Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை டி20 தொடர்: ஆஸ்திரேலியா அணிக்கு லாங்கர் பயிற்சியாளர் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இலங்கை டி20 தொடர் வருவதால் இலங்கை தொடருக்கு ஜஸ்டின் லாங்கரை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா நியமித்துள்ளது. இலங்கை அணி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா செல்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் பிப்ரவரி 17-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதியும் நடக்க இருக்கிறது. அதே சமயத்தில் பிப்ரவரி 23-ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் …

  2. வார்னர் 156 ரன்கள்; நியூஸிலாந்து 147 ஆல் அவுட்: தொடரை 3-0 என கைப்பற்றிய ஆஸ்திரேலியா சாப்பல்-ஹேட்லி ஒருநாள் தொடர் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி. | படம்: ஏஎப்பி. மெல்பர்னில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது, இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 117 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நியூஸிலாந்தை 3-0 என்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வார்னரின் 156 ரன்கள் பெரும்பங்களிப்புடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து படுமோசமாக ஆடி 36.1 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களில் தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. …

  3. எதிர்­கால பீபா உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 16 குழுக்கள், 48 அணிகள் - ஜியானி யோசனை எதிர்­கால உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்றில் 16 குழுக்­களில் 48 நாடுகள் பங்­கு­பற்­ற­வேண்டும் என்­பது பீபா தலைவர் ஜியானி இன்ஃ­பன்­டீ­னோவின் விருப்­ப­மாகும். ஜியானி இன்ஃ­பன்­டீ­னோ உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்­கையை 32 இலி­ருந்து 40 ஆக அதி­க­ரிக்க வேண்டும் என பீபாவின் தலை­வ­ராக கடந்த பெப்­ர­வரி மாதம் தெரி­வான இன்ஃ­பன்­டீனோ முன்னர் தெரி­வித்­தி­ருந்தார். அவ­ரது புதிய விருப்­ப­மான 16 குழுக்­களில் 3 நாடுகள் வீதம் பங்­கு­பற்­றினால் ஒவ்­வொரு குழு­விலும் முத­லி­ரண்டு இட…

  4. லசித் மாலிங்க வைத்தியசாலையில் அனுமதி கிரிக்கெட் வீரா் லசித் மாலிங்க, சுகயீனம் காரணமாக நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் லசித் மாலிங்க டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிப்பதாகவும் அதற்கமைய சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் வைத்தியசாலை வட்டரங்கள் தெரிவிக்கின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21167#sthash.Ed01UOxw.dpuf

  5. இலங்கை கிரிக்கெட் கண்ட இளம் நட்சத்திரம் குஷல் மெண்டிஸ் அண்மையில் ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடர் மற்றும் முக்கோண ஒருநாள் தொடர் என்பவற்றில், இலங்கை அணி முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில், அனுபவம் குறைந்த இளம் வீரர்களைக் கொண்ட குழாமினை வைத்து இரு தொடர்களையும் வெற்றிகரமாக கைப்பற்றியது. இந்த வெற்றிகளுக்கு இளம் வீரரான “மொரட்டுவையின் இளவரசர்” என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்படும் 21 வயதேயான குஷல் மெண்டிஸ் பெரும் பாங்காற்றியிருந்தார். இலங்கை அணியின் எதிர்கால நம்பிக்கைக்குறிய வீரரான குஷல் குறித்தும், அவர் கடந்து வந்த பாதைகள் குறித்தும் அறிந்துகொள்வதற்காக thepapare.com அவருடன் பிரத்யேக நேர்காணல் ஒன்றை நடத்தி…

  6. தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய. தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய. இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது. இதுவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக வெளியிடாத பட்டியலில் 24 வயதான வலதுகை புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய் என்ற வீரர் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மிகசாதுரியமாக சுவிங் முறைமூலம் பந்துகளை வீசுவதில் வல்லவரான இவர் ,BRC கழகத்துக்காக விளையாடி வருபவர் என்றும் அறியக் கிடைக்…

  7. கால்பந்து போட்டியை போல கிரிக்கெட் போட்டியில் சிவப்பு அட்டை கிரிக்கெட் போட்டியில் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரருக்கு சிவப்பு அட்டை காட்டும் முறை கொண்டு வர வேண்டும் என்று எம்.சி.சி. பரிந்துரை செய்து உள்ளது. மும்பை: லண்டனில் உள்ளது மெர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) இந்த கிளப் தான் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள், பரிந்துரைகள் ஆகியவற்றை ஆராய்ந்து ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கும். கிளப் தலைவராக மைக் பிரியர்ல…

