விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
வாசிம் அக்ரமை அசத்திய பாக். இடது கை வேகப்பந்து வீச்சு சிறுவன்: வைரலான வீடியோ வாசிம் அக்ரமை அசத்திய அதே பாணி இடது கை வேகப்பந்து வீச்சு பாக்.சிறுவன். - படம்.| ட்விட்டர். தனது பயங்கரமான இன்ஸ்விங்கர்கள் மற்றும் யார்க்கர்களால் உலக முன்னணி பேட்ஸ்மென்களை நிலைகுலையச் செய்த வாசிம் அக்ரம் அசந்து போகும் வகையில் பாகிஸ்தான் சிறுவன் ஒருவர் தனது இடது கை வேகப்பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் அந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் போலவே வீசியதும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த வாசிம் அக்ரம் தன் ட்விட்…
-
- 0 replies
- 372 views
-
-
ஜாம்பவான் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீசை 115 ரன்னில் சுருட்டியது யுஏஇ கெய்ல், சாமுவேல், லெவிஸ் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை 115 ரன்னில் சுருட்டியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். #WIvUAE ஜிம்பாப்வேயில் வருகிற 4-ந்தேதி உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் தொடங்குகிறது. இதற்கு முன் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. உலகக்கோப்பைக்கு தகுதி பெற வேண்டிய கட்டாயம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி கிறிஸ் கெய்ல், சாம…
-
- 1 reply
- 323 views
-
-
தோனியின் இடத்துக்குக் குறிவைக்கும் கே.எல்.ராகுல்...?! விஜய் ஹசாரே டிராபி ஃபைனல்... டாஸ் போட வந்திருந்த கருண் நாயர் ``கே.எல் ராகுல் இன் ஃபார் சி.எம்.கௌதம்" என்று சொன்னபோது பெரிதாக யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படவில்லை. இலங்கையில் நடக்கும் முத்தரப்புத் தொடருக்கு முன்பாக ஒரு பயிற்சிப் போட்டி என்று சிலர் நினைத்தனர். `இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு' என்று சிலர் கருதினர். ஆனால், இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், தோனியின் இடத்துக்கு ராகுல் வைத்த குறியாகவும் இது தெரிகிறது. தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பிய ராகுல், விஜய் ஹசாரே கோப்பையின் லீக் சுற்றில் பங்கேற்றார். முதல் போட்டியில் ஓ…
-
- 0 replies
- 787 views
-
-
இருமுறை சாம்பியன், 2019 உ.கோப்பைக்காக தகுதிச்சுற்றில் ஆடும் மே.இ.தீவுகள்- ரசிகர்கள் வேதனை 1979 உலகக்கோப்பையுடன் கிளைவ் லாய்ட் 1975, 1979 உலகக்கோப்பை சாம்பியன்களான மே.இ.தீவுகள் 2019 உலகக்கோப்பைக்காக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வரும் ஞாயிறன்று ஹராரேயில் களமிறங்குவது மே.இ.தீவுகளின் தீவிர ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. தலைசிறந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் தனிப்பட்ட வருமானம் ஆண்டுக்கு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், ஆனால் மே.இ.தீவுகளின் நிலையோ இன்று அது ஆதிக்கம் செலுத்திய ஒரு வடிவத்தில், தோற்கடிக்க முடியாத அணியாக இருந்த வடிவத்தில் தகுதிச்சுற்றுக்குப் போராடும் நிலை. கெய்ல், பிராவோ,…
-
- 0 replies
- 171 views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 கால்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற மர்ஸெய் அணியுடனான போட்டியில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. இப்போட்டியின் 10ஆவது நிமிடத்தில் கிலியான் மப்பே பெற்ற கோல் காரணமாக பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றதுடன், பின்னர் நேமரின் பந்துப் பரிமாற்றமொன்றை மர்ஸெய்யின் வீரர் றொலண்டோ போட்டியின் 27ஆவது நிமிடத்தில் தனது கோல் கம்பத்துக்குள் செலுத்த தமது முன்னிலையை பரிஸ் ஸா ஜெர்மைன் இரட்டிப்பாக்கிக் கொண்டதுடன், நேமர் கொடுத்த பந்தை எடின்சன் கவானி போட்டியின் 55ஆவது நிமிடத்தில் கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. இப்போட்ட…
-
- 3 replies
- 510 views
-
-
இளம் தலைமுறையினர் கிராண்ட்ஸ்லாம் பல வெல்வது கடினம் இன்றைய இளம் தலைமுறையினர் தன்னைப் போலவும், நடால் மற்றும் ஜோகோவிச்சைப் போலவும் பல்வேறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வது கடினம் என்று ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் 18-ஆவது லெளரியஸ் உலக விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் '2017-ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்', 'சிறந்த மீண்டு வந்த வீரர்' ஆகிய இரு விருதுகளை ஃபெடரர் வென்றார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்றைய இளம் தலைமுறையினர் என்னைப் போலவும், சக வீரர்களான நடால், ஜோகோவிச் போலவும் பல கிராண்ட்…
