அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும் கபில் ஜனநாயக வெளியை எதிர்கொள்வதில் தமிழர் தரப்பு எந்தளவுக்குப் பலவீனமான நிலையில் உள்ளது என்பதை, மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திச் சென்றிருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு. ஜனநாயக சூழலில் அரசியல் செய்வதில் தமிழர் தரப்பில் நிறையவே போதாமைகள் இருப்பதைப் போலவே, ஜனநாயக சூழலில் நினைவேந்தல்களை நடத்துவதிலும் கூட, தமிழர் தரப்பிடம் போதாமைகள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக் ஷவின் இறுக்கமான ஆட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பற்றி கரிசனைப்படாமல் இருந்தவர்கள் கூட, ஜனநாயக சூழலில், அதற்காக மோதத் தொடங்கியுள்ளார்கள். இ…
-
- 0 replies
- 530 views
-
-
ரஜினி அரசியலின் பேராபத்து அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களைப் பற்றி அதில் ஒரு குறிப்பு இருந்தது. அவர்கள் ஏன் கைதுசெய்யப்பட்டார்கள்; எதற்காக இந்தக் கைதுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன என்ற விவரணை அதில் இல்லை. என்ன காரணமாக இருக்கும் என்று இணையத்தில் துழாவியபோது கிட…
-
- 0 replies
- 538 views
-
-
நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்களுக்கு அவசியமா? ஜனாதிபதி, தனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற தோரணையில் முன்வைக்கப்படும் கருத்துகள், நிகழ்காலத்தில் வலுப்பெற்றிருக்கின்றன. அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொண்டு, அந்த அதிகாரக் குறைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தரப்பினர் கோரி வருகின்றனர். இது தொடர்பான பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் ம.வி.முன்னணி முன்வைத்திருக்கின்றது. ‘20ஆவது திருத்தம்’ என்ற பெயரில் கொண்டு வரப்படும் அரசமைப்புத் திருத்த முயற்சிகளுக்கு, இராசி இல்லை என்று கூறலாம். ஏனென்றால், இதற்கு முன்னர் இரு தடவைகள், 20ஆவ…
-
- 0 replies
- 368 views
-
-
மக்களின் தெரிவுக்கு அமையவே- சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவம்!! சம்பந்தனுக்குப் பிறகு, வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்கான தேவையொன்று தமிழர்கள் மத்தியில் எழுமென்பதை எவருமே மறுத்துக்கூற முடியாது. இணைந்த வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.இதையே தமது தாயக பூமியாகவும் அவர்கள் தொன்றுதொட்டுக் கருதி வருகின்றனர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்களின் இனப்பரம்பல் சிதை…
-
- 0 replies
- 598 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்த்துவது என்ன? நான்காவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் உணர்வுபூர்வமாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அனுஷ்டிக்கப்பட்டது. தமிழின வரலாற்றில் ஒரு சோக கலிங்கப்போர் நிகழ்வாக எழுதப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நேற்றைய தினம் வடகிழக்கிலுள்ள பல்லாயிரக்கணக்கான உறவுகள் ஒன்றுகூடி நினைவு கூர்ந்தார்கள். இந்த நிகழ்வில் இறுதியுத்தத்தில் மரணித்தவர்களின் ஆயிரக்கணக்கான இரத்த உறவுகள், அயல் உறவுகள், அரசியல்வாதிகள், பொதுஅமைப்புக்கள் ,மாணவர்கள், மதத்தலைவர்கள் என ஏகப்பட்டவர்கள் மதம், இனம், பிரதேசம் பாராது கலந்துகொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கா…
-
- 0 replies
- 669 views
-
-
ஒன்பது வருடங்கள் கடந்தும் கண்ணீருடன் பாதிக்கப்பட்டோர் நாட்டில் நிலவிவந்த 30 வருடகால யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. தென்னிலங்கை யுத்த வெற்றியை கொண்டாட வேண்டுமென வலியுறுத்தி வருகின்ற நிலையில் வடக்கு–கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது துன்ப–துயரங்களை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. மக்கள் தமக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரிப் போராடி வருகின்ற போதிலும் பதவியிலிருக்கின்ற அரசாங்கமானது அதனை தமது அரசியல் இருப்புக்களுக்கு ஒரு ச…
