Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. யூரோ 2016 : போட்டி அட்டவணை வெளியீடு பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி ருமேனியாவை எதிர்கொள்கிறது. அட்டவணைக்கு க்ளிக் செய்க... இது வரையில் 16 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த இந்த தொடரில் முதல் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டியில் இடம் பெற்றுள்ள 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஜுலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டிகளும் ஜுலை 10ஆம் தேதி இறுதிபோட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் பிரான்ஸ், ருமேனியா, அல்பேனியா, சுவிட்சர்லாந்து அ…

  2. சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்! ஐ.எஸ்.எல் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி கெத்தான வெற்றியை பெற்று வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்துள்ளது சென்னையின் எஃப்.சி. சென்னை அணியின் வெற்றிக்கு பின் உள்ள கெத்தான 7 விஷயங்கள் இதோ... சி.எஸ்.கே ஸ்டைல் ஆட்டம்: சி.எஸ்.கே அணி எப்போதுமே ஐ.பி.எல் போட்டிகளின் தொடக்கத்தில் சறுக்கி இறுதியில் புயலாய் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து சிங்கம் போல் இறுதி போட்டிக்குள் நுழையும். இப்போது தடை, பிக்சிங் போன்ற விஷயங்களால் விசில் போட முடியாமல் தவித்த சென்னை ரசிகர்களின் போக்கை சற்றே கால்பந்து பக்கம் திருப்பி இர…

  3. சைக்கிளிங்கில் சாதிக்கும் யுவதி...! முதல்முதலாக உலக சைக்கிளிங் பந்தய தரவரிசையில், நான்காவது இடம் பிடித்திருக்கிறார் ஒரு இந்திய வீராங்கனை. அவர் டெபோரா ஹெரால்ட். அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்த, 20 வயதாகும் டெபோரா, 9 வயதாக இருக்கும்போது சுனாமி ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தவர். நேற்று சர்வதேச சைக்கிளிங் யூனியன் வெளியிட்ட, தரவரிசைப்பட்டியலில் 211 புள்ளிகளுடன், 500 மீட்டர் டைம் ட்ரையல் பிரிவில், நான்காம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார். 10வது இடத்தில் இருந்த டெபோரா, கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம் வெல்ல, 6 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதனால் இந்திய அணியும், 500 மீ டைம்…

  4. ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு புதுடில்லி: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது. பிரிமியர் கிரிக்கெட் தொடர் போல கடந்த ஆண்டு முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் கோல்கட்டா அணி, இந்திய ஜாம்பவான் சச்சினின் கொச்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு ஆண்டுக்கான 2வது ஐ.எஸ்.எல்., தொடர் வரும் அக்., 3ல் சென்னையில் துவங்குகிறது. இத்தொடரு…

  5. ஆபாச வீடியோ: சக வீரரை மிரட்டிய பிரான்ஸ கால்பந்து வீரர் கரீம் பென்ஜமா 'சஸ்பெண்ட்' ஆபாச வீடியோ எடுத்து சக வீரரை மிரட்டிய பிரான்ஸ் மற்றும் ரியல்மாட்ரிட் அணி வீரர் கரிம் பென்ஜமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள். இதற்கிடையே வல்புனா தொடர்புடைய ஆபாச வீடியோ டேப் ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து கரீம் பென்ஜமா, வல்புனாவை …

  6. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ல் தொடக்கம்! இந்தியா- பாக் மார்ச் 19-ல் மோதல்!! மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 8 மைதானங்களில் ஏப்ரல் 3-ந் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. தர்மசாலாவில் மார்ச் 19-ந் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. இந்த போட்டி தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது. குரூப் ஏ,பி மொத்தம் 16 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. முதல் சுற்றுக்கான குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் அ…

  7. நெருக்கடி சூழ்நிலைகளில் மன அமைதி காப்பதை தோனியிடமிருந்து கற்க விரும்புகிறேன்: விராட் கோலி மும்பையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி விவர அறிவிப்பு நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் கோலி, ரஹானே, தவண். | படம்: ஏ.பி. அழுத்தம் தரும் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மன அமைதி காப்பதை தோனியிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் விராட் கோலி, ரஹானே, ஷிகர் தவண் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் விராட் கோலி கூறியிருப்பதாவது: கேப்டன்சியைப் பொறுத்தவரை தோனி ஒரு வரம்பை நிர்ணையித்துள…

