Everything posted by sabesan36
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் நொந்து நூடில்ஸ் ஆகித்தான் வெளிவரப் போறார் என்பது உண்மை. இனி வாழ்க்கையிலே இலங்கை பக்கம் தலை வைத்துகூட படுக்க மாட்டார். (வாழ்க்கை முடியுமுன், உருத்திரகுமாரனோ, வேறு யாரோ ஈழம் எடுத்து கொடுத்தால் கதை வேறு) இலங்கை அரசு விரும்புவதும் அதுவே. He has learned in the hard way.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
குத்துமதிப்பா கருத்து எழுதுவதற்கு ஏன் பத்திரிகை என்று நினைத்துவிட்டேன். இப்பதான் கண் திறந்துது.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நானும் 4 பத்திரிகைகளை வாங்கி வாசிக்க வேண்டியதுதான். இல்லாவிட்டால், இங்கே காலம் தள்ள முடியாது.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அப்பனே.. சுதந்திரம் கிடைத்தபின் ஐ.தே.க. கட்சிதான் பிரபலமாக அங்கிருந்தது. அதில் இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக நாடாளுமன்றறத்தில் முரண்பட்டுக்கொண்டு ஒரு குழுவுடன் எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியது. அப்போது, இலங்கை நாடாளுமன்றத்தில் பண்டாரநாயக்கவின் கையை பிடித்து எதிர்க்கட்சி வரிசைக்கு அழைத்து சென்றவர், மகிந்த ராஜபக்ஷவின் அப்பா. அரசியல் பின்னணி அப்படியெல்லாம் இருக்கு. இலங்கை அரசியலையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தவறோ, சரியோ.. எந்த ஒரு நாட்டு ஆட்சியாளரும் ஒரு நடைமுறையை பின்பற்றுகிறார்கள். அதற்கு விரோதமாக செயல்படும் ஆட்களை கைது செய்கிறார்கள். இலங்கை ஆட்சியாளர்களின் நடைமுறை பிடிக்கவில்லையா? வெளியேயிருந்து விமர்சனம் செய்கிறீர்களா? அதன்பின் எதற்காக அங்கே செல்கிறீர்கள்? ஒட்டுக்குழு, அடிவருடி எல்லாம் இருக்கும் நாடு என்கிறீர்கள். விலகி இருங்களேன். கனடா வந்த சீமான் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டதை எத்தனை பேர் பார்த்தீர்களோ, தெரியாது. கிரிமினல் குற்றவாளி போல, கையில் விலங்கிட்டு அழைத்து சென்றார்கள். அவருக்கு உணவு கொடுக்ககூட முதலில் அனுமதிக்கவில்லை. அவரை டொரண்டோ ஏர்போர்ட்டில் இருந்து டிபோர்ட் பண்ணிய போதுகூட நான் அங்கிருந்தேன். நடந்ததை பார்த்தேன். ஒரு கிரிமினல் குற்றவாளியை நாடு கடத்தும் நடைமுறை அங்கு நடந்தது. ஜெயபாலன் கைது செய்யப்படும் முன் யாழ். முஸ்லீம் ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவு சாப்பிட நண்பர் ஒருவருடன் வந்தார். அவர் அங்கே பேசிக்கொண்டு உணவு உண்டபோது, அவரது பேச்சை கேட்ட எனது நண்பர் ஒருவர் சொன்னார், இவர் இன்னும் 24 மணிநேரம் தாங்கமாட்டார் என்று. இலங்கை அரசை பிடிக்கவில்லையா? போகாதீர்கள்.