விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
டி20 போட்டியில் ரஷித்கான் புதிய சாதனை ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் : கோப்புப்படம் - படம்: கெட்டி இமேஜஸ் சர்வதேச டி20 போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர் ரஷித்கான் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்த 220 நாட்களில் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் குறிப்பிட்ட சாதனைகளை ரஷித்கான் புரிந்துள்ளார். இதற்கு முன் 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவிரைவாக 100 விக்கெட்டுகளைச் சாய்த்த வீரர் எனும் பெருமையை ரஷித்கான் பெற்று இருந்தார். இப்போது டி20 போ…
-
- 1 reply
- 874 views
-
-
தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம் நீங்கள் தூற்றினாலும் பரவாயில்லை. தயவு செய்து களத்துக்கு வந்து இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள் என இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட விடியோவில் பேசியதாவது: இதுவரை மைதானத்துக்கு வராமல் இருக்கும் ரசிகர்களாகிய உங்களுக்காக தான் இந்த விடியோ பதிவை வெளியிடுகிறேன். நீங்கள் கால்பந்து விளையாட்டை நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து நேரில் வந்து எங்களு…
-
- 2 replies
- 676 views
-
-
ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்தார் அலஸ்டைர் குக் தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்று இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டைர் குக் ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvPAK இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் அலஸ்டைர் குக், தொடர்ச்சியாக 153 டெஸ்ட் விளையாடிய வீரர் என்ற ஆ…
-
- 11 replies
- 1.2k views
-
-
ஆஃப்கனுக்கு எதிரான போட்டியிலிருந்து சஹா விலகல்! - 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ரித்திமான் சஹா காயம் காரணமாக விலகியுள்ளார். photo credit: @bcci சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டி, வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அஜிங்கியா ரஹானே தலைமையில், இந்திய அணி பங்கேற்க உள்ளது. கேப்டன் கோலி, காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதேபோல் இதில் பங்கேற்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியு…
-
- 0 replies
- 414 views
-
-
நம்புங்க… இனிமே நான் விளையாட வரமாட்டேன்: விடைபெற்றார் ஷாகித் அப்ரிடி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவையடுத்து ஷாகித் அப்ரிடிக்கு மரியாதை செலுத்திய ஐசிசி வேர்ல்டு லெவன் அணி வீரர்கள் - படம்உதவி: ஐசிசி ட்விட்டர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். ஆனால், இந்த முறை கிரிக்கெட் விளையாட இனி வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத்தீவுகள், ஐசிசி வேர்ல்டு லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, அப்பிரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்த…
-
- 0 replies
- 768 views
-
-
சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்; உலகக்கோப்பை இங்கிலாந்துக்குத்தான்: ஆலன் டொனால்ட் படம். | கே.பாக்யபிரகாஷ். இங்கிலாந்திடமிருந்து ஒருபோதும் எதிர்பார்த்திராத ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தை ஒருநாள் போட்டிகளில் வளர்த்து வரும் கேப்டன் இயன் மோர்கன் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடிக்க முடியாத அணியாக திகழச்செய்வார் என்று நம்புகிறார் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட். 14 ஆண்டுகால பிரமாதமான கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு ஏ.பி.டிவில்லியர்ஸ் எனும் 360டிகிரி ஓய்வு பெற்றுள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கும் கடினமே என்கிறார் ஆலன் டொனால்ட். இந்நிலையில் ஸ்கை ஸ்…
-
- 0 replies
- 429 views
-
-
ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 4 புதிய அணிகள் யு.ஏ.இ.அணி. | படம். ஏ.பி. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஏற்கெனவே உள்ள 12 அணிகளுடன் மேலும் 4 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, யு.ஏ.இ.அணிகள் முறையே 13 மற்றும் 14ம் இடத்தில் நுழைக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து, நேபாள் ஆகிய அணிகள் இன்னும் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய பிறகு தரவரிசையில் சேர்க்கப்படுவார்கள். ஏனெனில் தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தது இவ்வளவு ஒருநாள் சர்வதேச போட்டிகள் ஆடியிருக்க வேண்டியது நிபந்தனையாகும். இந்த புதிய அணிகளின் சேர்க்கையினால் மேலே உள்ள 12 அணிகளின் தரவரிசை நிலைகளில் மாற்றம் ஏற்…
-
- 0 replies
- 477 views
-
-
ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் நட்பு குறித்து கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கொண்டுள்ள நட்பு குறித்து சமூகவலைத்தளங்கள் படங்களுடன் அலற, இது காதல்தான் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமா? என்று அங்கலாய்த்துள்ளார். இது தொடர்பாக என்.டி.டிவியில் கே.எல்.ராகுல் கூறும்போது, “ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமானதா? எனக்கு அவரை நீண்டகாலமாகத் தெரியும், நாங்கள் இருவரும் ஒரே நகரைச…
-
- 0 replies
- 603 views
-
-
லார்ட்ஸ் மைதானத்தில் உலக லெவனை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி! இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கரீபியன் தீவுகளைக் கடந்த ஆண்டு இர்மா மற்றும் மரியா புயல்கள் தாக்கின. அதனால், கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் புகழ்பெற்ற ஆண்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட 5 கிரிக்கெட் மைதானங்கள் புயலால் பெருத்த சேதமடைந்தன. இந்த மைதானங்களைச் சீரமைக்க பல்வேறு வகைகளில் நிதி திரட்டப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும்…
-
- 2 replies
- 511 views
-
-
வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம் வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 12 ஆவது வட மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த கடந்த 27 ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்றது. இம்முறைப் போட்டித் தொடரில் தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பல வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 7 புதிய போட்டி சாதனைகளும் இங்கு நிகழ்த்தப்பட்டன. இதில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களான எம். பிரேம்தாஸ் (100 மீற்றர்), ஏ. அபிஷான் (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), பி. ந…
-
- 0 replies
- 458 views
-
-
ரியல் மட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார். உலகின் மிகச்சிறந்த கால்பந்து அணியாக திகழும் ஸ்பெயின் நாட்டின் ரியல் மட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன்(Zinedine Zidane) பதவிவிலகியுள்ளார். முன்னாள் கால்பந்து வீரரான ஷினேடின் ஷிடேன் 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தநிலையில் இவரது பதவிக் காலத்தில் ரியல் மட்ரிட் அணி தொடர்ச்சியாக மூன்று சம்பியன் கிண்ணங்களை கைப்பற்றியிருந்தது. லா லிகா தொடரிலும் ரியல் மட்ரிட் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், ஷிடேன் தனது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவும் தான் விலகுவது தான் அனைவருக்கும் நல…
-
- 0 replies
- 472 views
-
-
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...‘அம்மா’ செரீனாவின் அட்டகாச கம்பேக்! பாரிஸ் நகரம் – செரீனா வில்லியம்ஸ் கடைசிமுறை இங்கு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதன் பிறகு, அவருடைய வாழ்க்கை இப்போது நிறையவே மாறியிருக்கிறது. பெர்சனல் வாழ்வில் எவ்வளவோ மாறினாலும், விளையாட்டில் அவருடைய ஆளுமை துளியும் மாறவில்லை என சமீபத்தில் நிரூபித்தார் செரீனா. கறுப்பு நிற catsuit, இடுப்பில் சிவப்பு நிற பெல்ட் சகிதமாக ஃபிரெஞ்ச் ஓப்பன் நடந்த மைதானத்தில் அவர் நுழைந்தபோது, ஒரு சூப்பர் ஸ்டாரின் வருகைபோலவே இருந்தது அது. முதல் சுற்றில் செக் குடியரசின் கிறிஸ்டினா ப்ளிஸ்கொவாவை 7-6 (4), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியபிறகு, ``இந்த ஆடை ஒரு அடையாளமாக இன்று இருக…