  8. எம்.சி.எல்.காக சங்கக்கார மற்றும் மஹேல ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர் எம்.சி.எல். எனப்படும் மாஸ்டர்ஸ் செம்பியன்ஸ் லீக் தொடருக்காக, ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் 5 லட்சத்து 50 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் டுபாயில் நடைபெறவுள்ளது. இதற்கு பிரையன் லாரா, சௌரவ் கங்குலி, ஜெக்ஸ் கலிஸ், போன்றோரும் ஆறு அணிகளுக்காக ஏலத்தில் பெறப்பட்டுள்ளனர். இன்டர்நஷனல் பிஸினஸ் ரைம்ஸின் தகவல் படி முத்தையா முரளிதரன் ஒரு லட்சம் டொலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும். அவர் ஜெமினி அரேபியன்ஸ் என்ற அணிக்காக விளை…

  9. டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் 8 சாம்பியன்கள்! நேர்த்தியான கிரிக்கெட்டை ரசிப்பவர்களில் பெரும்பாலானோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பெரிதும் விரும்புவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான் கிரிக்கெட் போட்டியின் தாய் வடிவம். அதில் இருந்துதான் ஒருதின போட்டிகளும், டி-20 போட்டிகளும் புதிதாய் உருவாயின. தற்போது அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம், இந்த அவசரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க பலருக்கும் நேரமில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்கள் வருவது பெருமளவு குறைந்துவிட்டது. அதிலும் இந்தியாவில் நிலைமை மோசம். கவாஸ்கரும், டிராவிட்டும், சச்சினும் விளையாடிய காலத்தில் ஸ்டேடியத்துக்கு வரும் கூட்டத்தில் கால் பங்கு கூட …

  10. ஃபிஃபா: தடையை நீக்கக் கோரிய பிளாட்டினி மேன்முறையீட்டில் தோல்வி செப் பிளாட்டர், மிஷேல் பிளாட்டினி ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மிஷேல் பிளாட்டினி, தன் மீது விதிக்கப்பட்டிருந்த 90-நாள் இடைக்காலத் தடையை தளர்த்துமாறு தொடுத்திருந்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். அதேநேரம் அந்தத் தடையை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்றும் விளையாட்டுத்துறை தொடர்பான நடுவர் தீர்ப்பாயம் ஃபிஃபா அமைப்பைக் கேட்டுக்கொண்டுள்ளது. கால்பந்து விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பான ஃபிஃபா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடந்துவரும் சூழலில், அதன் தலைவர் செப் பிளாட்டருடன், 60 வயதான பிளாட்டினியும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். …

  11. இப்படி ஆகிப்போச்சே சிவாஜி.. கிரிக்கெட் அம்பயருக்கும் ஹெல்மெட் மாட்டிவிட்டுட்டாங்கப்பா பெங்களூர்: விஜய் ஹசாரே உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், அம்பயர்கள், ஹெல்மெட் அணிந்தபடி நாட்டாமை செய்து வருகிறார்கள். உள்நாட்டு கிரிக்கெட்டில் நடுவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பது இதுதான் முதல்முறை. விஜய்ஹசாரே எனப்படும் உள்நாட்டு ஒன்டே போட்டி தொடர் தற்போது நடந்து வருகிறது. பெங்களூர் அடுத்த ஆலூரில் கேரளா-ரயில்வே அணிகள் நடுவே இன்று நடைபெற்ற போட்டியின்போது, நடுவர் பசிம் பதக் ஹெல்மெட் அணிந்தபடி நுடவர் பணியை பார்த்து வந்தார். கடந்த வாரம் திண்டுக்கல்லில் தமிழகம்-பஞ்சாப் அணிகளுக்கு நடுவே நடைபெற்ற போட்டியின்போது, நடுவராக பணியாற்றிய, ஜான் வார்ட், பேட்ஸ்மேன் அ…

    • 1 reply
    • 700 views
  12. செய்தித் துளிகள்: பாகிஸ்தான் தொடர் ரத்தா? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே வரும் 24ம் தேதி இலங்கையில் வைத்து ஒருநாள் போட்டி, டி 20 தொடர் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தன. இதற்கிடையே இந்த போட்டியில் இந்தியா பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் அதனால் கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்றும் பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் நேற்று கூறும்போது, "தொடர் ரத்தானது தொடர்பாக பாக். வாரியத்திடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. எங்களை பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக மத்திய …

