விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனுக்கு தங்கம் 32 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றார். இன்றைய தினத்தில் இரண்டு போட்டி சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை கண்டி போகம்பரை மைதானத்தில் ஆரம்பமான விளையாட்டு விழாவின் 04 வது நாளான இன்று போட்டிகள் உரிய நேரத்திற்கு முன் நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன் போட்டிக் கால அட்டவணையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன . யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றா…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி ஒருநாள் போட்டிகளில் ஒன்பதாயிரம் ஓட்டங்கள் நோக்கி M .S.டோனி. இந்தியக் கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவரான டோனி, நாளை ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் இன்னுமொரு மைல்கல்லை எட்டித்தொடக் காத்திருக்கிறார். இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்க்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி, 3 இலும் தோல்வி கண்டுள்ள நிலையில் ,நாளை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டியில் டோனி 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வாராயின் ஒருநாள் போட்டிகளில் 9000 ஓட்டங்கள் கடந்தவர்கள் வரிசையில் இணைந்துகொள்வார். இது…
-
- 0 replies
- 516 views
-
-
இது இந்தியாவின் 900-வது ஒருநாள் போட்டி! #Throwback ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்றதில் தபால், இரயிலுக்கு பிறகு இன்றளவும் நாம் போற்றிப் பாதுகாக்கும் விஷயம்னா அது இந்த கிரிக்கெட்தான். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே தர்மசாலாவில் நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. சர்வதேச அளவில் இந்திய அணி விளையாடும் 900-வது ஒருநாள் போட்டி இது. இந்த சாதனையைச் செய்யும் முதல் அணி நாம் தான். இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும் (889 போட்டிகள்) பாகிஸ்தானும் உள்ளன (866 போட்டிகள்). இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி: கிரிக்கெட் வரலாற்றில் 1971 ல் முதன்முறையாக 60 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை ஜ…
-
- 0 replies
- 336 views
-
-
நடுவரின் தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யும் UDRS இந்தியாவிலும் அமுலுக்கு வருகின்றது நடுவரின் தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யும் UDRS இந்தியாவிலும் அமுலுக்கு வருகின்றது. கிரிக்கெட் விளையாட்டில் நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் UDRS முறையை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முன்னணி அணிகள் ஏற்றுக்கொண்டாலும் இதுவரை இந்தியா மட்டும் UDRS முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனி இதற்கு முற்றுமுழுதாக ஒத்துப்போகாத நிலையில், இந்தியக் கிரிக்கெட் சபை அதனை முற்றுமுழுதாக நிராகரித்தது. ஆனால் தற்போதைய டெஸ்ட் அணி தலைவர் விராட் கோஹ்லி இந்த விவாதத்தில் இருந்து சற்று மாறுபட்டு, எதிர்காலத்தில் UDRS முறையை பயன்படுத்தலாம் என்றும், முறைப்…
-
- 0 replies
- 292 views
-
-
மேற்கிந்திய தீவுகளுடனான முச்சதத்ததோடு அசார் அலி படைத்த சாதனைகள். மேற்கிந்திய தீவுகளுடனான முச்சதத்ததோடு அசார் அலி படைத்த சாதனைகள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அசார் அலியின் அபார முச்சதத்தின் துணையுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான நிலையில் காணப்படுகின்றது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது. இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் அசார் அலியின் ஆட்டமிழக்காத முச்சதத்தின் துணையுடன் (302*) மிகப்பலமான நிலையில் பாகிஸ்தான் காணப்பட்டது.3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 579 …
-
- 0 replies
- 393 views
-
-