-
- 0 replies
- 344 views
-
-
நினைவேந்தலும் அரசின் நிலைப்பாடும் யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்வதற்குத் தடை இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருப்பது ஆச்சரியத்தையே ஏற்படுத்தி இருக்கின்றது. இருப்பினும் இது வரவேற்புக்குரிய நிலைப்பாடாகவே கருத வேண்டும். யுத்தத்தில் பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொல்லவில்லை. பயங்கரவாதிகளாக அரசாங்கத் தரப்பினால் சித்திரிக்கப்படுகின்ற விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே அவர்கள் யுத்தம் புரிந்தார்கள். நடந்து முடிந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை என்றே அரச தரப்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர …
-
- 0 replies
- 385 views
-
-
வட - தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால், மக்கள் இணைவதை, அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கவியலாது. இதன் இன்னொரு கட்டம், இப்போது அரங்கேறுகிறது. அண்மையில், வட கொரியா மற்றும் தென் கொரியத் தலைவர்கள் சந்தித்தமை, வட, தென் கொரியா இணைவின் வாய்ப்புக்கு, புத்துயிர் அளித்துள்ளது. வட கொரியாவையும் தென் கொரியாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் வந்திறங்கிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன…
-
- 0 replies
- 484 views
-
-
முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம்?
-
- 0 replies
- 517 views
-
-
முள்ளிவாய்க்கால்: தொடரும் தீராத சோகம் – செல்வரட்னம் சிறிதரன்… ‘உயிர் போய்விடுமே எண்டு பயந்துதான் நாங்கள் ஓடினோம். ஆனால் சாவை நோக்கித்தான் அந்த ஓட்டம் இருந்தது என்றது அந்த நேரம் எங்களில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று முள்ளிவாய்க்காலை நோக்கிய மரண ஓட்டத்தைப் பற்றி மகாலிங்கம் சிவநேசன் கூறுகின்றார். வகைதொகையின்றி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பி இருப்பவர்களில் சிவநேசனும் ஒருவர். அவர் தனது மனைவியையும் ஒரு குழந்தையையும் ஒரு எறிகணை தாக்குதலில் பறிகொடுத்திருக்கின்றார். அந்த சம்பவத்தில் அவரும் படுகாயமடைந்தார். சிறிவந்த எறிகணையின் துண்டு ஒன்று வலது தொடையில்…
-
- 0 replies
- 473 views
-
-
கரும்புள்ளித் தடம் – பி.மாணிக்கவாசகம்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒரு விவகாரமாகவே மாறியிருப்பது வருந்தத் தக்கது. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் என்பது, மிகமோசமான துன்பியல் சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அந்தத் துன்பியல் நிகழ்வை நினைவுகூர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாடுகளும்கூட முள்ளிவாய்க்கால் சோக நிகழ்வின் நினைவுகூரல் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகியதொரு நிலப்பரப்பில் பொதுமக்களையும் விடுதலைப்புலிகள…
-
- 0 replies
- 583 views
-
-
போர் வெற்றி எதைச் சாதித்தது? மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து இன்றுடன், ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ் மக்களின் உரிமைக்கான, ஆயுதப் போராட்டம் பேரெழுச்சி பெறுவதற்குக் காரணமாக அமைந்த இடம் திருநெல்வேலி. 1983ஆம் ஆண்டு, திருநெல்வேலியில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னர்தான், ஆயுதப் போராட்டம் அதிகாரபூர்வமாக முனைப்புப்பெற்றது. திருநெல்வேலியைப் போலவே, முள்ளிவாய்க்காலுக்கும் ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஒரு தனி இடம் உள்ளது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட இடம் அது. …
-
- 0 replies
- 535 views
-
-
