விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
டிராவிட், ஜாகீர்கான் அவமானப்படுத்தப்படுவதாக தொடரும் கண்டனக் குரல்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமனம் செய்யப்பட்டது தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிராவிட் மற்றும் ஜாகீர் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான ஆலோசனை கமிட்டியில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஜுலை 11-ஆம் தேதியன்று இந்த கமிட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், அணியின் பந்துவீச்…
-
- 0 replies
- 515 views
-
-
மொனாகோவின் தியேமௌ பகாயோகோவை ரூ. 337 கோடி கொடுத்து வாங்கியது செல்சியா மொனாகோவின் நடுகள வீரரான தியேமொள பகாயோகோவை 337 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது பிரிமீயர் லீக் அணியான செல்சியா. பிரான்ஸ் கால்பந்து அணியின் நடுகள வீரர் தியேமௌ பகாயோகோ. 22 வயதான இவர் மொனாகோ கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மொனாகோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரான லீக் 1-ல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இவரது ஆட்டத்தை பார்த்து இங்கிலீஷ் பிரிமீய…
-
- 0 replies
- 272 views
-
-
அதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்! இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு சம்பளம் பலரையும் வியக்கவைத்துள்ளது. கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சே…
-
- 0 replies
- 371 views
-
-
மிதாலி ராஜ் சதம்; ராஜேஸ்வரி அபார பந்து வீச்சு: நியூஸி.யை நொறுக்கி அரையிறுதியில் இந்தியா பவுலிங் நாயகி ராஜேஸ்வரி கெயக்வாட் விக்கெட்டை கொண்டாடுகிறார். | படம்.| ராய்ட்டர்ஸ். கேப்டன் மிதாலி ராஜ். | படம்.| ராய்ட்டர்ஸ். டெர்பியில் மிதாலி ராஜ் சதம், வேதா கிருஷ்ணமூர்த்தியின் இறுதிக்கட்ட அதிரடி மூலம் 265 ரன்கள் குவித்த இந்திய அணி பிறகு நியூஸிலாந்தை 79 ரன்களுக்குச் சுருட்டி உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணி 186 ரன்களில் மிகப்பெரிய வெற்றியுடன் உலகக்கோப்பை அரையிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்தது. 2010-க்குப் பிற…
-
- 0 replies
- 446 views
-
-
விம்பிள்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 10-ம் நிலை வீராங்கனையான 37 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், 14-ம் நிலை வீராங்கனையான 23 வயதே ஆன ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசாவும் பலப்பரீட்சை நடத்தினார்கள். முதல் …
-
- 0 replies
- 535 views
-
-
இன்று ஆரம்பிக்கிறது விம்பிள்டன் கோலாகலம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில், முக்கியமான தொடராகக் கருதப்படும் விம்பிள்டன் சம்பியன்ஷிப் தொடரின் பிரதான சுற்று, இன்று ஆரம்பிக்கவுள்ளது. உலகின் முன்னணி வீரர்கள் பலரும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர். 16ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தத் தொடரில், மொத்தமாக 31,600,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ், பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. பிரதான தொடர் ஆரம்பிக்கும் இன்றைய தினமே, முக்கியமான வீரர்கள் பலரும் பங்குபற்றும் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், தொடருக்கான தரப்படுத்தல்களில், அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர், ரப…
-
- 20 replies
- 2.2k views
-
-
விசில் போடு: இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டகாச ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். கேப்டன் தோனி தவிர சுர…
-
- 2 replies
- 564 views
-
-
குமார் சங்கக்கார விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா? தமது தரப்பினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, வேண்டும் என்றால் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்பொழுது இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருபவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது தொடக்கம் அணியில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமைப் பதவியில் இருந்து விலகியதோடு டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி அணிகளுக்கு வெவ்வேறு தலைவர்கள் நியம…
-
- 0 replies
- 424 views
-
-
NatWest t20 போட்டியில் சங்ககாராவின் துடுப்பாட்டம்.... Middlesex v Surrey at Lord's, Jul 13, 2017 http://www.espncricinfo.com/
-
- 2 replies
- 390 views
-
-
பிரச்சினை ஓய்கிறது: ஒருநாள் போட்டிக்கு திரும்பும் கெய்ல், பிராவோ, நரைன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வருவதால் கெய்ல், பிராவோ, சுனில் நரைன் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, கீரன் பொல்லார்டு, சுனில் நரைன் ஆகியோர் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் ஏற்பட்டதால், டி20 கிரிக்கெட் போட்டியை தவிர மற்ற விளையாட்டுகளில் பங்கேற்க முடியாமல் இருந்தனர். அதற்குக் காரணம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின்படி ஒ…
-
- 0 replies
- 345 views
-
-
சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளார். நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் டீன் எல்கர், ஹெய்னோ குன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 18 ஆக இருக்கும்போது டீன் எல்கர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில்…
-
- 0 replies
- 606 views
-
-
2011 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி: விசாரணை நடத்த ரணதுங்கா வலியுறுத்தல் 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து விசரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் கேப்டன் ரணதுங்கா வலியுறுத்தி உள்ளார். கொழும்பு: மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் 18 ரன்…
-
- 0 replies
- 331 views
-
-
இந்தியாவின் முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன் இதெல்லாம் நடந்தது! #OnThisDay 1974ஆம் ஆண்டு. அப்போது டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வந்த நாடுகள் மொத்தம் ஆறுதான். அவற்றுள் ஐந்து நாடுகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடி விட்டன. இப்போதைக்கு ஓவர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்ட கிரிக்கெட் போட்டிகளின் தலைமையகமாகக் கருதப்படும் இந்தியாதான், அப்போதைக்கு ஒருநாள் போட்டிகளில் ஆடாத அந்த ஆறாவது நாடு. 1974ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதிதான் அவர்கள் முதன்முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார்கள். முதல் போட்டியிலேயே அப்போதைய அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையைச் செய்தது இந்திய அணி. ஆனால், இந்தப் போட்டிக்குப் பின்னால், பல அரசியல் …
-
- 0 replies
- 513 views
-
-
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை படைத்துள்ள மிதாலி ராஜ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES மகளிருக்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவரான மிதாலி ராஜ் பெற்றுள்ளார். கடந்த புதனன்று பிரிஸ்டல் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி ஒன்றில், 69 ஓட்டங்கள் குவித்த நிலையில் மிதாலி ராஜ் இந்த சாதனையை அடைந்தார். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சார்லெட் எட்வர்ட்ஸ், 5,992 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தோர் பட்டியலில் இதுவரை முதலிடம் வகித்து வந்தார். தற்போது 6,028 ரன்கள் குவித்ததன் மூல…
-
- 0 replies
- 415 views
-
-
யுவராஜ், கைஃபின் ‘வாவ்’ சேஸிங்.. ஜெர்சியைக் கழற்றிச் சுழற்றிய கங்குலி..! #OnThisDay #15YearsOfHistoricalChasing மயிர்கூச்செரிதல். இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? எப்போதாவது உங்களுக்கு மயிர் கூச்செரிந்திருக்கிறதா? ஒருவிதப் பரவச நிலையை அடையும் தருணங்களில் மட்டுமே அதை அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நேரத்தில் இந்த பரவச நிலை கிடைக்கலாம். ஆனால் நூறு கோடி மக்களுக்கு ஒரே சமயத்தில் அப்படியொரு பரவச நிலை கிடைக்கிறது என்றால் அது எத்தகயதொரு முக்கியமான தருணமாக இருந்திருக்க முடியும்? 1983ல் உலககோப்பையை இந்தியா வென்றது என்பது அன்றைய தினத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோருக்கு ஒரே சமயத்தில் தெரிந…
-
- 0 replies
- 637 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி விண்ணப்பித்துள்ளனர். இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவரது ஓராண்டு பயிற்சி காலம் தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைகிறது. இதனால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இதில் இருந்து கும்ப்ளேவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அவ…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கைக் குழாமில் தனஞ்சய நீக்கம் சிம்பாப்வே அணிக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இளம் வீரரான தனஞ்சய டி சில்வாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தப் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில், நாளை மறுதினம் (14) ஆரம்பிக்கவுள்ளது. புதிய தலைவர் டினேஷ் சந்திமாலின் தலைமையில் விளையாடப்படவுள்ள முதலாவது போட்டியாக அமையவுள்ள இப்போட்டியில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஃபோர்மை வெளிப்படுத்திய தனுஷ்க குணதிலக, முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். அதேபோன்று, காயம் காரணமாக அண்மைக்காலத்தில் இடம்பெற்றிருக்காத அஞ்சலோ மத்தியூஸ், நீண்டகாலத்தின் பின்னர், சாதாரண வீரராக…
-
- 0 replies
- 403 views
-
-
மேட்ச் பிக்சிங்: தென்னாப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை! தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடிய வீரர் லோன்வாபோ ட்சோட்சொபே. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒருகாலத்தில் உலகின் நம்பர் 1 பவுலராகவும் திகழ்ந்தவர். கடந்த 2015-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான ராம்ஸ்லாம் டி20 சேலஞ்சில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆரம்பத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த ட்சோட்சொபே பின்னர், தனது தவறை ஒப்புக்கொண்டார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்பு அமைப்பின் நீதிபதி பெர்னார்ட் 20 மாத விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு வழங்கியிருக்கிறார். ட்சோட்சொப…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கை அணித் தலைவர்களாக சந்திமல், தரங்க இலங்கை கிரிக்டெ் அணியின் டெ்ஸ்ட் தலைவராக டினேஸ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் சிம்பாப்வே அணிக்கொதிரான ஒருநாள் தோடரில் 3-2 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில் அணித்தலைவர் பதிவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக அஞ்சலோ மெத்தியூஸ் அறிவித்திருந்்த நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இவ்வாறான மாற்றம் ஏற்றபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/21788
