Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆஸியுடன் மோதும் இலங்கை ; முதலாவது ஒருநாள் போட்டி நாளை இலங்கை மகளிர் மற்றும் ஆஸி மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (18) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஆஸி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 4 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் ஆகியன இடம்பெறவுள்ளன. இதில் முதல் இரண்டு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி மைதானத்திலும், இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறவுள்ளதோடு டி20 போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் இடம்பெறவுள்ளன. இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சாமரி அதபத்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்நி…

  2. பிறீமியர் லீக்: செல்சியை வென்றது லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் பிறீமியர் லீக் தொடரின், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், செல்சியை லிவர்பூல் தோற்கடித்துள்ளது. செல்சியை, 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்திருந்தது. லிவர்பூல் சார்பாக, டெஜான் லெவ்றோன், போட்டியின் 17ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றிருந்ததுடன், அணித்தலைவர் ஜோர்டான் ஹென்டர்ஸன், 25 அடி தூரத்திலிருந்து, போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றிருந்தார். இந்நிலையில், பிரான்ஸின் பரிஸா ஜேமா கழகத்திலிருந்து 32 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, மீண்டும் செல்சிக்கு திரும்பிய டேவிட் லூயிஸ் கொடுத்த பந்தை டியகோ கொஸ்டா கோலாக்கி, செ…

  3. ஓய்வுபெற்றார் சர்வான் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் ராம்நரேஷ் சர்வான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். 36 வயதான சர்வான், மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக 87 டெஸ்ட் போட்டிகளில் 15 சதங்கள் உள்ளடங்கலாக 40.01 என்ற சராசரியில் 5,842 ஓட்டங்களையும் 181 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 சதங்கள் உள்ளடங்கலாக 42.67 என்ற சராசரியில் 5,804 ஓட்டங்களையும் பெற்றதோடு, 18 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2 அரைச்சதங்களையும் பெற்றார். இவற்றுக்கு மேலதிகமாக, 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட, 11 சர்வதேசப் போட்டிகளுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார். இறுதியாக, 2013ஆம் ஆண்டிலேயே சர்…

  4. ஊக்கமருந்து பயன்படுத்தினார்களாம் வில்லியம்ஸ் சகோதரிகள் வில்­லியம்ஸ் சகோ­த­ரிகள் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­ய­தாக எழுந்த குற்­றச்­சாட்­டை­ய­டுத்து அவர்­க­ளிடம் இருந்து பதக்­கங்­களை திரும்ப பெற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா என கேள்­விகள் எழுந்­துள்­ளன. ரஷ்ய செய்தி நிறு­வனம் ஒன்று, வில்­லியம்ஸ் சகோ­த­ரிகள் மற்றும் அமெ­ரிக்க ஜிம்­னாஸ்டிக் வீராங்­கனை சிமொன் பைல்ஸ் ஆகியோர் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­ய­தா­கவும், அவர்கள் பயன்­ப­டுத்­திய ஊக்­க­ம­ருந்தின் பட்­டி­ய­லையும் செய்­தி­யாக வெளி­யிட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து வில்­லியம்ஸ் சகோ­த­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ ப­ட…

  5. பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். அடுத்த மாதம் இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுக்க பங்களாதேஷ்க்கு செல்ல உள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான அணி விபரங்களே அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்காக 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர்களான அன்சாரி, பென் டக்கட், ஹசீப் ஹமீத் போன்ற இளம் வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 2…

  6. 'எம்.எஸ்.தோனி' படம் என் புகழ்பாடாமல் வாழ்க்கைப் பயணத்தையே பதிகிறது: தோனி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனி. | படம்: ஏ.பி, “எம்.எஸ்.தோனி-தி அன் டோல்ட் ஸ்டோரி” என்ற திரைப்படம் என் புகழ்பாட எடுக்கப்பட்டதல்ல, எனது போராட்டங்கள், பயணங்கள் பற்றியதே என்று இந்திய ஒருநாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகும் இந்தத் திரைப்படத்தின் விளம்பர பரப்புதலுக்காக தன் மனைவி சாக்‌ஷி, படத் தயாரிப்பாளர் அருண் பாண்டே ஆகியோருடன் அமெரிக்கா சென்றுள்ளார் தோனி. திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “நான் பாண்டேயிடம் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறினேன், என்னை உய…