கவனத்தில் கொள்ளவேண்டிய சர்வதேச சமூகத்தின் புதிய அணுகுமுறை காணாமல்போனோர் தொடர்பில் விசாரித்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து மந்தகதியில் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது சர்வதேசம் அதிகளவில் பேச ஆரம்பித்திருக்கிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை, புலம்பெயர் அமைப்புக்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புக்களும் இந்தக் காணாமல்போனோர் விவகாரத்திற்கு தீர்வு காணவேண்டுமென மிகவும் வலுவாக வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றன. கடந்த காலம் முழுவதும் இவ்வாறு சர்வதேச சமூகம் காணாமல்போனோர் விவகா…
-
- 0 replies
- 413 views
-
-
ராஜபக்ஷர்களைக் குழப்பும் கேள்வி அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள சூழலில், இந்தத் தேர்தலில் யார் போட்டியிடுவதென்று, கட்சிகள் பிடுங்குப்படத் தொடங்கி விட்டன. ஐ.தே.க தரப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடும் ஆர்வத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திசாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர போன்றவர்கள், மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தமது கட்சியின் சார்பில்வேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டுன்று, ஒற்றைக்காலில் நிற்கின்றனர். கடந்த மேதின நிகழ்வுகளில், ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன என மூன்ற…
-
- 2 replies
- 525 views
-
-
ஈரான்: சூழும் போர்மேகங்கள் போரின் அவலம் சொல்லி மாளாதது. ஆனால், போர்கள் இன்றிய காலமொன்றை வரலாற்றில் காணவியலாது. இன்று, போர்கள் பலரின் சீவனோபாயமாகி விட்டன. ஆயுத விற்பனை ஒருபுறமும், அதிகாரத்துக்கான ஆவல் மறுபுறமும் எனப் போர்கள் இன்று தவிர்க்க இயலாதனவாகி விட்டன. போர்கள் பற்றிய அறிக்கையிடல்களும் அதன் அவலத்தையன்றி, நவீன தொழில்நுட்பத்தையும் வெற்றியாளர் யார் என்பதையும் தெரிவிக்கும் தன்மையுடையனவாய் மாறிவிட்டன. இன்று, ஈரானைப் போர்மேகம் சூழ்ந்துள்ளது. அதற்கான முதலாவது அடியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம்…
-
- 0 replies
- 647 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் அனுஷ்டிப்பது?
-
- 0 replies
- 439 views
-
-
மைத்திரியிடம் எதை எதிர்பார்க்கலாம்? மூன்றாண்டுகளுக்கு முன்னர், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமும் பத்தோடு பதினொன்றாகிய அரசியல்வாதி மட்டுமே என்பதை, நாளாந்தம் நிரூபித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாம் பதவிக்கு வரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கிய அவர், இப்போது அவற்றை நிறைவேற்ற முடியாமலும் நிறைவேற்ற மனமின்றியும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த வாரமும் அவர், தாம் 2015 ஆம் ஆண்டு தெரிவித்த முக்கியமானதொரு கருத்தை மறுத்து, கருத்து வெளியிட்டு இருந்தார். தாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வ…
-
- 0 replies
- 379 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வகிக்க, முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிக…
-
- 1 reply
- 504 views
-
-
குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன? கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ‘த நேசன் நாழிதழின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயர் வழக்கு மற்றும் ‘த சண்டே லீடர் வாரஇதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய சாட்சியமானது, ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடந்த வாரம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். தமது ஆட்சியின் போது இவ்விரு வழக்கு விசாரணைகள் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும…
-
- 1 reply
