Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. செய்தித்துளிகள்: டி 20 ஆட்டங்களுக்கு சர்வதேச அந்தஸ்து சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோரும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறினார்கள். 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை உலகக் கோப்பை டி 20 தொடராக நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. 50 ஓவர் வடிவிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே கலந்து கொள்ளும். இம்முறை டி 20 உலகக் கோப்பை தொடராக நடத்தப்படுவதால் இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்து கொள்ளும் …

  2. 104 நாடுகளுக்கு இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க முடிவு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு, இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் நடந்து வருகின்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயற்குழுக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, ஹொங்கொங், ஐக்கிய அரபு ராச்சியம் , ஓமான், நேபாளம் என, 18 நாடுகளுக்கு இருபதுக்கு…

  3. இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரராக டோனி சாதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின் போது 34 பந்தில் டோனி 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இந்த போட்டியில் ஓட்டங்கைளக் குவித்ததன் மூலம் டோனி இருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். http://globaltamilnews.net/2018/76583/

  4. ரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி Image courtesy - Getty Image பயென் முனிச் அணியுடனான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் முதல்கட்ட அரையிறுதியில் நடப்புச் சம்பியன் ரியெல் மெட்ரிட் பெரும் போராட்டத்துடன் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதில் இந்த ஐரோப்பிய பருவத்தில் போர்த்துக்கல் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறை ஒரு கோல் கூட போட தவறியுள்ளார். ஜெர்மனி கழகமான பயென் முனிச்சின் சொந்த மைதானமான அல்லியன்ஸ் அரேனாவில் இலங்கை நேரப்படி இன்று (26) அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் அந்த அணியினால் ஆதிக்கம் செலுத்த முடிந்தபோத…

  5. செய்தித்துளிகள்: துபாய் செல்லும் ஐபிஎல் எகிப்தில் நடைபெற்று வரும் எல் கவுனா சர்வதேச பிஎஸ்ஏ உலக சீரிஸ் ஸ்குவாஷ் தொடரின் கால் இறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 4-11, 8-11, 2-11 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் லாரா மாஸரோவிடம் தோல்வியடைந்தார். இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவண், வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆகியாரது பெயர்கள் அர்ஜூனா விருதுக் காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 12-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிக், 140-ம் நிலை வீரரான சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிஸானிடம் 2-6, 6-1, 3-6 என்ற செட் கணக்…

  6. ஓய்வு பெறும் திட்டம் இல்லை- ஷரபோவா உறுதி ஓய்வுக்கு என்று காலக்கெடு எதுவும் நான் நிர்ணயித்து கொள்ளவில்லை என உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா கூறியுள்ளார்.#MariaSharapova மாஸ்கோ: உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாத தடைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் களம் திரும்பினார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 31 வயதான ஷரபோவாவின் ஆட்டம் முன்பு போல் சிறப்பாக இல்லாததால் அவர் ஓய்வு பெறக்கூடும் என்று பேச்சு எழுந்த…

  7. சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகால அரையிறுதியின் முதல் கட்டமாக இடம்பெற்ற ரோமா அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் அணி 5-2 என்ற கோல்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இடம்பெற்று முடிந்த காலிறுதியில் லிவர்பூல் அணி, மென்சஸ்டர் சிடி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகிய அதேவேளை, ரோமா அணி பலம்மிக்க பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்து அரையிறுதிக்குத் தெரிவாகியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதியின் முதல் கட்டப் போட்டி லிவர்பூல் அணியின் சொந்த மைதானமான என்பீல்ட் அரங்கில் இட…

  8. 2019- உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதல் உலகக் கோப்பை (2019) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 4- ந் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ந் தேதி நிறைவடைகிறது. கொல்கத்தாவில் ஐ.சி.சி செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது அதன்படி,பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 16-ந் தேதி இந்தியா மோதுகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் முதல் ஆட்டம் ஜூன் 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பின்னர் 15 நாள…

  9. கோலியை தேடிச்சென்று ஒரு ஷாம்பைன் பாட்டிலை இருவரும் பகிர்ந்து குடிப்போம்; சச்சின் நெகிழ்ச்சி: எதற்குத் தெரியுமா? சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி : கோப்புப்படம் - படம்: ஏஎப்ஃபி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நேரில் தேடிச் சென்று ஒரு ஷாம்பைன் பாட்டில் மதுவை இருவரும் பகிர்ந்து குடிப்போம் என்று சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஏன், எதற்காக விராட் கோலியை தேடிச்செல்வேன் என்பதை மும்பையில் சமீபத்தில் நடந்த போரியா மஜும்தாரின் ‘லெவன் காட்ஸ் அன்ட் ல பில்லியன் இந்தியன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில் சச்சினும், விராட் கோலியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டனர். …

