பொலிகண்டி ஊறணி வைத்தியசாலைக்கு வடக்கே கடலுடன் இணைந்து காணப்படுகின்றது. முன்னர் மழை காலத்தில் ஊற்றிலிருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் காட்சி மிகவும் அற்புதமானது எனவும். இந்நீர் மருத்துவக்குணம் நிறைந்ததாகவும் சிரங்கு, வாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குவந்து நீராடிச் செல்வதாகவும் இப்பகுதியிலுள்ள முதியோர் குறிப்பிடுகின்றனர்.