விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. 2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான வெய்ன் ரூனி, 2018 இல் ரஸ்யாவில் இடம்பெறவுள்ள கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 30 வயதாகும் வெய்ன் ரூனி, இப்போது உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இங்கிலாந்து சார்பில் பங்கேற்று வருகின்றார்.2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியின் தலைவராக வெய்ன் ரூனி நியமனம் பெற்றார். அணித்தலைவராக நியமனம் பெற்றதன் பின்னர் இங்கிலாந்து அணி முக்கிய 6 தொடர்களில் பங்கெடுத்தது, ஆயினும் ஒன்றிலும் இங்கிலாந்து காலிறுதியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்தான் தனத…
-
- 0 replies
- 440 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 444 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது இங்கிலாந்து 2016-08-30 23:01:49 பாகிஸ்தானுடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 444 ஓட்டங்களைக்குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 444 ஓட்டங்களைக் குவித்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இது புதிய சாதனையாகும். 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்களைக் குவித்தம…
-
- 4 replies
- 884 views
-
-
டில்ஷானின் இறுதிப் போட்டியால் எவ்வளவு இலாபம் கிட்டியது தெரியுமா? தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் போட்டியில், நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்டுக்கள்) விற்பனையால் 4.6 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக, அந்த மைதானத்தின் பொறுப்பதிகாரி மற்றும் முகாமையாளர் சுஜீவ கொடலியத்த குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த போட்டியைப் பார்வையிட சுமார் 50,000 பேர் வருகை தந்த போதும், 20,000 பேருக்கு மாத்திரம் பார்வையிடும் வாய்ப்புக்கள் விளையாட்டரங்கில் செய்யப்பட்டிருந்தாக அவர் கூறியுள்ளார். ஓய்வை அறிவித்துள்ள, இலங்கை அணி…
-
- 0 replies
- 553 views
-
-
கிரிக்கெட்டில் புதிய நோ போல் சமிக்ஞை அறிமுகம் (வீடியோ இணைப்பு) சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவது தொடர்பில் தீர்மானித்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/10778
-
- 0 replies
- 353 views
-
-
இந்த ஆண்டு டெஸ்ட் சீசன் முடிவில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்: ஒரு நாள் போட்டி கேப்டன் தோனி நம்பிக்கை தோனி. | படம்: பிடிஐ. இந்த ஆண்டு சீசன் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் என ஒருநாள் போட்டிக்கான கேப்டன் தோனி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது டெஸ்ட் தர வரிசையில் 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி இந்த சீசன் முடிவில் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என தோனி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: …
-
- 0 replies
- 350 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடும் டெஸ்ட்-ஒருநாள் தொடர்கள்! இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணி. முதல் போட்டியில் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்டதால், மேற்கிந்தியத் தீவுகள் தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் இந்தியாவில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளன. நியூசிலாந்து தொடர் இந்தியாவுடனான 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்…
-
- 0 replies
- 453 views
-
-
ஓய்வின்போது மனம் திறந்த டில்ஷான் (வீடியோ இணைப்பு) இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்ட காலத்தில் அணியின் சில வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கை அணியின் சகலதுறை வீரர் திலகரட்ண டில்ஷான் கூறியுள்ளார். நேற்று (28) ஆஸி அணிக்கெதிராக தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்கும் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. எனினும் அணியின் தலைவராக ஆறு மாதத்திற்கு மாத்திரம் …
-
- 0 replies
- 415 views
-
-