  10. பிரமிக்க வைத்த போல்ட்டின் கேட்சை முறியடிக்கும் கேட்சை எடுப்பேன்: புகழாரத்துடன் ஏ.பி.டிவில்லியர்ஸ் உறுதி ஏ.பி.டிவில்லியர்ஸ். - படம். | கே.முரளிகுமார். ஆர்சிபி அணிக்காக அன்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியை புரட்டி எடுத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் இதே போட்டியில் முக்கியக் கட்டத்தில் விராட் கோலியை வெளியேற்ற பவுண்டரி அருகே இன்னமும் கூட நம்ப முடியாத பிரமிக்க வைத்த கேட்சைப் பிடித்த டிரெண்ட் போல்ட்டின் முயற்சியை முறியடிக்கும் கேட்சுக்குச் செல்வேன் என்று கூறுகிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பீல்டிங்கைப் பற்றி முதன் முதலில் ஒரு வீரர் பேசுகிறார், அதுவும் அந்தக் கேட்சை முறியடிப்பேன் என்று கூறும் ஒரு ஆளுமை ஏ.ப…

  11. சச்சின் டெண்டுல்கர் : சாதனைகள் படைப்பதில் சரித்திரம் படைத்தவர் - 30 புள்ளிவிவரத் தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSUHAIMI ABDULLAH 1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிரா…

  12. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் முகமது சாலா இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா தட்டிச் சென்றுள்ளார். #EPL எகிப்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் ரோமா அணிக்காக விளையாடினார். அதன்பின் 2017-ல் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் லிவர்பூல் அணிக்கு மாறினார். 36.9 மில்லியன் பவுண்டுக்கு லிவர்பூல் அணி வாங்…

  13. போராட்டத்திற்கு மத்தியில் தேசிய சாதனை நிகழ்த்திய அனித்தா இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று(23) காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடி…

  14. இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, விலகல் முறையிலான கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை வென்றே இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது. இப்போட்டியை வேகமாக ஆரம்பித்த டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், தமதணியின் கிறிஸ்டியன் எரிக்சனின் உதையை அவரின் சக வீரர் டெலே அல்லி போட்டியின் 11ஆவது நிமிடத்திலேயே கோலாக்க ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. …

  15. `18 ஆண்டுகள் ஆகிவிட்டன'- 2019 க்குப் பிறகு ஓய்வை அறிவிக்கிறார் யுவராஜ் சிங் ``2019 உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவேன்'' என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 2011ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார் யுவராஜ் சிங். 2011 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது பெற்று அசத்திய இவர் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் இந்திய அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுஇருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் அவரது ஹோம்டவுன் பஞ்சாப் அணிக்காக ஆடிவருகிறார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அடுத்து இந்திய…

  16. இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்? இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை அணிக்கு தகுதியான சுழற்பந்து பயிற்சியாளர் ஒருவரினை தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரக் கிண்ண T20 தொடரினை அடுத்து இலங்கை அணியுடனான தனது முதல் பயிற்சி அவத்தையினை முடித்துக்கொண்டு தற்போது விடுமுறைக்காக அவுஸ்திரேலியா சென்றிருக்கும், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கொழும்பு வந்தடைந்த பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. விடயங்கள் இவ்வாறு இருக்க ThePapare.com ஆனது, இலங்கை அணிக்கு அட…

  17. 80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை 80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதன்முறையாக பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் 6 பதக்கங்களை வென்று இந்த வருடம் சாதனை படைத்தது. அவுஸ்திரேலிய குயிண்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த(15) ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்தது. இதன்படி, பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆதிக்கம் செலுத்தி…

  18. கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம் வடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­லி­ருந்தும் 138 தங்கப் பதக்­கங்­க­ளுக்கு குறி­வைத்து 2,500க்கும் மேற்­பட்ட வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்றும் 56ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டிகள் கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் 250 மில்­லியன் ரூபா செலவில் புதி­தாக பதிக்­கப்­பட்­டுள்ள ஓடு­பா­தையில் முத­லா­வது போட்­டி­யாக இப் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. இன்னும் ஒரு வாரத்தில் இதே அரங்கில் நடை­பெ­ற­வுள்ள கனிஷ்ட தெற்­கா­சிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான திறன்காண் போட்­டி­யாக கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டிகள் அமை­வதால் மெய்­வல்­லு­நர்­…