- 698 views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வொன்றாக வரலாற்றில் இடம்பெற்றது வட்டுக்கோட்டை தீர்மானம். 42 வருடங்களாக புரையோடிப் போன இனப்பிரச்சினையை தீவிரத்தை இன்றும் எடுத்தியம்புகிறது இத் தீர்மானம். தனிநாடு கோரிய போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று ஈழத் தமிழர்கள் கடந்து வந்த பாதைகளை தீர்மானித்த வட்டுக்கோட்டை தீர்மானம் இன்றும் தமிழ் அரசியல் தலைவர்களையும் சிங்களத் தலைவர்களையும் நோக்கி ஒரு கேள்வியாக நிற்கிறது. இதுபோல் ஒரு நாளில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிட்ட கட்டுரை இங்கே மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது. …
-
- 0 replies
- 889 views
-
-
அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை -க. அகரன் உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும். இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன. இந்நிலையில், பௌதீகவள அபிவிருத்திகள் என்பது, அரசியல் சார்ந்ததாகவும் நிதி சார்ந்த விடயங்களாகவே அணுகப்பட வேண்டியுள்ளது. ஆனால், உயிர் ரீதியானதும் உள ரீதியானதுமான அழிவுகளை அல்…
-
- 0 replies
- 338 views
-
-
உலகத் தமிழ் இனமே எண்ணிப்பார் முள்ளிவாய்க்கால், உலகத் தமிழ் இனத்தால் என்றுமே மறக்க முடியாத, இரத்தம் தோய்ந்த நாமம். இந்தப் பிரபஞ்சத்தில் தமிழ் இனம் மூச்சுடன் உள்ளவரை, இப்பெயரும் பெரும் பேச்சுடன் உயிர் வாழும். உலக வரைபடத்தில், குட்டித் தீவான இலங்கையைத் தெரியாத பலருக்கும், நன்கு தெரிந்த ஒற்றைச்சொல் ‘முள்ளிவாய்க்கால்’. தமிழ் இனத்தினது விடுதலை வேண்டி, மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற, அகிலமே ஆச்சரியப்பட்ட வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம், நிசப்தமான மண் அது. ஆயிரமாயிரம் தமிழ் ஆத்மாக்கள், கணக்கற்ற கனவுகளுடன் மீளாத் துயில் கொள்ளும் பூமியது. மறைந்துபோன தமது உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்க…
-
- 0 replies
- 321 views
-
-
நேற்று -இன்று -நாளை!! நேற்று -இன்று -நாளை!! 1 – நேற்று முப்பது ஆண்டுகள் தமிழ் மக்களை அடக்கி ஆண்டவர்கள், சித்திரவதை செய்தவர்கள், தமிழ்த் தலைவர்களைக் கொன்று புதைத்தவர்கள், பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் என்பவற்றை மறுத்தவர்கள், பாசிச ஆட்சி நடத்தியவர்கள் தொலைந்து அழிந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என முகநூலிலும், சமூக வலைத்தளங்களிலும் கொக்கரித்து ஆனந்தக்கூத்தாடுகிறார்கள் சிலர். அந்த அழிவை நடத்திய மகிந்த …
-
- 0 replies
- 949 views
-
-
மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் -இலங்கை அரசியல்வாதிகள்!! மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் -இலங்கை அரசியல்வாதிகள்!! மொழி என்பது மக்களை ஒன்றிணைக்கும் முக்கிய ஊடகம் எனக் கொள்ளப்படும். இந்த உண்மை சகல இனத்தவர்களுக்கும் பொதுவானதொன்று. மனிதர்கள் எந்தவொரு மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும், அதன் மூலம் அவர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதே யதார்த்தம். மொழி தொடர்பான சமூகத்தின் பொது நோக்கும் அதுவேயாகும். ஆனால் நாகரீகமடைந்த சமூ…
-
- 0 replies
- 502 views
-
-
ஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம் உலகில் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. ஐ.நா சபையின், நிலையான வளர்ச்சித் தீர்வுகள் பிணையம், இந்த அறிக்கையை, மார்ச் மாதம் 14ஆம் திகதி வெளியிட்டிருந்தது. வருமானம், சுகாதாரம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை என்பவற்றின் அடிப்படையிலேயே, இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்புகள், பின்லாந்தில் வழங்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார சமத்துவம் பேணப்படுகின்றது. இது, பின்லாந்தின் முன் மாதிரி. அந்தப் பட்டியலில், மொத்தமாக 156 நாடுகள் இடம்பெற்ற…
-
- 0 replies
- 562 views
-