Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருள் மொழி இசைவழுதி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by அருள் மொழி இசைவழுதி

  1. || டோறா மூழ்கடிப்பி​ல் காவியமான கடற்கரும்பு​லிகள் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து 15.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். அலைகளும் நூரைகளும்…. திருமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு அணி மீது 15.08.1999 அன்று அதிகாலை கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடுமையான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையின் டோறாப் படகு ஒன்றை மீது கடற்கரும்புலிகள் தமது வெடிமருத்துப் படகினோல் மோதி வெடிக்கவைத்து மூழ்கடித்தனர். || கடலிடை உயிர்பூவைச் சொரிந்த உயிராயுதமாக சென்றவர்கள்… தொடர்ந்து நடைபெற்ற கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் மேலும் இரு டோறா படகுகள் கடற்புலிகளின் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்தன. இக்கடற்சமரின்போது சிறிலங்கா கடற்படையினர் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாய் நாட்டின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் எழில்வேந்தன் ஆகியோரை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். || உயிராயுதம் பாகம் : 07 ல் இவ் கடற்கரும்புலிகளின் உயிரோட்டம் 01.34:45 – 01.40:00 வரை நீள்கிறது … இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்காற்று இணையம் செல்ல இங்கே அழுத்துங்கள் || கடலிடை உயிர்பூவைச் சொரிந்த உயிராயுதமாக கடலிடை காவியம் படைத்தோருக்கு வீரவணக்கம்.... உங்கள் பனி தொடர கடலிலே காவியம் படைப்போம் ... || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  2. || முல்லைக் கடற்பரப்பில் பயிற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் காவியமான கடற்கரும்புலி மேஜர் திசையரசி உட்பட்ட கடற்புலி கட்டளை அதிகாரி லெப்.கேணல் பழனி மற்றும் கடற்புலி மேஜர் தூயவள் ஆகியோரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைக் கடற்பரப்பில் 15.08.2000 அன்று பயிற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் காற்றில் கலந்தவர்கள்… இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்காற்று இணையம் செல்ல இங்கே அழுத்துங்கள்
  3. || முல்லைக் கடற்பரப்பி​ல் காவியமான 4 கடற்கரும்பு​லிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பாவடியால் பாட்டெழுதி… முல்லைக் கடற்பரப்பில் 12.08.1999 அன்று விநியோக நடவடிக்கை ஒன்றின் போது கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் சிவரூபன், மேஜர் இசைக்கோன், மேஜர் யாழ்வேந்தன், கப்டன் கானவன் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னை மடிதன்னில் தாய்மண்ணின் நினைவுடன் கலந்த உயிராயுதங்களுக்கு எம் வீரவணக்கம். || உயிராயுதம் பாகம் : 08ல் இவ் உயிராயுதங்களின் உயிரோட்டம் 0.39:45 – 0.49:40 வரை நீள்கிறது…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  4. கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. || இரைகின்ற கடலில் விரைகின்ற … மட்டக்களப்பில் 1990களில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்பு பட்ட வாகரைப் படை முகாமின் இரண்டாவது கட்டளை அதிகாரி மேஜர் சங்கிலியன் மீது 09.08.1999 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். || உயிராயுதம் பாகம் : 07ல் இவ் தேசத்தின்புயல்களின் உயிரோட்டம் 1.29:45 – 1.35:25 வரை நீள்கிறது…. இதே நாளில் தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்… || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்காற்று இணையம் செல்ல இங்கே அழுத்துங்கள்
  5. முல்லைக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் காவியமான இரு கடற்கரும்புலிகள் உட்பட்ட மேஜர் சர்மா என்றா மாவீரனதும் , மற்றும் அக்கரைப்பற்றில் வீரச்சாவைத் தழுவிய லெப். ராகவன் என்ற மாவீரரினதும் , 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். || முல்லைக் கடற்பரப்பில் 04.08.2001 அன்று நடவடிக்கை ஒன்றின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில்…. || இதேநாளில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில்…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  6. பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். || ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ருபெருமெடுப்பில் பெயர் சூட்டபப்ட்டு முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.|| இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர். மேஜர் ஜெயசுதா (பாமதி தியாகராசா – யாழ்ப்பாணம்) மேஜர் ஜேசுதாஸ் (குலவீரசிங்கம் தயாபரன் – யாழ்ப்பாணம்) மேஜர் திருமேனி (ராம்கி) (கணேசன் தேவதாசன் – அம்பாறை) மேஜர் இமையவன் (கேசவன்) (ஐயாத்துரை குகதாஸ் – யாழ்ப்பாணம்) கப்டன் நாயகி (இலங்கநாயகி ஆறுமுகம் – வவுனியா) கப்டன் பெருநாகன் (பூபாலசிங்கம் சிவகுமார் – யாழ்ப்பாணம்) கப்டன் சிவநாதன் (இரத்தினம் கலைச்செல்வன் – கிளிநொச்சி) கப்டன் சுகந்தன் (நாதன் சசிக்குமார் – யாழ்ப்பாணம்) கப்டன் கலாதரன் (காளிராசா கவிஞதாசன் – திருகோணமலை) கப்டன் பிருந்தன் (ஜெகநாதன் சிவபாலன் – கிளிநொச்சி) கப்டன் அம்பி (ராகல்) (கார்த்திகேசு யோகராசா – அம்பாறை) கப்டன் தியாகி (இருளாண்டி பாஸ்கரன் – கிளிநொச்சி) கப்டன் நகுலேஸ் (நகுலேஸ்வரி) (பத்மாதேவி வைத்தீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கப்டன் கலையரசி (வளர்மதி சுப்பிரமணியம் – யாழ்ப்பாணம்) கப்டன் நாயகன் (சிவகுருநாதன் குமரகுருநாதன் – யாழ்ப்பாணம்) கப்டன் கவிஞன் (நாராயணமூர்த்தி பாஸ்கரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தரணிதரன் (திலீப்) (தர்மலிங்கம் நேசராசா – மட்டக்களப்பு) லெப்டினன்ட் ஜெயசீலி (குணலட்சுமி ஆறுமுகசாமி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வேங்கை (செல்லையா புஸ்பமலர் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கமலினி (உசாநந்தினி சண்முகநாதன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் யாழிசை (ஞானஉதயசீலி செபஸ்தியாம்பிள்ளை – முல்லைத்தீவு) லெப்டினன்ட் ஆவர்த்தனா (கவிதா கந்தசாமி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சேரன் (நாகேந்திரம் கோகிலதாசன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நாவரசன் (நல்லையா பாலச்சந்திரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஐம்பொறி (சடாச்சரம் அஸ்டாச்சரம் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தாயகம் (குமார்) (மயில்வாகனம் விஜயகுமார் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் அண்ணாத்துரை (கோவிந்தபிள்ளை பத்மநாதன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் கமலன் (முத்துராசா தம்பிராசா – கண்டி) லெப்டினன்ட் சிவாகரன் (துரைராசசிங்கம் சசிகரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாணன் (புலேந்திரன் புவனேந்திரன் – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் பத்மசிறி (மேரிநிலானி ரோக்கஸ்னிக்கேல் – முல்லைத்தீவு) 2ம லெப்டினன்ட் கர்ணன் (வீராச்சாமி இராஜேஸ்கண்ணா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குயிலன் (கிருஸ்ணசாமி சிவசுப்பிரமணியம் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கார்முகிலன் (தம்பு ஜெயசீலன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சேது (கிறகரி சத்தியராஜ் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (சிவசம்பு மதியழகன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மன்னவன் (கந்தசாமி சிறிதரன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சத்தியபவான் (அன்ரனி விஜயேந்திரன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பொன்னரசன் (பாலசிங்கம் சிவகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இனியவன் (தியாகராசா தீபன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருள்நம்பி (சிவசம்பு சிவகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் யசோ (நாகராசா நந்தகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சிவசங்கரன் (சோதிவேற்பிள்ளை குணசீலன் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் யாழரசன் (செல்வரட்ணம் செல்வகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மணிமுடி (தியாகராசா தவனேசன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மெய்நம்பி (தேவநாயகம்) (கணேசபிள்ளை குமரன் – திருகோணமலை) வீரவேங்கை காதாம்பரி (அனித்தா செல்வராசா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை குணசீலி (தேவசுந்தரம் பிறேமாவதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இன்பரசி (புனிதசீலி ஞானசீலன் – மன்னார்) வீரவேங்கை செயல்விழி (சுமங்கலா) (சுஜித்திரா கந்தையா – முல்லைத்தீவு) வீரவேங்கை பூவிழி (மகேஸ்வரி கணேஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வவி (விஜயா) (கௌசலாதேவி இராசையா – கண்டி) வீரவேங்கை கார்த்திகாயினி (தேவகி முருகவேல் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வதனி (கலைச்செல்வி தில்லைநாதன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கடல்மதி (கடல்வாணி) (தெய்வேந்திரம் மேனகா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்க்கவி (தெய்வேந்திரம் சர்மிளா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுருதி (அமுதினி பிள்ளையாக்குட்டி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை ராகுலா (இந்திரானி சண்முகரட்னம் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை செல்வரதி (ஜஸ்ரினா பூபாலசிங்கம் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை குகமதி (சுதர்சினி கணபதிப்பிள்ளை – யாழ்ப்பாணம்) வீரவேங்கை நாயகன் (நாகராசா ஜெயபாஸ்கரன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கதிரோன் (சோமசுந்தரம் சுகந்தன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை திருமாறன் (தெய்வேந்திரம் பகீரதன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை உதயதீபன் (பொன்னுச்சாமி கேதீஸ்வரன் – முல்லைத்தீவு) வீரவேங்கை மன்னன் (சுந்தரலிங்கம்) (சுகுமாரன் குமார் – கண்டி) வீரவேங்கை செங்கோடன் (செங்கோலன்) (சூசைப்பிள்ளை ஜெசுதாஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாண்டியன் (அலோசியஸ் அன்ரன் லீனஸ் – மன்னார்) || இந்த முன்னகர்வு முயற்சியின்போது கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதி மீது சிறிலங்கா படையினர் மேற்காண்ட எறிகணை வீச்சில்…. லெப்.