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம் ஆடவர், மகளிர் சம்பியன்களுக்கு தலா 52 கோடி ரூபா 2016-08-29 09:50:51 சர்வதேச டென்னிஸ் அரங்கில் நொவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்திவருவது சகலரும் அறிந்த விடயம். 2010 முதல் இவர்கள் இருவரும் தலா 11 மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் சம்பியன் பட்டங்களை தமதாக்கிக்கொண்டுள்ளனர். ஆனால், ஐக்கிய அமெரிக்க (யூ.எஸ்) பகிரங்க டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இருவரின தும் தேகாரோக்கியம், மனோநிலை, போட்டிக்கான தயார்நிலை ஆகிய விடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. …
-
- 6 replies
- 667 views
-
-
சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி அமெரிக்காவின் கிரிக்கெடடை வளர்ப்பதன் நோக்கமாக கொண்டு புளோரிடாவில் இடம்பெற்றுவரும் இந்திய,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் டோனி ஓர் உலக சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் இளம் வீரர் லோகேஷ் ராஹுலின் அசத்தல் சதம் வீணாகிப்போக பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவை 1 ஓட்டத்தால் வெற்றிகொண்டது உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள். நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவையான நிலையில்,இறுதி ஓவரை மிக துல்லியமாக வீசிய பிராவோ,இறுதி பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார், …
-
- 0 replies
- 825 views
-
-
ஒரு நாள் போட்டிகளுக்கு இன்றோடு விடைகொடுக்கும் டில்ஷான் ; 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார். தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று 2.30 க்கு இடம் பெறவுள்ள 3 வது ஒருநாள் போட்டியே டில்ஷானின் இறுதி ஒருநாள் ஆட்டமாக அமையவுள்ளது. 1999 ஆம் ஆண்டு சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கிய டில்ஷான், இதுவரை இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,248 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதேவேளை பந்துவீச்சில் 329 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக…
-
- 0 replies
- 368 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியில் மற்றொரு புதுவரவு புதிய இளம் வீரர்களை அணிக்குள் உள்வாங்கும் பணியை, இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வுக் குழுவினர் தொடர்கிறார்கள். 19 வயதான வேகப் பந்து வீச்சாளர் லகிறு குமார என்ற இளம் கிரிக்கட் வீரரை 3ஆவது ஒருநாள் போட்டிக்கென தெரிவாகிய 16 பேரில் ஒருவராகத் தெரிந்தெடுத்துள்ளார்கள். கண்டி, ரினிற்றி கல்லூரி மாணவரான இவர் அண்மையில் இங்கிலாந்திற்கு விஜயம் செய்த 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு வீரராவார். தேசிய தெரிவுக்குழுவில் இரண்டாவது பதின்ம வயதினர் குமார என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 19வயதுக்கு உட்பட்ட அணியில் இங்கிலாந்திற்கு எதிராக விளையாடி அடுத்தடுத்து செஞ்சரிகள் அ…
-
- 0 replies
- 519 views
-
-
இந்திய – மேற்கிந்திய இருபது20 தொடர் அமெரிக்காவில் நாளை ஆரம்பம் இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி அமெரிக்காவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரு போட்டிகள் இத்தொடரில் நடைபெறவுள்ளன. இவ்விரு போட்டிகளும் புளோரிடா மாநிலத்தின் ஃபோர்ட் லவ்டர்டேல் நகரிலுள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜனல் பார்க் அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30) மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரசித்தப்படுத்துவதற்கு இச்சுற்றுப்போட்டி உதவி…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நிறைவுக்கு வந்துள்ள 31 வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடத் துணிந்திருக்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த தட்டு எறிதல்(Discus Through ) வீரர் பியோட்டர் மலசோவ்ஸ்கி. 33 வயதான இந்த வீரர், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இதனிடையே அந்த நாட்டை சேர்ந்த ஓலெக் என்ற 3 வயது சிறுவன் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு உதவி புரிவதில் ஆர்வம் காட்டுகிறா…
-
- 0 replies
- 473 views
-
-
ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரர் விருதை வெற்றிகொண்டார் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ. ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரர் விருதை வெற்றிகொண்டார் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ. ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ வெற்றிகொண்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் இந்த விருதை 31 வயதான கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ பெற்றார்.இவரது சக போட்டியாளர்களான வேல்ஸ் அணியின் நட்சத்திரம் கெரேத் பேலே,பிரான்ஸ் அணியின் நட்ச்சத்திர வீரர் கிரீஸ்மான் ஆகியோரை தோற்கடித்தே ரொனால்டோ இந்த விருதை பெற்றார். ஐரோப்பாவை சேர்ந்த 55 நாடுகளின் ஊடகவியலாளர்கள் இந்த விருதுக்குரியவரை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய…
-
- 1 reply
- 553 views
-
-
இந்திய ஒலிம்பிக் வீராங்கனைக்கு பன்றி காய்ச்சல்..! ரியோ ஒலிம்பிக் கலந்து கொண்டு நாடு திரும்பிய இந்திய தடகள வீராங்கனை ஒ.பி.ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் தலைநகர் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டியில் ஒ.பி.ஜெய்ஷா பங்கு பெற்று 89வது இடத்தை பிடித்தார். பிரேசிலில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விட்டு இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். அப்போது, அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜெய்ஷா மட்டும் அதற்கு ஒத்துழைக்காமல் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார். ஆனாலும், அவரிடம் பரிசோதனை மேற்கொள்ள…
-
- 0 replies
- 465 views
-
-
அமெரிக்க மகளிர் கால்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் ஹோப் சோலோவுக்கு 6 மாதத் தடை! 2016-08-26 11:19:54 அமெரிக்க மகளிர் கால்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் ஹோப் சோலோ போட்டிகளில் பங்குபற்று வதற்கு 6 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவீ டன் கால்பந்தாட்ட அணியினரை கோழைகள் என அவர் விமர்சித்தமையே இதற்கான காரணம். ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மகளிர் கால்பந்தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்டியில் அமெரிக்காவை பெனால்டி முறையில் 5:4 கோல்க ளால் சுவீடன் அணி வென்றது. அதையடுத்து சுவீடன் வீராங்கனைகளை “கோழைகள் கூட்டம்” என ஹோப் சோலோ விமர்சித்திருந்தார். …
-
- 0 replies
- 313 views
-
-
விதிமுறைகளை மீறியதால் தண்டம்! இலங்கை கிரிக்கட்அணியின் பந்து வீச்சாளர் திஸார பெரேரா மற்றும் ஆஸி வீரர் மைக்கல் ஸ்ராக் இருவரும் விளையாட்டு விதியை மீறியமைக்கு அபராதமாக இருவருக்கும் கிடைக்கும் ஊதியத்தில் 15 வீதத் தொகையைச் செலுத்த வேண்டுமென ஐ.சி.சி தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்று முடிந்த ஒரு நாள் போட்டியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அவுஸ்|ரேலிய துடுப்பாட்ட வீரர் வோர்னரின் விக்கட்டை வீழ்த்திய பெரேரா உபயோகித்த மொழியும், உடல் அசைவுகளும் துடுப்பாட்ட வீரருக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததே அவர் செய்த குற்றமாகும். இலங்கைத் துடுபபாட்ட …
-
- 0 replies
- 437 views
-
-
ஒலிம்பிக்கில்... வெல்லாத, வட கொரியா வீரர்களுக்கு கூலி வேலை.. ரேஷன் கார்டுகளும் பறிமுதல்! அதிபர் ஆவேசம்? பியோங்யாங்: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களின் ரேஷன் கார்டுகளை பிடுங்கி வைத்துக்கொள்ளவும், அவர்களை சுரங்க தொழிலுக்கு கூலி வேலை செய்ய அனுப்பவும் அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வட கொரியா வென்றுள்ளது. அதேநேரம், வட கொரியாவின் பரம எதிரி நாடான தென் கொரியாவோ, 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை வேட்டையாடியுள்ளது. 5 தங்க பதக்கங்களையாவது வெல்ல வேண்டும் என அதிபர் 'உத்தரவிட்டு' அனுப்பியிருந்த நிலையில், அதைவிட குறைந்த தங்கம் ப…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல். இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் கன்டுபிடிப்பாக கருதப்படும் 20 வயதான குஷால் மெண்டிஸ், அண்மைய நாட்களில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அறிமுகமான போட்டி முதல்கொண்டு அனைத்திலும் தனது திறமைகளை சிறப்பாக நிரூபித்துவரும் குஷால் மெண்டிஸ், தனது துல்லியமான துடுப்பாட்டம் மூலமாக அணியின் வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்கிறார். நேற்று இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 வது ஒருநாள் போட்டியின் போதும் ஆரம்பத்திலேயே இலங்கை அணி இரு விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும், அசராமல் நின்று அடித்தாடி அரைச்சதம்…