-
- 0 replies
- 320 views
-
-
கங்குலி Vs சேப்பல் அத்தியாயம் எங்கு தொடங்கியது? ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 1 #ACenturyIsNotEnough "ஐந்து ஆண்டுகள் இந்த அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன். செங்கல் செங்கலாக இந்த அணியை உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய பேட்டிங் பொசிஷன்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். இந்திய வீரர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக எதிரணி கேப்டன்களோடு சண்டையிட்டிருக்கிறேன். இந்திய அணியை சுமார் 200 போட்டிகளில் வழிநடத்தியுள்ளேன். ஆனால், இப்போது திடீரென்று அணியைச் சீரழிப்பவனாக மாறிவிட்டேனா...?" - இது கங்குலியின் ஆதங்கம். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆளுமை, எதற்கும் அடங்காத அந்த வங்கப்புலி, சரத் பவார் சொன்ன வார்த்தைகளால் ஆட…
-
- 2 replies
- 1.3k views
-
-
மேற்கிந்தியத் தீவுகளை வென்றது ஆப்கானிஸ்தான் சிம்பாப்வேயின் ஹராரேயில் நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் பயிற்சிப் போட்டியொன்றில், 29 ஓட்டங்களால் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி மேற்கிந்தியத் தீவுகளை ஆப்கானிஸ்தான் வென்றது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், குல்படின் நைப் 48 (38), சமியுல்லா ஷென்வாரி ஆட்டமிழக்காமல் 42 (55) ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு, 140 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 26.4 ஓவ…
-
- 0 replies
- 221 views
-
-
ஜனாதிபதியை விஞ்சவிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஊதியம்! இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியத்தை ரூ.12 கோடியாக உயர்த்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலுள்ள கிரிக்கெட் வாரியங்களில் அதிக வருமானம் ஈட்டும் வாரியங்களில் ஒன்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே இதற்குக் காரணமாகும். போட்டி ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்ஷர்ஷிப், ஐ.பி.எல் எனப் பல்வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது, இந்தியக் கட்டுப்பாட்டு வாரியம். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் …
-
- 0 replies
- 422 views
-
-
விராட் கோலியின் கேப்டன் திறமை தீயாக பரவுகிறது: ரவி சாஸ்திரி புகழாரம் ரவி சாஸ்திரி, விராட்கோலி (கோப்புப் படம்) கேப்டன் விராட் கோலியின் திறமை நாளுக்கு நாள் தீ போல் வளர்ந்து, அணியில் பரவி வருகிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி வெற்றியுடன் நாடு திரும்பியது. கடந்த 1992-ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பல முறை தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போதிலும் ஒருமுறைகூட தொடரை வென்றதில்லை. முகம்…
-
- 0 replies
- 199 views
-
-
1,800 கோடிப்பே.. நெய்மர் காயம்... பி.எஸ்.ஜி மீது கடுப்பாகும் பிரேசில்! பட்ட காலிலே படும் என்பது நெய்மருக்குப் பக்காவாகப் பொருந்தும். கடந்த ஞாயிற்றுக்கிழமை Ligue 1 தொடரில் மார்சிலிக்கு எதிரான போட்டியின்போது நெய்மர் காயமடைந்தார். அனல் பறக்கும் ஆட்டம் இல்லை; ஆக்ரோஷமான டேக்கிள் இல்லை; ஆனாலும், அவர் கீழே விழுந்தார். வலது காலின் முன்பாதப் பகுதியை எசகுபிசகாக தரையில் ஊன்றி விட, வலியால் துடித்தார். களத்துக்குள் பிசியோ வந்தார். பெயின் கில்லர் பயனளிக்கவில்லை. ஸ்ட்ரெச்சர் வந்தது. நிலைமை சீரியஸ். ஆம், நெய்மரின் முன்பாதத்தில் எலும்புமுறிவு (Metatarsal fracture), போதாக்குறைக்குக் கணுக்காலில் தசைப்பிடிப்பு. களத்திலிருந்து ந…
-
- 0 replies
- 352 views
-
-
அபாரமான பீல்டிங்கால் நியூசிலாந்தை 223 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து நியூசிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை 223 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகி…
-
- 1 reply
- 431 views
-
-
