விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
கனரக மட்டையுடன் இந்திய ‘சுழற்பந்து வீச்சை’ ஆதிக்கம் செலுத்த வார்னர் கடும் பயிற்சி யாசிர் ஷாவை சிட்னி டெஸ்ட் போட்டியில் எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் சிக்ஸ் அடிக்கும் வார்னர். | படம்.| ராய்ட்டர்ஸ். துணைக்கண்டத்தின் ‘குறைந்த பவுன்ஸ்’, ‘சுழற்பந்து வீச்சு’ ஆகியவற்றை ஆதிக்கம் செலுத்த கனரக மட்டையைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, டேவிட் வார்னர் வழக்கமாக 1.23 கிலோ எடைகொண்ட மட்டையைத்தான் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இம்முறை இந்தியாவுக்கு எதிராக 1.28 கி…
-
- 0 replies
- 413 views
-
-
கேப்டனாக கடைசி போட்டி: அதிரடி காட்டிய தோனி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டனாக தோனி இருக்கிறார். கேப்டனாக கடைசியாக களமிறங்கியுள்ளார் தோனி. மும்பையில் நடந்து வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் எடுத்தார். தோனி 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக எட்டு பவுண்டரிகளும், 2 சிக்சர்களையும் பறக்க விட்டார். யுவராஜ் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். யுவராஜ் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார். இதையடுத்து 305 ரன் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. http://www.vikatan.com/news/sports/77…
-
- 4 replies
- 581 views
-
-
உலகக் கிண்ணப் போட்டிகளில் 48 நாடுகள்; பீபா வாக்கெடுப்பு இன்று இன்னும் ஒன்பது வருடங்களில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 48ஆக உயர்த்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சங்கம் (பீபா FIFA) திட்டமிட்டுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் நாடுகளின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு பீபா தலைவர் ஜியானி இன்பன்டீனொ பெரும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். இந் நிலையில் சூரிச்சில் இன்று கூடும் பீபா பிரதிநிதிகள் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா என்பது குறித்து நடத்தப்படும் வாக்கெடுப்பில் கலந…
-
- 1 reply
- 455 views
-
-
2016 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்டக்காரர் யார்..? 2016 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா விருது போர்ச்சுகல் அணியின் முன்னணி கால்பந்து வீரரான ரோனால்டோவிற்கு வழங்கப் பட இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் கால்பந்தாட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன் படி 2016 ஆண்டிற்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற கவுரவத்தை பெற்றிருக்கிறார் ரோனால்டோ. சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில் ரோனால்டோ 34.54 சதவிகிதம் பெற்று முதலிடமும், அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி 26.42 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர்.பெரும் எதிபார்ப்புக்கு இடையில் ரோனால்டோ தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77411…
-
- 2 replies
- 609 views
-
-
பேட்ஸ்மேன் தரவரிசை: விராட் கோலியை துரத்தும் கேன் வில்லியம்சன் பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதன்முறையாக ஐந்து இடத்திற்குள் முன்னேறியுள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இவர்களிடையே ரன் குவிப்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது. ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போ…
-
- 0 replies
- 341 views
-
-
கோஹ்லிக்காக தோனி கேப்டன்சியைப் பறித்ததா பி.சி.சி.ஐ.!? குபீர் பின்னணி கடந்த ஜனவரி நான்காம் தேதி இரவு, கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார் என பி.சி.சி.ஐ அறிவிக்க, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. ஐ.சி.சி நடத்திய கோப்பைகள் அனைத்தையும் இந்தியா ஜெயிப்பதற்கு காரணமான முக்கியமான நபர் மகேந்திர சிங் தோனி. உலகிலேயே ஐ.சி.சி கோப்பைகள் அனைத்தையும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரரும் சரி, கேப்டனும் சரி தோனி மட்டும் தான். இந்தச் சூழ்நிலையில் தோனி ஏன் விலகினார் என்பது மர்மமாகவே இருந்தது. தோனி இதுவரை வெளிப்படையாக கடிதம் மூலமோ, பேட்டி மூலமோ, சமூக வலைதளங்கள் மூலமோ அதிக…
-
- 0 replies
- 420 views
-
-
இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். புதுடெல்லி : வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டி ஐதராபாத்தில் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இந…
-
- 0 replies
- 269 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஷபூர் உயிர்தப்பினார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான். 29 வயதாகும் இவர் அந்த அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இவர்…
-
- 0 replies
- 356 views
-
-