  8. இலங்கை அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக முன்னாள் இலங்கை வீரர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கெதிராக இடம்பெறவுள்ள தொடர்களுக்கு இவர் இலங்கை அணியின் முகாமையாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14255

  9. இந்தியா-இங்கிலாந்து மோதல்: சென்னை டெஸ்ட் போட்டி மாற்றப்படுமா? ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை: இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை சென்னையில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்த டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது வேறு இடத்துக்கு மா…

  10. ஒரே ஆண்டில் 6 சதம் அடித்து வார்னர் சாதனை ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். * ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹ…

  11. விமான விபத்தில் உயி­ரி­ழந்த வீரர்­களின் செப்­போ­கொன்சே கழகம் சம்­பி­ய­னாகப் பிர­க­டனம் 2016-12-07 12:20:11 தென் அமெ­ரிக்க கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ள­னத்­தினால் பிரேஸில் கால்­பந்­தாட்டக் கழ­க­மான சேப்­போ­கொன்சே கழ­கத்­திற்கு கோபா சுடா­அ­மெ­ரிக்­கான வெற்றிக் கிண்ணம் வழங்­கப்­பட்­டுள்­ளது. கொலம்­பி­யாவில் நடை­பெ­ற­வி­ருந்த முதலாம் கட்ட இறுதிப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்­காக இக் கழ­கத்தின் வீரர்கள் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த விமானம் விபத்­திற்­குள்­ளா­னதில் அணியின் பெரும்­பா­லான வீரர்கள் உயி­ரி­ழந்­தனர். இதனை அடுத்து சேப்­போ­கொன்சே கழ­கத்­திற்கு சம்­பியன் பட்­டத்­துடன்…

  12. 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா நியூஸிலாந்து - வில்லியம்சனுக்கு 100-வது ஆட்டம் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இன்று நடைபெறுகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது. இந…

  13. FIFA 2016-க்கான சிறந்த வீரர் யார்? கால்பந்து விளையாட்டுக்கான சர்வதேச அமைப்பு FIFA, இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் அன்டோயின் கிறிஸ்மேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முதற்கட்ட பட்டியலில் 23 வீரர்கள் இருந்தார்கள். Fifa.com இணையதளம் வாயிலாக கால்பந்து ரசிகர்கள் இறுதிப் பட்டியலுக்கு ஓட்டுப்போட்டனர். இதன் அடிப்படையில், இம்மூன்று வீரர்கள் 2016-க்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சிறந்த வீரர் யார் என்பது ஜனவரி 9-ம் தேதி அறிவிக்கப்படும். http://www.vikatan.com/news/sports/74144-who-is…

  14. வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி ஆகியோரின் அனுபவம் தேவை ; அரவிந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றன தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார். “ எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி ” எனும் திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அ…

  15. 20 இன் கீழ் பீபா மகளிர் கால்­பந்­தாட்டம்; வட கொரியா உலக சம்­பியன் 2016-12-05 09:51:44 20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான பீபா (FIFA) உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் வட கொரிய மகளிர் அணி சம்­பி­ய­னா­னது. பிரான்ஸ் இரண்டாம் இடத்­தையும் ஜப்பான் மூன்றாம் இடத்­தையும் பெற்­றன. பப்­புவா நியூ கினியில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் பிரான்ஸை எதிர்த்­தாடி வட கொரியா 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்­றி­பெற்று உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது. 20 வய­துக்­குட்­பட்ட மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட வர­லாற்றில் 10 வரு­டங்­களின் பின்னர் இரண்­டா­வது தட­வை­யாக வட கொரியா சம்­பி­ய­னா­…

  16. அணித்தலைவர் ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் நறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 103 ஓட்டங்களையும், டிராவிஷ் ஹெட் 48 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர். பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் நீஸம், பெர்கஷன் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர். http://www.virakesari.lk/article/14137

  17. சமபல அண்டைய நாடுகளுக்கிடையிலான மோதல் - ச.விமல் சமபலமாக உள்ள அயல் நாட்டு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி அணிகள் இரண்டும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டிகள், போட்டித்தன்மை மிக்கவையாக மாறியுள்ளன. நியூசிலாந்து அணி, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பலமான நிலையிலேயே உள்ளது. இந்த வருடத்தில் ஏற்கெனவே இரண்டு அணிகளும் மோதியுள்ளன. நியூசிலாந்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில், 2-1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி வென்றிருந்தது. இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற தொடரிலும் நியூசி…

