வினோதன் படையணியின் முதற் தாக்குதல் தளபதி லெப்.கேணல் விஜயகாந் அண்ணன். 01.05.1996 ல் அவர் படையினரின் பதுங்கி தாக்குதலில் வீரச்சாவடைந்த பின்னர்தான் தாத்தா வினோதன் படையணி தளபதியாக நியமிக்கப்பட்டார். 1991ல் தலைவரின் பணிப்பிற்கமைய அவரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய லெப் கேணல் ஜோய் (விசாலகன்) (இவரின் பெயரில்தான் விசாலகன் படையணி உருவாக்கப்பட்டது.) லெப்.கேணல் விஜயகாந், மேஜர் வினோத் ஆகியோர் மட்டக்களப்பிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களின் வருகையின் பின்னர்தான் மட்டக்களப்பில் பரவலாக தாக்குதல்கள் இடம் பெற்றன. 1995 ல் சந்திவெளி ராணுவ முகாம், மற்றும் ரோந்து சென்ற படையினர் மீது விஜயகாந் அண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டதுடன் பெரும் வெற்றித் தாக்குதலாகவும் அமைந்தது. (தாத்தா சிறந்த தளபதிகளில் ஒருவர். ஜெயசிக்குறு சமர், ஓயாத அலைகள்-3 என்பவற்றில் தாத்தாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஓயாத அலைகள் மூன்று சமரில் இம்ரான் பாண்டியன் படையணியின் ஒரு தொகுதியினர் தலைவரின் பணிப்பிற்கமைய தாத்தாவின் கட்டளையின் கீழ் சண்டைகளில் பங்கெடுத்தனர். தனது சொந்த சகோதரியின் மகன் படையினரோடு தொடர்பிலிருந்தான் என்பதற்காக தாத்தாவே அவனை 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுட்டு கொன்றார். அவ்வாறான நேர்மையான போராளி, அவரின் துரதிஸ்டம் கருணாவின் வலையில் மாட்டிக் கொண்டார். பின்னர் மீண்டும் இணைய வந்தவர்களை கொன்றது ரமேஸ் அண்ணன் செய்த பெரும் பிழை. தாத்தா, ராபட் போன்றாரை கொல்லாமல் அவர்களை பயன்படுத்தியிருந்தால் கிழக்கில் 2005 காலப்பகுதியில் முளையிலேயே கருணா குழு என்ற ஒன்றை இல்லாமல் செய்திருக்கலாம். சில விவேகமற்ற முடிவுகள் பின்னாட்களில் விடுதலைப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை நாம் கண்டு கொண்ட வரலாறு. )