Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருள் மொழி இசைவழுதி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by அருள் மொழி இசைவழுதி

  1. ||| ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர் ||| விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது. ஓயாத அலைகல் நினைவூடல் இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர். (பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை) சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம். ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது. இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன. திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது. கடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முல்லைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடிhயமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது. எங்கே ஓடுவது? திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர். தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை; தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள். அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற்பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.) இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான். இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான். முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின்போது. இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம். ஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது. இதையொட்டிய சம்பவமொன்று…. முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்). கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள். கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து… ஓயாத அலைகள் 1 என்பது 1996 இல் இலங்கை வன்னிப் பகுதியின் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்த இலங்கை அரசபடையினரின் படைத்தளத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயராகும். 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. விடுதலைப்புலிகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி வன்னிப் பகுதியைத் தமது தளமாகக் கொண்டு செயற்பட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடை கருதியது. அதேநேரம் விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனப்பட்டுப் போய்விட்டனர் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாடு அரசபடையினரால் கைப்பற்றப்பட்டு மூன்று மாதத்தில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப்படை முகாம் மட்டுமே வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் துருத்திக்கொண்டிருந்த ஒரேயொரு படைமுகாம் ஆகும். தொடக்கத்தில் மிகச்சிறிய முகாமாக இருந்து, பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஒரு படைநடவடிக்கை மூலம் இம்முகாம் பெருப்பிக்கப்பட்டிருந்தது. தரைவழியாக தனித்துவிடப்பட்ட இப்படைத்தளம் குறிப்பிடத்தக்களவு நீளமான கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் வழியாகவும் வான்வழியாகவும் படையினருக்கான வினியோகத்தைச் செய்துகொண்டிருந்தது. வன்னியின் புகழ்பூத்த வற்றாப்பளை அம்மன் கோயில் இப்படை முகாமுக்கு மிகமிக அண்மையில் இருக்கும் கோயிலாகும். தாக்குதல் 1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்றுநாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. தரையிறக்கமும் எதிர்ப்புச்சமரும் முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு திரிவிட பகர என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது. தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சிலநாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேறவிடாது மறித்துவைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு ‘ஓயாத அலைகள் – ஒன்று’ நடவடிக்கை முடிவுக்கு