விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
குசாலுக்கு நான்கு வருடத் தடை: அமைச்சர் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசால் ஜனித் பெரேராவுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் நான்கு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், சர்வதேச கிரிக்கெட் சபையால் இதுவரை, இது உறுதிப்படுத்தப்படவில்லை. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியிருந்தார் என, முதலாவது பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த அவர், நியூசிலாந்துத் தொடரிலிருந்து மீள அழைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மாதிரிப் (பி மாதிரி) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள…
-
- 0 replies
- 317 views
-
-
2002ஆம் ஆண்டில் பிளட்டரை விசாரிக்க மறுத்த சுவிஸ் அதிகாரிகள் கால்பந்தாட்டத்திலிருந்து 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) முன்னாள் தலைவர் செப் பிளட்டருக்கு எதிராக, ஆதாரங்களுடன் கூடிய முறைப்பாடு, 2002ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட போதிலும், அதை விசாரிப்பதற்கு, சுவிற்ஸர்லாந்தின் அரச வழக்குரைஞர் மறுத்துவிட்டதாக, வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பீபா-வின் அப்போதைய பொதுச் செயலாளரான மைக்கல் ஸென் றுபினென், ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக, செப் பிளட்டருக்கெதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அத்தோடு, பீபா-வின் நிறைவேற்றுச் செயற்குழுவின் 24 பேரில் 11 பேர், பிளட்டருக்கெதிராகக் குற்றவ…
-
- 0 replies
- 516 views
-
-
சையத் கிர்மானிக்கு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது சையத் கிர்மானி. | 1991-ம் ஆண்டு இந்து ஆர்கைவ்ஸ் படம். 2015-ம் ஆண்டுக்கான சிகே.நாயுடு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சையத் கிர்மானி ரூ.25 லட்சம் பெறுவார். 88 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள சையத் கிர்மானி 198 விக்கெட்டுகளுக்குக் காரணமாகியுள்ளார். இதில் 160 கேட்ச்கள் 38 ஸ்டம்பிங்குகள். உலக கிரிக்கெட்டின் பெரிய பேட்ஸ்மென்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகிய 4 ஸ்பின்னர்கள் கோலோச்சிய காலத்தில் சையத் கிர்மானி அபா…
-
- 0 replies
- 396 views
-
-
சர்வதேச டென்னிஸ் சம்மேளன சம்பியன்களாக இவ்வருடம் ஜோகோவிச், செரீனா தெரிவு இவ் வருடம் தலா மூன்று மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த நொவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் வருடத்தின் டென்னிஸ் சம்பியன்களாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தினால் பெயரிடப்பட்டுள்ளனர். இவ்விருவரும் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக இவ் விருதை வென்றுள்ளனர். ஜோகோவிச் இவ் வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் ஆகிய மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டங்களுடன் மொத்தமாக 11 சம்பியன் பட்டங்கள…
-
- 0 replies
- 565 views
-
-
ஆசிய கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்த டோனி December 24, 2015 விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று பெங்களூரில் விஜய் ஹசாரே டிராபியின் 2வது காலிறுதிப் போட்டியில் டெல்லி- ஜார்க்கண்ட் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் டோனி 70 ஓட்டங்கள் எடுத்தும் ஜார்க்கண்ட் அணி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்தப் போட்டியில் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெல்லி அணியின் ஷிகர் தவானை விக்கெட் கீப்பரான டோனி 27 ஓட்டங்களில் ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். இதன்…
-
- 0 replies
- 589 views
-
-
2015 விளையாட்டு உலகம்! 2015-ம் ஆண்டு, உலகில் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், விறுவிறுப்பான போட்டிகளின் தொகுப்புகள் இங்கே... கிரிக்கெட் 2015 கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடம்தான். இந்த வருடத்தின் தொடக்கத்திலே ஒருநாள் உலககோப்பை, அதனை தொடர்ந்து ஐ.பி.எல், முதல் முறையாக நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டி, அதிவேக சதம் என பல சுவாரஸ்யங்களை கொண்டது. > ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி, அங்கு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லிர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார…
-
- 1 reply
- 896 views
-
-
