பெருக்கு மரம் இம்மரம் நெடுந்தீவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது. இம்மரம் பல நூறு வருடங்களுக்கு மேற்பட்டதென கூறப்படுகிறது. இதன் அடி மரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையில் மிகச் சிலவே உள்ளன என கூறப்படுகிறது.இம் மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதென நம்பப்படுகிறது இவை இன்று காலநிலை மாற்றங்களால் அழிந்துகொண்டு செல்கின்றன என கூறப்படுகிறது.
இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம்
எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான
மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும்
இதுதான்.தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி
முனையில் உள்ளது.
Credit
http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2