நம்பர் -1 மட்டும் போதுமா? மைல்ஸ் டு கோ கோஹ்லி டீம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மீண்டும் நம்பர் - 1. இது இந்திய டெஸ்ட் வரலாற்றில் உன்னத தருணம். அனில் கும்ப்ளேவிடம் இருந்து கேப்டன்சியை வாங்கிய பின், 2009ல் முதன்முதலாக இந்தியாவை டெஸ்ட் அரங்கில் நம்பர் -1 அணியாக மாற்றி இருந்தார் தோனி. இந்த முறை விராட் கோஹ்லி. கோஹ்லி கேப்டன்சியில் இளம் இந்திய அணி எழுச்சி என நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், ‛நல்லா படிக்கிற பசங்க வராத டைம்ல நடந்த எக்ஸாம்ல, ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குற மாதிரி, இந்தியா நம்பர் - 1 வந்துருச்சு’ என்ற பேச்சும் அடிபடுகிறது. ‛‛சொந்த மண் அல்லாத இடங்களில் நடக்கும் தொடரின் முடிவுகளைப் பொருத்தே, டெஸ்ட் நம்பர் -1 நியமி…
-
- 0 replies
- 512 views
-
-
தப்பியது சங்கா -மஹேல சாதனை, இந்தியாவின் ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் புதிய இணைப்பாட்ட சாதனை. தப்பியது சங்கா -மஹேல சாதனை, இந்தியாவின் ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் புதிய இணைப்பாட்ட சாதனை. இந்தியாவில் இடம்பெற்றுவரும் முக்கிய ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் டெல்லி மற்றும் மகாராஸ்த்ரா மாநில அணிகளுக்கிடையிலான போட்டியில் புதிய இணைப்பாட்ட சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையின் சங்கா- மஹேல ஜோடி 3 வது விக்கெட்டில் 2005 ம் ஆண்டு இலங்கையில் வைத்து தென் ஆபிரிக்க அணிக்கெதிராக நிலைநாட்டிய 624 எனும் சாதனை இணைப்பாடடம், இன்றைய நாளில் முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் இறுதியில் தப்பித்துப் போயிருக்கிறது. இந்தியாவின் மகாராஸ்த்ரா மாநிலத…
-
- 0 replies
- 273 views
-
-
ஒருநாள் தொடரிலும் ஆவேசமாகவே விளையாடுவோம்: அஜிங்கிய ரஹானே உறுதி ரஹானே. | படம்: விவேக் பெந்த்ரே. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைபிடித்த அதே ஆவேசமான அணுகுமுறையையே ஒருநாள் தொடரிலும் கடைபிடிப்போம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தரம்சலாவில் அவர் கூறியதாவது: கட்டுக்கோப்பு மிக முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆவேசமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒருநாள் தொடரிலும் அதே அணுகுமுறையிலேயே ஆடுவோம். தீவிர கிரிக்கெட்டை எங்கள் பலத்திற்குத் தக்கவாறு ஆடுவோம். எதிரணியினரின் பலம், பலவீனத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை. டெஸ்ட் தொடருக்குப் பிறகே ஒருநாள் தொடரை ஆவலுடன் நான் எதிர்நோக்கினேன். இங்கும் புதிதாகவே தொடங்க …
-
- 48 replies
- 3.2k views
-
-
நியூஸிலாந்து பேட்டிங் சரிவடைந்தது ஏன்? - ஓர் அலசல் இந்தூர் டெஸ்ட் போட்டியில் மோசமான ஷார்ட் தேர்வுக்கு அஸ்வினிடம் பவுல்டு ஆன ராஸ் டெய்லர். | படம்: விவேக் பெந்த்ரே. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 3-0 என்று நியூஸிலாந்து தோல்வி தழுவியதற்கு நியூஸிலாந்து வீரர்களின் பேட்டிங் உத்திகளின் குறைபாடுகளே காரணம். கால்நகர்த்தல்களில் போதாமைகள் மிகுந்திருந்தன. நியூஸிலாந்து வீரர்கள் போராட்டமின்றி சரணடைந்தது அதிர்ச்சிகரமானது. குறிப்பாக அஸ்வின் போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக ராஸ் டெய்லர் போன்ற ஒரு அனுபவ வீரர் இந்தூரில் மோசமான ஸ்லாக் ஒன்றை முயற்சி செய்தது நியூஸிலாந்தின் சுய-அழிப்பு மனநிலையை பிரதிபலித்தது. ஸ்பின்னிற்கு எதிரான கு…
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கை வீரர் ஒருவருக்கு ஓட்டத்துக்கு 27 ஆயிரம் ரூபா : தயாசிறி அதிர்ச்சி தகவல் இலங்கை கிரிகட் வீரர்களுக்கு ஒரு ஓட்டத்திற்கு மாத்திரம் சுமார் 27 ஆயிரம் ரூபாவை இலங்கை கிரிகட் நிறுவனம் வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். “கடந்த காலத்தில் மாத்திரம் இலங்கை கிரிகட் அணியின் வீரர் ஒருவர் 5 கோடிக்கும் அதிகமான பணத்தை கிரிகட் நிறுவனத்தின் மூலம் பெற்றுள்ளார். இதன்படி குறித்த வீரருக்கு ஒரு ஓட்டத்திற்கு 56 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை அணியின் தலைவருக்கு ஒரு ஓட்டத்துக்கு 27 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. எனினும் அணி தோல்வியடைந்தாலும் குறித்தப் பணம் வீரர்களுக்கே சென்றடைக…
