எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3793 topics in this forum
-
இத்தகவலானது வன்வளைக்கப்பட்ட தமிழீழத் தலைநகர் திருமலையிலிருந்த சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பிய தமிழீழப் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய்வுப் பிரிவில் ஊர்தி ஓட்டுநராக பணியாற்றிய போராளியின் வாக்குமூலம் ஆகும். இப்போராளி 2009 சனவரி மாதம் குடும்பச் சிக்கல் காரணமாக உறவினர்களாலையே காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிபட்டார். பின்னர் சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பியோடினார். இவர் 2022ம் ஆண்டு வழங்கிய ஓர் வாக்குமூலத்தின் ஒரு பகுதியிலிருந்த தகவலே இங்கு கட்டுரையாக்கப்பட்டுள்ளது. குறித்த வேடர் இனப் போராளியும் தமிழீழ புலனாய்வுத்துறையில் கடமையாற்றிக் கொண்டிருந்தவர் ஆவார். அவரும் சூடைக்குடாவிலிருந்து தப்பிய போராளியும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாவர். அவ் வேடர் இனப் போராளியை இவர் சிறை…
-
- 1 reply
- 163 views
-
-
எங்கட சனத்துக்கு என்ன வழிகளில் எல்லாம் சாவுகள் வருகுது. மருத்துவ நண்பர் சலித்து கொள்கிறார். என்னாச்சு டொக்டர்? நேற்று இரவு 40 சனத்துக்கு மேல சாகிற நிலையில் கொண்டு வந்தாங்கள். அவ்வளவு பேரும் கண்டங்கருவளலை பாம்பு கடிச்ச கேஸ். ஒரே இரவில ஒரே நேரத்தில இவ்வளவு சனமும் பாம்புக்கடியால சாக கிடக்குதுகள். அந்த விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர் நடந்த சம்பவத்தை கூறத்தொடங்கினார். தர்மபுரம் சந்தியில இருந்து கல்மடு போற பாதையில இருக்கிற இடங்கள் எல்லாம் சனம் இருக்குதுகள். எது மேட்டு நிலம் எது தாழ் நிலம் என்று எதையும் சிந்திக்க முடியாத நிலமை. எங்கையாவது தங்கிட வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் மக்களுக்கு இருந்தது. சனம் தறப்பாளை போட்டு இருக்குதுகள். திடீர் என்று மழை பெய்ததும் தாழ்நி…
-
- 0 replies
- 161 views
-
-
இன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாள். தமிழீழ மாணவர்களிடையே புரட்சிகர விடுதலைக் கருத்தூட்டல்களுடனான தமது உரிமைகளுக்காக்குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. இந்த நாளை எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியும் ”எதிரியிடம் உயிரோடு பிடிபடுவதை விட உயிரை மாய்ப்பதே மேல்” என்ற சித்தாந்தத்துக்கு நஞ்சுண்டு தன் உயிரை விதையாக்கி, உயிரூட்டிய பெருமகனுமாகிய பொன்சிவகுமாரின் நினைவுகளைச் சுமந்தபடி மாணவர்கள் எழுச்சி கொள்ளும் நாள். இந்த நாளில் மாணவர்களுக்கென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப் பிரிவு ஒன்று இயங்கியதும் அதன் செயற்பாட்டு நிகழ்நிரல்கள் எவ்வாறு அமைந்தன என்பது பற்றியும் எனக்கு நினைவிருப்பவற்றை இப்பத்தியில் தொகுத்துள்ளேன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு பக்கங்க…
-
- 0 replies
- 160 views
-
-
இந்தக் கானொளியை 02.02.2009அன்று புதுக்குடியிருப்பு வைத்திய சாலை முன்பாக காலை 10.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது Sony170 Camera மூலம் ஒளிப்பதிவு செய்தேன். எனது ஊடக வாழ்க்கையில் மிகவும் ஆபத்தானதும் எனது வாழ் நாளில் மறக்க முடியாததும் தெய்வாதீனமாக நான் உயிர் தப்பியதுமான இந்தக் காணொளியை இன்றைய நாளில் நினைத்துப் பார்க்கிறேன். ஏற்கெனவே உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுக்கொண்டிருந்தனர். 06.02.2007 அன்று நள்ளிரவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது வைத்தி…
-
- 0 replies
- 140 views
-
-
வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களை 2009 இதே நாளில் தான் இறுதியாக சந்தித்தேன். மூலம்:- புவியரசன். 2009 மே 14 மதியம் ஒரு மணிக்குப்பின்னர் இறுதியாக எனது போர்க்கால ஊடகப்பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம். வழமை போலவே மக்கள் மீதான தாக்குதல்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் வீடியோ எடுத்துவிட்டு, அதனை வெளியில் அனுப்புவதற்காக முகாமுக்குச் செல்கிறேன். மக்கள் மணித்தியாலயத்திற்கு மணித்தியாலம் எவ்வாறு தமது பதுங்கு குழிகளை எப்படி இடம் மாற்றினார்களோ அதே போலத்தான் விடுதலைப்புலிகளும் தமது இடங்களை மாற்ற வேண்டிய நிலை. ஒவ்வொரு நாளும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 13ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைக் களஞ்சிய வெடி விபத்தில் என்னுடைய வீடும் அதில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள…
-
- 0 replies
- 139 views
-
-
எழுத்தாளர்: புரட்சி தமிழன் இவர்களை பலருக்கு தெரியாது. அவர்களுடைய வீட்டினருக்கு கூட போராளியென்பது தெரியாது, அருகில் இருந்தவர்களுக்கு கூட போராளி என்பது தெரியாது. ஏனைய படையணி போராளிகளுக்கு கூட தெரியாது. பிரிகேடியர் கடாபியின் நேரடி ஆயுதபயிற்சியில் மிக குறுகிய காலத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற அணி. எந்த ஒரு ஆயுத்தையோ அல்லது ஒரு இயந்திரத்தையோ இலகுவாக கையாளகூடிய அனைத்து துறை சார் அறிவையும் பெற்றவர்களாக இருந்தார்கள். வளமான தமிழீழத்தை கட்டமைக்கும் நோக்கில் நெறிப்படுத்தபட்டார்கள். பலர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பட்டபடிப்பை மேற்கொள்ள அனுப்பபட்டனர்.சிலர் இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே பல்வேறு வேலைகளுக்காக அனுப்பபட்டனர். சிலர் மரணமடைந்த பின்னர்தான் போராளியாக இருந்திருக்கிறான் என்பது பலர…
-
- 0 replies
- 136 views
-
-
"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" காலனித்துவ ஆட்சிக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை இன்னும் கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறது: பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? குழந்தைகள் பயத்திலிருந்து விடுபட்டுள்ளார்களா? நீதி சமமானதா? நிலம் திருப்பித் தரப்படுகிறதா? நினைவு கூறல் ஒரு குற்றமா? பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு - சுதந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது, நீதி தாமதமாகிறது, மற்றும் நல்லிணக்கம் நிபந்தனைக்குட்பட்டதாக உள்ளது. உண்மையான சுதந்திரம் தொடங்குவது: உண்மை அடக்கப்படாதபோது, சட்டம் ஆயுதமாகாதபோது, பயம் இல்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும்போது. அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - நிறைவேறாத விடுதலையின் நினைவூட்டல்.…
-
- 0 replies
- 135 views
-
-
என் பெயர் சரோஜினி நாகநந்தன். நான் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கிறேன். என் மகன் – ராஜீவ் நாகநந்தன் – 17 செப்டம்பர் 2008 அன்று கடத்தப்பட்ட 11 ஆண் குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார். 1987 மார்ச் 30 அன்று பிறந்த என் மகன், கொழும்பிலுள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படித்தார். அவர் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். காணாமல் போன நாளின் மறுநாள் இங்கிலாந்து பயணிக்க திட்டமிட்டிருந்தார். அன்று இரவு, நண்பர்களுக்காக நாங்கள் பிரியாவிடை விருந்து வைத்திருந்தோம். அதன் பின்னர் தலைமுடி வெட்டவும், மற்றொரு நண்பரை சந்திக்கவும் என் மகனும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் காரில் புறப்பட்டார்கள். அவர்கள் சென்ற காரை கடற்படை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். சிறிது நேரத்தில் ர…
-
- 0 replies
- 134 views
-
-
போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வு என்பது, ஒரு தேசத்தின் நீடித்த போர் ஏற்படுத்திய ஆழமான காயங்களையும், அதிலிருந்து மீண்டுவர ஒரு சமூகம் மேற்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளையும் ஒருசேரப் பிரதிபலிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்ச் சமூகங்கள் பல்வேறு சமூக, பொருளாதார, உளவியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இவை குறித்த ஆழமான புரிதலுக்கு, நம்பத்தகுந்த தரவுகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே முன்வைக்கிறேன். 1. காணாமல்போனோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியும் நீதிக்கான தேடலும்: போருக்குப் பின்னரான மிக முக்கியமான மற்றும் ஆழமான சமூகக் காயங்களில் ஒன்று, காணாமல்போனோர் பிரச்சினை ஆகும். இலட்சக்கணக…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
வருடங்கள் கடந்தாலும் குத்திக்கிழிக்கும் ரணங்களாக ஈழத்தின் இறுதிப்போர் அமைந்து விட்டது. வன்முறையால் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நிரந்தரத் தீர்வுக்காய் இரவும் பகலும் தனிமையில் விம்மும் எங்கள் கண்ணீரின் நிறுவைகள் இன்னும்? போதவில்லையா? எப்படிக் கடந்து போகமுடியும்? இழந்துபோனவை இரத்தமும் சதையுமாய் உயிரோடு உயிரூட்டிய உயிர்களல்லவா? எத்தனை விதமான சாவுகள் கண்டோம். பதுங்குகுழியை மூடியது குண்டுகள். குற்றிகள் பாறிண்டு பிரண்டன. பாதுகாப்பு வலையங்கள் என அறிவித்த இடங்களில் தானே பதுங்குகுழிகளை அமைத்தோம். பிறகெப்படி குண்டுகளை கிபீர் விமானங்கள் கொட்டின? பாதுகாப்பு இடங்களை நோக்கி ஏன் ஆட்டிலெறித் தாக்குதல்கள்? பதுங்குகுழிகளுக்குள் சமாதியாகியோர் ஆயிரமாயிரம். மூடிய குழிகளைக் கிண்டிக்கிளறி எடுத்து…
-
- 0 replies
- 124 views
-
-
தங்கள் குடும்பங்களை பிரிகின்றனர் பல போராளிகள். “மூத்தவள் என்னோடு நிற்கட்டும் இளையவளைக் கூட்டிக்கொண்டு நீ அவன்ட கட்டுப்பாட்டுக்குள்ள போ முடிஞ்சால் பிறகு வந்து சந்திக்கிறன்” சில போராளிகள் இவ்வாறு தான் தமக்கானவர்களை வழியனுப்பினர். சில இணைகள் தம்முடன் வாருங்கள் என்று அழைக்க மனமற்று அழுகின்றார்கள். அவர்களும் வீர உச்சங்களின் இணைகள் அல்லவா? அதனால் கலங்கிய விழிகளோடு ஒரு பிள்ளையை என்றாலும் காத்துவிட வேண்டும் என்று எதிரியின் கட்டுப்பாட்டு நிலைகளை நோக்கி நகர்கின்றனர். சில இணைகள் தம்முடையவர்களை விட்டுப் போக முடியாது அழுது குளறிக்கொண்டிருக்கிறார்கள். இறுதிவரை உறுதியோடு களமாடிய வேங்கைகள் வர மறுக்கின்றனர். குழந்தைகள் கையைப் பிடித்து இழுக்கின்றனர். “அப்பா வாங்கோ / அம்மா வாங்கோ “ என்…
-
- 0 replies
- 114 views
-
-
பசியும் பல்லாயிரம் நினைவுகளும் இரத்த வாடையும் பிணங்களின் நாற்றமும் மட்டுமே எம்முள் எஞ்சி இருந்தது. வட்டுவாகல் பாலத்துக்கு சென்று முல்லைத்தீவில் சரண்டைவோம் என்று மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். நாமும் அவர்களுக்குள் கலந்து கொண்டோம். அங்கிருந்து வந்துகொண்டிருந்த சூட்டு வலு இப்போது நாம் வட்டுவாகல் பாலம் சென்றால் நிச்சயமாக சாவைத்தான் தரும் என்று உணர்த்தியது. அதனால் என்னுடைய காயப்பட்டு எங்களால் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்து மீட்டுக் கொண்டுவர முடியாது கைவிடப்பட்ட போராளி மைத்துனனின் இரு பிள்ளைகளையும் அணைத்தபடி நிலத்தில் விரித்திருந்த தறப்பாளில் படுத்துக் கிடக்கிறேன். அருகருகே பனங்கிழக்கு அடுக்குகளைப் போல மக்கள். மருமகனும் மருமகளும் பசியிலும் பயத்திலும் அழுதுகொண்ட…
-
- 0 replies
- 102 views
-
-
அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் கூட்டமாக எங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். புதுக்குடியிருப்பு முல்லை வீதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அடிக்கு மேல் அடி வைத்து நகரும் மக்கள் கூ…
-
- 1 reply
- 102 views
-
-