  7. ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து ; ஒருவர் பலி பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளம்பர படப்பிடிப்பில் இறக்கிவிட்ட பின்னர் டாக்கா நோக்கி பயணித்த குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து ஷகிப் அல் ஹசன் தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஷகிப் அல் ஹசன் தா…

  8. கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி... ஒருவர் அன்பாகக் கொடுப்பதை நாம் எப்பொழுதுமே அவர் நினைவாகப் பத்திரமாகப் பேணி வைப்பது வழமை. பொருளின் பெறுமதியை விட . அதை அன்போடு கொடுத்தவர்தான் எமக்கு முக்கியமானதாகின்றது. அதுவே எதிரியாகி விட்டால் கதை வேறு. தந்ததைத் திருப்பிக் கொடுப்பதில்தான் எம் கவனம் இருக்கும். நல்ல முறையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்துஇ தந்ததிற்கு மேலாக முடிந்தால் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுக்கும்போதுதான் மனம் ஆறுதலடையும். இலங்கை விஜயம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கட் ஆட்டக்காரர்கள் தமது விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்கள். இலங்கை கிரிக்கட் அணியைப் பற்றி பல விமர்சனங்கள் கொ…

  9. இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு உலக சாதனைகளுடன் தங்கங்கள் 2016-09-16 12:25:47 ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பெரிய பிரித்தானியாவின் கதீனா கொக்ஸ் இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், அந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை நிலைநாட்டி பெருமை தேடிக் கொண்டார். ரி 38 - 400மீற்றரில் மாற்றுத்திறன் கொண்ட வீராங்கனைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே இரண்டு வகையான விளையாட்டுக்களில் உலக சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். 25 வயதுடைய கதீனா, ஒலிம்பிக் விளையாட்டரங்கில் புதனன்று நடைபெற்ற ரி 38 பிரிவு…

  10. நியூஸிலாந்து - மும்பை மோதும் 3 நாள் கிரிக்கெட் இன்று தொடக்கம் நியூஸிலாந்து மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நியூஸிலாந்து வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். படம்: ஆர்.வி.மூர்த்தி நியூஸிலாந்து - மும்பை அணி களுக்கிடையேயான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட நியூஸிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக அந்த அணி 3 நாள் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளது. இப்போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மை…

  11. சர்வதேச கால்பந்து தரவரிசை அறிவிப்பு-ஆர்ஜண்டீனா முதலிடம். சர்வதேச கால்பந்து தரவரிசை அறிவிப்பு-ஆர்ஜண்டீனா முதலிடம். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தரவரிசையை FIFA அறிவித்துள்ளது, இந்தப் பட்டியலில் ஆர்ஜண்டீனா அணி முதலிடம் பிடித்துள்ளது. பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் 2 ம்,3 ம் இடத்தை பிடித்துள்ள நிலையில் கொலம்பியா அணி 4 வது இடத்தையும்,5 வது இடத்தை பிரேசில் அணியும் பிடித்துள்ளன. சிலி,போர்த்துக்கல், பிரான்ஸ்,உருகுவே, வேல்ஸ் ஆகிய அணிகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன http://vilaiyattu.com/சர்வதேச-கால்பந்து-தரவரி/

  12. யார் மச்சி கெத்து? #TNPL செமிஃபைனல் அலசல் ‘நம்ம ஊரு நம்ம கெத்து’ #NammaOoruNammaGethu என்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய, தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில், சேப்பாக், திண்டுக்கல் அணி தலா 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தூத்துக்குடி, கோவை அணிகள் தலா 4 வெற்றி, 3 தோல்விகளுடன் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்தன. முதல் நான்கு இடங்களைப் பிடித்த சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. திருநெல்வேலியில் நாளை நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் திண்டுக்கல் & தூத்துக்குடி அணிகள் மோத உள்ளன. சனி…

  13. சம்பியன்ஸ் லீக்: றியல், சிற்றி, லெய்செஸ்டர் வெற்றி ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின், நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்ற போட்டிகளில், ஸ்பானியக் கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து கழகங்களான றியல் மட்ரிட், லெய்செஸ்டர் சிற்றி ஆகியன வெற்றி பெற்றுள்ளதோடு, மற்றொரு இங்கிலாந்துக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோல்வியைத் தளுவியது. தற்போதைய சம்பியன்ஸ் லீக் சம்பியன்களான றியல் மட்ரிட், போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங் லிஸ்பன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இறுதி நிமிடங்களில் பெறப்பட்ட கோல்கள் காரணமாக றியல் மட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்வரோ மொரா…

