ஐயோ பிறகு நாங்கள் மகிந்த தேர்தல் முடிந்ததும் இரவோடிரவாக மாலைதீவுக்கு ஓடிய கதை, அனந்தி மரநிழலின் கீழ் தங்கிய செய்தியெல்லாம் எங்கனம் அறிவது? இன்னும் மூன்று மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகின்றது. தாயகத்தினதும், புலம்பெயர் மக்களுக்களினதும் கட்டளை பீடத்துடத்துடனான தொடர்பை துண்டித்துவிட்டால் யார், யார் என்ன செய்யவேண்டும், யாருக்கு ஓட்டுபோடவேண்டும், தேர்தலை புறக்கணிக்க வேண்டுமா, கூடாதா என்பதையெல்லாம் எவ்வண்ணம் நாங்கள் அறிவது?
ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் ஓய்ந்துள்ள இந்தக்காலத்தில் பதிவு.கொம்மின் செய்திகளும் இல்லை என்றால் எங்களுக்கு பொழுதுபோவது எப்படி?
பதிவு.கொம் வேண்டாம் என்று அடிமடியிலேயே கைவைக்க வேண்டாம்.