தோனியின் விடாமுயற்சி இன்னிங்ஸ் வீண்: டெல்லியிடம் வீழ்ந்தது ஜார்கண்ட் 2 கேட்ச்கள் ஒரு ஸ்டம்பிங், 70 நாட் அவுட்: தோனி. | படம்: முரளி குமார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி 2-வது காலிறுதிப் போட்டியில் தனிமனிதனாக போராடிய தோனியின் ஆட்டம் வீணானது, ஜார்கண்ட் அணியை டெல்லி அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் வருண் ஆரோன் ஜார்கண்ட் அணிக்காக டாஸ் வென்று டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தாலும் தோனியே அணியை வழிநடத்தினார். பந்துகள் எழும்புவதும், தரையோடு தரையாக எழும்பாமலும் செல்லும் பேட்ஸ்மென்கள் திணறும் வகையிலான பிட்சில் டெல்லி அணி கடைசியில் பவன் நெகியின் அதிரடி 16 பந்து 38 ரன்களினால் 50 ஓவர்களில் 225 ரன்களை எட்டியத…
-
- 0 replies
- 464 views
-
-
கதறி அழுத ரசிகைக்கு ஆறுதல் கூறிய கோலி December 24, 2015 இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலியை ரசிகை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் மும்பை வணிக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. டோனியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற கோலி இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவருக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவு அதிகமாக ரசிகைகளும் உள்ளனர். இந்த நிலையில் ‘வொர்கன் பேஸன்’ நிறுனத்தின் தூதுவராக உள்ள கோலி நிறுவனம் ஒரு வருடத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகை ஒருவர் கோலியை திடீரென்று கட்டியணைத்துக் கொண்ட…
-
- 0 replies
- 574 views
-
-
U 19 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி December 24, 2015 பங்களாதேஷில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இஷான் கிஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மற்றுமொரு விக்கெட் காப்பாளர் ரிஷ்பாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் 6 துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் 7 பந்து வீச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி விபரம் வருமாறு Ishan Kishan (capt), Rishabh Pant (vice-capt), Washington Sundar, Sarfaraz Khan, Amandeep Khare, Anmolpreet Singh, Armaan Jaffer, Ricky Bhu…
-
- 30 replies
- 3.1k views
-
-
இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிப்பு தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் பங்கேற்கும் இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்தத் தொடரில் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளார். எனினும் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பங்கேற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட், சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் பரி ஆகியோர், தெ…
-
- 0 replies
- 572 views
-
-
சுரேஷ் ரெய்னாவை ஒருநாள் அணியிலிருந்து நீக்கியிருக்கக் கூடாது: லஷ்மண் கருத்து சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னாவை நீக்கியதால் இந்தியாவுக்கு ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்று கருதுகிறார் விவிஎஸ்.லஷ்மண். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு லஷ்மண் இது குறித்து கூறியதாவது: ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்றே கருதுகிறேன். ரெய்னா நீக்கப்பட்டது தவறு. உலகக் கோப்பையில் அவர் நன்றாகவே ஆடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடினமான தொடரை எதிர்கொண்டார் ரெய்னா. 6-ம் நிலையில் களமிறங்கி, புதிய களவியூக விதிமுறைகளின் கீழ் வெற்றிக்குத் தேவைப்படும் 8 அல்லது 10 ரன்களை எடுக்க நேரடியாக பெ…
-
- 0 replies
- 448 views
-
-
பதின்மூன்று ஓவர்களில் பத்து விக்கெட்களை இழந்தமை எண்ணிப்பார்க்க முடியாத வீழ்ச்சி என்கிறார் மெத்யூஸ் 2015-12-24 10:56:33 நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 13.4 ஓவர்களில் பத்து விக்கெட்களை இழந்தமை எண்ணிப்பார்க்க முடியாத மிக மோசமான வீழ்ச்சி என அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பத்து விக்கெட்களும் கைவசமிருக்க 126 ஓட்டங்களால் முன்னிலையில் இலங்கை இருந்தது. ஆனால், அடுத்த 82 பந்துகளில் பத்து விக்கெட்களைய…
-
- 0 replies
- 479 views
-
-
ரொனால்டோவின் புதிய வீடு December 24, 2015 போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.47 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். 8 படுக்கை அறை, நீச்சல் குளம், சிறிய கால்பந்து மைதானம் என தனது கனவு இல்லத்தை 8500 சதுர அடியில் கட்டி முடித்துள்ளார். இந்த அழகிய வீட்டை அவரே வீடியோ மூலம் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=6613