  19. அறியாத கங்குலி, தெரியப்படுத்திய சேவாக்; கிரெக் சாப்பல் செய்தது என்ன? பிப்.16, 2007, இலங்கைக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் 4வது ஒருநாள் போட்டியை முன்னிட்டு பயிற்சியாளர் கிரெக் சாப்பல், அருகில் தோனி, கங்குலி, தினேஷ் கார்த்திக், சேவாக். - படம். | கே.ஆர்.தீபக். இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் கிரெக் சாப்பலின் பயிற்சிக் காலக்கட்டத்தை இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம் என்று பலரும் வர்ணித்தது நினைவிருக்கலாம். கங்குலி கிரெக் சாப்பலை விரும்பி பயிற்சியாளராக ஏற்றுக் கொண்டார், ஆனால் கிரெக் சாப்பல் கங்குலியின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து அவரை தலைமைப…

  20. சிங்கர் கிண்ண தொடரிலிருந்து காலிறுதியுடன் வெளியேறும் யாழ். மத்திய கல்லூரி 19 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட “சிங்கர் கிண்ண” கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியொன்று இன்று (18) இப்பாகமுவவில் முடிவடைந்தது. இந்த காலிறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 148 ஓட்டங்களால் அதிரடியாக வீழ்த்தியிருப்பதுடன், இவ் வெற்றியோடு லைசியம் பாடசாலை சிங்கர் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினையும் பெற்றிருக்கின்றது. அணிக்கு 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டி…

  21. 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து டி20 கிரிக்கெட் பிரபலம் அடைந்து வரும் நிலையில் 100 பந்து கிரிக்கெடெ் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2020-ல் நடத்த திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒருநாள் கிரிக்கெட்டான 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டி20 ஓவராக மாறியது. தற்போது சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்குள் போட்டி முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களும் அதி…

  22. மற்றவர்களை விட சேவாக்தான் எனக்கு பேட்டிங் பற்றி அதிகம் கற்றுக் கொடுத்தார்: ஆஸி. பயிற்சியாளர் ட்ரெண்ட் உட்ஹில் புகழாரம் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து 122 ரன்கள் விளாசியபோது சேவாக் ஆடிய ஷாட்டை தோனி பார்க்கிறார். - படம். | விவேக் பெந்த்ரே. ட்ரெண்ட் உட்ஹில் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம், அவர் சுமார் 10 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்தரப்பட்ட வீர்ர்களுடன் பணியாற்றி வருகிறார். இதில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, சேவாக், ஏ.பி.டிவில்லியர்ஸ், கெவின் பீட்டர்சன், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் குறிப்…

  23. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயன் மியூகின் (FC Bayern München ) அணி! ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு பயன் மியூகின் அணி முன்னேறியுள்ளது. ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்ட தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், லெவகுசன் கழகத்தை 6 க்கு 2 என்ற கோல் கணக்கில் பயன் மியூனிக் கழகம் வெற்றிகொண்டது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் 3 மற்றும் 9 ஆவது நிமிடங்களில், ரெபேர்ட் லவண்டொஸ்கி இரண்டு கோல்களைப் போட்ட நிலையில், பயன்மியூனிக் கழகம் முன்னிலை பெற்றது. 16 ஆவது நிமிடத்தில் வெலகுசன் கழகம் சார்பில் கோல் ஒன்று போடப்பட்ட போதிலும், முதல் பாதியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கி…

  24. அவுஸ்திரேலியாவின் அடுத்த பயிற்சியாளர் யார்? அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், தென்னாபிரிக்காவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததிலிருந்து அடுத்த பயிற்சியாளருக்கான தேடல்கள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கின்றன. குறித்த போட்டியைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி அடுத்து பங்கேற்கவுள்ள தொடர் இவ்வாண்டு ஜூன் மாதமே இடம்பெறவிருக்கின்ற நிலையில் உடனடியாக பயிற்சியாளரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லாததால், இதற்கான காலத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எடுத்துக் கொண்டு, அணியின் பெறுபேறு, அணியின் கலாசாரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அடுத்த பயிற்சியாளரை …

  25. ‘அரசியல்வாதிகளால் கிரிக்கெட் துறைக்கு அழிவு’ அரசியல்வாதிகள் இலங்கை கிரிக்கெட் துறை அழிக்கப்படுவதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஒருவருடத்திற்குள் மாத்திரம் இலங்கை அணியில் 60 புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் “ த எக்கொனமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் அரசியல்வாதிகளின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது. கிரிக்கெட் தொடர்பில் குறைந்த அறிவு அல்லது அறிவில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.