விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...' வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல்! வரும் 9-ம் தேதி, இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விளையாடப்போகும் 20 ஓவர் கிரிக்கெட் அணியில், அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தொடர்ந்து விளையாடிவந்தார். மோசமான ஃபார்ம், உடலில் ஏற்பட்ட காயங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இடையில் சிறிது காலம் அவர் விளையாடாமல் இருந்தார். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று கலக்கினார். இதனால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் தான் மிக ஆபத்தான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். என்னதான் 20 ஓவர் போட்டிகளில் கெய்ல் விளையாடினாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட…
-
- 1 reply
- 464 views
-
-
பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் சிந்திய வீனஸ் வில்லியம்ஸ்! டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய கார் விபத்துகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளால் நிலைகுலைந்த வீனஸ், கண்ணீர்விட்டு அழுதார். அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தால், கடும் சிக்கலில் உள்ளார். கடந்த மாதம் 9-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரின்மீது மோதியுள்ளார். இந்த விபத்தில், அந்த காரில் பயணித்த 74 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் இறந்துவிட்டார். அதனால், பிரச்னை தீவிரமடைந்தது. இந்நிலையில், நேற்று வீனஸ் வ…
-
- 0 replies
- 332 views
-
-
‘செல்சியைத் தவிர்க்கவே அஸ்டன் வில்லாவில்’ செல்சி அணியின் முன்னாள் தலைவரான ஜோன் டெரி, எதிர்காலப் போட்டிகளில், செல்சி அணிக்கெதிராக விளையாடுவதைத் தவிர்ப்பதற்காகவே, அஸ்டன் வில்லா அணியுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளாக செல்சி அணியில் விளையாடியிருந்த டெரி, கடந்த பருவகாலத்துடன், அவ்வணியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையிலேயே, அஸ்டன் வில்லா அணியுடன், ஓர் ஆண்டுக்கான ஒப்பந்தமொன்றில் அவர் கைச்சாத்திட்டுள்ளார். வாராந்தம் 77,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்ற ஊதியத்திலேயே, இந்த ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது. செல்சி அணி, பிறீமியர் லீக் பிரிவில் விளைய…
-
- 0 replies
- 506 views
-
-
ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? Tamil ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? ஒரு நாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் தமது சொந்த மண்ணில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்தித்திராது காணப்பட்டிருந்த இலங்கை அணியானது, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) காலி நகரில் இடம்பெற்றிருந்த போட்டியில் அவ்வணிக்கு எதிராக பாரிய வெற்றி இலக்கு ஒன்றினை வைத்தும் மிகவும் மோசமான முறையில் தோல்வியைத் தழுவியதால், வரலாறு மாற்றப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அத்தோல்வியினால் இலங்கை அணி மீது ரசிகர்களின் அதிருப்தியும்…
-
- 0 replies
- 528 views
-
-
கூடைப்பந்தில் யாழில் தமது பலத்தை நிரூபித்தது சென்றலைட்ஸ் அணி Tamil கூடைப்பந்தில் யாழில் தமது பலத்தை நிரூபித்தது சென்றலைட்ஸ் அணி யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை வெற்றி கொண்ட சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. இரு பாலாருக்குமான இந்த போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டி நான்கு குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் இரண்டு அணிகள் அங்கம் வகித்து போட்டி…
-
- 0 replies
- 418 views
-
-
தப்பினார் செபஸ்டியன் வெட்டல் அஸர்பைஜானில் இடம்பெற்ற கிரான்ட் பிறிக்ஸ் தொடரில், லூயிஸ் ஹமில்டனின் காரோடு ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக, போர்மியூலா வண் சம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கும் செபஸ்டியன் வெட்டல், மேலதிக நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாட்டார் என, சர்வதேச ஓட்டோமொபைல் சம்மேளனம் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காருக்குப் பின்னால் நின்ற போது, தனது சக மெர்சிடீஸ் சாரதியான ஹமில்டனின் காரோடு, வெட்டல் மோதியிருந்தார். இதனால் அவருக்கு, 10 செக்கன்கள் நிறுத்திச் செல்லும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மீளாய்வு இடம்பெற்ற நிலையில், தனது நடவடிக்கை தவறானது என ஏற்றுக் கொண்ட வெட்டல், அது தொடர்பாக பகிரங்க மன…
-
- 0 replies
- 294 views
-
-
சர்வதேச கிரிக்கெட் பந்துவீச்சில் டேன் சாதனை இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ஒன்பதாம் நாளான ஞாயிறன்று எட்டு மகளிர் அணிகளும் விளையாடிய போட்டிகளில் தென் ஆபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தங்களது பந்துவீச்சாளினிகளின் அதீத திறமையைக் கொண்டு வெற்றிகளைப் பதிவு செய்தன. தென் ஆபிரிக்க அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சாதனை மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக லெஸ்டர் க்றேஸ் றோட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணித் தலைவி டேன் வென் நீகேர்க் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அபூர்வ சாதனை ஒன்றை நிலைநாட்டினா…
-
- 0 replies
- 452 views
-
-