  13. ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கும் தோனி ஜார்கண்ட் அணி வீர்ர்களுடன் இணைந்த தோனி. | படம்: ஜி.சம்பத்குமார். நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்காக ஜார்கண்ட் அணிக்குக் களமிறங்குகிறார் இந்திய ஒருநாள் கேப்டன் தோனி. தோனி கடைசியாக 2007-ல் ஜார்கண்ட் அணிக்காக உள்நாட்டுப் போட்டியில் ஆடினார். இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வருண் ஆரோன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட ஜார்கண்ட் அணியில் தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிராக ஜார்கண்ட் தனது முதல் போட்டியில் மோதுகிறது. பிரிவு பி-யில் ஜார்கண்ட் அணியுடன் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ரயில்வேஸ், கேரளா, ஹரி…

  14. முன்னாள் வீரர்கள் அணிக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது வருத்தமளிக்கிறது: விராட் கோலி முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் வெற்றி குறித்து கூறிய கருத்துகளைக் கண்டித்த விராட் கோலி. | கோப்புப் படம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்று தொடரைக் கைப்பற்றியிருந்தாலும் முன்னாள் வீரர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது காயப்படுத்துகிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். எந்த ஒரு முன்னாள் வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அவர் பிசிசிஐ.டிவி-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "கிரிக்கெட் ஆட்டத்தில் சர்வதேச அளவில் விளையாடியவர்களே கடும் விமர்சனங்களை வைப்பத…

  15. றியல் மட்ரிட், சிற்றி வெற்றி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், முக்கியமான போட்டியாக அமைந்த மன்செஸ்டர் போட்டி தவிர ஏனைய போட்டிகளில், றியல் மட்ரிட் அணியும் மன்செஸ்டர் சிற்றி அணியும் வெற்றிபெற்றன. றியல் மட்ரிட் அணிக்கும் மல்மோ அணிக்குமிடையிலான போட்டியில், 8-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில், 12ஆவது, 24ஆவது நிமிடத்தில் கரிம் பென்ஷெமா பெற்றுக் கொண்ட கோல்களின் உதவியோடு, 2-0 என றியல் மட்ரிட் அணி முன்னிலை வகிக்க, 39ஆவது, 47ஆவது, 50ஆவது, 59ஆவது நிமிடங்களில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல்களைப் பெற்றுக் கொடுத்தார். அண்மைக்காலமாக கோல்களைப் பெறத் தடுமாறிவரும் ரொனால்டோ, சிறப்பான திறமையை வெளிப்ப…

  16. செய்தித் துளிகள்: விராட் கோலிக்கு ஓய்வு விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் டெல்லி-பரோடா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஷிகர் தவண், இஷாந்த் சர்மா ஆகியோர் டெல்லி அணிக்காக விளையாடுவார்கள் என்றும் காம்பீருடன் இணைந்து தொடக்க வீரராக ஷிகர் தவண் களமிறங்குவார் எனவும் அணியின் பயிற்சியாளர் விஜய் தாகியா தெரிவித்துள்ளார். ---------------------------------------------------------------------- சர்ச்சையில் ஷிகர் தவண் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் பகுதி நேர பந்து வீச்சாளராக இந்தியாவின் ஷிகர் தவண் 3 ஓவர்கள் வீசினார். இந்நிலையில் அவரது பந்து வீச்சு விதிமுறை…

  17. சகல துறை வீரர்களின் தர வரிசையில் அஸ்வின் முதலிடம் December 09, 2015 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் சகல துறை வீரர்களின் தர வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார். டெல்லியில் நடந்த இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 3–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி முடிவின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களின் தர வரிசைப்பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தர வரிசைப்பட்டியலில் ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), க…