-
- 0 replies
- 670 views
-
-
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கவுன்டவுண் தொடங்கியது..! 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கவுன்டவுண் தொடங்கியுள்ளது. photo credit: @ICC நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் தகுதி பெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், தனது ப…
-
- 0 replies
- 577 views
-
-
யார் இந்த இயன் சாப்பல்? - கிறிஸ் கெய்ல் காட்டம் கிறிஸ் கெய்ல். | ஏ.எப்.பி. பெரிய பெரிய சிக்சர்களுக்கும் சரவெடி டி20 இன்னிங்ஸ்களுக்கும் புகழ் பெற்ற கிறிஸ் கெய்ல் சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்றவர். தன் வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்பவர் கெய்ல், அதனால் அவர் பேச்சும் வெளிப்படையாகவே இருக்கும், ஆனால் அது பல வேளைகளில் சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடும். ஆஸ்திரேலியாவில் நடந்த 2016-ம் ஆண்டு பிக்பாஷ் டி20 லீகின் போது ஒரு போட்டியில் டிவி தொகுப்பாளினி மெல் மெக் லாஃப்லின் என்பவரை நோக்கி, “உங்கள் கண்களை முதல் முறையாகப் பார்க்கிறேன்” என்றும் “இந்தப் போட்டியில் வென்ற பிறகு உங்களுடன் மது அருந்துவேன்” என்றார். இ…
-
- 0 replies
- 491 views
-
-
சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! (படங்கள்) ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது. நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தத…
-
- 3 replies
- 1.5k views
-
-
அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி ரஷித் கான். - THE HINDU ரஷித் கான். - AFP ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராகி விட்டேன் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார். ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் ஏலத்தின்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீர…
-
- 0 replies
- 256 views
-
-
இந்திய அணிக்கே ஸ்பின் சவாலா? 4 ஸ்பின்னர்களுடன் ஆப்கான் டெஸ்ட் அணி அறிவிப்பு ஆப்கான் டெஸ்ட் அணி அறிவிப்பு. | ஏ.எஃப்.பி. இந்தியாவுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி முதல் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த அணியில் இளம் முஜீப் உர் ரஹ்மான், அமீர் ஹம்சா, மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷீத் கான், ஜாகிர் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கி இந்தியப் பிட்ச்கள் பற்றி அனுபவம் பெற்றுள்ளனர், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஜாகிர் கான் க…
-
- 0 replies
- 588 views
-
-
ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட் காலி மைதானத்தை இலங்கை அணிக்கு சாதகமானதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணம் பாதிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. அல்ஜசீரா தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ள விவரணச்சித்திரத்தில் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன. புலனாய்வு செய்தியாளர் ஒருவர் ஆட்டநிர்ணய சதியில் ஆர்வமுள்ள வர்த்தகர் போன்று நடித்து காலி சர்வசே மைதானத்தின் அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார். முன்னாள் வீரர் ஒருவரும் தற்போது விளையாடும் வீரர் ஒருவரும் அந்த பத்திரிகையாளருடன் இது குறித்து பேசியுள்ளனர். …
-
- 2 replies
- 539 views
-
-
தர்ஜினியின் கோல் மழையுடன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை தர்ஜினியின் கோல் மழையுடன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை அபிவிருத்தி அணிகள் வெற்றிகளைப் பெற்று, தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளன. சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக இலங்கை தேசிய அணிக்கு பயிற்சியை வழங்கும் நோக்கில் இடம்பெறும் இந்த நட்பு ரீதியிலான தொடரில் இலங்கை தேசிய அணி, சிங்கப்பூர் தேசிய அணி, இலங்கை அபிவிருத்தி …
