விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ரோஜர் ஃபெடரரும் சச்சின் மீதான காதலும்! கடந்த முறை சர்வதேச பிரீமியர் டென்னிஸ் தொடரில் ‘இந்தியன் ஏசஸ்’ அணிக்காக ஃபெடெரர் விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியன் ஏசஸ் அணிக்கு எதிராக இவர் விளையாடிய போதும் ரசிகர்களின் ஆதரவு இவருக்குக் குறையவில்லை. அந்த போட்டியில் அவர் ரஃபேல் நடாலிடம் வீழ்ந்தார். எனினும் இந்திய மண்ணும் அதன் நேசமும் ரோஜர் ஃபெடரருக்கு பிடித்த ஒன்று. ”இந்திய ரசிகர்கள் காட்டும் ஆதரவையும் அவர்களது அன்பையும் நான் மிகவும் நேசிக்கிறேன். எந்தவொரு தருணத்திலும் இந்திய ரசிகர்களின் ஆதரவு எனக்கு குறையவே இல்லை. இந்திய உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைக்காட்டில…
-
- 0 replies
- 621 views
-
-
அட.. நம்ம விராட் கோலியா இப்படி..!? - 7 அசத்தல் மாற்றங்கள் விராட் கோலியை கோவக்காரனாக, சண்டைக் கோழியாக, அனுஷ்கா ஷர்மாவுடன் ஊர்சுற்றுபவராக, சேஸிங்கில் கில்லியாக மட்டுமே இன்னமும் நினைத்து கொண்டிருக்காதீர்கள். அவர் தன்னை அதுக்கும் மேல, அதுக்கும் மேல என நாளுக்கு நாள் செதுக்கி கொண்டே இருக்கிறார். உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், போர்ஃப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் சச்சினை முந்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் டிரெண்ட் அடிக்கிறது. இதற்கிடையே ஆச்சரியமளிக்கும் விதமாக ஆக்ரோஷத்தையே தனது அடையாளமாகக் கொண்டிருக்கும் கோலியிடம் இப்போது பெரு மாற்றம். எந்த விஷயத்தையும் மிகப் பக்குவமாக, விவேகமாகக் கையாள்கிறார். வார்த்தை முதல் களச் செயல்பாடு வரை அது பிரதிபலிக்கிறது. அவரது …
-
- 0 replies
- 691 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டை உச்ச நிலைக்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன்: விராட் கோலி நேர்காணல் விராட் கோலி | கோப்புப் படம்: பிடிஐ இந்திய கிரிக்கெட் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறதா? ஆமாம். அணியினர் எப்படி நடந்துகொள்கிறார்கள், எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே புரியும். சச்சின், ராகுல் திராவிட், வி.வி.எஸ். லட்சுமணன், வீரேந்திர சேவாக், சவுரவ் கங்கூலி ஆகிய மூத்த வீரர்கள் எங்களுக்கான முன்னுதாரணங் களை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களுடைய இடங்களை எப்படி நிரப்பப்போகிறோம் என்று எப்போதும் நான் மலைப்பதுண்டு. அவர்களுக்கு முன்னால் நாங்கள் ஒன்றுமே இல்லை. அவர்கள் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.…
-
- 0 replies
- 383 views
-
-
இங்கிலீஸ் பிரீமியர் லீக் : சிங்கங்களை சிதைக்கும் சிறுவண்டு! அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பையை கென்யா வென்றாலோ இல்லை ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா, சீனாவை விட இலங்கை அதிக தங்கப் பதக்கங்கள் வென்றாலோ நமக்கு எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஆச்சரியம், அதிர்ச்சி, வியப்பு அனைத்தும் கலந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள் பிரீமியர் லீக் கால்பந்து ரசிகர்கள். அப்பொடியொரு அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறது கத்துக்குட்டியான லெய்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி. 20 அணிகள் மோதும் பிரீமியர் லீக் தொடரில் கடைசி 3 இடங்கள் பிடிக்கும் அணிகள் வெளியேற்றப்பட்டு, சாம்பியன்ஷிப் தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒவ்வொரு சீசனிலும் பிரீமியர் லீக்கில் இடம் பி…
-
- 0 replies
- 658 views
-
-
சிறந்த விளையாட்டு வீரராக செரினா வில்லியம்ஸ் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸூக்குக் கிடைத்துள்ளது. உலகின் முன்னணி விளையாட்டுச் சஞ்சிகையான ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டட், 1954ஆம் ஆண்டுமுதல் இந்த விருதை வழங்கிவருகிறது. உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்கள் கருத்திலெடுக்கப்பட்டு, இந்த விருது வழங்கப்படுகிறது. 34 வயதான செரினா வில்லியம்ஸ், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாகத் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு வாரமுமே, முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தப் பருவகாலத்தில் ஆறு …
-
- 1 reply
- 1k views
-
-
நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணி ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதின்மூன்று பேர் கொண்ட குழாமாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட குழாமில், பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், டிம் சௌத்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும் டிம் சௌத்தி, மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குழாமுக்கு திரும்பவுள்ளார். இவருக்குப் பதிலாக முதலிரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இன்னுமோர் வேகப்பந்துவீச…