கேணல் வெண்நிலவன் (கவாஸ்கர்) (செபமாலை ஜோர்ச்சந்திரசேகரன் – மன்னார்) || கிளிநொச்சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்குண்டு வீச்சில்…. கப்டன் உத்தமன் (வடிவேல் சிவநாதன் – யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  7. கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) மற்றும் புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது….. வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் 03.08.1997 அன்று சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  8. பலாலி வான்படைத்த​ளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலின்போது வீரகாவியமான கரும்புலிகள் மேஜர் ஜெயம், கப்டன் திரு, கப்டன் திலகன், கப்டன் நவரட்ணம், லெப்.ரங்கன் மற்றும் வேவுப்புலி மேஜர் சேரன் ஆகியோரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். உன்னத விடுதலை பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிலிருந்து….. என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும். இதயம் முழுதும் தலைவன் பின்னணி : 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் கொல்லப்பட ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர். தீயினில் எரியாத தீபங்களே இந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது. தாக்குதல் : கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் தாக்குதலுக்கான அணி நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.) ஊர் கோலம் போகின்ற நகர்வின்போது இடையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலணி சிதறிவிட்டது. தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவினார் அணித்தலைவர் நிலவன் அல்லது கெனடி. ஆகஸ்ட் 2 1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அத்தாக்குதலில் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று புலிகளால் அழிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் படையினரின் பவள் கவச வாகமொன்றும் தகர்க்கப்பட்டிருந்தது. கரிய புலிகள் தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் விரசாவை தழுவினர்.. அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர். வெற்றிக்கு வித்திட்ட இத்தாக்குதலில் புயலாக வீசிய தேசத்தின்புயல்கள் … பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் பலாலி விமானத்தளத் தாக்குதலின் நோக்கம்…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்காற்று
  9. ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களி​ன் 16ம் வீரவணக்க நாள். ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. பூமித்தாயே சிவந்தாயா…? ஏற்கனவே தாண்டிக்குளம், மற்றும் பெரியமடுப் பகுதியில்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து உச்சவழிப்பு நிலையில் படையினர் மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலின்போது படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. வானூர்தி எதிர்ப்பு சுடுகலன்கள், கிரனைட் செலுத்திகள் உட்பட பெருமளவு படைக்கலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இந்த ஊடறுப்புத் தாக்குதல் நடவடிக்கையின்போது பகை என்னும் தடையரண் மோதி தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர். மேஜர் கிளியன் (கந்தசாமி விஸ்வநாதன் – கிளிநொச்சி) மேஜர் மதியன் ( மதி) (சிதம்பரம் நடராஜா – மன்னார்) மேஜர் முருகையன் ( நியூமன்) (இராஜு சௌந்தரராஜன் – முல்லைத்தீவு) மேஜர் சிட்டு ( தங்கத்துரை) (சிற்றம்பலம் அன்னலிங்கம் – யாழ்ப்பாணம்) மேஜர் சஞ்சீவி (சின்னையா முத்துக்கிருஸ்ணன் – கிளிநொச்சி) மேஜர் அன்பு ( கதிர்ச்செல்வன்) (கனகு தவராசா – யாழ்ப்பாணம்) மேஜர் இளங்குமரன் ( பாபு) (பேரானந்தம் ஜெயராஜ் – மட்டக்களப்பு) கப்டன் சேரலையான் ( பிரதீப்) (சிதம்பரப்பிள்ளை கருணாகரன் – மட்டக்களப்பு) கப்டன் துகிலன் (கந்தசாமி சிவகுமார் – மட்டக்களப்பு) கப்டன் தமிழரசன் (செல்வராசா சந்திரதாசன் – யாழ்ப்பாணம்) கப்டன் சோழன் ( தமிழன்) (சிவபாலசிங்கம் தயாகரன் – யாழ்ப்பாணம்) கப்டன் பாலகிருஸ்ணன் (சிவசம்பு சேகரன் – மட்டக்களப்பு) கப்டன் தூதுவன் (பெரியசாமி முத்துவேல் – மாத்தளை) கப்டன் கரிகாலன் ( நெல்சன்) (பெஞ்சமின் சகாயநாதன் – மன்னார்) கப்டன் ஈழப்பிரியா (ஆறுமுகம் ஜெனற்கிருஸ்ரினா பிரியதர்சினி – யாழ்ப்பாணம்) கப்டன் சாந்தீபன் ( முத்தமிழ்வேந்தன்) (கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி – யாழ்ப்பாணம்) கப்டன் தணிகைநம்பி (சின்னையா கந்தராசா – திருகோணமலை) கப்டன் பிறைமாறன் (இராசதுரை கருணாகரன் – யாழ்ப்பாணம்) கப்டன் எழுச்சிமாறன் (கிறிஸ்ரியாம்பிள்ளை ஜெயப்பிரகாஸ் – மன்னார்) கப்டன் நிர்மலன் (தர்மராஜசிங்கம் பிரசன்னா – யாழ்ப்பாணம்) கப்டன் பாலகிருஸ்ணன் (இரத்தினகோபால் அகிலன் – யாழ்ப்பாணம்) கப்டன் உருத்திரன் (சிவபாதம் சிவாகரன் – யாழ்ப்பாணம்) கப்டன் செந்தூரன் ( செல்லப்பா) (அருளானந்தர் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்) கப்டன் வன்னியன் (அன்ரன் றேமன் – மட்டக்களப்பு) கப்டன் ஜெயஜோதி (கனகலிங்கம் விஜிதா – யாழ்ப்பாணம்) கப்டன் கல்யாணி (குணரட்ணம் மதிவதனி – திருகோணமலை) கப்டன் எழிலரசன் ( விந்தரன்) (பஞ்சலிங்கம் பாலமுரளி – யாழ்ப்பாணம்) கப்டன் வேணுகா (கணபதிப்பிள்ளை திருச்செல்வி – யாழ்ப்பாணம்) கப்டன் சிவானந்தன் (இராசேந்திரன் அன்ரன்ஜேசுராஜா – முல்லைத்தீவு) லெப்டினன்ட் கவியரசு ( கவியரசன்) (சோமசேகரம் சிறிகண்ணதாசன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் ஈழச்செல்வன் (தர்மலிங்கம் கோகுலநாதன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் வெண்சாகரன் (சதாசிவம் சுந்தரலிங்கம் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் கதிரவன் (சின்னத்தம்பி சச்சுதானந்தன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் விஜயமுரளி (இராமலிங்கம் கந்தசாமி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் சேரமான் (சோதி சிவனேசன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வீரத்தேவன் (குமாரசிங்கம் சண்முகநாதன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் பேரின்பன் (கனகசபை தவராசா – மட்டக்களப்பு) லெப்டினன்ட் சின்னத்துரை ( நாதன்) (வேலாயுதம் புஸ்பராஜ் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் கண்ணன் (சதாசிவம் தேவகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கீர்த்தி (திருஞானசம்பந்தன் நவநீதன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் துலாஞ்சினி ( லதா) (முத்தையா பிரிஸ்சிலா அருள்மணி – வவுனியா) லெப்டினன்ட் வித்தகா (சிவகுரு சிவநந்தி – கிளிநொச்சி) லெப்டினன்ட் விதுபாலா (நவரத்தினம் சசிகலா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அழகியநம்பி (கருணதாஸ் அஜித்விஜயதாஸ் – திருகோணமலை) லெப்டினன்ட் வேலன் (சண்முகராசா சபேசன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் கற்பகன் (கந்தசாமி பராக்கிரமராசா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வண்ணன் ( ஜீவன்) (சந்தனம் முத்துக்குமார் – கிளிநொச்சி) லெப்டினன்ட் தொண்டமான் (பெரியதம்பி சோதரராசன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அறிவொளி ( அற்புதன்) (கதிரேசன் மகேந்திரன் – வவுனியா) லெப்டினன்ட் காவியன் (மரியநாயகம் ரொறன்ஸ் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கல்யாணி ( வண்ணநிலா) (தியாகராஜா ஜெயராணி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பொற்சிலை (சின்னத்துரை பாலகௌரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தீந்தமிழ்ச்செல்வன் (கனகரட்ணம் ராஜன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நாகமணி (அப்பையா கலையழகன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சின்னக்குட்டி (செல்வராசு மகேந்திரன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் சொரூபி (தங்கவேல் ஜெனிற்சுஜாதா – மன்னார்) லெப்டினன்ட் வினோதராஜ் (தெய்வநாதன் மோகநாதன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் யாழிசை (வல்லிபுரம் கிரிஜா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அப்பன் (தேவதாஸ் கிருசாந்தன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இனியவன் (கனகரத்தினம் செல்வக்குமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நாயகன் (தெய்வேந்திரன் சீலன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கனியவன் (கந்தையா பாஸ்கரன் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் எத்திராஜ் (வடிவேல் கோகுலராஜ் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இசைரூபன் (தர்மன் நிசாந்தன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கவியழகு ( கவிவாணன்) (சுபந்திரராஜா கண்ணன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பிறேமிலன் ( வரதன்) (கணபதிப்பிள்ளை இராசரத்தினம் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ரதிசீலன் (குருநாதபிள்ளை கோணேஸ்வரன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வைத்தி (கனகசூரியம் உதயசூரியம் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பேரரசன் (குழந்தைவேல் பாவேந்திரன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கிருபராஜன் (இளையதம்பி மனோகரன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அன்புவரதன் (சுந்தரம் மோகேந்திரன் – அம்பாறை) 2ம் லெப்டினன்ட் கபில்குமார் (சீவராஜா மனோரூபன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பிரியமஞ்சன் ( பிரகலாதன்) (நாகராசா ஜெயக்கணேஸ் – அம்பாறை) 2ம் லெப்டினன்ட் தமிழன் (அழகையா