-
- 0 replies
- 332 views
-
-
கிரிக்கெட்டுக்கு ஏன் இன்னும் இவ்வளவு ரசிகர்கள்? ஆதாரத்தை காட்டும் வோர்னர், இம்ரான் தாஹிர் ; இரசிக்க வைக்கும் காணொளி தென்னாபிரிக்கா மற்றும் ஆஸி அணிகளுக்கான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வோர்னர் மற்றும் தாஹீர் ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதமானது போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கொண்டே இருந்தது. இவர்களின் தொடர் வாக்குவாதத்தினை நடுவர்கள் இணைந்து சமாதானப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் வோர்னர் 173 ஓட்டங்களை விளாசிய நிலையில், தாஹீர் ரன் அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இந்நிலையில் போட்டியின் போது பல வாக்குவாதங்க…
-
- 0 replies
- 170 views
-
-
தல்தெக்க புனித ரீட்டா கல்லூரிக்கு முதலாவது தங்கம்; மகாஜனவுக்கு 2 பதக்கங்கள், சா. இந்துவுக்கு ஒன்று 2016-10-14 10:07:14 (கண்டியிலிருந்து நெவில் அன்தனி) கண்டி போகம்பறை விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 32ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் முதலாவது தங்கப் பதக்கத்தை தல்தெக்க புனித ரீட்டா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம். மதுஷன்க வென்றெடுத்தார். 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.42 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து மெய்வல்லுநர் போட்டிக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரியின் எஸ். தமெல் (13.15 …
-
- 3 replies
- 300 views
-
-
கால்பந்து அரங்கில் முதல் முறையாக நடந்தேறிய சம்பவம் கால்பந்து அரங்கில் முதல் முறையாக நடந்தேறிய சம்பவம். இந்த வார இத்தாலி நாட்டின் Serie B போட்டிகளில் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. கால்பந்து போட்டிகளில் பொதுவாக வீரர்கள் முறையற்ற விளையாட்டில் ஈடுபட்டால் மஞ்சள் அட்டை மற்றும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படுவது வழக்கம். அனால் இந்த சீசனில் Serie B போட்டிகளில் கனவான் தன்மையுடன் விளையாடும் வீரருக்கு பச்சை அட்டை காண்பிக்கப்படும் எனவும் சீசன் இறுதியில் அதிக பச்சை அட்டை பெறும் வீரருக்கு சிறப்பு விருதும் வழங்கப்படும் எனவும் Serie B இன் தலைவர் ஆண்ட்ரியா அபோட அறிவித்திருந்தார். அந்த வகையில் சென்ற வாரம் நடை…
-
- 0 replies
- 555 views
-
-
இலங்கை - சிம்பாப்வே - மே.தீவுகள்: பொலார்ட், ராம்டின் நீக்கம் இலங்கை, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 3 அணிகள் பங்குகொள்ளவுள்ள முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமிலிருந்து, சிரேஷ்ட வீரர்களான கெரான் பொலார்ட், டினேஷ் ராம்டின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை, மேற்கிந்தியத் தீவுகளின் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் கோர்ட்னி ப்ரௌண், மின்னஞ்சல் மூலமாக விடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் குழாம், இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுக்கெதிராக அண்மையில் இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், இவர்களி…
-
- 0 replies
- 193 views
-
-
19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சிங்கர் விருது விழா; அதி சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் அசலன்க (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கிரிக்கட் போட்டிகளுக்கான சிங்கர் விருது விழாவில் வருடத்திற்கான அதி சிறந்த சிங்கர் பாடசாலை கிரிக்கெட் வீரராக காலி றிச்மண்ட் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவானார். சிங்கர் அதி சிறந்த வீரருக்கான இரண்டாம் இடத்தை ஆனந்த கல்லூரி அணித் தலைவர் ஷம்மு ஆஷான் பெற்றார். இவ் விருது விழா கொழும்பு மியூஸியஸ் கல்லூரி மண்டபத்தில் செவ்வாயன்று மாலை நடைபெற்றது. …
