தவறோ, சரியோ.. எந்த ஒரு நாட்டு ஆட்சியாளரும் ஒரு நடைமுறையை பின்பற்றுகிறார்கள். அதற்கு விரோதமாக செயல்படும் ஆட்களை கைது செய்கிறார்கள். இலங்கை ஆட்சியாளர்களின் நடைமுறை பிடிக்கவில்லையா? வெளியேயிருந்து விமர்சனம் செய்கிறீர்களா? அதன்பின் எதற்காக அங்கே செல்கிறீர்கள்? ஒட்டுக்குழு, அடிவருடி எல்லாம் இருக்கும் நாடு என்கிறீர்கள். விலகி இருங்களேன்.
கனடா வந்த சீமான் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டதை எத்தனை பேர் பார்த்தீர்களோ, தெரியாது. கிரிமினல் குற்றவாளி போல, கையில் விலங்கிட்டு அழைத்து சென்றார்கள். அவருக்கு உணவு கொடுக்ககூட முதலில் அனுமதிக்கவில்லை. அவரை டொரண்டோ ஏர்போர்ட்டில் இருந்து டிபோர்ட் பண்ணிய போதுகூட நான் அங்கிருந்தேன். நடந்ததை பார்த்தேன். ஒரு கிரிமினல் குற்றவாளியை நாடு கடத்தும் நடைமுறை அங்கு நடந்தது.
ஜெயபாலன் கைது செய்யப்படும் முன் யாழ். முஸ்லீம் ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவு சாப்பிட நண்பர் ஒருவருடன் வந்தார். அவர் அங்கே பேசிக்கொண்டு உணவு உண்டபோது, அவரது பேச்சை கேட்ட எனது நண்பர் ஒருவர் சொன்னார், இவர் இன்னும் 24 மணிநேரம் தாங்கமாட்டார் என்று.
இலங்கை அரசை பிடிக்கவில்லையா? போகாதீர்கள்.