-
- 0 replies
- 244 views
-
-
பதவி விலகினார் மத்தியூஸ் - இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 3 வகையான போட்டிகளின் தலைமைத்துவத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். சிம்பாப்வே அணிக்கெதிராக, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. மத்தியூஸ், 34 டெஸ்ட் போட்டிகளிலும் 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 12 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் தலைமை தாங்கியிருந்தார். http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பதவி-விலகினார்-மத்தியூஸ்/44-200391
-
- 0 replies
- 325 views
-
-
ஜேம்ஸ் ரோட்ரிக்சை 2 வருடம் கடனாக பெற்றது பேயர்ன் முனிச் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸை 2 வருடத்திற்கு கடனாக பெற்றுள்ளது பேயர்ன் முனிச். ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் ரியல் மாட்ரிட். இந்த அணியில் கொலம்பியாவின் முன்னணி ஸ்ட்ரைக்கரான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் இடம்பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, பென்சிமா, கராத் பேலே ஆகியோர் இருப்பதால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸிற்கு களமிறங்குவதற்கு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான போட்டிகளில் மாற்று வீரர்களாக களமிறங்கும் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. வாய்ப்பு கிடைக்காததால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் வேறு அணிக்கு செல்ல …
-
- 0 replies
- 293 views
-
-
ஒருநாள் தொடரை வசப்படுத்துமா இலங்கை? ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மைதானத்தில் இன்று இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 5வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இடம்பெறுகின்றது. இதில், சற்று முன்னர் இடம்பெற்ற நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இதேவேளை முன்னதாக இடம்பெற்ற 4 போட்டிகளில் இரு அணிகளிலும் தலா இரண்டில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு நாள் தொடர் தற்போது சமநிலையில் உள்ளது. இதற்கமைய, தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இரு அணிகளுக்கும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=93178 Sri Lanka 47/3 (13.5 o…
-
- 5 replies
- 888 views
-
-
20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிரவைத்த ஆஃப்கன் வீரர்! 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சஃபிக்குல்லா சஃபாக். கடந்த 2012-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 200 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடிப்பது சாத்தியமே இல்லை என்று நினைத்திருந்த வேளையில், அதைத் தொடங்கி வைத்தார் சச்சின். இதற்குப் பிறகு சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெயில், மார்டின் கப்தில் ஆகியோர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்துவிட்டனர். ஆனால், சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் இதுவரை யாரும் இரட்டை சதமடிக்கவில்லை. இதனிடையே உள்ளூர் போட்டி ஒன்றி…
-
- 1 reply
- 515 views
-
-
என்னை நான் கண்டுபிடித்துக் கொள்ள விரும்பினேன்: கடந்து வந்த பாதை பற்றி மனம் திறக்கிறார் முரளி விஜய் முரளி விஜய். | படம்.| ஆர்.ரகு. குறும்புத்தனம் செய்யும் பையனாக தனது வாழ்க்கையை தொடங்கியது முதல் இன்றைய டெஸ்ட் தொடக்க வீரராக முன்னேறியது வரையிலான தனது பயணத்தை முரளி விஜய் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். கடினங்களிலும் கிரிக்கெட் மேல் உள்ள அந்த நேசம் மட்டுமே தன்னை நகர்த்திக் கொண்டு சென்றது என்று கூறிய விஜய், “மலையின் உச்சியைத் தொடுவது கடினம்தான், ஆனால் ஏறிய பிறகு அவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கும் போது கடினப்பாடு பெரிதாகத் தெரியவில்லை” என்றார் விஜய். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் மிகவும்…
-
- 2 replies
- 573 views
-
-
வீடியோ... பவுலர் மண்டையை தாக்கிய பந்து; அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் மண்டையை பலமாக தாக்கியது. இதனால் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேல் விளையாட்டு என்ற எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வி்ளையாட்டிலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் புயல்வேக பவுன்சர் பந்துகள் பேட்ஸ்மேன்கள் தலையை தாக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிந்து விளையாடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணியின் …
-
- 0 replies
- 590 views
-