Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டி 20 உலக கோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுமா?- பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் விளக்கம் அனுராக் தாக்குர் டி 20 உலககோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுமா என்பதற்கு பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் விளக்கம் அளித்தார். சென்னையை நாங்கள் நிராகரிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார். 6 வது டி 20 உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, மொகாலி, நாக்பூர் ஆகிய 8 இடங்களில் நடத்தப்படும் என பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. ஆனால் போட்டி நடைபெறும் இடங்களை 5 ஆக குறைக்குமாறு ஐசிசி வலியுறு…

  2. இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உபதலைவியாக தெரிவுசெய்யப்பட்டவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன் சுரேந்தினி ஆவார். இதேவேளை, இவர் தென்கிழக்காசிய நாடுகளின் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/11/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%…

  3. ''சைமண்ட்ஸ் ஒரு குடிகாரர், புக்கனனுக்கு ஒன்றும் தெரியாது ''- மைக்கேல் கிளார்க் ஆவேசம் தன்னை விமர்சித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஹைடன், சைமண்ட்ஸ் , ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் புக்கனன் ஆகியோருக்கு மைக்கேல் கிளார்க் தனது புத்தகம் வாயிலாக கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க் 'ஆஷஸ் டைரி 15 'என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரையும் விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிளார்க்கின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சைமண்ட்ஸ் தனது புத்தகத்தில் இவ்வாறு கூற…

  4. ஓய்வுபெற்றார் றிச்சி மக்கோ நியூசிலாந்து றக்பி அணியின் தலைவர் றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். வெலிங்டனில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, இந்த அறிவிப்பை அவர் விடுத்தார். 34 வயதான றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் ஓய்வுபெற விரும்புவதான கருத்தை, அவர் வெளியிட்டிருந்தார். அத்தோடு, 2016ஆம் ஆண்டின் சுப்பர் றக்பி தொடருக்கான கிறசடேர்ஸ் அணியிலும் அவர் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையிலேயே, தனது ஓய்வை அவர் உறுதிப்படுத்தினார். உலக றக்பி வரலாற்றில், அதிக சர்வதேசப் போட்டிகளில் பங்குப…

  5. இங்கிலாந்து, பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் மீள் பார்வை இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற தொடரில் பாகிஸ்தானுக்கு தொடர் வெற்றி கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி தொடரை ஆரம்பித்து இருந்தாலும், பாகிஸ்தான் அணி அந்த ஆதிக்கத்தை உடைத்து தங்கள் ஆதிக்கத்தை காட்டி வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி பலமான அணியாகவும் தொடரைக் கைப்பற்றும் வாய்பை அதிகம் கொண்ட அணியாகவும் தொடரை ஆரம்பித்தது. அதை செய்தும் காட்டி விட்டது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு என்ன நடந்தது? மிகுந்த சவாலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போன்று முதற் போட்டியின் வெற்றி வாய்ப்பு போதிய வெளிச்சம் இன்மையால் கை நழுவிப் போ…

  6. DRS இருந்திருந்தால் வோண் காலி: பீற்றர்சன் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கொண்டோர் பட்டியலில் இரண்டாமிடத்தில் காணப்படுபவருமான ஷேன் வோணைப் புகழ்ந்துள்ள இங்கிலாந்து அணியின் கெவின் பீற்றர்சன், நல்ல முறையில் தன்னில் தாக்கத்தைச் செலுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளார். கெவின் பீற்றர்சனின் புதிய நூலான 'கிரிக்கெட்டில்", ஷேன் வோண் பற்றிய அவரது பகுதி, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிலேயே, மேற்படி விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். ஹம்ப்ஷையர் பிராந்திய அணியில் தான் விளையாடும் போது, அதன் தலைவராக ஷேன் வோண் இருந்த காரணத்தால், ஷேன் வோண் தொடர்பில் ஏனையோருக்கு இருந்த அச்சம், தன்னிடம் காணப்பட்டி…

  7. 2016 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: ஸ்ரீகாந்த் நம்பிக்கை ஸ்ரீகாந்த். | கோப்புப் படம்: வி.கணேசன். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரரான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், “இந்தியாவில் டி20 உலகக் கோப்பை ஒரு மிகப்பெரிய நிகழ்வு. டி20 கிரிக்கெட்டில் இந்தியா நன்றாக விளையாடி வருகிறது. எனவே இம்முறையும் இந்தியா நன்றாகவே விளையாடும், யாருக்குத் தெரியும் ஒருவேளை இந்தியா கோப்பையையும் வென்று விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றார். டெஸ்ட் வெற்றி க…