10 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 94 ரன்கள் விளாசல்: கோரி ஆண்டர்சன் சரவெடியில் நியூஸிலாந்து வெற்றி பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்கும் கோரி ஆண்டர்சன். | படம். ஏ.எப்.பி. நியூஸிலாந்தின் மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற 3-வது, கடைசி டி20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது போலவே டி20 தொடரிலும் 3-0 என்று வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது. கோரி ஆண்டர்சன் ஒருநாள் போட்டிகளில் 2014-ல் 36 பந்துகளில் சதம் அடித்தார், இன்று அதிவேகே டி20 சதத்திற்கான சாதனையையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பார், ஆனால் 20 ஓவர்களுக்குள் அதைச் செய்ய முடிய…
-
- 5 replies
- 523 views
-
-
சாம்பியனாகியும் நம்பர் ஒன்னை மிஸ் செய்த சானியா பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ், இறுதிப் போட்டியில் சானியாமிர்சா-பெதனி மட்டேக் இணை, ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னியா இணை மோதினர். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்குகளில் சானியா இணை வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனாலும், சர்வதேச அரங்கில், இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை சானியா இழந்துள்ளார். சானியா மிர்சா கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13-ஆம் தேதி முதல், பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77223-sania-loses-no-1-spot-in-tennis.art
-
- 0 replies
- 354 views
-
-
இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸி. வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ம…
-
- 0 replies
- 329 views
-
-
மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார் வெயின் ரூனே. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரர் வெயின் ரூனே. 31 வயதாகும் ரூனே அந்நாட்டின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எஃ.ப்.ஏ. கோப்பைக்கான 3-வது சுற்றில் மான்செஸ்டர் அணி இன்று ரீடிங் அணியை எதிர்கொண்டது. அப்போது ஆட்டம் தொடங…
-
- 0 replies
- 369 views
-
-
39 போட்டியில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட் லா லிகா தொடரில் கிரனாடாவை 5-0 என வீழ்த்தியன் மூலம் தொடர்ச்சியாக 39 தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்புகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் முன்னணி கிளப்பாக விளங்கி வருகின்றன. இந்த இரண்டிலும் பார்சிலோனா சிறந்த அணியாக விளங்கி வருகிறது. பார்சிலோனா அணி தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சாதனைப் படைத்திருந்தது. அந்த சாதனையை எந்த கிளப் அணி…
-
- 0 replies
- 267 views
-
-
11 நாடுகளில் சதம் யூனுஸ்கான் புதிய சாதனை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ் தான் அணி யூனுஸ்கானின் சதத்தால் 3ஆ-வது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலிய மண்ணில் யூனுஸ்கான் சதம் அடிப்பது இதுவே முதல்முறை. மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்தவர் என்ற சாதனையையும் யூனுஸ்கான் படைத்தார். இத்துடன் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற 11 நாடுகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார் யூனுஸ்கான். சங்கக்கார, மஹேல, ராகுல் டிராவிட், முகமது யூசுப் ஆகியோர் 10 நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சத…
-
- 0 replies
- 337 views
-
-
10 ஆயிரம் ரன்னை தவறவிட்ட யூனுஸ்கான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் சிட்னி டெஸ்டில் 13 ரன்னில் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான். 39 வயதான இவர் சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் ரன்களின் எண்ணிக்கை 9964 ஆக உயர்ந்தது. 2-வது இன்னிங்சில் 36 ரன் எடுத்ததில் யூனுஸ்கான் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆனால் அவர் 13 ரன்னில் ஆட்டம் இழந்ததால் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். யூனுஸ்கான் 115 டெஸ்டில் விளையாடி 9…
-
- 0 replies
- 500 views
-
-
பிக் பாஷ் டி20 லீக்: இரண்டாக உடைந்த மெக்கல்லத்தின் பேட் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லத்தின் பேட் இரண்டாக உடைந்தது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்தது. அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பியர்சன், பிர…
-
- 0 replies
- 484 views
-
-
தென் ஆப்பிரிக்க அணியை விட்டுச் செல்கிறார் கைல் அபாட் கைல் அபாட். | கெட்டி இமேஜஸ். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் தென் ஆப்பிரிக்க அணியை விடுத்து இங்கிலாந்து கவுண்டி ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாட முடிவெடுத்துக் கிளம்புகிறார். கைல் அபாட்டுடன் இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வாரியம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்தன, தென் ஆப்பிரிக்காவுக்கு தொடர்ந்து விளையாடுமாறும் தென் ஆப்பிரிக்காவை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அபாட்டை கிரிக்கெட் வாரியத்தினால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடனான கைல் அபாட்டின் ஒப்பந்தம் உடனடியாக முடிவுக்கு வருகிறது. …