-
- 0 replies
- 303 views
-
-
அஷ்வின் Vs ஹர்பஜன் பனிப்போர்..! புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை என்ன? அஷ்வின் மீது ஹர்பஜன் காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்பதாக அனல் கக்கும் விமர்சனங்களை ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இந்தூர் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக பிட்சை பற்றிய விமர்சனம் ஒன்றை டிவிட்டரில் வைத்தார் ஹர்பஜன் சிங்." ஒரு பந்து கூட இன்னும் வீசப்படவில்லை, ஆனால் இரண்டு நாள் பிட்ச் போல காட்சியளிக்கிறது. என்னுடைய கணிப்புப்படி மூன்றரை நாட்களைத் தாண்டி மேட்ச் செல்லாது" என விமர்சித்திருந்தார் ஹர்பஜன். Harbhajan Turbanator ✔ @harbhajan_singh Already looks like 2 days old pitch before the 1st bowl is bowled..…
-
- 1 reply
- 368 views
-
-
காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes காய்ச்சலில் ரெய்னா... முதல் ஆட்டத்தில் மிஸ்! காய்ச்சல் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னா பங்கேற்க மாட்டார். இந்த தகவலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெற்றிருந்தார். மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்த ரெய்னா, சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்ததன் மூலம…
-
- 0 replies
- 339 views
-
-
ஒருநாள் தொடரில் ஆஸி.க்கு முதல் ஒயிட்வாஷ்: தென் ஆப்பிரிக்கா மகத்தான 5-0 வெற்றி! தென் ஆப்பிரிக்க அணி கொண்டாட்டம். | படம்: ராய்ட்டர்ஸ் ரைலி ருசோவ்வின் அதிரடி சதத்தின் மூலம் கேப்டவுனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-0 என்று தொடரைக் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா முதன்முதலாக ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வியைப் பெற்றுத் தந்தது. அனுபவமற்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சு மட்டுமல்ல, டேவிட் வார்னர் நீங்கலாக ஆஸ்திரேலிய பேட்டிங்கும் சப்பென்று ஆகி வரலாறு காணாது ஒருநாள் போட்டி ஒயிட்வாஷ் தோல்வியை அடைந்தது ஆஸ்திரேலியா. கேப்டவுனில் நேற்று நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்…
-
- 2 replies
- 311 views
-
-
திருமணமானவர்களுக்குத்தான் தெரியும் வீட்டுக்கு முன்கூட்டிப்போவதன் அவசியம்-அஸ்வினைக் கிண்டலடித்த சேவாக். திருமணமானவர்களுக்குத்தான் தெரியும் வீட்டுக்கு முன்கூட்டிப்போவதன் அவசியம்-அஸ்வினைக் கிண்டலடித்த சேவாக். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 321 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. 475 எனும் வெற்றி இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அஸ்வினின் மிகசிறந்த சூழல் பந்து வீச்சு காரணமாக 4 ம் நாளிலேயே போட்டி நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்சில் 7 விக்கெ…
-
- 2 replies
- 318 views
-
-
400 வது டெஸ்ட் போட்டியை நாளை சந்திக்கிறது பாகிஸ்தான் அணி.முதலாவது பகலிரவு போட்டியும் இதுவே. 400 வது டெஸ்ட் போட்டியை நாளை சந்திக்கிறது பாகிஸ்தான் அணி.முதலாவது பகலிரவு போட்டியும் இதுவே. பாகிஸ்தான் அணி தங்களது 400 வது டெஸ்ட் போட்டியில் நாளைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடவுள்ளது. நாளைய போட்டி இன்னுமொரு முக்கியத்துவம் கொண்ட போட்டியாகவும் அமையவுள்ளது, பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் இந்தப் போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னணி துடுப்பாட்ட வீரர் யூனுஸ் கான் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இப்போது மீண்டுவந்தாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி 10 நாட்கள் ஓய்வில் இருக்க பணிக்கப்பட்டுள்ள…
-
- 6 replies
- 635 views
-
-