  8. தரவரிசையில் சரிந்த கோலி... காரணம் என்ன? இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியான செய்தி. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஸ்மித், வில்லியம்சன், இரட்டை சதமடித்த வார்னர், ராஸ் டெய்லர் ஆகியோர் தரவரிசையில் பெரும் மாற்றம் நிகழ்த்தியிருக்கின்றனர். பேட்டிங் தரவரிசை: தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் முதலிடம் டி வில்லி…

  9. உலககோப்பை தகுதி சுற்று: அர்ஜென்டினா, பிரேஸில் வெற்றி உலககோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெரு அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேஸில் வீரர் அகுஸ்டோ. படம்: ஏஎஃப்பி. 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. தென் அமெரிக்க கண்டங்களுக்கிடையேயான போட்டியில் நேற்று பிரேஸில்-பெரு அணிகள் மோதின. இதில் பிரேஸில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கோஸ்டா 22வது நிமிடத்திலும், அகுஸ்டோ 57வது நிமிடத்திலும், பிலிப் லூயிஸ் 76வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் அர் ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது. அந்த அணியின் லூக்க…

  10. யூரோ 2016இன் அனைத்து அணிகளும் தீர்மானிக்கப்பட்டன அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிக் கட்டப் போட்டிகளுக்கு, உக்ரைன் தகுதிபெற்றுள்ளது. ஸ்லோவேனிய அணிக்கெதிரான போட்டியைச் சமநிலையில் முடித்தே, தங்களது இடத்தை உக்ரைன் உறுதிப்படுத்தியது. இப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்லோவேனிய அணிக்கெதிராக, 1-1 என்ற கோல் கணக்கிலான சமநிலை முடிவைப் பெற்றுக் கொண்ட உக்ரைன், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தகுதிபெற்றது. இதன்படி, யூரோ 2016இல் பங்குபற்றும் அனைத்து அணிகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி தகு…

  11. மிட்சல் ஜான்சனை நாம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா? ஒருதினப் போட்டி என்றால் மிட்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய மிட்சல் ஜான்சன், நவம்பர் 17-ம் தேதியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்னார். ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் கலக்கிய காலத்திற்கு பின்பு, ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல்…

  12. ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் வழக்கு: ஸ்ரீசாந்த் உட்பட 36 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் கோப்புப் படம். ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக டெல்லி போலீஸ் தொடர்ந்த வழக்கில் கிரிக்கெட் வீர்ர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீட் சவான் உட்பட 36 பேருக்கு விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐபிஎல் தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் உட்பட 36 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டது. அதாவது மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டு…

  13. அணிக்காக எதையும் செய்வார்: விருத்திமான் சஹாவை ஆதரிக்கும் விராட் கோலி மொஹாலி டெஸ்ட் போட்டியில் ஆம்லாவை வீழ்த்தியதைக் கொண்டாடும் விராட் கோலி, சஹா, புஜாரா. | கோப்புப் படம். தோனி ஓய்வு பெற்றதையடுத்து விக்கெட் கீப்பராக செயலாற்றி வரும் விருத்திமான் சஹாவின் சர்வதேச தரம் பற்றிய கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அவருக்கு சாதகமாக வாதாடியுள்ளார் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி. “சஹாவின் அணுகுமுறை எனக்கு உண்மையிலேயே பிடித்துள்ளது. அவர் கடினமாக உழைக்கும் கிரிக்கெட் வீர்ர். அணிக்குத் தேவையான எந்த ஒன்றையும் அவர் செய்ய தயாராகவே இருக்கிறார். அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்டிங்கிலும் நன்றாகவே செயல்படுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் நி…

  14. திரிமான்ன நீக்கப்பட்டார் டிசெம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட், ஒ.நா.ச, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன அடங்கிய தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் குழாமிலிருந்து லஹிரு திரிமான்ன நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட்: அஞ்சலோ மத்தியூஸ், குசால் மென்டிஸ், உதார ஜயசுந்தர, டினேஷ் சந்திமால், குசால் பெரேரா, மிலிந்த சிரிவர்தன, கித்துருவன் விதானகே, திமுத் கருணாரத்ன, தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, ஜெப்றி வன்டர்சே ஒ.நா.ச: அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன, திலகரட்ண டில்ஷான், குசால் பெ…