அரையிறுதிப் போட்டிகளில் மெக்ஸிக்கோ, போர்த்துக்கல் ஃபீபா கூட்டமைப்புகளின் கிண்ணத் தொடருக்கான (கொன்படரேஷன் கிண்ணம்) போட்டிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில், மெக்ஸிக்கோ, போர்த்துக்கல் அணிகள் வெற்றிபெற்றன. இதன்மூலம் இவ்வணிகள், அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன. ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் இப்போட்டிகளில், குழு “ஏ”க்கான போட்டிகளே, நேற்று முன்தினம் இடம்பெற்றன. கஸனில் நடைபெற்ற போட்டியில், மெக்ஸிக்கோ அணியும் போட்டிகளை நடத்தும் ரஷ்ய அணியும் மோதின. போட்டியின் 25ஆவது நிமிடத்தில், ரஷ்யாவின் அலெக்ஸான்டர் சாமெடோவ், கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து, தனது அணிக்கு முன்னிலையை வழங்…
-
- 10 replies
- 778 views
-
-
சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளராக இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளரான இருந்த இத்தாலியின் மார்கோ மெடாரசி நீக்கப்பட்டு, இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்திய கால்பந்து சம்மேளனமும் இந்தியன் சூப்பர் லீக் என்ற கால்பந்து தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் அணிகளை வாங்கியுள்ளனர். 2014 முதல் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் ஆதரவு அதிக அளவ…
-
- 0 replies
- 253 views
-
-
லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன? போட்டியின் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை சாய்ப்பதில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்ததே இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சிகளுக்கு காரணமாகவிருந்தது. எனினும், ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மத்தியவரிசை ஓவர்களில் முக்கிய பல விக்கெட்டுக்களை சாய்த்திருந்த சுழல் வீரரான லக்ஷன் சந்தகன் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்கான தனது பெறுமதியை உணர்த்தியிருந்தார். இந்தப் போட்டி மூலம், ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த சந்தகன், 10 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பாட்டம் மூலம் இலங்கை, ஜிம…
-
- 0 replies
- 458 views
-
-
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் MCC அணிக்காக குமார் சங்கக்கார லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ள முன்னாள் நட்சத்திர வீரர்களை கொண்ட MCC அணியின் துடுப்பாட்ட வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இணைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான யூனிஸ் கான் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் சர்வதேச மட்டத்தில் 28,922 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள், அண்மையில் இங்கிலாந்து உள்ளூர் பருவகால போட்டிகளில் 1000 ஓட்டங்களை குவித்த குமார் சங்…
-
- 0 replies
- 346 views
-
-
இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட்: ரசிகர்களை அச்சுறுத்தும் யானைக் கூட்டம் ஹம்பன்தோடாவில் நடைபெற இருக்கும் இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டிக்கு யானைக்கூட்டம் அச்சுறுத்தலாக இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. அடுத்த மூன்று போட்டிகள் ஹம்பன்தோடாவில் நடக்கிறது. 3-வது போட்டி 6-ந்தேதியும், 4-வது போட்டி…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கைக்கு வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் சிம்பாபே அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுத்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி, 33.4 ஓவர்களில் 155 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது. சிம்பாபே அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மசகட்ஸா அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.இதேவேளை இலங்கை அணி சார்பாக அபாரமாக பந்து வீசிய லக்ஷான் சன்டகன் நா…
-
- 2 replies
- 949 views
-
-
'நான் ஒரு ஒயின் மாதிரி!'- இது தோனி பன்ச் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 'நான் ஒரு ஒயின் மாதிரி. காலம் போக போக சுவைகூடிக் கொண்டே போவேன்' என்று சிலாகித்துள்ளார். கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதிலிருந்தே, அவரது ஃபார்ம் பற்றி தொடர்ச்சியான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் கெத்து கம்-பேக் கொடுத்துள்ளார். இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் ஒரு 20 ஓவர்கள் போட்டியை விளையாடி வருகிறது. நேற்றுடன் இதுவரை மூன்று ஒரு நாள் போட்டிகள் முடிந்துள்ளன. நேற்றைய போட்டியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே தோனி கொஞ்சம் சீக…
-
- 3 replies
- 873 views
-
-
சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சிறுவயது தோழி அண்டோனல்லா ரோகுசோவை நேற்று திருமணம் செய்து கொண்டார். பியுனோஸ் ஐரஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. உலக புகழ்பெற்ற அவர் தனது ஆரம்ப கால தோழியான அண்டோனல்லா ரோகுசோவை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் வசித்து வரும் மெஸ்ஸி தம்பதியினருக்கு தியாகோ…
-
- 2 replies
- 625 views
-
-
மலிங்காவிற்கு வைரஸ் காய்ச்சல்: ஜிம்பாப்வேக்கு எதிரான நாளைய போட்டியில் இருந்து விலகல் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது போட்டியில் இடம்பெறமாட்டார். ஜிம்பாப்வே அணி இலங்கையில சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் போட்டியில் 300-க்கும் அதிகமான ரன்னை சேஸிங் செய்து ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரே…
