நவாலித் தேவாலயதில் ஏதிலிகளாய் தஞ்சம் தேடியவர்களை.....
நாகர்கோவில் பள்ளியில் பயிலச் சென்ற பாலகர்களை...
செஞ்சோலைச் சிறார்களை.....
இன்னும் இன்னும் எத்தனையோ எம்மவர்களை
துடிக்கத் துடிக்கக் கொன்றாயே பாதகா!
இரணைமடுவில் இன்று வாங்கிக் கட்டினாய்
புறமுதுகிட்டாய்...
புகை கக்கி புழுதியோடு புழுதியானாய்.
இன்று "கிபீர்", நாளை "மிக்"
நாளை மறுதினமும்...
அதற்குப் பிறகும் தொடரும்.
காலம் மாறுகிறது - எம்
கனவுகளும் பலிக்கின்றன.
சிங்களத்துத் தலைநகர் எங்கணும்
காரிருள் படர்ந்து கருமேகங்கள் மூடுகையில்
வானம் ஏறிய வானோடிப் புலிகள்
வட்டமிட்டு வட்டமிட்டு
குத்தெனக் குண்டுகளையும் போட்டு - சிங்களம்
குலைநடுங்கி குடல்தெறித்தோடச் செய்தனர்.
வாழ்க எம்வீரர்! வளர்க புலிவீரம்!! வெல்க தமிழீழம்!!!