  15. அவுஸ்திரேலிய மண்ணில் சாதனை நிகழ்த்திய டெய்லர்: பாராட்டாத வீரர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை எட்டிய அயல்நாட்டு வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் டெய்லர். அவுஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 559 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் நியூசிலாந்து தக்க பதிலடி கொடுத்தது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் 166 ஓட்டங்களும், டெய்லர் 290 ஓட்டங்களும் குவித்தனர். டெய்லர் 290 ஓட்டங்கள் எடுத்து கடைசி வீரராக ஆட்ட…

  16. ஹாசிம் ஆம்லாவிடம் விருது பெற்ற இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் நரபலி! தென்ஆப்ரிக்காவில் மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் ஒருவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட வீரரின் பெயர் பெயர் நவாஸ் கான் (வயது 23). இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், உம்ஸிண்டோ என்ற நகரில் தாயுடன் வசித்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தண்டோக்வேக் டுமா. இவர் உள்ளூர் மந்திரவாதி ஒருவரை தனது சொந்த பிரச்னைகள் தொடர்பாக சந்தித்துள்ளார். அதற்கு, அந்த மந்திரவாதி ஒருவரது தலையை வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து தண்டோக்வேக் டுமா, மன வளர்ச்சி குன்றிய நவாஸ் கான் த…

  17. 'யூரோவை ரத்து செய்தால், தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும்'- ஃபிரான்ஸ் கருத்து ஃபிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என்று போட்டியை நடத்தும் குழு கருத்து தெரிவித்துள்ளது. ஃபிரான்ஸில் அடுத்த ஜுன் 10 முதல் ஜுலை 10-ம் தேதி வரை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி ஃபிரான்ஸ், பார்க் டி பிரின்ஸஸ் , மைதானங்களிலும் மார்செலி, லில்லி,போர்டியாக்ஸ், லியோன், நீஸ், லென்ஸ் உள்ளிட்ட நகரங்களில் என ம…

  18. மீட்ஷல் ஜோன்சன் தனக்கு ஓய்வு பெற வேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்று கொண்டிருக்கும் இறுதி நாள் ஆட்டத்தோடு மீட்ஷல் ஜோன்சன் சர்வதேச கிரிக்கட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார். நியூசிலாந்திற்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையில் பேர்த் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மீட்ஷல் ஜோன்சன் வீசிய 28 ஓவர்களில் 157 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கட்டை மாத்திரமே பெற்றார். பேர்த் மைதானத்தில் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் கொடுத்த அதிக ஓட்டப்பிரதி இதுவே. மேலும், இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர். 73 டெஸ்ட் போட்டியில் 311 விக்கட்டுக்களையும், 153 ஒரு நாள் போட்டிகளில் 239 விக்கட்டுக்களையும், 30 இருபதுக்கு இருபது போட்டிக…

  19. பாரிஸ் குண்டுத் தாக்குதல்களினால் ஃபீஃபா பதில் தலைவர் அதிர்ச்சி பாரிஸ் நக­ரிலும் ஸ்டேட் டி ஃப்ரான்ஸ் விளையாட்­ட­ரங்கை சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும் வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளை­யிட்டு பெரும் அதிர்ச்சி அடை­வ­தாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ள­னத்தின் (ஃபீஃபா) பதில் தலைவர் ஈசா ஹயாட்டூ தெரி­வித்­துள்ளார். பிரான்ஸ் கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே அவர் தனது அதிர்ச்­சியை வெளி­யிட்­டுள்ளார். பிரான்ஸ் அணிக்கும் ஜேர்­மனி அணிக்கும் இடை­யி­லான சிநே­க­பூர்வ கால்­பந்­தாட்டப் போட்டி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கையில் இந்தத் தாக்­கு­தல்கள்…

  20. எலைட் சம்­பி­யன்ஷிப்’ என்ற புதிய பெயரில் மூவகை முதல் தர உள்ளூர் கிரிக்கெட் போட்­டிகள் இலங்­கையில் முதல் தர கிரிக்கெட் விளை­யாட்­டுத்­து­றையின் எதிர்­கா­லத்தை வள­மாக்கும் வகையில் மூவகை ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் எலைட் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் என அழைக்­கப்­ப­ட­வுள்­ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன தலை­மை­ய­கத்தில் அண்­மையில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­டான சந்­திப்­பின்­போது இந்தத் தக­வலை இடைக்­கால நிரு­வாக சபைத் தலை­வர் சிதத் வெத்­த­முனி தெரி­வித்தார். கொழும்பை பிர­தான இட­மாகக் கொண்டு விளை­யா­டப்­பட்டு வரும் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை நாட்டின் சகல பாகங்­க­ளுக்கும் கொண்டு செல்லும் வகையில் …