வேலாயுதம் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் செல்வசுந்தரம் (சின்னத்தம்பி சந்திரகுமார் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் திவ்வியநாதன் (பெரியதம்பி நகுலேந்திரம் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் தரணியாளன் (வேல்முருகு ஜெயநேசன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மிருநாளன் (பிள்ளையான்தம்பி இளங்கோ – அம்பாறை) 2ம் லெப்டினன்ட் ஈகையன் ( ஈழமாறன்) (கனகசிங்கம விநாயகலிங்கம் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சித்திராஜன் (சிறிராமன் திவாகரன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பழனிராஜ் (கனகசூரியம் சிறிதரன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கலைக்கோயில் (முனியாண்டி பெரியதம்பி – கண்டி) 2ம் லெப்டினன்ட் பாடினி (தர்மு அமுதா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருண் (மாயழகு பரமானந்தம் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் மலர் ( உசா) (இராஜேந்திரம் தவராணி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குட்டிமோகன் (பெரியசாமி சண்முகராஜா – மன்னார்) 2ம் லெப்டினன்ட் மோகனராசா (கிருஸ்ணசாமி கிருஸ்ணராஜா – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் மது ( கயல்க்கொடி) (மாதகராசா சுசிகலா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அமரன் (முத்துக்குமார் சிவகுமார் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சிலம்பரசன் (நாகலிங்கம் கோணேஸ்வரன் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் முத்தமிழன் (நவரத்தினம் வசந்தன் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் செங்கதிர்ச்செல்வி ( மகேந்திரா) (பழனிமுத்து நவலட்சுமி – மன்னார்) 2ம் லெப்டினன்ட் ரமா ( கலைக்குயில்) (இராசு சிவனேஸ்வரி – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் திருமகன் (வேலுப்பிள்ளை கலாநிதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தமிழேந்தன் ( ரவிவர்மன்) (சிவராசா சிவகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஈழவாசன் (விஸ்வலிங்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பிரபா (செல்லத்துரை மாலதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மதி (சிவகணகநாதன் விமலரத்தினேஸ்வரி – மன்னார்) 2ம் லெப்டினன்ட் அருள்நிதி (மகேந்திரன் கௌசலா – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் இளவதனி (பொன்னுக்குமார் சுதாஜினி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (பூராசா கமலேஸ்வரன் – கிளிநொச்சி) வீரவேங்கை காந்தராஜ் (சுந்தரலிங்கம் விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு) வீரவேங்கை அமிர்தன் ( குலராஜ்) (முருகேசப்பிள்ளை சண்முகராசா – அம்பாறை) வீரவேங்கை நூதகன் (அப்பாத்துரை ரஜனிக்குமார் – மட்டக்களப்பு) வீரவேங்கை மதனமாவீ ( சுருளிராயன்) (தம்பிராசா பரமேஸ்வரன் – மட்டக்களப்பு) வீரவேங்கை பாவாணன் ( பாரதி) (மயில்வாகனம் சங்கரதாஸ் – மட்டக்களப்பு) வீரவேங்கை நவச்செல்லம் (தேவராசா விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு) வீரவேங்கை பொதிகன் (சிவராஜா சிவாநந்தராஜா – மட்டக்களப்பு) வீரவேங்கை நிர்மலன் (சிவராசா சுவிக்காந்தன் – மட்டக்களப்பு) வீரவேங்கை மதுர்சனன் (கார்த்திகேசு நாகராஜா – அம்பாறை) வீரவேங்கை நவானந்தன் (கோபாலபிள்ளை சசிக்குமார் – அம்பாறை) வீரவேங்கை பவாதரன் (முத்துலிங்கம் விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு) வீரவேங்கை கயல்விழியன் (தேவராஜா றதிகரன் – அம்பாறை) வீரவேங்கை அமுதராசன் (ஸ்ரனிஸ்லாஸ் அன்ரன்கனியூட் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோணமலை (சிவராசா புண்ணியராசா – மட்டக்களப்பு) வீரவேங்கை வேணுஜன் (அரசரட்ணம் சுதர்சன் – மட்டக்களப்பு) வீரவேங்கை ஆனந்தி (திரவியம் சறோ – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுபாநந்தினி (தங்கராசா ராதிகா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை அமலி (அரியரட்ணம் மேலின்கிருசாந்தி – மன்னார்) வீரவேங்கை தமிழவள் (வெலிச்சோர்மியஸ் சுதர்சினி – மன்னார்) வீரவேங்கை மலர்விழி (கனகலிங்கம் சுதாயினி – கிளிநொச்சி) வீரவேங்கை கோமதி (சின்னத்துரை சர்மிலா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கடலரசி (திருப்பதி திலகராணி – கிளிநொச்சி) வீரவேங்கை நவானி (ஆண்டிசுந்தரம் காந்திமதி – முல்லைத்தீவு) வீரவேங்கை கலைவாணி (ரங்கசாமி கமலினி – கிளிநொச்சி) வீரவேங்கை கமலேந்தினி (சுந்தரமூர்த்தி சுதாமதி – திருகோணமலை) வீரவேங்கை விமலகாந் (கதிர்காமப்போடி கிருபராஜா – மட்டக்களப்பு) வீரவேங்கை ஈழத்தமிழன் (பத்மநாதன் மதியழகன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வெண்ணிலவன் (கணபதிப்பிள்ளை பத்மநாதன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சோழன் (பாலசுப்பிரமணிம் ருசிகாந்தன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணி ( தமிழ்க்கவி) (ஏகாம்பரம் சிவகுமாரி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வெண்மலர் ( அல்லி) (யோகராசா கமலாதேவி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சோபா (நாராயணசாமி லதா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பேரமுதன் (சிவம் சிவரூபன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோன் (சண்முகம் பாலமுருகன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தேமாங்கனி (மாணிக்கம் சரஸ்வதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிருந்தா (விஜயகாந்தன் ரேவதி – யாழ்ப்பாணம்) போர்குயில் மேஜர் சிட்டு நினைவில்…. தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  10. போராளிக் கலைஞன் / பாடகன் மேஜர் சிட்டு ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை. கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள் போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார். விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’. இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது. ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல். “சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்” சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும். கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர். ‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’ என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள். [ அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது. ] சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள். 01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார். வீரத்தமிழ் தேசத்திலே ( மேஜர் சிட்டுவின் நினைவுக்கானம் ) “சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார். சிட்டு சிட்டு ஈழமண்ணில் ( மேஜர் சிட்டுவின் நினைவுக்கானம் ) இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் || உயிர்ப்பூ || படத்தில் இவர் பாடிய ” சின்னச் சின்னக் கண்ணில் ” என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும். அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது. சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான். …. இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான். போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை. அதேபோல் குட்டிக்கண்ணனும் வீரத்தின் சுவடாகி தமிழினத்தின் காவலராகி ஒளிரவிட்டு வீசுகின்றனர். மேஜர் சிட்டு குரலில் ஈழத்தின் கீதங்கள் வீரனே…. நீயின்றி இசைக்கு ஒரு ஐீவனில்லை… மாவீரன் மேஜர் சிட்டு … . தாயகவிடுதலைக்கனவோடு ….. போர்குயில் நினைவில்…. சிட்டண்ணையைச் சந்தித்த சம்பவமொன்று…. போர்க்குயிலின் மறைவு….! பாட்டு தந்து…எம்மை விட்டு….பறந்த சிட்டு….! நீ மறைந்து போனாலும் உன் நினைவுகளை மறக்காமல் நாங்கள்… - சிட்டு இணையத்திலிருந்து…. || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  11. வெடியாய் அதிரும் ஒவ்வொரு வெடிக்கும் வரலாறு இருக்கிறது.... கடல் மடியில் புதிய காவியம் படைத்தே வீரச்சாவுகள் நிகழ்கிறது.... வெளியினில் சொல்ல முடிவதில்லை வீரசாதனை முழுவதும் தெரிவதில்லை..... கடற்கரும்புலி மறவர்களுக்கு எம் சீரம் தாழ்ந்த வீரவணக்கம்...!
  12. || சர்வதேசக் கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். || சர்வதேசக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விமத்து ஒன்றில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னை மடிதன்னில் தாய்மண்ணின் நினைவுடன் கலந்த உயிராயுதங்களுக்கு எம் வீரவணக்கம். [உயிரில் உறவில் புதுவிடியலின் …. ] தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  13. || லெப்.கேணல் அருணசீலன் – 2ம் லெப்.புஸ்பா​னந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள் || அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் 29.07.2001 அன்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். திருக்கோவில் பகுதியில் 29.07.2001 அன்று எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் தாய்மண் நினைவுடன் விழிமடல் மூடி உறங்கும் மாவீரர்கள். லெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்) ( மாணிக்கம் ரவிக்குமார் – பாண்டிருப்பு, மட்டக்களப்பு ) 2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன் ( தட்சணாமூர்த்தி தவநேசன் – தம்பிலுவில், அம்பாறை ) தாயக விடுதலை வேள்வித்தீயில் நித்தம் நித்தம் தீக்குளித்து தாய்மண்ணையும் மக்களையும் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  14. 1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள். மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது 28.07.