வங்கப் புலிகளின் தொடர் வெற்றிகளுக்கு முடிவு கட்டியது இங்கிலாந்து. வங்கப் புலிகளின் தொடர் வெற்றிகளுக்கு முடிவு கட்டியது இங்கிலாந்து. பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டி நிறைவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில் இன்றைய 3 வதும் இறுதியுமான போட்டியை வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்று சொந்தமாக்கியது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் களத்தடுப்பு தீர்மானத்தை மேற்கொண்டார், அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களை இழந…
-
- 0 replies
- 217 views
-
-
வருகை தரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு நியூஸி. கேப்டனின் எளிய அறிவுரை கேன் வில்லியம்சன். | படம்: ஏ.பி. வரும் மாதங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதை முன்னிட்டு நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் எளிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இந்திய அணியிடம் 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன நியூஸிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் தோல்வியுற்று டெஸ்ட்டிலும் தோல்வி தழுவியது. இந்திய பிட்ச்களில் முதலில் பேட் செய்யும் சாதகங்களைக் குறிப்பிட்டு கேன் வில்லியம்சன் கூறும்போது, “டாஸில் வெல்வது உதவியாக இருக்கும். நிச்சயம் அணிகள் இந்திய அணிக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்ட்த்திறனை வெளிப்படுத்துவது அவ…
-
- 0 replies
- 313 views
-
-
உலகக்கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து: பிரேசில் முன்னிலை; கடும் சிக்கலில் அர்ஜென்டினா வெனிசூலா அணிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் பிரேசில் வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை கால்பந்து தென் அமெரிக்கப் பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளில் பிரேசில் தொடர்ச்சியாக தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலை வகிக்க மற்றொரு பெரிய அணியான அர்ஜென்டினா பராகுவே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிர்ச்சித் தோல்வி கண்டு 5-வது இடத்தில் உள்ளது. பராகுவே அணிக்கு எதிராக 1-0 என்று காயமடைந்த மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டின அணி தங்கள் நாட்டிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்து ரஷ்யாவில் 2018-ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு நேரடியாக தகு…
-
- 1 reply
- 270 views
-
-
தகுதி இழப்புப் புள்ளிகள்: தடையை எதிர்நோக்கும் ஜடேஜா, வ.தேச வீரர் சபீர் ரஹ்மான் நடுவர் புரூஸ் ஆக்சன்போர்ட். | படம்: ஏ.பி. எதிரணியினரிடம் வாக்குவாதம், நடுவர்களிடம் வாய்ப்பேச்சு, பிட்சை சேதம் செய்யும் விதமாக செயல்படுவது போன்ற நடத்தைகளுக்காக ரவீந்திர ஜடேஜா மற்றும் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் ஆகியோர் தடையை எதிர்நோக்கியுள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியில் 27 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா வேண்டுமென்றே பிட்சை சேதம் செய்யும் நோக்கத்துடன் ‘அபாய பகுதி’ என்று அழைக்கப்படும் பகுதிக்குள் ஓடி வந்தார், இதனால் நடுவர் புரூஸ் ஆக்சன்ஃபோர்ட் எச்சரித்ததோடு, நியூஸிலாந்துக்கு 5 அபராத ரன்களை வழங்கினார். கொல்கத்தா டெஸ்…
-
- 0 replies
- 244 views
-
-
உலக சாதனை படைத்தார் பென்தெக்கி சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்று ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை, பெல்ஜியம் அணியின் கிறிஸ்டியான் பென்தெக்கி படைத்துள்ளார். ஜிப்ரால்டர் அணிக்கெதிராக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற போட்டியிலேயே, இச்சாதனையை அவர் படைத்தார். உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியாக அமைந்த இப்போட்டியில், போட்டி ஆரம்பித்து 8.1 செக்கன்களில், தனது கோலை, பென்தெக்கி பெற்றுக் கொண்டார். இது, இதற்கு முன்னர் காணப்பட்ட சாதனையான 8.3 செக்கன்களை முறிடித்தது. அந்தச் சாதனையை, 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தகுதிகாண் பொட்டியில், இங்கிலாந்து அணிக்கெதிராக சான் மரினோவின் டேவி…
-
- 1 reply
- 320 views
-