Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழிணையம்

கருத்துக்கள நிர்வாகம்
  • Joined

  • Last visited

Everything posted by யாழிணையம்

  1. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 26ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2025) 27ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்த யாழ் இணையம், உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், உள்ளங்களையும் இணைக்கும் தருணங்களை உருவாக்கி வருகிறது. பல கருத்தாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மொழியின் வளத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பறைசாற்றும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாண்டும், முன்னைய ஆண்டுகள்போலவே யாழ் இணைய உறவுகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனிப்பட்ட ஆக்கங்களை பகிர்ந்து, விவாதங்களைப் பகிர்ந்ததற்காக அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். தகவல் பரிமாற்றத்தில் விழிப்புணர்வு: ஈழத்திலும் உலகத்திலும் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் சதி முனைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நம்பகமான தகவல்களை பகிர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் அவை உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழ் நலனுக்காக ஒருமைப்பாடு: தாயக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடரும் நிலையில், உலகத் தமிழர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக் கரங்களை நீட்டியதை இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. சமூக நீதி, சமவுரிமை மற்றும் தமிழ்த் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும். புதிய உறுப்பினர்கள் – புதிய தொடக்கம்: இப்புதிய ஆண்டில், மேலும் புதிய உறுப்பினர்களை யாழில் இணைக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் இதுவரை இணைந்திராவிடில் இணைந்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடும்படி வேண்டுகின்றோம். அத்துடன் உறுப்பினர்கள் உங்கள் சுற்றத்திலுள்ளவர்களுக்கு யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தி, கருத்துக்களத்தில் அவர்களையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும் யாழ் செழிப்புற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கும் பாவனையாளர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இணைவோம் – வளர்வோம்: கடந்த காலங்களில் கூறியது போன்று, எமது மண்ணோடும், மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாக, துணையாக, ஒற்றுமையாய் பயணிப்போம். “நாமார்க்கும் குடியல்லோம்” நன்றி, யாழ் இணைய நிர்வாகம் திகதி: 30 மார்ச் 2025
  2. நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
  3. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2024) 26ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கருத்தாளர்களே யாழ் இணையத்தின் மிகப் பெரும் பலம். அந்த வகையில் யாழ் இணையத்தின் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு மற்றும் சகிப்புத் தன்மை இன்னும் மேலதிகமாக இருக்க வேண்டும் என்றும் யாழ் இணையம் விரும்புகின்றது. கருத்தாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்தாட வேண்டும் என்றும் அவ்வாறு நிபந்தனைக்கு உட்படும் போது கருத்தாடல்கள் ஆரோக்கியமாக அமையும் என்பதுடன் தேவையற்ற கசப்புணர்வுகள் தவிர்க்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில்லை. தவிர மட்டுறுத்துனர்களும் மட்டுறுத்தலுக்கு பெரும் நேரம் தொடர்ந்தும் செலவழிக்க வேண்டிய தேவையிருக்காது. வெகுவிரைவில் இந்தியாவில் தேர்தல் வருகின்றது. முன் போலவே யாழ் இணையம் தமிழக மண்ணில் தேர்தலில் பங்கேற்கும் எந்த ஒரு கட்சி சார்ந்து சார்பானதான அல்லது எதிரான நிலைப்பாட்டினையோ எடுப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்கின்றது. தாய் தமிழகத்தினை எமக்கான பலமாக நாம் கருதி அந்த மக்களின் முடிவுக்கு கட்டுப்படுகின்றோம். கட்சி சார்பில்லாது அனைத்து தமிழக உறவுகளையும் நாம் நேசிக்கின்றோம் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். அதேவேளை ஈழத்தமிழர்களை தமது நலன் சார்ந்து போலிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதை எதிர்ப்போம் என்பதையும் பதிவு செய்து கொள்கின்றோம். காலங்காலமாக எமது தமிழினம் மோசடியாக இலங்கை அரசினாலும் தமது நலன்சார்ந்த உலகத்தினாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருவது எமக்குத் தெரிந்ததே. தற்போது கூட இருக்கும் சில தமிழர்களாலும் மாவீரர்களை அவமரியாதை செய்யும் வகையில் தவறான தகவல் பரப்புரைகள் மேற்கொள்ளப்டுவதுடன் அவை உண்மை என்று நிரூபிக்க கடும் முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்படுவதையும் அவதானத்துடன் இருந்து அவற்றை முறியடிக்க வேண்டிய தேவையுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவைகளுக்கு துணைபோகாது நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவைகள் உள்ளது. மேலும் எமது மக்களின் நேர்மையான போராட்டங்களுக்கு ஒன்றுபட்டு எமது ஆதரவினை வழங்க வேண்டும் என்பதையும் எமது வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கின்றோம். யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இந்த 26வருடத்தில் இன்னும் புதியவர்களை உள்வாங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். யாழ் இணையப் பாவனையாளர்கள் உங்களைச் சார்ந்தோருக்கு யாழ் இணையத்தினை அறிமுகம் செய்து வையுங்கள். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  4. வணக்கம், முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், பிரச்சார நோக்கில் சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தமையால் RT News பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு RT News இன் நேரடி இணைய இணைப்பும் பல இணைய வழங்கிகளால் தடுக்கப்பட்டுள்ளது. யாழ் இணையம் நம்பகத்தன்மையையான தகவல்களையே அனுமதிக்கும் என்பதால் RT News கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, RT News இலிருந்து நேரிடையாகவோ அல்லது அதன் செய்திகளை பிரதியிடும் வேறு தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும், பிரசுரிப்பதும் களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வறிவித்தலை சட்டைசெய்யாது செயற்படுவர்கள் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டுவரப்படுவார்கள் என அறியத்தருகின்றோம். நன்றி
  5. முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது. அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர். அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள். அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன. தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள். இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள். விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன். வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன். புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார். அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது. அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர். ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது. பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி. தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார். தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது. நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார். வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது. முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது. இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும். மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும். ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார். தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள். ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள். ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் வீரவணக்க நாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.