-
- 0 replies
- 456 views
-
-
1996 உலக சம்பியன் அணி முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சம்பியனான அணி வீரர்கள் இணைந்து முன்னாள் வீரர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான அறக்கட்டளை ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்தனர். இதன் மூலம் முன்னாள் வீரர்கள் இருவருக்கு நிதி உதவிகளையும் அன்றைய தினம் வழங்கிவைத்தனர். அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இலங்கையை உலக அளவில் பிரகாசிக்க வைத்தது. அந்த அணி வீரர்கள் அனைவரும் இணைந்து 3.6 மில்லியன் ரூபா நிதியுடன் புதிய அறக்கட்டளை ஒன்றை நேற்றுமுன்தினம் அங்குரார்ப்பணம் செய்…
-
- 0 replies
- 416 views
-
-
கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர் வகித்து வந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார். http://www.vikatan.com/news/india/76889-dhoni-steps-down-as-captain-of-the-indian-cricket-team.art ஒருநாள், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி திடீர் விலகல் தோனி. | கோப்புப் படம்: சந்தீப் சக்சேனா. …
-
- 26 replies
- 6.5k views
-
-
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு? இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி: லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து செல்வாக்குமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பணிக்கு தகுதியான நபரை…
-
- 1 reply
- 440 views
-
-
பாக். மண்ணில் கிரிக்கெட்: பாதுகாப்பு அனுமதி, வீரர்கள் ஒப்பந்தம் குறித்து யோசிக்கும் வெ.இண்டீஸ் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு பாதுகாப்பு அனுமதி மற்றும் வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பிற்கு எந்தவொரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனால் எப்படியாவது முன்னணி அணிக்கெதிரான தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியே தீர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர் முயற்சியில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 306 views
-
-
முதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து கேன் வில்லியம்சின் அபார ஆட்டத்தால் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. வங்காள தேசம் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காள தேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர…
-
- 0 replies
- 233 views
-
-
பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் சாதனை பாகிஸ்தானின் நடுவர் அலீம் தார் அதிக டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் கேப் டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியானது அவர் மத்தியஸ்தம் வகிக்கும் 332ஆவது போட்டியாகும். அலீம் தார் 2000ஆம் ஆண்டு முதன் முதலில் டெஸ்ட் போட்டி ஒன்றில் நடுவராகப் கடமையாற்றியிருந்தார். இதற்கு முன்னர் அதிக டெஸ்ட்களில் நடுவராகப் பணியாற்றியவர் தென் ஆபிரிக்காவின் ரூடி கேர்ட்சன் ஆவார். இவர் 331 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப்பணியாற்றியதுடன் 2010 இல் ஓய்வு பெற்றார். - See more…
-
- 0 replies
- 359 views
-
-
டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்து டேவிட் வார்னர் சாதனை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். அதிவேக சதமடித்த டேவிட் வார்னர் இன்று ( செவாய்க்கிழமை) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இடது கை தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 78 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, உணவு இடைவேளைக்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னர், வார்னர் இந்த மைல்கல்லை எட்டினார். …
-
- 1 reply
- 440 views
-
-
வாரம் 96 லட்சம் - மைக்கேல் ஷூமேக்கர் மெடிக்கல் பில் இதுவரை ரூ.116 கோடி! ‘ஒரு தலைவலி, காய்ச்சல் என்றாலே 500 ரூவா காலியாகிடுதுப்பா” - இப்படிப் புலம்பாதவர்களே இருக்க முடியாது. மருத்துவச் செலவுகள் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எதிர்பாராதவிதமாய் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்ட கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மெடிக்கல் பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவரது மருத்துவச் செலவாக இதுவரை ரூ. 116 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேரந்த 45 வயதான பார்மூலா -1 கார் பந்தய வீரர் மைக்கல் ஷூமேக்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி, பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொ…
-
- 0 replies
- 416 views
-