-
- 0 replies
- 213 views
-
-
இங்கிலாந்தில் விளையாடவுள்ள திசர பெரேரா!! இங்கிலாந்தின் க்லோஸ்ட்ரஸயர் பிராந்திய அணியில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் வீரர் திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 20-20 பிராந்திய ஆட்டங்களில் விளையாடவே திசர அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிக்குகே பிரசன்ன பங்களாதேஸ் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஸின் குல்னா டைடன் அணிக்காகவே இவர் விளையாடவுள்ளார். http://uthayandaily.com/story/8893.html
-
- 0 replies
- 254 views
-
-
அதிக ரன்கள் குவித்ததில் அசாருதீனை முந்திய டோனி ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் அசாருதீனை முந்திய டோனி 4-வது இடத்தை பெற்றார். அவர் 294 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9442 ரன் எடுத்துள்ளார். ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு டோனி முக்கிய பங்கு வகித்தார். அவர் 35 வயதிலும் 78 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 15-வது ரன்னை எடுத்த போது டோனி ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார். அவர் அசாருதீனை முந்தினார். தெண்டுல்க…
-
- 0 replies
- 428 views
-
-
ஆட்டநாயகன் தோனி, அஷ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்! இன்று, மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள் மற்றும் 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனிடையே, இன்று ஆண்டிகுவாவில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய…
-
- 0 replies
- 574 views
-
-
கெப்ளர் முதல் மோர்கன் வரை... இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்! வாய்ப்புக்காக, திறமையை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்காத காரணத்துக்காக, பணத்துக்காக, சந்தர்ப்பசூழல்களுக்காக... என, இரு வேறு நாடுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கும் பத்து கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது. ஜான் ட்ரைகோஸ் (John Traicos) விளையாடிய நாடுகள் : தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே. 1970-களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமான ஆஃப் ஸ்பின் பெளலர் ஜான் ட்ரைகோஸ். தென் ஆப்பிரிக்காவில் நிலவிய உள்நாட்டுப் பிரச்னையால் கிரிக்கெட் …
-
- 0 replies
- 524 views
-
-
இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகின்றது. இவ்விரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் காலி மைதானத்தில் நடைபெறுகின்றன. மீதமுள்ள மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிம்பாப்வே அணியுடன் மோதவுள்ள இலங்கை அணி நேற்றுமுன்தினம் அறிவிக்க…
-
- 4 replies
- 520 views
-
-
ஒரே வருடத்தில் இரண்டு ஐபிஎல்- பிசிசிஐ புதிய திட்டம்? மினி ஐபிஎல் தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதில், முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பரில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடுவது வழக்கம். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டுக்கு முன்னர் இந்தத் தொடர் கைவிடப்பட்டது. இதனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் 15 நாள்கள் இடைவெளி கிடைத்துள்ளதால், அதில் மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற…
-
- 0 replies
- 712 views
-
-
வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல் இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டியிலேயே குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை 28 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதேவேளை, இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்களிலும் உபுல் தரங்க 28 இன்னிங்களிலும் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்திருந்த நிலையில் குஷல் மென்டிஸ் 28 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்ளை…
-
- 0 replies
- 260 views
-
-
1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 1 அப்போது எந்த கிரிக்கெட் விமர்சகரும் சேத்தன் ஷர்மா ஹாட்ரிக் எடுப்பார் என்றோ, நவ்ஜோத் சித்து தொடர்ந்து நான்குமுறை 50 ரன்கள் அடிப்பார் என்றோ கணிக்கவில்லை. அந்த உலகக் கோப்பை தொடங்கும் முன்பும் முடிந்த பின்பும் கிரிக்கெட் அல்லாத ஒரு விஷயத்தை பற்றிதான் அதிகம் பேசினார்கள். அது டேவிட் பூனின் மீசை. இப்படி பல விஷயங்களுக்கு அச்சாரமாக இருந்த 1987 உலகக் கோப்பையைப் பற்றிய கம்ப்ளீட் ரீவைண்ட் இதோ... 1987 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதன்முறையாக கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு வெளியே நடக்கப்போகிறது என்றதுமே கிரிக்கெட் உலகிற்கு …
-
- 6 replies
- 2.5k views
-
-
மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை 178 ரன்கள் விளாசிய இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி. | படம்.| ராய்ட்டர்ஸ். பிரிஸ்டலில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 257 ரன்களைக் குவித்துள்ளது. இதில் 3-ம் நிலையில் களமிறங்கிய அட்டப்பட்டு சமாரி ஜெயங்கனி என்ற இடது கை விராங்கனை தனியாகப் போராடி, 178 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார், இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த 257 ரன்களில் 178 ரன்கள் பங்களிப்பு என்பது அதிக…
-
- 1 reply
- 374 views
-