-
- 20 replies
- 1.9k views
-
-
சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று: பார்சிலோனாவிடம் மீண்டும் சிக்கியது ஆர்சனல்! ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றுகள் கடந்த வாரம் முடிவுற்ற நிலையில்,காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான நாக்அவுட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடித்த 16 அணிகள் இந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அணிகளான செல்சி மற்றும் அர்சனல் ஆகியவை கடினமான போட்டியை எதிர்நோக்கியுள்ளன. இரண்டு லெக் ஆட்டங்களாக நடைபெறும் இந்த சுற்றில், சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டத்திலும் ,எதிரணியின் மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாட வேண்டும். இரண்டு போட்டிகளின் முடிவில் ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதி…
-
- 0 replies
- 441 views
-
-
என்னிடம் வெள்ளைச் சீருடை கைவசம் உள்ளது: கிறிஸ் கெயில் சூசகம் 2015 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் பந்தை அடித்து நொறுக்கும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் இன்னமும் ஓய்வு பெற்றுவிடவில்லை என்று கூறிய மேற்கிந்திய அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், பாக்சிங் டே அன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக எதிராக களமிறங்க தன்னிடம் வெள்ளைச் சீருடை உள்ளது என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முனைப்போடு கிறிஸ் கெயில் வந்திறங்கியுள்ளார். இது பற்றி கூறும்போது, “நான் இப்போதுதான் காயத்திலிருந்து மீண்டுள்ளேன். எனவே டெஸ்ட் அணியில் நான் இடம்பெறும் வாய்ப்பில்ல…
-
- 0 replies
- 421 views
-
-
லோட்ஸ் தரப்படுத்தலில் மத்தியூஸ் இடம்பிடித்தார் December 15, 2015 லோட்ஸ் மைதான நிர்வாகம் இந்த வருடத்துக்கான சிறந்த 20 வீரர்களின் தரப்படுத்தலில் மத்தியூஸிற்கும் இடம்கொடுத்துள்ளது. லோட்ஸ் மைதானம் வருடாவருடம் சிறந்த இருபது வீரர்களைத் தெரிவுசெய்து அவர்களை பட்டியல் படுத்தும். அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான பட்டியலில் மத்தியூஸிற்கு 9ஆவது இடத்தை வழங்கியுள்ளது. ஒருநாள் ஆட்டங்களில் 3ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 100 இலக்குகள் என்ற மைல் கல்லை மத்தியூஸ் எட்டியிருந்தார். இந்த பெறுபேற்றை எட்டும் 4ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். இதுவே அவருக்கு 9ஆவது இடத்தை வழங்க பிரதான காரணம் என்று லோட்ஸின் தெரிவிக்குழு அறிவித்துள்ளது. http://www.…
-
- 0 replies
- 332 views
-
-
தோனி, அஸ்வினை ஏலத்தில் வசப்படுத்தியது புனே; ராஜ்கோட் அணியில் ரெய்னா, ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் மகேந்திர சிங் தோனியும், ரவிச்சந்திரன் அஸ்வினும் வரும் ஐபில் தொடரில் புனே அணிக்காக களமிறங்கவுள்ளனர். சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா இருவரும் ராஜ்கோட் அணிக்காக விளையாடவுள்ளனர். ஐபிஎல் டி 20 தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரு ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் தேர்வாகின. புனே அணியின் உரிமையை நியூ ரைஸிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியின் உரிமையை இண்டெக்ஸ் செல்போன் நிறுவனமும் பெற்றுள்ளன. …
-
- 3 replies
- 753 views
-
-
ஐ.பி.எல். 2016: வரைவு பட்டியலில் தோனி, அஸ்வின் , மெக்கல்லம் வரும் 2016-ம் ஆண்டுக்கான ஜ.பி.எல். தொடரில் விளையாட ராஜ்கோட், புனே அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதர வீரர்களை ஏலம் மூலம் எடுத்துக் கொள்ளலாம். வரும் பிப்ரவரி 6-ம் தேதி புதிய வீரர்களுக்கான ஏலம் விடப்படுகிறது. ஐ.பி.எல். வெளியிட்டுள்ள வரும் 2016-ம் ஆண்டுக்கான வரைவு பட்டியலில் சென்னை அணியின் கேப்டன் தோனி, அஸ்வின், சுரேஷ் ரெய்னா, பிரன்டென் மெக்கல்லம், ட்வைன் பிராவோ மற்றும் ரவீந்தர ஜடேஜா, இர்ஃபான் பதான், அஜிங்கிய ரஹானே, சஞ்சு சாம்ப்சன், கருண் நா…
-
- 0 replies
- 630 views
-
-
காதலியை கரம்பிடித்தார் ரோஹித் December 14, 2015 இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா தனது காதலி ரித்திகா சாஜ்தேவை மணந்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து இவர்களது திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்ட நாள் தோழியான கீதா பாஸ்ராவை திருமணம் செய்தார். தற்போது புதுமாப்பிள்ளை வரிசையில் ரோஹித்தும் இணைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நிட்டா மற்றும் முகேஷ் அம்பானி மும்பை அணியின் வீரர்கள் மற்றும் புதுமாப்பிள்ளைகளான ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங்கிற்கு அவர்களது இல்லத்தில் விருந்தளித்தனர். ht…