விராட் கோலி கொஞ்சம் ஓவர்தான்... தோனி கிரேட் லீடர், வின்னர்: ஸ்டீவ் வாஹ் கருத்து கோலி, தோனி. - கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே. நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷ நடத்தை கொஞ்சம் ஓவர்தான், ஆனால் அப்படித்தான் வளர முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார். தான் கேப்டனாக இருந்த காலத்தில் பொய் கூறியாவது டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும் என்ற ஸ்டீவ் வாஹின் கொள்கைகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் விதந்தோதி மகிழ்ந்தன. பிரையன் லாராவுக்கு தரையில் பட்டுக் கேட்ச் எடுத்து உண்மையான கேட்ச்தான் என்று சாதித்தார் ஸ்டீவ் வ…
-
- 0 replies
- 322 views
-
-
தேசிய மட்டத்தில் சம்பியனாகிய யாழ் சென் ஜோன்ஸ் இளம் அணி Your browser does not support iframes. அணித் தலைவர் ஏ. அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு 13 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான பிரிவு இரண்டுக்கான தேசிய மட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸை வென்ற யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரின் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாழ் தரப்பினர், கலஹிட்டியாவ மத்திய கல்லூரியை எதிர்கொண்டது. கோட்டை, ஆனந்த ஷாஸ்த்ராலயா மைதானத்தில் இன்று (26) நடைபெற்ற நான்கு இன்னிங்ஸ்கள் கொண்ட இந்தப் போட்டியிலும் சென் ஜோன…
-
- 2 replies
- 400 views
-
-
16 வயது ஆப்கான் ஸ்பின்னர் முஜீப் ஸத்ரானிடமிருந்து வித்தைகளைக் கற்க விரும்புகிறேன்: அஸ்வின் ஓபன் ரவிச்சந்திரன் அஸ்வின். - படம். | பிடிஐ. இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறாததால் தூக்கத்தை இழந்து விடாத அஸ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பு சவாலானது என்றும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கு ஐபிஎல் கிரிக்கெட்டை நடைமேடையாகப் பயன்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். “இந்த ஐபிஎல் தொடரை இந்திய அணிக்குள் திரும்புவதற்கான ஒரு நடைமேடையாக பாவிக்கப் போவதில்லை., ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குள் என்ன மனநிலையில் நுழைந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். இந்த ஐப…
-
- 0 replies
- 309 views
-
-
`கூல்’ கேப்டன் தோனி கோபப்பட்ட`ஆங்ரி பேர்ட்' தருணங்கள்! ஆக்ரோஷ ஆக்ஷன்கள் எல்லாம் தன் அகராதியிலேயே இல்லை என்பதுதான் தோனியின் கேரக்டர். கடந்த 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், மகேந்திர சிங் தோனியின் அணுகுமுறை என்பது புத்திக்கூர்மைகொண்ட ஒரு புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்று தக்க பாதுகாப்பானதாக இருக்கும். ஆம், எதிரணிகளின் ஸ்லெட்ஜிங் பிரெஷர் பூச்சாண்டி எல்லாவற்றையும் பில்டப் இல்லாமல் ஹேண்டில் பண்ணுவதுதான் தோனியின் சிறப்பம்சம்! அதேசமயம், அவ்வப்போது சிங்கத்தைச் சீண்டிப்பார்க்கும் சில வீரர்களை தண்டிக்கவும் தவறியதில்லை. `தோனியின் `கோபம்'ங்கிறது வேலூர் வெயில்ல குளிர்க்காய்ச்சல் வருவது மாதிரி ஒவ்வொருத்தரையும் வித்தியாசமா டீல் செய்யும்.' 2016-…
-
- 0 replies
- 615 views
-
-
சிந்திக்க முடியாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது: கிரெக் சாப்பலை விளாசிய ‘தாதா’ கங்குலி கங்குலி, கிரெக் சாப்பல். - கோப்புப் படம். | வி.கணேசன். ‘எ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்’ என்ற சுயசரிதை புத்தகத்தில் இந்திய முன்னாள் கேப்டன் ‘தாதா’ கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பலை கடுமையாகச் சாடியுள்ளார். கிரெக் சாப்பல் பயிற்சியாளராக வருவதை பெரிதும் விரும்பியவர் கங்குலி, ஆனால் கங்குலி கேப்டன்சி போனதோடு, அணியிலும் நீடிக்க முடியாத நிலை கிரெக் சாப்பல் பயிற்சி காலக்கட்டத்தில் அவருக்கு ஏற்பட்டது. 2005 முதல் 2007 உலகக்கோப்பை வரை …
-
- 0 replies
- 314 views
-
-
`விடைபெறுகிறது தென்னாப்பிரிக்க வேகம்' - மோர்னே மார்கல் அதிர்ச்சி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாகத் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல் அறிவித்துள்ளார். தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல். 2006-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், பிற்காலத்தில் ஸ்டெய்னுடன் கூட்டணி அமைத்து எதிரணிகளைத் திணறடித்தார். கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமான பௌலராக இருந்த இவர், இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து 529 வீழ்த்தியுள்ள இவர் தற்போது தனது ஓய்…