நான்கு பக்கமும் இராணுவம் முன்னேறி வந்துகொண்டிருந்தான். சிறிய நிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்காக மக்கள் நிரம் பிவழிந்தார்கள். நடப்பதற்குக் கூட முடியாது தள்ளுப்பட்டு ஒருவர்பின் ஒருவர் சென்றுகொண்டிருந்தோம். முள்ளிவாய்க்கால்போல் வட்டுவாகல் எமக்கு சாதகமாய் அமைந்திருக்கவில்லை. காடும் சேறும் சகதியுமாகவே இருந்தது. ஈரநிலத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என படுத்திருந்தார்கள். இராணுவம் முன்னேறிவர எமது பொருட்களையும் முன்னகர்த்திக் கொண்டே சென்று கொண்டிருந்தோம். விடுபட்ட பொருட்கள் எடுப்பதற்கென்று மீண்டும் திரும்பிச் சென்று எடுத்துவருவதும், மீண்டும் போவதுமாக இருந்தோம். இரண்டு கால்களிலும் காயப்பட்டு நடக்கமாட்டாத எம் உறவொருவரை தூக்கிச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால், எம்மால் அவரைத் தூக்கிச்செல்ல …
-
- 0 replies
- 93 views
-
-
வட்டுவாகல் பாலத்தில் கால் மடக்கி இருக்க முடியாத நெருக்கத்தில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கமும் இரத்த நாற்றம் எடுத்த வட்டுவாகல் நீரேரியின் நீர் மெலிதாக அசைந்து அசைந்து அந்த பாலத்தில் மோதிக் கொண்டிருக்கிறது. அதற்குள் குப்பைகளைப் போல என்னவோ எல்லாம் மிதந்து கொண்டிருந்தன. உயிரற்ற உடலங்கள் என்று விடியும்வரை எமக்குத் தெரியாது. இருண்டுவிட்ட எங்கட தேசத்தில இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக எதிரியிடம் சரண்டைய முண்டியடித்தபடி நிற்கிறார்கள். எம் தலைக்கு மேலாக முல்லைத்தீவில் இருந்து வீசப்படும் எறிகணைகள் எம்மைத் தாண்டிப் போய் வீழ்ந்து வெடிக்கின்றன. என் பிள்ளைகளைப் போல பாதுகாத்துவிடத் துடித்த என் மருமக்களை இறுக அணைத்தபடி நானும் ஒருவனாக அந்த நீண்ட கூட்டத்துக்குள் இருக்கிறேன்…
-
- 0 replies
- 79 views
-
-
இறுதி நாட்களில்...2009:மே:12 கப்பல் ரோட்டு எனப்படும் ஜோர்தான் கப்பல் கரையொதுங்கிய இடத்திற்குச் செல்லும் வீதியை அண்மித்தே எமது நிலைகள் அன்று பின்னகர்த்தப்பட்டிருந்தன. இரவுபகல் பாராது சண்டை நடந்தவண்ணமிருந்தது. அன்று மாலைதான் தெரிந்தது காலையில் நாம் இருந்த இடத்தையும் இராணுவம் கைப்பற்றிவிட்டதென்று. பரந்தன் முல்லை பிரதான வீதியில் நந்திக்கடலை அண்மித்த பகுதியை ஒட்டியிருந்த மக்களும் கடுமையான ஷெல்வீச்சின் காரணமாகவும் ரவைகளின் சூடுகள் அதிகமாக இருந்ததாலும் வட்டுவாகல் நோக்கி நகர்ந்து செல்வது ஓய்ந்துகொண்டிருந்தது. நாம் இருந்த இடத்தின் தரையமைப்பு மேட்டுப்பகுதி என்பதனால் எவரும் வெளியே நடமாடக்கூடாது என்று பொறுப்பாளர் சொன்னதால் எங்கும் போகாது பதுங்ககழிக்கு உள்ளேயே முடங்கினோம். சண்டை நட…
-
- 0 replies
- 78 views
-
-
எழுத்தாளர்: தமிழ்ப்பொடியன் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பருத்தித்துறையில் உள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையான ஹாட்லிக்கல்லூரியின் நூலகம் 1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா? 1984 ஆம் ஆண்டு செப்ரம்பர் 2 ஆம் திகதி. "பருத்தித்துறை படுகொலை" 18 பேர் சிறிலங்கா பொலிசாரால் பட்டப்பகலில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அத்தோடு ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தை எரித்தார்கள். சுமார் 7000 புத்தகங்களை எரித்து சாம்பல் ஆக்கினார்கள். நூலகத்தை எரிப்பதற்கு ஹாட்லிக்கல்லூரியின் ஆய்வுகூடத்தில் இருந்த இரசாயண திரவங்களை(acids) பாவித்தார்கள். ஆய்வுகூடத்தையும் உடைத்து எறிந்தார்கள். யாழ்நூலகம் எரிக்கப்பட்டது 1981. மூண்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும் ஒர…
-
- 0 replies
- 68 views
-
-
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார். அவர் கூறுகிறார், நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பத…
-
- 0 replies
- 67 views
-