  14. கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டியிலேயே குறித்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11357

  15. ஆஸியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரேம் ஹிக் ஆஸி அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான கிராம் ஹிக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஆஸி கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இவர் தென்னாபிரிக்கா போட்டியிலிருந்து தனது பணியை முன்னெடுத்தாலும், அடுத்த வருடம் இந்தியவுடன் இடம்பெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வீரர்களை தயார்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் தோல்வியுடன் கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணி தோல்வி…

  16. சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகாஜனாவின் டிலக்க்ஷனுக்கு தங்கப் பதக்கம்; நேற்று மேலும் 3 புதிய சாதனைகள் 2016-09-15 10:13:53 (திய­க­ம­வி­லி­ருந்து நெவில் அன்­தனி) திய­கம மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களின் இரண்டாம் நாளான நேற்­றைய தினம் யாழ். மாவட்டப் பாட­சா­லைக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்­தது. 20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியைச் சேர்ந்த எஸ். டிலக் ஷன் 4.30 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். …

  17. சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆடடக்காரரான குமார் சங்ககாரா, சர்ரே அணிக்காக கழக மட்டப் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றார். 2015 இல் இடம்பெற்ற உலக கிண்ணப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த சங்கா, இப்போது சர்ரே அணியிலும் சாதித்து வருகின்றார். இந்த பருவகாலத்தில் சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்துள்ளார்.டேர்ஹாம் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 30 ஓட்டங்கள் பெற்றபோதே சங்கா இந்த சாதனையைப் படைத்துள்ளார் http://vilaiyattu.com/சர்ரே-அணிக்காக-1000-ஓட்டங்கள/

  18. முரளி ஹார்மணி' கிண்ணக் கிரிக்கெட் 21 அணிகள் களத்தில் 'முரளி ஹார்­மணி' கிண்ணம் 2016 தொடரில் இம்­முறை மொத்தம் 21 அணிகள் பங்­கு­பற்­று­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முரளி கிண்ணம் அபி­வி­ருத்தி மற்றும் குறிப்­பாக, இலங்­கையின் கிரா­மப்­பு­றங்­களில் உள்ள பாட­சாலை கிரிக்கெட் வீரர்­களை ஊக்­கு­விக்கவும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டையே கிரிக்கெட் மூலம் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வும் இந்தத் தொடர் நடத் ­தப்­பட்டு வரு­கி­றது. இவ்­வாண்­டுக்­கான முரளி ஹார்­மணிக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று அண்­மையில் கொழும்பில் நடை­பெற்­றது. இதில் முத்­தையா முர­ளி­தரன், மஹேல ஜய­வர…

  19. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்; 7-0 கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி கெல்டிக் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் பாஸை கோலாக மாற்றிய மெஸ்ஸி. | படம்: ஏ.எஃப்.பி. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கெல்டிக் அணியை 7-0 என்று பார்சிலோனா வீழ்த்துவதற்கு மெஸ்ஸியின் அபாரமான ஹாட்ரிக் உதவி புரிந்தது. அலவேஸ் அணிக்கு எதிராக பார்சிலோனா கடந்த சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, இதனையடுத்து பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் ஹென்றிக் எந்த வித சோதனைகளையும் செய்ய விரும்பாமல் வலுவான அணியைக் களமிறக்கினார். ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே நெய்மரிடம் இருந்து பாஸைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி நெருக்கடியான ஒரு கோணத்திலிருந்து முதல…

  20. மே.இ.தீவுகள் அணி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபில் சிம்மன்ஸ் நீக்கம் பில் சிம்மன்ஸ் நீக்கம். | படம்.பிடிஐ மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையை அந்த அணி வென்ற 6 மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பில் சிம்மன்ஸ், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் ஆட மே.இ.தீவுகள் துபாய் செல்லவுள்ள நிலையில் நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தெரிவிக்காத மே.இ.தீவுகள் வாரியம், “சமீப காலங்களில் அவர் பொதுவெளியில்…

