றும் ரோபோ இல்லை, எனக்கும் ஓய்வு வேண்டும் - விராட் கோலி வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி நான் ஒன்றும் ரோபோ இல்லை, எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என பதிலளித்துள்ளார். கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டு மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 10 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய பிரிமீயர் லீக்கின் 10-வது சீசனிலும் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தாண்டு அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் வி…
-
- 5 replies
- 635 views
-
-
டெல்லியில் இனிமேல் போட்டி நடத்துகையில் காற்று மாசு கருத்தில் கொள்ளப்படும்: பி.சி.சி.ஐ இனி வரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டி நடத்துகையில் காற்று மாசு குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் நேற்று முன்தினம் ஆட்டம் 3 முறை நிறுத்தப்பட்டு தொடர்ந்தது. மாசு பிரச்சினையால் இலங்கை அணி வீரர்கள் வாந்தி எடுத்ததாக இலங்கை அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் புகார் தெரிவித…
-
- 1 reply
- 323 views
-
-
விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 05 இலங்கை அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் உலக சாதனை படைத்த விராத் கோஹ்லி, இலங்கை ஒரு நாள் அணியின் 22ஆவது தலைவராக நியமிக்கப்பட்ட திஸர பெரேரா மற்றும் 2018 பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் குழு நிலை அணிகளின் விபரங்கள் உள்ளிட்டவை இந்தவார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கவுள்ளது.
-
- 0 replies
- 209 views
-