-
- 0 replies
- 677 views
-
-
மார்லனுக்கு பந்து வீசத் தடை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான மார்லன் சேமுவேலுக்கு 12 மாதத்திற்கு பந்து வீச சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. 2013 டிசம்பர் முதல் இதுவரையில் இரண்டு தடவை அவரின் பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகத்தில் சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் இந்த தடையை விதித்துள்ளது. சர்வேதச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைக்கு மாறாக 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்துப் பந்து வீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/1006
-
- 0 replies
- 620 views
-
-
இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க கூடாது: வாசிம் அக்ரம் வேண்டுகோள் வாசிம் அக்ரம். | கோப்புப் படம். இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க கூடாது என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் அணி களுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இரு அணி களுக்கு இடையேயான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபும் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த தொடரில் ஆடுவதற்கு இந்திய க…
-
- 0 replies
- 394 views
-
-
அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர்? அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் தற்போதைய முழங்கால், இடுப்பு பிரச்சினைகள் தீராதுவிட்டால், இந்தியாவுக்கெதிராக எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர், அணிக்கு தலைமைதாங்க வேண்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, வோணர் அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர் செயற்படும் சந்தர்ப்பத்தில், அச்சந்தர்ப்பமே, அவர் அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கும் முதலாவது சந்தர்ப்பமாக அமையும். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மெல்பேர்ண் “பொக்ஸிங் டே” டெஸ்ட் போட்டி…
-
- 0 replies
- 563 views
-
-
புனே, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்றில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை நொறுக்கியது. சிலிர்க்க வைத்த கோல் 2–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் தற்போது அரைஇறுதி சுற்று நடந்து வருகிறது. ஒவ்வொரு அரைஇறுதியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும். இதில் புனேயில் நேற்று இரவு அரங்கேறிய அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் 2–வது இடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தாவும், 3–வது இடத்தை பெற்ற சென்னையின் எப்.சி.யும் கோதாவில் இறங்கின. இரு அணி வீரர்களும் சம பலத்துடன் ஆக்ரோஷமாக களத்தில் செயல்பட்டனர். 37–வது நிமிடம் வரை கோல் இல்லாத நிலைமையே காணப்பட்டது. 38–வது நிமி…
-
- 0 replies
- 510 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர்கள்: மெக்கல்லம் சாதனை பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள். | கோப்புப் படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக டியுனெடின் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தனது 100-வது டெஸ்ட் சிக்சரை அடித்தார் நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். நியூஸிலாந்து முதல் இன்னிங்சில் 137 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸில் இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கைக்கு வெற்றி இலக்கு 405 ரன்கள்; ஆனால் இலங்கை 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து போட்டியைக் காப்பாற்ற போராடி வருகிறது. …
-
- 0 replies
- 621 views
-
-
சென்னை எப்படி இருக்குது?... இந்தியா வந்த ரஃபேல் நடால் கேட்ட முதல் கேள்வி இது சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு ஒருநாள் கவுரவ விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்தார். அதற்காக டெல்லியில் உள்ள அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற ரஃபேல் நடால், முதலில் எழுப்பிய கேள்வி ''சென்னையில் இப்போது நிலைமை எப்படியிருக்கிறது என்பதுதான்? '' என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை நடால் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில்,'' சென்னை வெள்ளம் குறித்தும் மக்கள் அடைந்த துயரம் குறித்தும் கேள்விபட்டேன். எனக்கு இது மிகவும் வருத்தத்தை அளித்தது. நாம் வி…
-
- 0 replies
- 793 views
-
-