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான போராளிகளின் வீரவணக நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர். லெப். கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர். தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  15. சரா …. சரா …. அவனது முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது. எங்கள் போராளிகளின் உடல்கள் துப்பரவு செய்யும் இடம். ” சராவின் உடல் வந்துவிட்டதா ? ” என்னை மாதிரிப் பலர் கேட்டுக்கொண்டு நின்றார்கள். உள்ளே போனேன். வீரமரணமடைந்த எமது போராளிகள் , அங்கொன்றும் , இங்கொன்றுமாகக் கிடந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் முகங்களாக நான் தடவினேன். எனக்கு பழக்கமான சராவின் முகத்தைக் காணவே இல்லை. ஆனால் அந்தத் தோழர்களின் முகங்களும் எனக்குப் பல கதைகளைச் சொல்லின. பதினைந்து வயதிருக்கும். சற்று நிறமான , சுருள் சுருளான தலைமயிருடன் ஒரு போராளி முகம் வாடிக்கிடந்தான் அவனது உயிரை அழைத்துச் சென்ற விமானக் குண்டு வயிற்றை ஆழமாகச் சிதைத்துருந்தது. அவனைக் கண்டந்ததும் , சின்னப் போராளி ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான். காலொன்று தொடையில் ஆழமாகப் பிய்ந்திருந்தது. உடலைக் குறுக்காகவும் ஒரு ரவை துளைத்திருந்தது. உயிர் பிரியும் பொது இருந்த வேதனை அந்தச் சின்ன முகத்தில் படிந்து போய்க்கிடந்தது. அடுத்ததாக ஒரு போராளி , சப்பாத்துக் கூட கழட்டாமல் கிடந்தான். சீருடை கூட ஒழுங்காக இருந்தது. அவன் எப்படி மரணித்தான் ? முகத்தைத் திருப்பினேன். முகத்தின் ஒரு பக்கம் கோறையாக இருந்தது. இப்படிப் பல போராளிகள் …… இவர்களில் சிலரை சராவின் பயிற்சி முகாமில் பார்த்திருக்கின்றேன். சில நேரங்களில் , வேகமாகச் செல்லும் வாகனமொன்றிற்க்குள் சிரித்தபடி செல்வதைக் கண்டிருக்கின்றேன். அந்தத் தோழர்கள் தான். இன்று இப்படி …… இந்த மரணங்களை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் , இவர்கள் துப்பாக்கிகளைத் தொட்டார்கள். போர்முனைகளிற்கு வெளிக்கிடும் போதும் , வழியும் , எதிரியை எதிர்த்து நின்று போராடும் பொழுதும் தமது மரணத்தைப் பற்றி இவர்கள் உணர்ந்துதான் இருந்தார்கள். ஆனாலும் இந்த இளவீரர்கள் உறுதியாக நின்று போராடினார்கள். இவர்களின் நெஞ்சங்களில் இருந்ததெல்லாம் விடுதலை என்ற உணர்வு ஒன்றுதான். தன்னை இழந்து சுதந்திரத்திற்காகப் போராடும் மனவன்மையை இவர்களுக்குத் தந்தது நம்பிக்கைதான். தலைவர் மீது கொண்ட நம்பிக்கை – தங்கள் இலட்சியம் நிட்சயம் வெல்லப்படும் என்ற நம்பிக்கை. இவை தான் இந்த இளைஞர்களை மலை போன்ற மாவீரர்க்ளாய் மாற்றி நிற்கிறது. அந்த இடத்தின் ஒரு ஓரமாக , சிலர் ஒவ்வொரு உடலாக துப்பரவு செய்து கொண்டிருந்தார்கள். அந்த மனிதர்களின் முகங்கள் சோகமாக இருந்தன. அலங்கோலமாகக் கிடந்த போராளிகளின் உடல்களை ஒழுங்குபடுத்தி அடிமனதின் விருப்பத்தோடு உயிர் கொடுக்க அவர்கள் விரும்பிக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே எடுத்து வைத்த சவப்பெட்டிகளில் அளவுக்கு ஏற்றமாதிரி அந்தப் போராளிகள் கிடத்தப்பட்டார்கள். சராவின் உடல் வரவே இல்லை. ஒரு மண் வீதியால் விழுந்து கடற்கரையில் ஏறுகின்றேன். அந்தச் சிறுகடல் கோபத்தில் அலைகளை அள்ளி வீசமுடியாமல் தவித்து தளதளத்துக் கொண்டிருந்தது இந்த வீதியால். இந்தக் கடலைப் பார்த்துக் கொண்டு தான் சரா அடிக்கடி பேசுவது வழமை. என்னையும் இந்த வீதியால் , சில தடவைகள் அவன் நடாத்திய பயிற்சி முகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தான். இன்று , இந்தக் கடல் , மக்கள் , குன்றும் குழியுமகா இருக்கும் வீதி எல்லோருமே அவனை , இறுதியாக ஒரு தரம் பார்க்க ஏங்கிக்கொண்டிருந்தார்கள். வானம் இருண்டு திட்டுத் திட்டாகக் காணப்பட்டது. கருமேகங்கள் எங்கேயோ வேகமாய் போய்க்கொண்டிருந்தன. அதில் சாராவை மாதிரியே ஒரு மேகம். அவனது கறுப்பு , அவனுடன் இருக்கும் சாத்துவான் தாடி , பழகும் போது வீசும் குளிர்மை…. அந்த மேகம் எனக்குக் கதை சொலத் தொடங்கியது …… நாங்கள் வெப்பமான மலைகளிற்க்குக் கீழ் வாழ்ந்த இனிமையான காலம். எமது பயிற்சி முகாமிற்கு சரா ஜேர்மனியிலிருந்து வந்திருந்தான். அந்த பயிற்சி முகாமின் வெப்பமான சூழ்நிலை – கடுமையான பயிற்சி எல்லாமாகச் சேர்த்து அவனது வெளிநாட்டுத் தோற்றத்தை இலகுவாக மாற்றி ஒரு கிராமப்புறத் தோற்றத்தைத் தந்து விட்டது. பொதுவாக பயிற்சி முகாம்களின் சிலர் மட்டும் தான் எல்லோராலும் அறியப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் எதோ ஒரு திறமை , அது நடிப்பாகவோ , விளையாட்டாகவோ இருக்கும். அப்படி எல்லோராலும் அறியப்பட்டவர்களில் சாராவும் ஒருவன் குழப்படி தான் அவனது திறமை. எங்கள் பயிற்சி முகாமின் பொறுப்பாளர் பொன்னமானின் கண்கள் எப்பிதும் சராவைத்தான் சுற்றும். குழப்படிகளைச் செய்து விட்டு அவன் தப்பி விடுவான் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அந்தப் பயிற்சி முகாமின் இனிமையான கலகலப்புக்கு காரன்களில் சாராவும் ஒருவன் பயிற்சி முடிந்த பின் நாங்கள் சிலர் முதன் முதலில் முகாமிலிருந்து பிரிந்து சென்றோம். அந்தச் சின்னப் பிரிவைத் தாங்க முடியாமல் எல்லோருமே இயலுமட்டும் அழுது தீர்த்தோம். அப்போது நான் சாராவைப் பார்த்தேன், கலங்கிய கண்களுடன் அவன் எனக்கு விடை தந்தான். அதன் பின்பு மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலின் பின்தான் சாராவைப் பார்த்தேன். ” ஜி 3 ” துப்பாக்கி வைத்திருந்தான் அவனது உயர்ந்த கம்பீரமான தோற்றத்திற்கு , அது பொருத்தமாக இருந்தது. மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலில் தான் செய்தவர்ரைச் சொன்னான். யாழ் – பொலிஸ் நிலையத் தாக்குதலிலும் பங்கு பற்றியதாகக் கூறினான். காலங்கள் சென்றன. சரா கல்வியங்காடு , திருநெல்வேலிப் பகுதிகளுக்கான பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். அப்பகுதியில் சாராவை – சராவின் செயற்பாடுகளை எல்லா மக்களுமே விரும்பினார்கள். அந்த நேரத்தில்த்தான் , இந்தியப்படைகள் -தென்றலெனச் சொல்லிக் கொண்டு எங்கள் தேசத்தில் புயலாய்ப் புகுந்தார்கள். இந்த மண்ணின் மீது தங்கள் கோரங்களை அகல் விரித்தனர். இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக புலிகள் தொடுத்த போரில் சரா முன்னணியில் நின்று திறமையாக சண்டையிட்டான். ஒரு முறை இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிச் செல்லும் போது சராவின் கையில் ஆழமாக காயமேற்படுகிறது. அவன் சிகிட்சைக்காக தமிழகத்திர்க்குச் சென்றான். அங்கு வைத்து இந்திய அரசால் கைது செய்யப்பட்டான். இந்தியர்களின் சிறைகளில் இரு வருடங்களைக் கழித்த பின் தமிழீழம் அவனை வரவேற்றது. சராவினது போராட்ட வாழ்க்கை தொடர்ந்தது. சிறீலங்கா அரசுடனான போர் மீண்டும் தொடங்கிய பின் யாழ்க் கோட்டை இராணுவ முகாம் மீதான முற்றுகைப் போரில் சாராவும் ஒருவனகாகக் கலந்து கொண்டான். கோட்டை வெற்றி கொள்ளப்பட்டதன் பின்பு புலிகளின் , பயிற்சி முகாமிற்கான பொறுப்பாளராக செயற்பட்டான். ஆனையிறவு இராணுவத்தளம் மீதான முற்றுகைப்போர் ஆரம்பித்தவுடன் அப்போர் முனையில் ஒரு தளபதியாக சாராவும் நின்றான். பழைய தடைமுகாம் இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதலைத் தொடுத்தோம். அந்தத் தாக்குதல் வெற்றியடையவில்லை. எல்லாமாக 63 போராளிகளை நாங்கள் இழந்திருந்தோம். சாராவிற்கு களில் காயம். வைத்தியசாலை வாசலில் நின்றான். நான் அவனைப் பார்க்கப் போயிருந்தேன். சின்னக் காயம் தான் பழையபடி போர் முனைக்கு போகப் போவதாகச் சொன்னான். ” இழப்புக்கள் தான் அதிகம் போராட்டம் வளரும் பொழுது , போர்முனைகளும் பெரிதாக மாறும் – இழப்புக்களும் அதிகமாகத்தான் இருக்கும். இதைத் தவிர்க்க முடியாது ” என்றான் அந்த நேரத்தில் அவசரமாக வந்த வாகனம் ஒன்றில் ஏறி அவன் போர்க்களத்திற்குச் சென்று விட்டன். லெப் கேணல் சரா ஆனையிறவு முற்றுகையை முறியடிப்பதற்காக கடற்கரையில் இறக்கப்பட்ட இராணுவத்தினர் நெருப்பு மழையைப் பொழிந்து கொண்டே முன்னேறத் தொடங்கினார்கள். இரவும் – பகலும் வானத்தில் நீந்திய விமானங்கள் அங்குலம் , அங்குலமாக குண்டுகளை விதைத்தன. கடலிலிருந்து நிலத்தை நோக்கி அலை அலையாக குண்டுகள் வந்து கொண்டிருந்தன. சிறீலங்கா அரச இயந்திரங்கள் தங்கள் முழுப்பலத்தையும் திரட்டி வெளிக்காட்டியவாறு முன்னேறி வந்தார்கள். இந்த நிலையில் , இரண்டாவது தடவையாக தடைமுகாம் , இராணுவ முகாம் மீதான் தாக்குதல் ஒன்றிற்கு புலிகள் திட்டமிட்டனர். கவச வாகனங்களின் உதவியுடன் எம்மவர்கள் முன்னேறுவதாக இருந்தது. தாக்குதல் ஆரம்பமாகும் நேரம் எமது கவச வாகனம் நின்று பரப்படும் இடத்தில் நானும் நின்றேன். சரா வந்தான் , என்னுடைய கன்னங்களைத் தடவினான் ” மச்சான் , என்னுடைய நல்ல படம் வைத்திருகிறியாடா ” என்று கேட்டான். ” ஏன் ” நான் விளங்காமல் கேட்டேன். ” நான்தான் டோசர் கொண்டு போறேன் ” என்றான். பயிற்சி முகாமிலிருந்து நாங்கள் பிரியும் போது கலங்கிய கண்கள் இன்று மீண்டும் கலங்கியது. ஆனால் இந்தப் பிரிவு ….. நான் விழிகளைத் துடிக்க வேறு பக்கம் திரும்பினேன். சரா இன்னொரு தோழனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். ” எனது உடல் சிதையாமல் வந்தா , இந்தச் சீருடையைப் ஓடுங்கோ , இந்தப் புலிக் கொடியைப் போர்த்துங்கோ. ” இந்தச் சண்டையில் தப்பிவரும் சர்ந்தப்பங்கள் மிகக் குறைவு என்பது சராவிற்க்கு நன்றாகவே தெரியும். தங்கள் மரணத்தைத் தெரிந்து கொண்டு போர்முனைக்குச் செல்லும் உயர்ந்த மனிதர்களை இந்த மண் பிரசவித்திருக்கிறது. தாக்குதல் தொடங்கியது , துப்பாக்கி ரவைகளால் அரண்களை அமைத்த படியே புலிகள் முன்னேறினார்கள். சராவின் வாகனமும் முன்னேறியது. ஒரு பீரங்கிக் குண்டும் அந்த வாகனத்தில் பட்டு வெடித்தது. சரா , அவனுடன் சேர்ந்து சென்ற குகதாஸ் …. , தாக்குதல் தொடர்ந்தது. காலை வேளை வெற்றி இல்லாமல் எம்மவர்கள் பின்வாங்கினார்கள். சராவின் உடலை மீட்பதற்கு முடியாமலே போய்விட்டது. இரண்டு நாளின் பின் போர் முனையிலிருந்து வந்த ஒரு தோழன். ” எங்கள் நிலைகளிற்கு முன்னால் , இராணுவ முகாம் வேலிக்குப் பக்கத்தில் சரா அண்ணை கொண்டு சென்ற வாகனம் நிற்கிறது , காகங்கள் உள்ளே இறங்கி இறங்கி ஏறுது ” எனச் சொன்னான். சாராவை , காகங்கள் …… என்னால் வேதனையைத் தாங்க முடியாமலிருக்கிறது , என் முன்னாலிருக்கும் சாளரத்தின் வழியே பார்க்கிறேன். கோட்டை தெரிகிறது. சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் – அந்த ஆக்கிரமிப்புச் சின்னத்தின் முன்னே , இப்படித்தான். அகழியையும் உயர்ந்த கோட்டைச் சுவரையும் தாண்டுவதற்காக எம்மவர்கள் பயன் படுத்திய கருவிகள் அப்படி அப்படியே கிடக்கிறது. மதிலில் ஏறுவதற்காக சாத்திய ஏணி மதியுடன் விழ்ந்தது கிடக்கிறது. சேற்று அகழியைத் தாண்டுவதற்காக அடுக்கிய பலகைகள் அப்படியே தாழாமல் கிடக்கிறன. இவை எல்லாம் வீரம் நிறைந்த கடுமையான அந்த நாட்களை நி னைவு படுத்துகின்றன. கோட்டை இராணுவ முகாம் மீதான இரண்டாவது தாக்குதல் முயற்சி , அன்றும் சரா ஒரு கவசவாகனத்தை ஓட்டிச் சென்றான். முன்னேறிச் சென்ற அந்த வாகனம் பள்ளம் ஒன்றிற்குள் விழுந்து சரிந்தது. அன்றைய தாக்குதலும் வெற்றியடையவில்லை. விடிந்தது. எங்கள் கண்களிற்கு முன்னால் வெட்டி வெளியில் எங்கள் தோழர்களின் உடல்கள் கிடந்தன. அவர்களின் மீது காகங்கள் இருக்க முயல்வதும் பறப்பதுமாக …… அந்த வேதனையான நினைவுகளை எண்ணியபடியே நிமிர்கின்றேன். சிதைந்து போன கோட்டையின் எஞ்சிய மதிர்சுவரால் எங்கள் போராளிகளில் சிலர் நடந்து கொண்டிருகிறார்கள். அவர்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் புது நம்பிக்கைகளை விதைத்துக் கொண்டிருந்தன. சற்றுத் தள்ளி , காற்றில் தன் கைகளை வீசி புலிக்கொடி பறக்கிறது. - வவுனியா தினேஸ் விடுதலைப்புலிகள் இதழ் ( ஆவணி – புரட்டாசி 1991 ) || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்காற்று