-
- 0 replies
- 385 views
-
-
நட்சத்திர வீரர்கள் இல்லாதது வெறுப்பாக உள்ளது: மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஆதங்கம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பய ணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஹோபர்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அனுபவம் இல்லாத மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சரண்டர் ஆனது. அதேவேளையில் கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, டேரரன் சமி, ஆந்த்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேசிய அணிக் கான போட்டிகளில் பங்கேற்காமல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இ…
-
- 0 replies
- 455 views
-
-
முதல் 15 ஓவர்களில் 3 விக். அவசியம்: ஆஸி.யை வீழ்த்த கபிலின் வியூகம் ஜனவரி மாதம் ஆஸ்திரேவுக்குச் சென்று 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்தத் தொடரில் வெல்ல முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம் என்று கபில் தேவ் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் இது பற்றி கூறும்போது, “அணியின் கேப்டன் பவுலர்களிடம் முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அறிவுறுத்துவது அவசியம். ஷமி, உமேஷ் யாதவ் அல்லது இசாந்த் சர்மாவிடம் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டும், அதாவது 15 ஓவர்களில் அவர்கள் 90 ரன்கள் எடுத்தால் கவலை வேண்டாம் ஆனால் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இருக்க வேண்டும். 15 ஓவர்கள் முட…
-
- 0 replies
- 642 views
-
-
பரபரப்புக்கு பறக்கும் டிவி நிருபர்கள்: கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே விளாசல் ஹர்ஷா போக்ளே | படம்: பாக்ய பிரகாஷ் தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பு ஒன்லைனர்களுக்காக அலைந்து திரிந்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு இணங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிரிக்கெட் தொகுப்பாளர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இன்று டிவி நிருபர்களின் சில கேள்விகளில் கடும் எரிச்சலடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் குறித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலிருந்து சற்று முன் திரும்பினேன். அதன் பிறகு நான் மனவருத்தத்தில் ஆழ்ந்தேன். அதாவது நான் தொந்தரவுக்குள்ளானேனா அல்லது விளையாட்டில் த…
-
- 2 replies
- 553 views
-
-
மகனுடன் கிரிக்கெட் விளையாடும் சங்கா December 23, 2015 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா சில விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த சங்கக்காரா, சொந்த மண்ணில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு தனது சர்வதேச சாதனை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் தொடர்ந்து டி20 போட்டிகளிலும், இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியிலும் விளையாடி வருகிறார். தற்போது அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். முன்னதாக வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் டாக்கா அணிக்கா விளையாடினார். அப்போது 5 வருடங்களுக்கு பிறகு நீங்கள் என்ன …
-
- 2 replies
- 575 views
-
-
பொக்சிங் டே டெஸ்ட்டில் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் December 23, 2015 தென் ஆபிரிக்க அணியுடனான பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னணி வீரரான அண்டசன் வலது கையில் தசை இறுக்கம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்கான் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பித்து 30 ஆம் திகதி வரை டர்பனில் நடைபெறவுள்ள பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸன் பங்கேற்பது சாத்தியம் இல்லை என தெரியவருகின்றது. தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடரில் ஆன்டர்ஸன் பங்கேற்கவில்லை எனில் கிறிஸ் வோக்ஸ், ஸ்டீபன் பின…
-
- 0 replies
- 755 views
-
-
Tour de France 2017 ஜேர்மன் டியூசல்டோர்வ் நகரில் December 23, 2015 கடந்த 1987 ஆம் ஆண்டு ஜேர்மனின் பேர்லின் நகரில் ஆரம்பமான டூர் டி பிரான்ஸ் சைக்கிளோட்ட போட்டியானது அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டே முதற்தடவையாக ஜேர்மனில் ஆரம்பமாகவுள்ளது. எனினும் டூர் டி பிரான்ஸ் சைக்கிளோட்ட போட்டிகள் ஜேர்மனில் ஆரம்பமாவது 2017 ஆம் ஆண்டு நான்காவது தடவை என்பதுடன் பிரான்ஸை விட்டு வெளியில் 22 ஆவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2016 ஆம் ஆண்டு பிராஸ்ஸில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=6564&cat=2