-
- 0 replies
- 412 views
-
-
சங்கக்காரா, மிஸ்பா, அப்ரீடி, மலிங்கா வரிசையில் இணைந்த ரோஹித் சர்மா வெற்றிக்களிப்பில் ரோஹித் சர்மா. - படம். | ஏ.பி. முதுகுவலி காரணமாக விராட் கோலி ஆடவில்லை என்பதால் கேப்டன்சி செய்த ரோஹித் சர்மா கேப்டன்சியில் தானும் சளைத்தவரல்ல என்பதை அறிவுறுத்தும் விதமாக சிறு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நேற்று கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்களில் வீழ்த்தி டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ரோஹித் சர்மா கேப்டனாக 4வது டி20 போட்டியில் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஷாகித் அஃப்ரீடி, சர்பராஸ் அகமட், இலங்கையின் குமார் சங்கக்…
-
- 0 replies
- 340 views
-
-
மாறுவேடத்தில் சென்று கங்குலி ருசித்த கபாப்: தனியே செல்லாதீர்கள், அன்புடன் கண்டித்த பர்வேஸ் முஷாரப் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் - கோப்புப் படம் பாகிஸ்தானில், மாறுவேடத்தில் சென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கபாப், பிரியாணி சாப்பிட்டுள்ளார். தனியாக செல்லாதீர்கள் என்று முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தொலைபேசியில் கங்குலியை அழைத்து கண்டித்துள்ள ஸ்வரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தனது சுயசரிசையை எழுதியுள்ளார். “ ஏ சென்சுரி இஸ் நாட் எனப்” என்ற தலைப்பில் அந்த நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த …
-
- 0 replies
- 311 views
-
-
இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் விருது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதுக்கு தேர்வு பெற்றதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுக்கான கதாயுதத்தை கேப்டன் விராட் கோலியிடம் வழங்கும் (இடமிருந்து) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிரீம் பொல்லாக். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐசிசி-யின் டெஸ்ட் சாம்பியன் ஷிப் விருது வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட்…
-
- 0 replies
- 355 views
-
-
டெய்லர் சதம், லாதம் 79-க்குப் பின் சாண்ட்னரின் எதிர்பாரா அதிரடியில் நியூஸி. வெற்றி சதமெடுத்த ராஸ் டெய்லர். - படம். | ஏ.எஃப்.பி. ஹாமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் உற்சாகமாகத் திரும்பியுள்ள அதிரரி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் சாண்ட்னரிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ரூட்- 71 பட்லர் அதிரடி 79 ஆகியவற்றுடன் 50 ஓவர்க…
-
- 0 replies
- 241 views
-
-
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது - நார்வே முதலிடம் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வந்த 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக நிறைவடைந்தன. #WinterOlympics2018 #Closingceremony #Pyeongchanggames பியாங்சங்: 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 93 நாடுகளை …
-
- 0 replies
- 276 views
-
-
சமிந்த வாஸிடமிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20 தொடர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடாத்தப்படுகின்ற மிகப் பெரிய போட்டித் தொடராக இது அமையவுள்ளது. எனினும், இப்போட்டித் தொடரில் இலங்கை அணியுடன் மோதவுள்ள பிரபல இந்திய அணி, இலங்கை அணியை அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அண்மைக்காலமாக வீழ்த்தி ஆதிக்கம் …
-
- 0 replies
- 233 views
-
-
மகாஜனா - ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று வடக்கின் பிரபல பாடசாலைகளான மகாஜனா கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இப்போட்டியானது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மைதானத்தில் இரு நாட்கள் நடைபெறவுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விரு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சமரானது இம்முறை 18ஆவது முறையாகவும் நடத்தப்படுகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையில் இதுவரை 17 பெரும் சமர் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மகாஜனா கல்லூரி அணி 5 முறையும் ஸ்கந்த…
-
- 3 replies
- 545 views
-