  21. ரியோ பாராலிம்பிக்ஸ்: ஒலிம்பிக் வீரரை மிஞ்சிய பாராலிம்பிக் வீரர்கள்! ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த கையோடு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோவில் துவங்கின. இதில் நேற்று பார்வையற்றோர்கான டி13 1500மீ ஒட்டப்பந்தையம் நடைபெற்றது. இதில் நிகழ்த்தப்பட்ட சாதனை உலகையே தரும்பி பார்க்க வைத்துள்ளது. அல்ஜீரியாவின் போவுட் பகா பந்தய தூரத்தை 3 நிமிடம் 49.84 நொடிகளில் கடந்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஓடிய நேரத்தை விட குறைவான நேரமாகும். ஒருவேளை இவர் ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் இவருக்கே தங்கம் கிடைத்திருக்கும். ஏனேனில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமேரிக்காவின் மத்தியு சென்ட்ரொவிட்ஸ்-ஏ 1500மீ தூரத்தை கடக்க 3 நிமிடம் 50 நொடிகள்…

  22. சேவக், ஹர்பஜன், உத்தப்பா, பவுல் அவுட் நியாபகம் இருக்கா பாஸ். இன்று தான் அது நடந்தது. #BowlOut #IndVsPak இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே, கண்டிப்பாக 2007-ம் ஆண்டு நடந்த டி20 போட்டிகள் நினைவிற்கு வரும்.ஃபைனலில் கோப்பை வென்றது ஒருபுறம் என்றால், அந்த பவுல் அவுட் போட்டி வேற லெவல். சமீபத்திய பேட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தனக்குப் பிடித்த போட்டி என பவுல் அவுட் போட்டியைத்தான் குறிப்பிட்டு இருந்தார் முன்னாள் வீரர் சேவக், "இரு பெரும் அணிகள் மோதும் முதல் போட்டி, இப்படி ட்ராவாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.போட்டிக்கு முன்னராகவே பலமுறை ஸ்டம்ப்புகளை அடித்து பயிற்சி செய்துகொண்டு இருந்தோம். நான், உத்தப்பா, ஹர்பஜன் மூவரும் அதிகமுறை பவுல் அவுட்…

  23. அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது மருதங்கேணி பிரதேச செயலகம் யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக் கிண்ணம்-2016 கால்பந்தாட்டப்போட்டியில் மருத ங்கேணி பிரதேச செயலக அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப 1.00 மணியளவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நலன்புரிக் கழக தலைவர் செ.ரகுநாதனின் தலைமையில் இப்போட்டி நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், கௌரவ விருந்தினராக தெல்லிப்பளை பிரதேச செயல…

  24. 18 இன் கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். அருணோதயாவின் ஜொய்சன் புதிய சாதனை 2016-09-14 09:44:22 (நெவில் அன்­தனி) திய­கம மஹிந்த ராஜ­பக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான 86ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் யாழ். அள­வெட்டி அரு­ணோ­தயா கல்­லூரி வீரர் நெப்­தலி ஜொய்சன் புதிய சாதனை ஒன்றை நிலை­நாட்டி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். 18 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 4.56 மீற்றர் உயரம் தாவி­யதன் மூலம் கே. நெப்­தலி ஜொய்சன் புதிய சாத­னையை நிலை­நாட்­டினார். இவர் 4.65 மீற்றர் உய­ரத்தை தாவ முயற்­சித்த போதிலும் அது கைகூ­டாமல் போனது. …

  25. பராலிம்பிக் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம் இறுதிச் சுற்றில் இலங்கையின் அமரா இந்துமதி 2016-09-14 10:59:33 பிரே­ஸிலின் ரியோ டி ஜெனெய்­ரோவில் நடை­பெற்­று­வரும் ரியோ 2016 பரா­லிம்பிக் போட்­டி­களில் இலங்­கையின் அமரா இந்­து­மதி இறுதிச் சுற்றில் பங்­கு­பற்ற தகு­தி­பெற்­றுள்ளார். எஞ்­சென்­ஹாஓ ஒலிம்பிக் விளை­யாட்­ட­ரங்கில் இலங்கை நேரப்­படி நேற்று மாலை 6.30 மணிக்கு நடை­பெற்ற ரி 45/46/47 பிரிவைச் சேர்ந்த மாற்­றுத்­திறன் கொண்ட பெண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்டப் போட்­டியில் மூன்றாம் இடத்தைப் பெற்­றதன் மூலம் இறுதிப் போட்­டியில் பங்­கு­பற்றும் தகு­தியை அமரா இந்­து­மதி பெற்றார். போட்­டியை அவர் 1 நிமிடம் 02.07 செக்­கன்­களி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.