-
- 0 replies
- 684 views
-
-
தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர்; அவரிடம் இன்னும் நிறைய திறமைகள் உள்ளன: கங்குலி புகழாரம் தோனியை ‘கிரேட்' என்று புகழ்ந்த சவுரவ் கங்குலி. | படம்: பிடிஐ. தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, அவர் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். ஜாம்ஷெட்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சவுரவ் கங்குலி கூறும்போது, “தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர், சர்வதேச அரங்கில் தரத்தை நிர்ணயம் செய்தவர். இந்தியாவுக்காக மேலும் சில ஆண்டுகள் பங்களிப்பு செய்ய அவரிடம் கிரிக்கெட் திறன்கள் இன்னும் உள்ளன” என்றார். 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு யார் கேப்டனாக இருப்பார…
-
- 0 replies
- 462 views
-
-
ஐ.சி.சி. விருது : ஸ்டீவன் ஸ்மித், டி வில்லியர்ஸ் கைப்பற்றினர் ! இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்கு கவுரவமிக்க கேரி சோபர்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதே ஸ்டீவன் ஸ்மித்துக்குதான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார். இந்த விருதை இவர் 2வது முறையாக பெறுகிறார். ஜோகனஸ்பர்க்கில் நடந்த டி20 ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 56 பந்துகளில் 116 ரன்கள் விளாசிய டுப்லெசிக்கு சிறந்த டி20 வீரருக்கான விருது வழங்க…
-
- 1 reply
- 358 views
-
-
உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்துக்காக ராங்கின் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் மீண்டும் அயர்லாந்து அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் பொயிட் ராங்கின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, 2012ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்து அணிக்காக பங்கேற்ற ராங்கின், அதன் பின்னர், 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட பகுதியில் இங்கிலாந்து அணிக்காக 11 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் பின்னர், இங்கிலாந்து அணியில் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே, தற்போது அவர் அயர்லாந்துக்கு மீளத் திரும்புகிறார். இதன்படி, இறுதியாக கடந்த வருடம் ஜனவர் மாதம் 17ஆம் திகதி இங்கிலாந்து அணிக்காக பங்கேற் ராங்கின், சர…
-
- 0 replies
- 333 views
-
-
மிரட்டல் மெக்குல்லம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா? அதிரடியாக கிரிக்கெட் ஆடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். ஆனால் உண்மையிலுமே காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடக்கூடியவர் மெக்கல்லம். லகான் படத்தில் ஒருவர் மட்டையை நெட்டுக்குத்தாகப் பிடித்து வித்தியாசமான முறையில் கிரிக்கெட் ஆடுவது போன்ற காட்சி இடம் பிடித்திருக்கும், இதனை பார்த்த பலர் இப்படியெல்லாம் படத்தில் தான் கிரிக்கெட் ஆடுவார்கள் என்றபோது, நிஜத்திலும் இப்படி கிரிக்கெட் ஆட முடியும் என அனாயாச சிக்சர்களை பறக்கவிட்டு மாஸ் காட்டியவர் மெக்கல்லம். அவர் வரும் பிப்ரவரியில் ஓய்வு பெற போகிறாராம். அவரை கிரிக்கெட் உலகம் கட்டாயம் மிஸ் செய்யும். ஏன்? அந்த போட்டியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந…
-
- 1 reply
- 944 views
-
-
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு அண்டர்-19 தொடரை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட். இடது புறம் சர்பராஸ் கான், வலது புறம் ரிஷப் பண்ட். | படம்: பிடிஐ. பங்களாதேஷில் வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர். நேற்று வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி இந்திய இளையோர் அணி சாம்பியன் ஆனது. இஷான் கிஷண் அணித்தலைவராக நியமிக்கப்பட ரிஷப் பண்ட் துணக் கேப்டனாக செயல்படுவார். இந்த அணியில் சர்பராஸ் கான், அர்மான் ஜாப…
-
- 0 replies
- 630 views
-
-
மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் December 22, 2015 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் போட்டிகள் ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 13ம் திகதி நடக்கிறது. இந்த தொடரில் லிப்ரா லெஜண்ட்ஸ், ஜெமினி அரேபியன்ஸ், காப்ரிகார்ன் கமெண்டர்ஸ், லியோ லயன்ஸ், விர்கோ சூப்பர் கிங்ஸ் மற்றும் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது. இதில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். எமிர…
-
- 14 replies
- 1k views
-