  21. யுஏஇ-யில் ஆடுவதில் என்ன பிரச்சினை?: பிசிசிஐ-க்கு பாக். கிரிக்கெட் வாரியம் கேள்வி கோப்புப் படம்: ஏ.பி. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் வந்து விளையாட பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. “இந்தியாவில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஷஹார்யார் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “ஏன் யுஏஇ-யில் ஆட முடியாது என்ற காரணத்துக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். நாங்கள் 2007 மற்றும் 2012-ல் இந்தியா சென்று விளையாடினோம், மீண்டும் முடியவே முடியாது. இது எங்கள் தொடர் எனவே எங்கள் நாட்டில்தான் விளையாடுவோம், அதாவது யுஏஇ-யில் தான் விளையாடுவோம். …

  22. இந்த 11 காரணங்களுக்காகவே.. ஆல்ஸ்டார்ஸ் கிரிக்கெட் அடிக்கடி நடக்கணும்! 1. 30 ஸ்டார்கள்! கிட்டத்தட்ட இன்றைய தலைமுறை கிரிக்கெட் பார்க்க துவங்கிய நாட்களில் கிரிக்கெட்டில் கில்லிகள் என்றால் இவர்கள் தான் என கூறப்பட்ட 30 பேர்களும் ஒரே அணியில் என்ற செய்தியே போதும் இந்த போட்டியை ரசிக்க. அதனை தாண்டி ஐபிஎல், பிக் பேஷ் போட்டிகளில் வெளிநாட்டு வீரர் இந்திய வீரருக்கு பந்து வீசுவது. வார்னே பந்தில் சச்சின் சிக்ஸ் அடிப்பது என்பதை பார்த்திருந்தாலும். லாரா, ஆம்ப்ரோஸ், வால்ஷ் போன்ற வீரர்களின் க்ளாஸிக் ஆட்டத்தை மீண்டும் பார்ப்பது டைம் மிஷின் ட்ரீட் தான்! 2.சச்சின் - கங்குலி - சேவாக் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மூன்று ஆட்டங்களில் தோற்றிருந்தாலும் சச்சிந்சேவக்-கங்குலி மூன்ற…

  23. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மிட்செல் ஸ்டார்க் சாதனை! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார். பெர்த் நகரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் அவர் இத்தகைய மைல் கல்லை எட்டினார். 21வது ஓவரில் 4வது பந்தை ஸ்டார்க் 160.4 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். இந்த யாக்கர் பந்தை நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெயிலர் எதிர் கொண்டார். இதற்கு முன், சர்வதேச அளவில் 4 பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசியுள்ளனர். கட…

  24. உமர் அக்மல் கைது November 15, 2015 சொகுசு பங்களாவில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உமர் அக்மல், கைதராபாத் நகரில் உள்ள சொகுசு பங்களாவில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகத் தெரிகிறது. உடனடியாக இது குறித்து பங்களாவிற்கு அருகில் வசிப்பவர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது உமர் அக்மலுன் அங்கிருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உமர் அக்மல், அவர்கள் நண்பர்கள் என்றும் விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்ததன் பேரிலே சென்றதாகவும் தெரிவித்துள்ளார். …

  25. சானியா நம்பர் ஒன் ஆனது எப்படி ? - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு இன்றைய தேதியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் டென்னிஸ் உலக தரவரிசைபட்டியலில் முதலிடம் இருப்பது யார் என உங்களுக்கு தெரியுமா? சானியா மிர்சா தான். கிரிக்கெட்டுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்தத்துவம் எப்போதுமே மற்ற விளையாட்டுகளுக்கு கொடுப்பதே இல்லை, அதனால் சானியாவின் சாதனை பலருக்கு தெரியாமல் போயிருக்கலாம். ரோஹித் ஷர்மா 264 ரன்கள் அடித்தால் கொண்டாடும் நாம், டென்னிஸ் உலகத்தில் நம்பர் ஒன் வீரராக இருப்பவரை கொண்டாடியிருக்க வேண்டாமா? சானியா எளிதில் முதலிடத்தை பிடிக்கவில்லை இதற்கு பின்னர் 20 ஆண்டுகால உழைப்பு இருக்கிறது. சர்ச்சைகளை உடைத்தது தடைகளை தகர்த்து சானியா எப்படி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் என பார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.