-
- 1 reply
- 703 views
-
-
36 வயதினிலே... தோனி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! #DhoniFitness இரண்டாண்டு தடைக்காலம் முடிந்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ், மீண்டும் ஒருமுறை வெற்றியை ருசி பார்த்திருக்கிறது. விளையாடப் போகிறவர்களுக்கான பட்டியலை வெளியிட்ட நாள் தொடங்கி, கடைசி நாள்வரை, சென்னை அணியின் மேல் வைக்கப்பட்ட முக்கியமான ஒரு விமர்சனம், `டீம்ல 9 பேர் 30 வயதைத் தாண்டினவங்க... இவங்க எப்படி எனர்ஜெட்டிக்கா விளையாடி கப்பை தட்டிட்டுப் போவாங்க?' என்பதுதான். நேற்று ஐ.பி.எல் கோப்பையை வென்ற பிறகு, கேப்டன் தோனி பேட்டி ஒன்றில் 'வயது என்பது வெறும் எண்ணிக்கைதான்' (Age is Just a Number) என்று கூறி அந்த விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்திருந்தார். எந்த ஓர் அணிக்கும் கேப்டன்தான் த…
-
- 0 replies
- 564 views
-
-
ஐபிஎல் டி 20 தொடர்: தோனி, ரெய்னா, ஜடேஜாவை தக்கவைத்தது சென்னை அணி; பெங்களூரு அணியில் நீடிக்கிறார் விராட் கோலி தோனி - THE HINDU ஐபிஎல் டி 20 தொடரின் 11-வது சீசனுக்கான வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் மீண்டும் திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது. இவர்களில் அதிகபட்சமாக தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள வீரர்களை வரும் 27-ம் தேதி நடைபெறும் ஏலத்த…
-
- 133 replies
- 16.8k views
-
-
ஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? பகிர்க படத்தின் காப்புரிமைANDY LYONS ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் வண்ணமயமாக நடக்கிறது. ஐபிஎல் என்றவுடன் நமக்கு நினைவு வருவது என்ன? வெவ்வேறு ஜெர்ஸியில் அயல்நாட்டு வீரர்கள், இரைச்சல், இசை நிறைந்த கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் தங்களது அணியையும், அணியின் ரசிகர்களை உற்சாகமூட்டுவதற்காக சியர் லீடர்ஸ் என அழைக்கப்படும் நடனமாடுபவர்கள் மற்றும் இந்திய அணிக்குள் நுழைவதற்காக தங்களது முழுத்திறனை வெளிப்படுத்தி அணித் தேர்வாளராக்களை கவர முயற்சிக்கும் இளம் இந்திய வீரர்கள். ஐபிஎல் அணிகள் குறித்தும், இறுதிப் போட்டியில் எந்த அணி வெல்லக்கூடும் என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போவதில்லை. ஒவ்வொர…
-
- 3 replies
- 1.1k views
-
-
`கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து' - ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்த ஆப்கன் அதிபர்! கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து ரஷீத் கான் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்தவர் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான். ஸ்பின்னர் என்ற பார்வையில் ஐபிஎல்லில் நுழைந்த ரஷீத் கான் தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதனை உலகுக்குக் காட்ட பல போட்டிகளில் முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து போரடிய அவருக்கு, நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டி கைகொடுத்தது. ந…
-
- 3 replies
- 908 views
-
-
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி ஒன்றில் ஸ்பாட் பிக்சிங்: அல்ஜசீரா வீடியோவால் பரபரப்பு படம். | ஏ.பி. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 2017-ல் ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் நடந்ததாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: அல்ஜஸீரா டிவி சேனல் ஆவண வீடியோ ஒன்றில் ராஞ்சியில் இந்தியா-ஆஸ்திரேலியா 2017 தொடரில் ஆடிய டெஸ்ட் போட்டி பற்றி காட்டப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் ஒரு கட்டத்தில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சூதாட்டக்காரர்களின் நலன்களுக்காக ஸ்கோர் செய்தத…
-
- 0 replies
- 238 views
-
-
சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி - லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட் ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்…
-
- 1 reply
- 331 views
-