  16. ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான மாவீரர்களி​ன் வீரவணக்க நாள் ஆனையிறவு படைத்தளம் மீதான || ஆகாய கடல்வெளி || தடைமுகாம் நடவடிக்கையில் 27.07.1991 அன்று இரண்டாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.. ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட கவச ஊர்தி ஒன்று பயன்படுத்தப்பட்டது. இக்கவச ஊர்தி படையினரின் எறிகணை வீச்சில் சிக்கிக் கொண்டபோது இதனை ஓட்டிச் சென்ற தளபதி லெப். கேணல் சரா மற்றும் மேஜர் குகதாஸ் உட்பட 69 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர். லெப்.கேணல் சரா (சின்னத்துரை ஜீவராசா – யாழ்ப்பாணம்) மேஜர் குகதாஸ் (இராசரத்தினம் இராஜேந்திரன் – யாழ்ப்பாணம்) மேஜர் சொனி (சிவஞானசுந்தரம் அசோகன் – யாழ்ப்பாணம்) கப்டன் நிறையன் (இராமமூர்த்தி விதுரன் – மட்டக்களப்பு) கப்டன் ரகீம் (ஜசாக்டொனால்ட் வீரபாகு – யாழ்ப்பாணம்) கப்டன் நிதி (இரத்தினம் இலங்கேஸ்வரன் – யாழ்ப்பாணம்) கப்டன் கீர்த்தி (வீரப்பாபிள்ளை கனகேஸ்வரன் – யாழ்ப்பாணம்) கப்டன் அல்பேட் (கந்தசாமி வன்னியசிங்கம் – யாழ்ப்பாணம்) கப்டன் சௌகான் (சிவானந்தன் ஜோய்அன்ரனி – யாழ்ப்பாணம்) கப்டன் சிவம் (பவான்) (திருப்பரங்கிரிநாதன் நெல்லைநாதன் – யாழ்ப்பாணம்) கப்டன் சத்தியராஜ் (கந்தையா சத்தியசீலன் – திருகோணமலை) கப்டன் வினோத் (கனகராசா பிரபாகரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வர்மன் (பாஸ்கரமூர்த்தி சுந்தரமூர்த்தி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் சபா (மாரிமுத்து பத்மநாதன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் உமாசங்கர் (ரவி) (சின்னமணி சென்சியஸ் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நிமலேந்திரன் (பிரசன்னா) (தங்கவேல் செந்தில்குமரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சத்தியகுமார் (பொன்னையா சிவனேசராசா – மட்டக்களப்பு) லெப்டினன்ட் அன்பு (பாலச்சந்திரன் றமணன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வினோத் (தர்மலிங்கம் தயாளன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பாரதி (நவரட்ணம் கோபாலாப்பிள்ளை – மட்டக்களப்பு) லெப்டினன்ட் கேசியன் (கேசவன்) (பரஞ்சோதிநாதன் நியூற்றன்பிரான்சிஸ் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நெல்சா (சின்னக்குட்டி சரோசினிதேவி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் குட்டி (செபஸ்தியம்மா அலோசியஸ் – மன்னார்) 2ம் லெப்டினன்ட் மதனா (சிவமலர் தளையசிங்கம் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மெடினா (மெடோனா) (செல்வராணி மாயழகன் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வதனி (ஹென்சி பத்திநாதன் – மன்னார்) 2ம் லெப்டினன்ட் ஜசீரிமா (சிவலோஜினி சிவானந்தையர் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சுந்தரி (சுஜந்தா தேவநாயகம் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் இளவரசி (சிவப்பிரகாசம் சந்திரபவானி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் காந்தன் (டானியேல் ராஜ்குமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வாணன் (குமார்) (நடேசு ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மயில்வாகனம் (சின்னத்தம்பி சுந்தரலிங்கம் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஜெயந்திரன் (ஜெயச்சந்திரன்) (கந்தப்பர் தவராசா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அல்பேட் (நடராசா கலைச்செல்வன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நளினன் (நாகராசா சிவகுமார் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நிதி (செல்வநயினார் சுந்தர்ராஜன் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் விக்கி (இரத்தினம் சாந்தவேல் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கஜன் (கோபாலப்பிள்ளை புஸ்பராசா – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் நிருபன் (வேலாயுதம் பாலச்சந்திரன் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (கந்தசாமித்துரை ராஜவேல் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை திசைவீரன் (சற்குருநாதன் சற்குணபேசன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை ரகீம் (சகீம்) (நாகலிங்கம் ஜேகதாஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை திகில் (தங்கையா சேரன் – கிளிநொச்சி) வீரவேங்கை வேலுப்பிள்ளை (யூனியன் கந்தையா கந்தசாமி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கிர்மானி (ஜோன்எட்வேட் கெனடி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பவா (கதிரித்தம்பி கணேசலிஙகம் – கிளிநொச்சி) வீரவேங்கை பீலிக்ஸ் (அருளானந்தம் ரொனால்ட்ஆனந்த் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை ராஜன் (குமாரசாமி குணராசா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வரதன் (வரதராஜன்) (மாசிலாமணி மகேந்திரன் – மட்டக்களப்பு) வீரவேங்கை ஆனந்தபாபு (தங்கராசா நடராசா – மட்டக்களப்பு) வீரவேங்கை புரூஸ்லி (மூர்த்தி) (சீவரத்தினம் சின்னவன் – மட்டக்களப்பு) வீரவேங்கை கரன் (வேலாயுதம் சிவனையா – திருகோணமலை) வீரவேங்கை மொரார்ஜி (அரசரட்ணம் அரவிந்தன் – திருகோணமலை) வீரவேங்கை பிருந்தன் (சின்னராசா ஜெராட்திலகர் – மன்னார்) வீரவேங்கை கில்பேட் (ஞானராசா ஞானதீபன் – மன்னார்) வீரவேங்கை கார்த்திகா (மேரிகலிஸ்ரா சூசைப்பிள்ளை – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிரதீபா (ஜெயந்தி பெரியதம்பி – முல்லைத்தீவு) வீரவேங்கை அன்பினி (சிவனடி விஜிதா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சிகிலா (ரங்சினி நடராசா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தங்கமணி (புஸ்பகலா நடராசா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை டட்லியா (வரலட்சுமி தேவசிகாமணி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை யாழ்மொழி (விஜயலதா பாக்கியநாதன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுனித்தா (குஸ்மாவதி கருணாகரன் – திருகோணமலை) வீரவேங்கை ஜஸ்மின் (செல்வமலர் கோபாலப்பிள்ளை – திருகோணமலை) வீரவேங்கை காயத்திரி (சந்திரசேகரம் உமாதேவி – முல்லைத்தீவு) வீரவேங்கை நிசா (சதாசிவம் சுமதி – அம்பாறை) வீரவேங்கை காண்டீபனி (சுகந்தினி வேலாயுதம் – கிளிநொச்சி) வீரவேங்கை சசீந்தா (சூரியகுமாரி சுப்பிரமணியம் – வவுனியா) வீரவேங்கை சுகந்தினி (யோகா கணபதிப்பிள்ளை – வவுனியா) தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! [ லெப் கேணல் சராவின் வீரச்சுவடுகள் ] [ 14.07.1991 அன்று || ஆகாய கடல் வெளி || நடவடிக்கையின்போது ….. ] || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்காற்று
  17. " லெப். செல்லக்கிளி அம்மானின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் " 23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர். [ லெப் செல்லக்கிளி அம்மான் நினைவூட்டல் ‘ ] தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பங்கெடுத்த இத்தாக்குதல் லெப். செல்லக்கிளி அவர்களின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது. படை ஊர்தியை இலக்கு வைத்து கண்ணிவெடி இயக்கிய லெப். செல்லக்கிளி அம்மான் பின்னர் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். [ யூலை தாக்குதல் சிறப்புப்பார்வை ] தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீர மறவனையும் , தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! ( லெப் செல்லக்கிளி அம்மான் ) ( லெப் செல்லக்கிளி – லெப் சீலன் ) || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  18. “எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” - குட்டிமணி ( சிங்களவனால் கண்கள் தோண்டி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர் )