-
- 0 replies
- 468 views
-
-
டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகனும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பதாக இன்று அறிவித்துள்ளார். 1999 இல் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட டில்ஷானின் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு இந்த திடீர் ஓய்வு அறைவிப்பு மூலமாக முடிவுக்கு வருகிறது. கிரிக்கெட்டில் சாதிக்க தெரிந்த சாதனையாளர்கள் பலருக்கு தாங்கள் உச்சத்தில் இருக்கும் போதே, சர்சைகளில் சிக்காமல் ஓய்வு அறிவித்தலை வெளியிட்டிருக்க முடிவதில்லை …
-
- 0 replies
- 603 views
-
-
பெயெர்ன் முனிச்சில் ( FC Bayern München) பயிற்சி பெற 11 வயது சிறுவன் தேர்வு சந்தன் நாயக் ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற சேரி பகுதியைச் சேர்ந்தவன் சந்தன் நாயக். 11 வயதான இந்த சிறுவன் ஜெர்மனியில் உள்ள பெயெர்ன் முனிச்சில் கால்பந்து பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருக்கும் பேயெர்ன் முனிச் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து கிளப். இந்த கிளப் ஆண்ட்ரூ முல்லெர், அர்ஜென் ராப்பன், பிராங்க் ஹென்றி, பியரே ரிபெரி மற்றும் ஜெரோம் அஜினிம் போடெங் ஆகிய கால்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த கால்பந்து கிளப்பில் பயிற்சி பெறுவதற்கு சபர் சகியின் சந்தன் நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடை…
-
- 0 replies
- 447 views
-
-
5.77 நிமிடத்தில் 9 ஒலிம்பிக் தங்கம் #UsainMagic சென்னை வார் மெமோரியலில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான மூன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடினால் என்ன வாங்கலாம். நம்மால் மூச்சு மட்டுமே வாங்க முடியும். ஆனால் உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். 2004,2008,2012,2016 ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் மொத்தம் ஓடியதே மூன்றரை கிலோமீட்டர்தான். இந்த மூன்றரை கிலோ மீட்டரை ஓட போல்ட் எடுத்துக் கொண்ட நேரம் 5.77 நிமிடங்கள் மட்டுமே. கூகுளில் தேடுங்கள், பஸ்ஸில் செல்லவே 13 நிமிடங்கள் ஆகுமாம். 2004 ஒலிம்பிக்கின், 200 மீட்டர் போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய போல்ட், இலக்கை அடைய எடுத்துக் கொண்ட நேரம் 21.05 வினாடிகள். ஆனால் …
-
- 0 replies
- 511 views
-
-
கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் ஆரம்பதுடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார். இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ஷான், 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492 ஓட்டங்களையும் 39 விக்கெட்டுகளையு…
-
- 2 replies
- 450 views
-
-
முன்னாள் சகாவான மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி இரட்டையர் தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் சானியா 2016-08-25 10:35:47 மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளின் இரட்டையர் பிரிவில் செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவாவுடன் இணைந்து சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சானியா மிர்ஸா தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். சானியாவின் முன்னாள் சகாவான சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் மற்றும் அமெரிக்காவின் கோ…
-
- 0 replies
- 257 views
-
-
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் மூவர் உட்பட 15 பேர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி 2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் பளுதூக்குதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் உட்பட 15 பேர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றுள்ளனர் என சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று தெரிவித்துள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று 8 வருடங்களான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென் ஸியேஸியா மகளிர் 48 கிலோகிராம் எடைக்குட்பட்டோருக்கான பிரிவில…
-
- 0 replies
- 245 views
-