  18. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனா வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட் கேப்டன் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்தார். ‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் பரம எதிரிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவு மைதானத்தில் ‘லா லிகா’ லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியை நேரில் பார்க்க 98 ஆயிரத்து 485 ரசிகர்கள் வந்திருந்தனர். சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பார்சிலோனா அணி களம் இறங்கியது. அதே சமயத்தில் 6 புள்ளிகள் முன்னில…

  19. இந்திய மகளிர் அணி இப்போ ஆசிய சாம்பியன்! மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ஏக்டா பிஷ்ட் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய சாம்பியனானது. …

  20. ஆண்டின் டாப் 3 கோல்கள்: மெஸ்ஸி, நெய்மரைக் கடந்து முக்கியத்துவம் பெற்ற மலேசிய வீரர் இந்த ஆண்டின் 3 டாப் கோல்களுக்கான பரிசுப் பட்டியலில் மெஸ்ஸி, நெய்மர் போன்றோரைக் கடந்து மலேசிய கால்பந்து வீரர் மொஹமது ஃபைஸ் சுப்ரி என்பவரது கோல் ஃபிபா பட்டியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மலேசிய சூபர் லீக் கால்பந்து போட்டியில் பெனாங் அணிக்காக ஆடிய மொகமது ஃபைஸ் சுப்ரி, பஹாங் அணிக்கு எதிராக அடித்த கோல் பல சர்வதேச கோல்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதாவது 1997-ம் ஆண்டு பிரேசில் நட்சத்திரம் ரொபர்ட்டோ கார்லோஸ் பிரான்ஸுக்கு எதிராக அடித்த மறக்க முடியாத ஃப்ரீ கிக் கோலை இது பலவகையிலும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இடது புறத்தில், சற்றே ஓரமாக, கோலிலிருந்து சுமார் 11…

  21. கிளென் மேக்ஸ்வெலுக்கு அபராதம்: ஆதரவும் எதிர்ப்பும் மேக்ஸ்வெல். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். மேத்யூ வேட் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்த அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெலுக்கு ஆஸ்திரேலிய லீடர்ஷிப் குழு அபராதம் விதித்துள்ளது. அபராதம் என்பதற்கும் மேலாக கிளென் மேக்ஸ்வெலின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விக்டோரிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் யார் எந்த நிலையில் களமிறங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார், நான் அவருக்குப் பின்னால் களமிறங்குவது வேதனை அளிக்கிறது, இது எனது டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பை பறித்துள்ளது என்று ஊடகங்களில் கிளென் மேக்ஸ்வெல்…

  22. ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார். 2016 ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்ததை அடுத்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது ஐபிஎல். இதனால் ஓய்வு இன்றி கடுமையான களைப்பு ஏற்படுகிறது. சாதகமான அம்சம் பணம் வருகிறது என்பதுதான். ஆனால் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது. களைப்பு, ஓய்வின்மை. நமக்கு சிறந்த…

  23. பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ உள்பட பிற வீரர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் பிரபல வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிற வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கும் விதமாக மில்லியன் கணக்கான டாலர் வருவாயை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிஸ்டியானோ ரொனால்டோ மின்னஞ்சல்கள், ரகசிய உடன்படிக்கைகள், ரகசிய ஒப்பந்தங்கள் என சுமார் 18 மில்லியன் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவலை பல ஐரோப்பிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. ரொனால்டோவை தவிர்த்து ஜோஸ் மொரின்ஹோ, மான்செஸ்டர் யுனைடட் அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் மெண்டீஸ் ஆகிய பி…

  24. விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத் ‘மொகாலி டெஸ்டிற்குப் பிறகு விராட் கோலி என்னை சந்தித்தார். இந்த சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்’ என்று இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹமீத் கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 19 வயதே ஆன தொடக்க வீரரான ஹசீப் ஹமீத், இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் …

  25. இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் பெண்களுக்கான ஆசிய கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. நாளை தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரிட்சை செய்ய உள்ளன. முன்னர், இந்தியா மற்றும் பாக்., மோதிய லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியை எந்த நாடும் லீக் போட்டிகளில் வீழத்தவில்லை. http://www.vikatan.com/news/sports/74091-india-to-take-on-pakistan-in-finals.art

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.