  19. விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா யோகச்சந்திரன். ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப் படவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி. அந்த விடுதலை வீரரை 08-05 1981 அன்று சிங்களக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிங்கள நீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிபதி குட்டிமணியின் இறுதி ஆசையைக் கேட்டபோது, அதற்கு குட்டிமணி கூறிய பதில் அவரது உள்ளக் கிடக்கையையும் விடுதலைமேல் அவர் கொண்டிருந்த தீராத பற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. “எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” இதுதான் அந்த விடுதலை வீரரின் கடைசி ஆசை. அதற்குப் பின் அவர் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டார். அந்தச் சிறையில் ஏற்கனவே பல சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளும் இருந்தனர். சிங்களக் கைதிகள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப் பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரம் மூண்டது. யூலை மாதம் 24 ஆம் திகதி தொடங்கிய அந்தக் கலவரம் பல வாரங்கள் தொடர்ந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். பலர் உயிரோடு கொழுத்தப் பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P.) கலவரத்தை அடக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்ததுமில்லாமல் கலவரத்தை மேலும் தூண்டும் வேலைகளிலும் இறங்கியது. இந்தக் கலவரத்தின் தீ வெலிக் கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளையும் பற்றிக் கொண்டது. சிறைக் காப்பாளர்கள் அந்தச் சிங்களக் கைதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயதங்களுடன் தமிழ்க் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர். குட்டிமணியின் கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அந்தச் சிங்களக் கைதிகள் அவரை வெட்டிப் படுகொலை செய்தது மட்டுமல்ல அவரது கண்களைத் தோண்டி எடுத்து அதை தங்களது கால்களால் நசுக்கி அழித்தனர். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர். குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள்? உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் விடுதலையையும் கேட்டார்கள். (செப்டம்பர் திங்கள் 1997 ஆம் ஆண்டு, ‘Tamil Tribune’ எனும் இதழில் பேராசிரியர் தஞ்சை நலங்கிள்ளி அவர்கள் எழுதிய “Eyes Of Kuttimani” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்) வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு … * தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல் * குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் * ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன் * தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம் * சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம் * செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன் * அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும்செல்லதுரை ஜெயரெத்தினம் * அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன் * ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம் * சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார் * சின்னதுரை அருந்தவராசா * தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார் * மயில்வாகனம் சின்னையா * சித்திரவேல் சிவானந்தராஜா * கணபதிப்பிள்ளை மயில்வாகனம் * தம்பு கந்தையா * சின்னப்பு உதயசீலன் * கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன் * கிருஷ்ணபிள்ளை நாகராஜா * கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம் * அம்பலம் சுதாகரன் * இராமலிங்கம் பாலச்சந்திரன் * பசுபதி மகேந்திரன் * கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன் * குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம் * மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார் * ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் * ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம் * கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார் * யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன் * அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம் * அந்தோணிப்பிள்ளை உதயகுமார் * அழகராசா ராஜன் * வேலுப்பிள்ளை சந்திரகுமார் * சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் ஆகிய 35 தமிழர்களும் …. இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு… * தெய்வநாயகம் பாஸ்கரன் * பொன்னம்பலம் தேவகுமார் * பொன்னையா துரைராசா * குத்துக்குமார் ஸ்ரீகுமார் * அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம் * செல்லச்சாமி குமார் * கந்தசாமி சர்வேஸ்வரன் * அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை * சிவபாலம் நீதிராஜா * ஞானமுத்து நவரத்தின சிங்கம் * கந்தையா ராஜேந்திரம் * டாக்டர் ராஜசுந்தரம் * சோமசுந்தரம் மனோரஞ்சன் * ஆறுமுகம் சேயோன் * தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் * சின்னதம்பி சிவசுப்பிரமணியம் * செல்லப்பா இராஜரட்னம் * குமாரசாமி கணேசலிங்கன் இனவெறி சிங்கள ஆதிக்க சக்தியின் இன அழிப்பு கோரவதாண்டவத்தில் படுகொலையான இவ் உறவுகளுக்கு எம் வீரவணக்கம். || தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்காற்று ( இணையம் ) & தமிழீழப்பறவை கனடாவில் ( மூகநூல் )
  20. தமிழர் இனவழிப்பு கறுப்பு ஜூலையின் 30ம் ஆண்டு நினைவில் தமிழீழ தேசம் தமிழர் தாயகத்திலும் – தன் தேசத்திலும் வாழ்ந்த தமிழர்கள் மீது 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவாய் தமிழர்களில் நெஞ்சங்களில் ஆறாத துயராமாய் உறவுகளின் மீள்நினைவுகளுடன் நெஞ்சம் உறைந்து உயிர் கரைகிறது. இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை. சிங்கள ஆட்சிபீடத்தின், நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக, அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டனர். கறுப்பு ஜூலை நினைவில்…. தமது கடுமையான உழைப்பால் தமிழர்கள் சேர்த்துவைத்த வளங்களை, செல்வங்களை, சொத்துக்களை, சிங்களக் காடையர்கள் கொள்ளையிட்டனர். தீவைத்து மகிழ்ந்தனர். தமிழ்மக்களின் பொருளாதார வளம் முற்றாக அழிக்கப்பட்டது. சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து, தென்பகுதியில் இருந்தும், மலையகப் பகுதிகளில் இருந்தும் தமிழர்கள், தமது தாயகம் நோக்கி அகதிகளாக விரட்டப்பட்டனர். எமக்கென்றோர் தாயகம் உண்டென்ற உண்மை வெளிப்பட்ட தருணம் அது. துன்பதுயரங்களுடன், உடல்காயங்களுடனும் மனக்காயங்களுடனும் வந்த தனது மக்களை, தமிழர் தாயகம், வரவேற்று மருந்திட்டது, உணவிட்டது. ஆதரவாய்த் தாங்கியது. பல்லாயிரக்கணக்கானோர், இலங்கைத் தீவைவிட்டு, இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறினர். வெலிக்கடைச் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஐம்பத்திமூன்று பேர், சிறைச்சாலைக்குள் வைத்து இரண்டு கட்டங்களாக, மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்களுக்கெதிரான இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டுவிட்டு, வேடிக்கை பார்த்த சிங்கள அரசு, சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் சுயாதீனமான நீதி விசாரணைக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தது. மாறாக, வெலிக்கடைச் சிறையிலும், ஏனைய பகுதிகளிலும், இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிங்களக் காடையர்களுக்கு, வீடுகள், வசதிகள் வழங்கி, தமிழர் தாயகப் பகுதியில் குடியேற்றியது சிங்கள அரசு. இருபத்தெட்டு ஆண்டுகளுக்குமுன், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலைக் கொடுமைகளை தட்டிக்கேட்க மறந்த, சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற போக்கே, இன்று பன்மடங்கு கொடூரத்தை, கொடுமையை எம்மினம் முள்ளிவாய்க்காலில் அனுபவிக்க நேர்ந்தது. எண்பத்தி மூன்றாம் ஆண்டு, ஆடிக் கொடுமையைத் தொடர்ந்து, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் இதுபோன்ற காட்டு மிராண்டிச் செயல்கள் மீண்டும் ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால், இன்று, முள்ளிவாய்க்காலை வெறிகொண்டு நடத்திமுடித்திருக்கும் சிங்கள இனவெறி அரசு, இந்தியாவின் யுத்தத்தையே தாம் நடத்திமுடித்திருப்பதாக உரிமையோடு பெருமை பேசுகின்றது. கறுப்பு யூலையுடன் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை சர்சதேச சமூகம் இட்டிருந்தால், தமிழர்களுக்கு எதிரான கட்டற்ற வெறித்தனத்தை சிங்களம் முள்ளிவாய்க்கால்வரை தொடர்ந்திருக்காது. இன்று சிங்கள அரசு, தனது திட்டத்தின் அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றது. தமிழர் தாயகத்தை முற்றாக ஆக்கிரமித்து, தமிழ் இனத்தை முற்றாக, சிங்களத்துள் கரையவைக்கின்ற திட்டத்துடன் அது தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இராணுவ முற்றுகைக்குள் தமிழர் தாயகத்தை வைத்தபடி, தமிழ் மக்களின் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களில் கைவைத்துள்ளது சிங்களஅரசு. பௌத்த மதத்திணிப்பை தீவிரமாய் மேற்கொண்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தாராளமாய் மேற்கொண்டுவருகின்றது. கறுப்பு யூலைகள் மீண்டும் இடம்பெறாமலும், முள்ளிவாய்க்கால்கள் தொடராமலும், தமிழர் தாயகத்தில், தமிழினம், தன் அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழுகின்ற ஒரு நிலைமையை உருவாக்கின்ற ஒரு காலமாக இக்காலம் அமைய புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தீவிரமாய் உழைக்கவேண்டிய காலம் இது. தமிழ்மக்கள் மீதான இனஅழிப்புக்கொடுமைகள், சர்வதேச சமூகத்தால், இயல்பாகத் தட்டிக்கேட்கப்படமாட்டாது என்பதும், தடுத்துநிறுத்தப்படமாட்டாது என்பதும் கசப்பான வரலாற்று உண்மையாகும். சர்வதேச சமூகத்தை எம்பால் திரும்பிப்பார்க்கவைப்பதும், செயற்பாடுகள் நோக்கி அதனை நகரவைப்பதும் புலம் பெயர்ந்துவாழும் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள், தமிழர் அமைப்புக்களின் முழுமையான கவனமும், செயற்பாடுகளும் தாயக மக்களின் பால் திரும்பட்டும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை, கறுப்பு யூலைக் கனத்த நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம். வெலிக்கந்த சிறைச்சாலையில் ….. குட்டிமணியின் கண்கள் கறுப்பு ஜுலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு ! உயிரோடு இருக்கும் இனப்படுகொலையின் பதிவு கறுப்பு ஜூலை விவரணப் பதிவு கறுப்பு ஜூலை – 1983 இனக்கலவரம் இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் || தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  21. லெப்டினன்ட் மாமா (பாலையா) வின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும். 