’’ வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவது கடினம்’’ குக் December 13, 2015 இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், வெளிநாட்டு மண்ணில் ஒரு அணி வெற்றி பெறுவது மிகக்கடினம் என இங்கிலாந்து அணியின் தலைவர் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வருகிற 26ந் திகதி (பாக்சிங் டே) ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் (3 நாள் ஆட்டம்) விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (15ந் திகதி) ஆரம்பமாகின்றது. எங்களுடைய சிறந்த விளையாடும் லெவன் அணி எது என்று இன்னும் எங்களுக்கு…
-
- 0 replies
- 566 views
-
-
சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்! ஐ.எஸ்.எல் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி கெத்தான வெற்றியை பெற்று வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்துள்ளது சென்னையின் எஃப்.சி. சென்னை அணியின் வெற்றிக்கு பின் உள்ள கெத்தான 7 விஷயங்கள் இதோ... சி.எஸ்.கே ஸ்டைல் ஆட்டம்: சி.எஸ்.கே அணி எப்போதுமே ஐ.பி.எல் போட்டிகளின் தொடக்கத்தில் சறுக்கி இறுதியில் புயலாய் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து சிங்கம் போல் இறுதி போட்டிக்குள் நுழையும். இப்போது தடை, பிக்சிங் போன்ற விஷயங்களால் விசில் போட முடியாமல் தவித்த சென்னை ரசிகர்களின் போக்கை சற்றே கால்பந்து பக்கம் திருப்பி இர…
-
- 0 replies
- 564 views
-
-
யூரோ 2016 : போட்டி அட்டவணை வெளியீடு பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி ருமேனியாவை எதிர்கொள்கிறது. அட்டவணைக்கு க்ளிக் செய்க... இது வரையில் 16 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த இந்த தொடரில் முதல் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டியில் இடம் பெற்றுள்ள 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஜுலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டிகளும் ஜுலை 10ஆம் தேதி இறுதிபோட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் பிரான்ஸ், ருமேனியா, அல்பேனியா, சுவிட்சர்லாந்து அ…
-
- 2 replies
- 581 views
-
-
சைக்கிளிங்கில் சாதிக்கும் யுவதி...! முதல்முதலாக உலக சைக்கிளிங் பந்தய தரவரிசையில், நான்காவது இடம் பிடித்திருக்கிறார் ஒரு இந்திய வீராங்கனை. அவர் டெபோரா ஹெரால்ட். அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்த, 20 வயதாகும் டெபோரா, 9 வயதாக இருக்கும்போது சுனாமி ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தவர். நேற்று சர்வதேச சைக்கிளிங் யூனியன் வெளியிட்ட, தரவரிசைப்பட்டியலில் 211 புள்ளிகளுடன், 500 மீட்டர் டைம் ட்ரையல் பிரிவில், நான்காம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார். 10வது இடத்தில் இருந்த டெபோரா, கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம் வெல்ல, 6 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதனால் இந்திய அணியும், 500 மீ டைம்…
-
- 0 replies
- 590 views
-
-
ஆபாச வீடியோ: சக வீரரை மிரட்டிய பிரான்ஸ கால்பந்து வீரர் கரீம் பென்ஜமா 'சஸ்பெண்ட்' ஆபாச வீடியோ எடுத்து சக வீரரை மிரட்டிய பிரான்ஸ் மற்றும் ரியல்மாட்ரிட் அணி வீரர் கரிம் பென்ஜமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள். இதற்கிடையே வல்புனா தொடர்புடைய ஆபாச வீடியோ டேப் ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து கரீம் பென்ஜமா, வல்புனாவை …
-
- 0 replies
- 744 views
-
-
நெருக்கடி சூழ்நிலைகளில் மன அமைதி காப்பதை தோனியிடமிருந்து கற்க விரும்புகிறேன்: விராட் கோலி மும்பையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி விவர அறிவிப்பு நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் கோலி, ரஹானே, தவண். | படம்: ஏ.பி. அழுத்தம் தரும் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மன அமைதி காப்பதை தோனியிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் விராட் கோலி, ரஹானே, ஷிகர் தவண் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் விராட் கோலி கூறியிருப்பதாவது: கேப்டன்சியைப் பொறுத்தவரை தோனி ஒரு வரம்பை நிர்ணையித்துள…
-
- 0 replies
- 477 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் 8 சாம்பியன்கள்! நேர்த்தியான கிரிக்கெட்டை ரசிப்பவர்களில் பெரும்பாலானோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பெரிதும் விரும்புவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான் கிரிக்கெட் போட்டியின் தாய் வடிவம். அதில் இருந்துதான் ஒருதின போட்டிகளும், டி-20 போட்டிகளும் புதிதாய் உருவாயின. தற்போது அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம், இந்த அவசரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க பலருக்கும் நேரமில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்கள் வருவது பெருமளவு குறைந்துவிட்டது. அதிலும் இந்தியாவில் நிலைமை மோசம். கவாஸ்கரும், டிராவிட்டும், சச்சினும் விளையாடிய காலத்தில் ஸ்டேடியத்துக்கு வரும் கூட்டத்தில் கால் பங்கு கூட …
-
- 0 replies
- 885 views
-