  18. பெண் மத்தியஸ்தரை திட்டிய கால்பந்தாட்ட வீரர் சிறுமிகளுக்கான போட்டியில் கடமையாற்ற நிர்ப்பந்தம் ஜேர்­ம­னியில் நடை­பெற்ற கால்­பந்­தாட்ட போட்­டி­யொன்­றின்­போது மத்­தி­யஸ்­த­ராகப் பணி­யாற்­றிய பெண் ஒரு­வரை திட்டி, ஆண்­க­ளுக்­கான இவ்­வி­ளை­யாட்டில் பெண்­க­ளுக்கு இட­மில்லை எனக் கூறிய கால்­பந்­தாட்ட வீரர் ஒருவர் சிறு­மி­க­ளுக்­கான கால்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றில் மத்­தி­யஸ்­த­ராக கட­மை­யாற்­று­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ளார். போர்ச்­சுனா டெசல்டோர்வ் கழ­கத்தைச் சேர்ந்த கெரெம் டெமிர்பே எனும் இவ்­வீரர், அண்­மையில் நடை­பெற்ற எவ்.எஸ்.வி. பிராங்பர்ட் கழ­கத்­து­ட­னான போட்­டியில் பங்­கு­பற்­றினார். இப்­போட்­டி­…

  19. செய்தித் துளிகள் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்பதை கணித்து கூறுவதற்கு தான் ஒன்றும் ஜோதிடர் இல்லையென பிசிசிஐ தலைவர் ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------ உலக பாட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் சாய்னா நெவால், காந்த் கலந்துகொள்கின்றனர். சாய்னா முதல் சுற்றில் ஜப்பானின் ஓகூராவையும் காந்த், ஜப்பானின் ஹென்டோவையும் எதிர்கொள்கின்றனர். ------------------------------------------------------ லண்டன்லண்டனில் நடைபெற்று வரும் கிளாசிக் செஸ் போட்டியின் 4வது சுற்றில் இந்…

  20. கால்பதிக்க விடாத சென்னை கரம் கொடுத்த சங்கா, முரளி சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள இடருக்கு தலா ஒரு கோடி கொடுத்து உதவியுள்ளனர் சங்காவும் முரளியும். கடந்த சில தினங்களாக சென்னையில் பெய்துவந்த அளவுக்கு அதிகமான மழை காரணமாக ஏற்பட்ட பேரிடரினால் ஏராளமான மக்கள் நிற்கதியாகியுள்ளனர். கிட்டத்தட்ட 15ஆயிரம் கோடி வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. அவசர தேவைகளுக்காக ஆயிரம் கோடிகளை இந்திய மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மட்டுமல்லாமல் உலகில் பலபாகங்களில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்களான சங்கா, முரளி இருவரும் தலா ஒரு கோடி உதவியாக வழங்கியுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பி…

  21. நைஜல் லோங் நீக்கம் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நடுவர் பொறுப்பிலிருந்து, நைஜல் லோங் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அண்மையில் இட்பெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில், நேதன் லையன் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய முடிவை வழங்கிய நிலையிலேயே, அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இத்தொடரின் இரண்டு போட்டிகளிலும் அவர், கள நடுவராகப் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/160902/%E0%AE%A8-%E0%AE%9C%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%99-%E0…

  22. ஐபிஎல் சஸ்பென்ஸ் முடிந்தது.. சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் களமிறக்கம் மும்பை: 2 வருடம் சஸ்பெண்ட் தண்டனைக்கு உள்ளாகியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு மாற்றாக புனே மற்றும் ராஜ்கோட் என்ற பெயரில் இரு அணிகள் தேர்வாகியுள்ளன. 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின்போது மேட்ச் பிக்சிங் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி முத்கல், முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். உறுதி நீதிபதி லோதா குழுவினர் தங்களது விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கியது. இதில் சென்னை அணியின், குருநாத் மெய்யப்பனும்,…

  23. ஓய்விலிருந்து மீண்டு தென் ஆப்பிரிக்காவுக்காக மீண்டும் ஆட கிரேம் ஸ்மித் விருப்பம் முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா சரணடைந்ததையடுத்து முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். 33 வயதிலேயே கிரேம் ஸ்மித் ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் (எம்.சி.எல்) கிரிக்கெட்டுக்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது: "சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப எம்.சி.எல். ஒரு சிறந்த வழியாக அமையலாம். நான் மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆட வேண…

  24. ஜன.27ல் யு-19 உலககோப்பை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கிறது. இவை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளும், பி பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், கனடா ஆகிய அணிகளும் சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, பிஜி அணிகளும் டி பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19 நாட்கள் நடைபெறும் தொடரின் முதல் ஆட்டத்தில் 27ம் தேதி நடப்பு சாம்பியன் தென்…

  25. டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று தேர்வு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு கூட்டம் சந்தீப் பாட்டீல் தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க் கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் காய மடைந்திருப்பதால் அவர்கள் தேர்ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.