21.07.1988 அன்று யாழ்மாவட்டம் காரைநகர்ப் பகுதியில் இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்பில் எதிரியிடம் பிடிபடாமல் விடுதலைப் புலிகளின் கோட்பாட்டுக்கு அமைவாக சயனைற் விலையை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிய லெப்டினன்ட் மாமா (பாலையா) அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள். தமிழீழத்தின் தங்கமண் அன்னியநெருபில் அழிந்துகொண்டிருக்கிறது. பேரினவாதிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய தர்மயுத்தம் வெற்றியின் எல்லைகளை தொட்ட போதுதான் புதிதொரு அன்னியப்புயல் நம்மை ஆக்கிரமித்து அழிக்க வந்தது. எங்கள் தாயகத்தின் பிறப்பிற்காகவே புலிகளின் இறப்புக்கள் தொடர்கின்றன. தர்மம் எத்தனை நிர்ப்பந்தங்கள் ஏற்ப்பட்டாலும் சரணாகதி அடையமாட்டாது. தமிழீழ மண்ணில் இந்திய இராணுவம் விதைத்த அவலத்தின் தொடராக இந்த மாவீரனின் வீரமரணத்தையும் தமிழீழ மக்களின் மனதில் மீளாத் துயராக விதைத்துச் சென்றது. தமிழீழ வேள்விவேதத்தில் இலட்சிய உறுதியுடன் இலங்கை - இந்திய இராணுவத்துடன் போரிட்டு வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம். || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  22. முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைத்தீவு படைத்தளம் மீதான || ஓயாத அலைகள் – 01 || நடவடிக்கை18.07.1996 அன்று தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. 21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது. கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது. இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர் " இக்கடற்சமர், அலம்பிலிருந்து முன்னகர்ந்த படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல் உட்பட || ஓயாத அலைகள் – 01 || நடவடிக்கையில் 21.07.1996 நான்காம் நாள் அன்று இரண்டு கடற்கரும்புலிகள், உட்பட்ட 12 போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர்." கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் – சங்கத்தானை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் – அக்கரைப்பற்று, அம்பாறை) மேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் – கும்புறுப்பிட்டி, திருகோணமலை) கப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா – குமுழமுனை, முல்லைத்தீவு) கப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் – கரடியனாறு, மட்டக்களப்பு) கப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் – தாளையடி, யாழ்ப்பாணம்) கப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் – திருகோணமலை) லெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி – சேந்தான்குளம், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா – மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி – அக்கரைப்பற்று , அம்பாறை) வீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு) " உயிராயுதம் பாகம் : 05 ல் இவ் கடற்கரும்புலிகளின் உயிரோட்டம் 37:45 – 44:00 வரை நீள்கிறது …" " ஓயாத அலைகள் – 01 (முல்லைப் பெரும் சமர்) " " ஓயாத இசை அலை " தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  23. || மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும் || சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில் தீரத்துடன் களத்திடை புலி மறவர்களாக பாய்ந்த வேங்கைகள்… மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் – பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் – உன்னிச்சை, மட்டக்களப்பு) கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் – நுணுகலை, மட்டக்களப்பு) கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் – ம்பிலுவில், அம்பாறை) லெப்டினன்ட் வன்னி (சின்னத்தம்பி புஸ்பராஜா – அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் சபேசன் (செலலத்தம்பி கணேஸ் – சித்தாண்டி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கலைக்குமார் (குழந்தைவேல் கிரிவசந்தன் – கன்னங்குடா, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நிவேந்தன் (இளையதம்பி சாந்தகுமார் – கல்முனை, அம்பாறை) 2ம் லெப்டினன்ட் தசரதன் (சின்னத்தம்பி தங்கேஸ்வரன் – கன்னங்குடா, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் றீயபாஸ்கரன் (பொன்னுத்துரை கனகரட்ணம் – மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இங்கிதன் (துரைராசா சசிகரன் – மாமாங்கம் மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மளவன் (சிவகுரு ராஜன் – களுவாங்கேணி, மட்டக்களப்பு) வீரவேங்கை உடையவன் (மாரி வெற்றிவேல் – தன்னாமுனை, மட்டக்களப்பு) வீரவேங்கை புவியாளன் (கவியரசன்) (சாமித்தம்பி அரியகுமார் – சித்தாண்டி, மட்டக்களப்பு) வீரவேங்கை குகதீஸ் (சேதுகாவலப்பிள்ளை குமரன் – மன்னம்பிட்டி, பொலநறுவை) வீரவேங்கை குணசேகரம் (வன்னிராசா விஜயசங்கர் – ஏறாவூர், மட்டக்களப்பு) வீரவேங்கை கிரிதரன் (மகேந்திரன் சகாயராஜ் – மட்டக்களப்பு) வீரவேங்கை சோமேஸ்காந்தன் (அரியரட்ணம் குட்டிபாபு – கோமாரி, அம்பாறை) வீரவேங்கை வசந்தரூபன் (சாமித்தம்பி சந்திரசேகரம் – கன்னங்குடா, மட்டக்களப்பு) வீரவேங்கை நவகுணம் (நல்லதம்பி கந்தசாமி – பழுகாமம், மட்டக்களப்பு) வீரவேங்கை உமையன் (செல்லையா கிருஸ்ணகுமார் – வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை சோழன் (ராம்ராஜ்) (கணேஸ் பேரின்பராஜா – வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை சிவலோகன் (செலவன் தம்பிராசா – வாழைசேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை விக்ரமன் (அழகரத்தினம் சாந்தலிங்கம் – ஆயித்தியமலை, மட்டக்களப்பு) வீரவேங்கை விழியன் (பாண்டியப்பன் பூபாலப்பிள்ளை – 39ம் கொலனி, மட்டக்களப்பு) வீரவேங்கை லவதீபன் (செல்லத்தம்பி கண்ணன் – வாகனேரி, மட்டக்களப்பு) வீரவேங்கை குருத்தையன் (சிவராசா சுமன் – மத்தியமுகாம், மட்டக்களப்பு) வீரவேங்கை கங்கையாழன் (நாகராசா ஜமுனகாந்தன் – வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை இயலரசன் (தியாகராஜா சந்திரமோகன் – வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை ரஜீத்தன் (கணபதிப்பிள்ளை கமலன் – வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை மாவிந்தையன் (கந்தசாமி அருள்ராஜ் – வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை பெருமையன் (இராமச்சந்திரன் ரமேஸ்வரன் – பன்குடாவெளி, மட்டக்களப்பு) " விழி ஊறி நதியாகி …." தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  24. கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் அவர்கள் பற்றி நினைவில் நிலைத்தவை... பலதடவை படகு கட்டுமானத்தில் கரும்புலிப்படகு ( இடியன் ) வடிவமைக்கும் போது அதில் இயந்திரம் இருப்பு இணைக்கும் வேளையில் பல சில தாக்குதல் வழிமுறைகள் அனுபவங்கள் பற்றி பொறுப்பாளர் மற்றும் அந்த தாக்குதலில் பங்கு பற்றிய சக போராளி ( அக்காமார்கள் , அண்ணாமார்கள் ) கூறுகையில் பல கடல் கருவேங்கை காவியம் மனதில் பதிந்து நிற்கின்றன... இம்மாவீரன் அதிக பேச்சாற்றல் , தோழர்கள் இழப்பை தாங்கத ஓர் நட்பின் இமையம் , தாய்மண்ணின் மடியில் சிங்களத்தில் இனவழிப்பின் அரங்கேற்றமும் , இயற்கை அனர்த்தமும் சேர்ந்து வதைத்த போது நாளும் வனத்தில் தனிமையில் இவனின் மனம் உருகி விழிநீர் கசிந்ததை அந்த மரத்தடி வேர்களும் , துயிலும் நீளும் இரவுகளும் கூறும் இருள் என்றும் கருப்பானதால் இந்த கருவேங்கை காவியம் கருப்பாகி வெளியில் தெரியாமலே இன்றும்... " ரணவிரு " எனும் பகைவனின் கலத்தை அழிக்கும் நோக்குடன் கரும்புலி படகை செலுத்தி சராசரி படகின் வேகம் 32 கடல்மைல் வேகத்தில் இடியன் சென்று மோதுகிறது ஆயினும் வெடிக்கவில்லை பின் சாதுரியமாக பின்னுக்கு இடியனை எடுத்து திரும்ப வேகத்தை அதிகரித்து மோதுகிறார் வெடிக்கவில்லை மூன்றாம் தரமும் இடிக்க வெடிக்கவில்லை ( வெடிமருந்தில் தொழில் நுட்பக் கோளாறும் மற்றும் வெடிமருந்தில் தண்ணீர் கசிவு கலந்தது விட்டமையாலும் ) இடியன் படகும் அணியம் பிரிந்து கடல்நீர் உட்புக பின் கூட சென்ற கடற்கரும்புலி கப்டன் இன்னிசை காயப்படுகிறார். திருப்பி கரைநோக்கி அழைக்கப்பட ... நீர் உட்புகுந்த வண்ணமிருந்த படகை சாதுரியமாக செலுத்தி கரைவந்து சேர்ந்தார். அந்த இலக்கு ஐந்து கடற்கரும்புலிகளால் தகர்க்கப்பட்டு வெற்றிக்கு உரமாகி கடலிலே காவியமாகினர் ஆயினும் இரு நாள் கழித்து கடற்கரும்புலி கப்டன் சயந்தனுடன் இணைந்து " தரையிறங்கு கலம் " இலக்காக தேர்வுசெய்து இடியன் நீர் கிழித்து விரையும் வேளை இலக்கை அண்மிக்கும் அருகில் நெருங்க உயிர்பயத்தில் இருந்த பகைவனின் சூடு தராமாரியாக பொழிய வெடிமருந்து படகில் சூடு பட்டு இலக்கை நெருங்குமுன் வெடிக்கிறது. முல்லைக்கடல் அன்னை அணைத்துக்கொண்டாள் தன் மடியில் கரியபுதல்வர்களை. கடற்கரும்புலி கப்டன் இன்னிசை , கடற்கரும்புலி மேஜர் பாரதியுடன் இணைந்து அதே வருடம் 11 மாதம் 11ம் திகதி நீண்ட தொலைதூர கடல் பயணம் சென்று காரைநகர் கடற்பரப்பில் சிங்களத்தில் கடற்படையின் அதிவேக டோறாப்படகை சேதமாக்கி தமிழீழ க்கடற்பரப்பில் பெண்களின் வீரியம் சொல்லி கரைந்தனர். கூவும் குயிலென குரல் ஒலிக்கும் ஈழக்கடலினில் உங்களின் முகம் சிரிக்கும் மோதும் அலைகளும் பெயர் உரைக்கும் எங்கள் மூச்சினில் வீரர் உம் நினைவிருக்கும் || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || - இசைவழுதி ( தமிழீழப்பறவை கனடாவில் )
  25. |||| முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட || ஓயாத அலைகள் – 01 || படை நடவடிக்கையில் 19.07.1996 அன்று இரண்டாம் நாள் சமரில் வீரகாவியமான ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்..|||| முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட || ஓயாத அலைகள் – 01 || நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் ‘ 19.07.1996 ‘ படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முல்லைத்தீவு தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் பெரும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இதன்போது | ரணவிரு | என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் தாக்குதலினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது. முல்லைத்தளம் மீதான தாக்குதல், மற்றும் கடல் வான் மூலமான மீட்பு அணிகள் மீதான முறியடிப்புத் தாக்குதல்களில் தீரமுடன் களமாடி 112 போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர். கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை (இராமலிங்கம் செல்வராசா – மன்னார்) கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன் (வேதமணி) (உலகநாதன் ரமேஸ் – யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான் (அப்துல்லா) (சாமித்தம்பி புலேந்திரன் – அம்பாறை) கடற்கரும்புலி மேஜர் பதுமன் (ஆனந்தமயில் பாலமுரளி – யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் சுடரொளி (செபமாலை இரத்தினமலர் – யாழ்ப்பாணம்) லெப்.கேணல் சேரன் (கதிரவேல் ஜெயராஜ் – திருகோணமலை) மேஜர் மகேந்திரன் (நாகராசா பொன்ராஜா – மட்டக்களப்பு) மேஜர் வதனன் (பாலசிங்கம் விஸ்ணுவர்தன் – யாழ்ப்பாணம்) மேஜர் மதுவன் (தீபன்) (திருச்செல்வம் விஜயவீரன் – யாழ்ப்பாணம்) மேஜர் மாறன் (கணபதிப்பிள்ளை யோகராசா – திருகோணமலை) மேஜர் செந்தூரன் (நேரியன்) (ஜோன்பிள்ளை கருணைநாதன் – யாழ்ப்பாணம்) மேஜர் வளவன் (சாரட்னம் சிறீஸ்காந்தராஜா – கிளிநொச்சி) மேஜர் புலிக்குட்டி (கரி) (ஆனந்தராஜா ஜெயமோகன் – வவுனியா) கப்டன் மூர்த்தி (குமாரசாமி இராசரத்தினம் – மட்டக்களப்பு) கப்டன் அருள்ராஜ் (திருமேனி பவளசிங்கம் – மட்டக்களப்பு) கப்டன் காளி (இரத்தினம் ஜெகதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கப்டன் கலைவாணண் (குழந்தைவேல் ரவேந்திரன் – மட்டக்களப்பு) கப்டன் பெருமாள் (கௌதமன்) (அருளம்பலம் டிங்கராசா – யாழ்ப்பாணம்) கப்டன் ஊரன் (கௌதமன்) (அடைக்கலம் இன்பசோதி – யாழ்ப்பாணம்) கப்டன் ஆனந்தகுமார் (சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் – லுணுகல) கப்டன் ஈழவன் (காராளசிங்கம் சசிகரன் – யாழ்ப்பாணம்) கப்டன் கணேசன் (கந்தசாமி சந்திரமோகன் – திருகோணமலை) கப்டன் மணியம் (செல்லத்துரை விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்) கப்டன் செந்தூரா (முருகன் ஜோதிமலர் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் யசோதனன் (ரஞ்சித்) (சண்முகம் வசந்தராஜா – மட்டக்களப்பு) லெப்டினன்ட் சிவபாதன் (சத்தியராஜ்) (சுப்பிரமணியம் ஆனந்தன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் கலைஞானம் (சுப்பிரமணியம் கதிர்காமத்தம்பி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் வேலவன் (கந்தையா ரதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கலைப்புயல் (நாகமணி குணசீலன் – வவுனியா) லெப்டினன்ட் எழில்வாணன் (குழந்தைவேல் சிறீமுருகன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சந்திரிக்கா (கணபதிப்பிள்ளை மகேஸ்வரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மங்களா (அழகேந்திரன் காந்தரூபி – வவுனியா) லெப்டினன்ட் தண்மதி (செல்வத்துரை கோணேஸ்வரி – திருகோணமலை) லெப்டினன்ட் கலீபன் (இராசநாகம் கிருஸ்ரியன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மெய்நம்பி (திருச்செல்வம் அமலதாஸ் – கிளிநொச்சி) லெப்டினன்ட் ஆனந்தராஜ் (தம்பிப்பிள்ளை விஜயரத்தினம் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் தமிழன்பன் (தம்பு சிறீஸ்கந்தராசா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நாதன் (ஐயம்பிள்ளை நந்தகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தாமரைச்செல்வி (வேலு பரிமளம் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் பொன்முடி (யோசப்மரியநாதன் சந்திரஉதயன் – மன்னார்) லெப்டினன்ட் தில்லைநம்பி (இரத்தினம் பாஸ்கரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாணண் (மாணிக்கம் தயாளன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நிமலன் (யோகேஸ்வரன் நிருந்தன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஏகலைவன் (குமாரசாமி நிரஞ்சன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வேந்தன் (பரமசிவம் கிருஸானந்தசிவம் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பெருந்தேவன் (நவரத்தினம் சிவகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பூவாணி (முத்துக்கறுப்பன் விஜயகுமாரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுபா (ஜெகநாதன் ஜெயந்தி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் காதாம்பரி (விநாயகமூர்த்தி கவிதா – முல்லைத்தீவு) லெப்டினன்ட் இளம்பிறை (தங்கராசா பாஸ்கரமோகன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மதுமிதா (கணபதிப்பிள்ளை கலைவேனி – வவுனியா) லெப்டினன்ட் வெற்றிமணி (சின்னத்தம்பி சசிகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் திலகன் (சுப்பையா வசந்தகுமார் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் சுதன் (இராமப்பிள்ளை உதயன் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் எழில்நிலவன் (சின்னத்துரை ஜோசேப் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் காந்தரூபன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் சாமந்தி (சீவரட்ணம் ஜெயந்தினி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி (பராமனந்தன் ஜனார்த்தனி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இசைத்தமிழ் (ஜெகநாதன் பிறேம்குமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நாதன் (அங்கமுத்து சந்திரகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செழியன் (கணபதி ரதீஸ்குமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மெய்யப்பன் (மாணிக்கம் ரவிக்குமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கபிலன் (பாலச்சந்திரன் பிரசாத் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இளந்திரையன் (வீரகத்தி ஜேசுலின் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செழியன் (பிரகலாதன் ரகுநாதன் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் காவியநாயகி (தர்மலிங்கம் சர்மினி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் காஞ்சனாதேவி (சண்டிகா) (சின்னையா அனுசா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சௌந்தன் (சின்னத்தம்பி சிவகுமார் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் புண்ணியராசா (கேதீஸ்) (நவமணியம் நேசன் – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் வரதராயன் (இளையவன் நிமலேந்திரன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் விவேகானந்தி (கந்தராணியம் மதிவதனி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் பொற்செல்வி (இராசதுரை கோமதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் விசித்திரன் (செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருளியன் (அருட்செல்வன்) (அரசரட்னம் வர்ணராசா – திருகோணமலை) வீரவேங்கை ஈழராணி (ஈழவதனி) (சின்னத்தம்பி கனகாம்பிகை – வவுனியா) வீரவேங்கை நாகப்பன் (கந்தையா புண்ணியமூர்த்தி – மட்டக்களப்பு) வீரவேங்கை நித்தியசீலன் (நடராசா அருமைநாயகம் – மட்டக்களப்பு) வீரவேங்கை சிலம்பரசன் (நடராசா தவராசா – அம்பாறை) வீரவேங்கை அருள்மாறன் (இராமரத்தினம் வனேஸ்வரன் – கிளிநொச்சி) வீரவேங்கை நாகமைந்தன் (பத்தநாதன் ஜெயசீலன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை துளசிதரன் (தெய்வேந்திரம் சசிகரன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்வேங்கை (யோகரத்திணம் நகுலேஸ்வரன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை செல்வந்தன் (நாகேந்திரன் காண்டீபன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மலையரசி (வேலாயுதம் தமிழ்ச்செல்வி – திருகோணமலை) வீரவேங்கை மாலதி (இரத்தினசிங்கம் சுகந்தி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சஞ்சிகா (குமாரசாமி பிறேமலா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இந்திரமலர் (கணேஸ் வசந்தகுமாரி – மாத்தளை) வீரவேங்கை கஜேந்திரன் (சுந்தரலிங்கம் விக்னேஸ் – திருகோணமலை) வீரவேங்கை அங்கதன் (தேவராசா விஜயகுமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஆதிரையன் (தியாகராசா யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைவாணன் (சின்னவேல் பத்மநாதன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுகுணன் (அண்ணாமலை சூரியகுமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சேரன் (தர்மலிங்கம் தயாளன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மித்திரன் (முத்துப்பிள்ளை உதயன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இராவணன் (கிருஸ்ணபிள்ளை சுரேஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்வாணி (தம்பிராசா ஜெயரூபன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வாணன் (ரவி) (கந்தசாமி குகதாஸ் – கிளிநொச்சி) வீரவேங்கை மித்திரன் (முத்துத்தம்பி உதயன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிரசாந்தன் (பசுபதி மனோகரன் – கிளிநொச்சி) வீரவேங்கை கோகுலதாசன் (பொன்னுச்சாமி பாஸ்கரன் – வவுனியா) வீரவேங்கை பவானி (வீரசிங்கம் பிறேமிளா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கூர்வேலன் (சுப்பிரமணியம் லக்ஸ்மணன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்மாறன் (தர்மலிங்கம் சந்திரரட்ணம் – முல்லைத்தீவு) வீரவேங்கை கமலன் (சதாசிவம் திருச்செல்வம் – கிளிநொச்சி) வீரவேங்கை முத்துச்செல்வன் (செல்வராசா சிவகுமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாரிவேல் (இளங்குமரன்) (தம்பு சதீஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலாமோகன் (முருகன் ரமேஸ்குமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இனியவன் (கைலாசப்பிள்ளை கோகுலன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிறைசூடி (இராசரத்தினம் இராகவன் – வவுனியா) வீரவேங்கை சபேசன் (செல்வராசா சதீசன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை நிமாலினி (தர்மலிங்கம் சிவகௌரி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பரமேஸ்வரி (சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி – கிளிநொச்சி) || உயிராயுதம் பாகம் : 05 ல் இவ் கடற்கரும்புலிகளின் உயிரோட்டம் 37:45 – 44:00 வரை நீள்கிறது … || || ஓயாத அலைகள் – 01 (முல்லைப் பெரும் சமர்) || || ஓயாத இசை அலை ( முல்லைச்சமர் நினைவான பாடல்கள் ) || தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் || தேசக்காற்று தமிழீழப்பறவை கனடாவில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.