வந்தது. தரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் ‘ரணவிறு’ என்ற தாக்குதல் கலமொன்று கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில் 7 கடற்கரும்புலிகள் கடலிலே காவியம் படைத்தனர். இப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர். இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும் இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு படையினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார். புலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது. பலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த வெற்றிகர நடவடிக்கையின் போது தரையிலும் கடலிலும் 320 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். முதல் நாள் 18.07.1996 அன்று லெப்.கேணல் சுதர்சன் உட்பட 158 போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர். லெப்.கேணல் சுதர்சன் (அல்பிரட் யூட்ஜெராட் – முல்லைத்தீவு) மேஜர் திருச்சிற்றம்பலம் (நவநீதன்) (செபமாலை பத்திநாதன் – மன்னார்) மேஜர் கலைரதன் (கலைச்செல்வன்) (சுப்பிரமணியம் ரவீந்திரன் – மட்டக்களப்பு) மேஜர் ஜெயா (முத்துக்குமார் விஜயகுமாரி – யாழ்ப்பாணம்) மேஜர் சுலக்சி (செந்தமிழி) (நல்லையா நவமணி – மட்டக்களப்பு) மேஜர் கண்ணகி (சிவசுப்பிரமணியம் சுபகௌரி – யாழ்ப்பாணம்) மேஜர் தங்கேஸ் (மில்ரன்) (நாகராசா தனசேகர் – வவுனியா) மேஜர் நாயகன் (கணேசன் செந்தூரன் – யாழ்ப்பாணம்) மேஜர் கேசவன் (பசீலன்) (விமலராஜன் வரதராஜன் – திருகோணமலை) மேஜர் நெடுஞ்செழியன் (ராஜ்) (சிவசுப்பிரமணியதேவா அகிலன் – யாழ்ப்பாணம்) மேஜர் தேன்மொழி (றமணி) (அருமைத்துரை யூடிற்றா – மன்னார்) மேஜர் திருமாறன் (பாலசுப்பிரமணியம் சிவகுமார் – திருகோணமலை) கப்டன் குணபாலன் (சின்னத்துரை சந்திரகுமார் – அம்பாறை) கப்டன் சிவகரன் (அத்தநாயக்கா குட்டி – அம்பாறை) கப்டன் சிவராஜ் (குழந்தைவேல் உலகநாதன் – அம்பாறை) கப்டன் மணிமாறன் (ராசப்பர் தேவசகாயம் – அம்பாறை) கப்டன் முத்தமிழன் (கிருஸ்ணப்பிள்ளை மனோகரன் – யாழ்ப்பாணம்) கப்டன் மங்களன் (கிட்ணப்பிள்ளை விக்னேஸ்வரன் – முல்லைத்தீவு) கப்டன் பெரியதம்பி (செல்வராசா தர்மராசா – வவுனியா) கப்டன் தயாளன் (பரமசாமி சந்தோதரன் – யாழ்ப்பாணம்) கப்டன் இமயவரன் (கந்தவனம் தவேந்திரன் – யாழ்ப்பாணம்) கப்டன் புத்தூரன் (ஆறுமுகம் ரவிமோகன் – யாழ்ப்பாணம்) கப்டன் இளந்தேவன் (செல்வராசா தர்மசீலன் – முல்லைத்தீவு) கப்டன் கிருபா (இராசையா கலாநிதி – யாழ்ப்பாணம்) கப்டன் ஜீவினி (கவிதா) (நீலக்குட்டி சுலோசனா – மட்டக்களப்பு) கப்டன் றமா (பாலசிங்கம் சறோஜினி – கிளிநொச்சி) கப்டன் மகாதேவி (செல்லத்தம்பி ஜெயலட்சுமி – யாழ்ப்பாணம்) கப்டன் பிறேமாவதி (தயாகுணம் தயாபரி – யாழ்ப்பாணம்) கப்டன் கோதை (அருட்பிரகாசம் ராணி – யாழ்ப்பாணம்) கப்டன் யசோதா (கணபதிப்பிள்ளை சரஸ்வதி – முல்லைத்தீவு) கப்டன் மதி (திருநாவுக்கரசு சிவசக்தி – யாழ்ப்பாணம்) கப்டன் எழிற்செல்வன் (ரஞ்சித்) (முத்து சிவராசா – யாழ்ப்பாணம்) கப்டன் மதுரன் (இனியவன்) (இராஜரட்னம் கிருஸ்ணகுமார் – யாழ்ப்பாணம்) கப்டன் திருவுடைச்செல்வன் (திருநீலகண்டன்) (வெங்கடாசலம் பாலசுப்பிரமணியம் – கண்டி) கப்டன் மயூரன் (கிட்ணன் செல்வன் – யாழ்ப்பாணம்) கப்டன் சுடர்மணி (தினேஸ்) (ஒப்பிலாமணி தெய்வேந்திரன் – திருகோணமலை) கப்டன் பாபு (சின்னராசா பகீரதன் – யாழ்ப்பாணம்) கப்டன் கதிரொளி (சூசைதாஸ் அஜந்தன் – யாழ்ப்பாணம்) கப்டன் சாலமன் (கதிரன் ரவீந்திரராசா – யாழ்ப்பாணம்) கப்டன் தென்றல் (முருகேசு ஜெயா – யாழ்ப்பாணம்) கப்டன் செங்கொடி (இருதயநாதன் லூட்ஸ்வாசுகி – யாழ்ப்பாணம்) கப்டன் இசையழகன் (கிளறன்ஸ்கிளின்ரஸ் கொலின்ஸ் – யாழ்ப்பாணம்) கப்டன் தமிழேந்தி (கீறோராய்) (குமாரசாமி சிவகேதீசன் – யாழ்ப்பாணம்) கப்டன் கலைமதி (குழந்தையன் சுதாஜினி – யாழ்ப்பாணம்) கப்டன் சமுத்திரன் (சண்முகசுந்தரம் சுந்திரசிவா – யாழ்ப்பாணம்) கப்டன் கீரன் (கிள்ளிவளவன்) (இரத்தினசிங்கம் தவளைக்கிளி – யாழ்ப்பாணம்) கப்டன் புலவர் (சிவபாதசிங்கம் சத்திஜேந்திரன் – யாழ்ப்பாணம்) கப்டன் மணாளராஜன் (மன்னன்) (சிவகுணம் சிவரஞ்சன் – மட்டக்களப்பு) கப்டன் வேங்கையன் (வதனன்) (சுப்பிரமணியம் கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கப்டன் இராமகுமார் (ராம்குமார்) (சந்தனம் யோகேஸ்வரன் – வவுனியா) கப்டன் கவிஞன் (தங்கவேல் ரமேஸ்வரன் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் கடத்தன் (பரமன்) (சின்னராசா தேவராசா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மறவன் (முருகையா தினேஸ்குமார் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் சாந்தகௌரி (ஆரோக்கியம் மேரியசிந்தா – மன்னார்) லெப்டினன்ட் பார்த்தீபா (சுப்பிரமணியம் நாகராணி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ராணி (வேதநாயகம் மங்களேஸ்வரி – திருகோணமலை) லெப்டினன்ட் பிருந்தா (செல்லையா கௌரி – முல்லைத்தீவு) லெப்டினன்ட் சுதனி (பசுபதி ஜீவரானி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுடர்மணி (அன்சர்) (நடராசா நடனகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாகீசன் (இராசையா ஆனந்தரூபன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மேலவன் (வேலவன்) (ஞானப்பிரகாசம் அன்ரனி – வவுனியா) லெப்டினன்ட் தூயவன் (றீயாட்) (சிறீஸ்கந்தராசா செல்வகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தமிழ்வாணன் (மாணிக்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அன்பழகி (நரசிங்கம் மகாலட்சுமி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுதாமதி (நடராசா காளிங்கேஸ்வரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நன்மாறன் (நீக்கிலான் கிரிஸ்ரியோகதாஸ் – மன்னார்) லெப்டினன்ட் அறிவொளி (நடராசா மோகனராசா – வவுனியா) லெப்டினன்ட் நற்காணன் (விஸ்வரட்ணம் பத்மசொரூபன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சின்னக்குட்டி (மாசிலாமணி விஜயகுமார் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் மணியரசன் (குணசேகரம் சந்திரகுமார் – திருகோணமலை) லெப்டினன்ட் சாந்தன் (விக்கினேஸ்வரன் விஜயபாஸ்கரன் – மன்னார்) லெப்டினன்ட் திவ்வியன் (அருள்மணி) (வேதநாயகம் பிரான்சிஸ் – மன்னார்) லெப்டினன்ட் நிலவழகன் (வேலுப்பிள்ளை பிரதீபன் – வவுனியா) லெப்டினன்ட் சேதுகாவலன் (பிரான்சிஸ் மோசஸ் – இரத்தினபுரி) லெப்டினன்ட் சுக்கிரீபன் (விசுவநாதன் நகுலகுலசிங்கம் – கிளிநொச்சி) லெப்டினன்ட் பாரதிதாசன் (ஐங்கரன்) (கைலாயப்பிள்ளை கமலதாசன் – வவுனியா) லெப்டினன்ட் பரமதேவா (மருதன் சண்முகலிங்கம் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இசைக்கோன் (பத்மநாதன் யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மதி (அரிச்சந்திரன் வசீகரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தயாபரன் (அன்பன்) (நாகேந்திரம் சுதர்சன் – மன்னார்) லெப்டினன்ட் தாமரை (விநாயகமூர்த்தி மலர்விழி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அஜித்தா (குமாரவேலு பகிரதி – கிளிநொச்சி) லெப்டினன்ட் யாழிசை (குகதாசன் ஜெயகௌரி – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் கோமான் (சிவலிங்கம் உதயராயன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வாழேந்தி (செந்தமிழன்) (அன்னலிங்கம் செல்வகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஆதப்பன் (ஈசன்) (பழனிவேல் ரகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வளவன் (சாந்தகுணசிங்கம் குலேந்திரராஜ் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருச்சுனன் (வேலுப்பிள்ளை பிரதீபன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அற்புதன் (கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மானவீரன் (முத்தையா தனபால் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மகாசோதி (தம்பிமுத்து ரவீந்திரன் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தயாகாரன் (பத்தகுட்டி கதிரமன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கூர்வேலன் (லட்சுமணன் சுந்தரம் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் சிவாகரன் (மயிலுப்போடி ஞானசேகரம் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ராதா (குழந்தைவேல் காளிதாஸ் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கவி (தங்கவேல் தவராஜா – அம்பாறை) 2ம் லெப்டினன்ட் இராஜசீலன் (சுப்பிரமணியம் மதியழகன் – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் கருணாகரன் (பழனியாண்டி புஸ்பராசா – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் செல்வகணேசன் (கந்தசாமி விஜயசங்கர் – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் மணாளன் (மாயழகு பொன்மணிராசா – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் மதி (முருகுப்பிள்ளை இராஜேஸ்வரன் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் செம்பியன் (பேரின்பநாயகம் சால்ஸ்பொனிக்ஸ் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சொக்கன் (மாரிமுத்து முருகேஸ்வரன் – மன்னார்) 2ம் லெப்டினன்ட் மன்மதன் (தேவசிகாமணி முகுந்தப்பிரியன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (இம்ரான்) (தம்பிமுத்து மதியழகன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செல்வம் (பாலச்சந்திரன் வதனி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வதனி (ஜெகநாதன் சசிகலா – மாத்தளை) 2ம் லெப்டினன்ட் வேதினி (தர்மன் தர்சினி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சந்திரா (இராசையா பரமேஸ்வரி – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (இராஜகோபால் மஞ்சுளா – மன்னார்) 2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சிதம்பரப்பிள்ளை மல்லிகாதேவி – மன்னார்) 2ம் லெப்டினன்ட் மணியரசன் (ஆரோக்கியநாதன் ரெஜினோல்ட் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் காவியன் (சுந்தரம் உதயகுமார் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் புயலவன் (கணேசபிள்ளை தமிழ்ச்செல்வன் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் அறிவுக்குமரன் (இராமன் உதயகுமார் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நிசா (நிலா) (சண்முகம் பத்மாதேவி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் குகதா (சண்முகலிங்கம் சுஜாதா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இன்பா (நடராஜபிள்ளை உசாநந்தினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை செம்பியன் (காசிப்பிள்ளை கனகசிங்கம் – திருகோணமலை) வீரவேங்கை நிலவழவன் (பிள்ளையான் யோகராசா – அம்பாறை) வீரவேங்கை விமலகுமார் (ஆனந்தன் உதயகுமார் – மட்டக்களப்பு) வீரவேங்கை சுகிர்தன் (சின்னத்தம்பி பரமேஸ்வரன் – மட்டக்களப்பு) வீரவேங்கை கமலகாசன் (தெய்வநாயகம் கேதீஸ்வரன் – மட்டக்களப்பு) வீரவேங்கை தங்கராசா (தம்பிராசா உதயகுமார் – மட்டக்களப்பு) வீரவேங்கை அற்புதமேனன் (பொன்னையா சுப்பிரமணியம் – மட்டக்களப்பு) வீரவேங்கை ஆதிகரன் (பத்மன் பத்மசீலன் – மட்டக்களப்பு) வீரவேங்கை தனபாலினி (நல்லையா சுகந்தினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வேல்விழி (ஐயாத்துரை பத்மலோஜி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மயூரன் (சுப்பிரமணியம் சிவகுமார் – கிளிநொச்சி) வீரவேங்கை இன்பன் (அருளானந்தம் பிறேமானந்தசீலன் – கிளிநொச்சி) வீரவேங்கை திருக்குமரன் (பாலசிங்கம் பாஸ்கரன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோபி (தவநாதன் றொபேட்கோகுலசேகரம் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஒப்பிலாமணி (மனோபாலசிங்கம் இராசசங்கர் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை துரைக்குட்டி (யோகாம்பிள்ளை அன்ரனிராஜ் – முல்லைத்தீவு) வீரவேங்கை வில்லவன் (அருச்சுனன்) (தவராசா ரஜனிக்காந் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மதிநிலவன் (குருநாதன் இராகுலன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வளநாடன் (சிவனேசன் தர்மராயன் – முல்லைத்தீவு) வீரவேங்கை தவயோகன் (மாணிக்கராசா சந்திரமோகன் – கிளிநொச்சி) வீரவேங்கை காங்கேயன் (மயில்வாகனம் நாகநாதன் – முல்லைத்தீவு) வீரவேங்கை சிவநீதன் (மாயவன் மகேந்திரன் – வவுனியா) வீரவேங்கை முரளி (இராமநாதன் ரஞ்சன் – மன்னார்) வீரவேங்கை நல்லதம்பி (தங்கராஜா விநாயகமூர்த்தி – மட்டக்களப்பு) வீரவேங்கை நித்தி (மோகனதாஸ் தவக்குமார் – மட்டக்களப்பு) வீரவேங்கை மைதிலி (தம்பிராசா மஞ்சுளா – வவுனியா) வீரவேங்கை வாணி (இராசலிங்கம் சுமதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை திலகரி (சின்னராசா குமுதினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தளிர் (நித்தியானந்தன் நிசாந்தினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்வானி (யோகலிங்கம் றஜனி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை யாழினி (வரதராசா யோகேஸ்வரி – கிளிநொச்சி) வீரவேங்கை தேனல்லி (கோபால் மணி – மட்டக்களப்பு) வீரவேங்கை அக்கினோ (சிற்றம்பலம் செல்வராணி – அம்பாறை) வீரவேங்கை வேண்மகள் (முருகன் செல்வரதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கமலா (சுப்பிரமணியம் ரதிதேவி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை அபிராமி (சிவப்பிரகாசம் கிருஸ்ணாம்பாள் – கிளிநொச்சி) வீரவேங்கை மாதுமை (மாணிக்கம் வளர்மதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இனியவன் (நோயல் ஜெப்றி – கிளிநொச்சி) வீரவேங்கை நீதிபாலன் (அழகிப்போடி உமாசுதன் – மட்டக்களப்பு) வீரவேங்கை சுவர்ணன் (நல்லதம்பி சோதிலிங்கம் – யாழ்ப்பாணம்) இரண்டாம் நாள் 19.07.1996 அன்று ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர். கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை (இராமலிங்கம் செல்வராசா – மன்னார்) கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன் (வேதமணி) (உலகநாதன் ரமேஸ் – யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான் (அப்துல்லா) (சாமித்தம்பி புலேந்திரன் – அம்பாறை) கடற்கரும்புலி மேஜர் பதுமன் (ஆனந்தமயில் பாலமுரளி – யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் சுடரொளி (செபமாலை இரத்தினமலர் – யாழ்ப்பாணம்) லெப்.கேணல் சேரன் (கதிரவேல் ஜெயராஜ் – திருகோணமலை) மேஜர் மகேந்திரன் (நாகராசா பொன்ராஜா – மட்டக்களப்பு) மேஜர் வதனன் (பாலசிங்கம் விஸ்ணுவர்தன் – யாழ்ப்பாணம்) மேஜர் மதுவன் (தீபன்) (திருச்செல்வம் விஜயவீரன் – யாழ்ப்பாணம்) மேஜர் மாறன் (கணபதிப்பிள்ளை யோகராசா – திருகோணமலை) மேஜர் செந்தூரன் (நேரியன்) (ஜோன்பிள்ளை கருணைநாதன் – யாழ்ப்பாணம்) மேஜர் வளவன் (சாரட்னம் சிறீஸ்காந்தராஜா – கிளிநொச்சி) மேஜர் புலிக்குட்டி (கரி) (ஆனந்தராஜா ஜெயமோகன் – வவுனியா) கப்டன் மூர்த்தி (குமாரசாமி இராசரத்தினம் – மட்டக்களப்பு) கப்டன் அருள்ராஜ் (திருமேனி பவளசிங்கம் – மட்டக்களப்பு) கப்டன் காளி (இரத்தினம் ஜெகதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கப்டன் கலைவாணண் (குழந்தைவேல் ரவேந்திரன் – மட்டக்களப்பு) கப்டன் பெருமாள் (கௌதமன்) (அருளம்பலம் டிங்கராசா – யாழ்ப்பாணம்) கப்டன் ஊரன் (கௌதமன்) (அடைக்கலம் இன்பசோதி – யாழ்ப்பாணம்) கப்டன் ஆனந்தகுமார் (சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் – லுணுகல) கப்டன் ஈழவன் (காராளசிங்கம் சசிகரன் – யாழ்ப்பாணம்) கப்டன் கணேசன் (கந்தசாமி சந்திரமோகன் – திருகோணமலை) கப்டன் மணியம் (செல்லத்துரை விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்) கப்டன் செந்தூரா (முருகன் ஜோதிமலர் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் யசோதனன் (ரஞ்சித்) (சண்முகம் வசந்தராஜா – மட்டக்களப்பு) லெப்டினன்ட் சிவபாதன் (சத்தியராஜ்) (சுப்பிரமணியம் ஆனந்தன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் கலைஞானம் (சுப்பிரமணியம் கதிர்காமத்தம்பி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் வேலவன் (கந்தையா ரதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கலைப்புயல் (நாகமணி குணசீலன் – வவுனியா) லெப்டினன்ட் எழில்வாணன் (குழந்தைவேல் சிறீமுருகன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சந்திரிக்கா (கணபதிப்பிள்ளை மகேஸ்வரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மங்களா (அழகேந்திரன் காந்தரூபி – வவுனியா) லெப்டினன்ட் தண்மதி (செல்வத்துரை கோணேஸ்வரி – திருகோணமலை) லெப்டினன்ட் கலீபன் (இராசநாகம் கிருஸ்ரியன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மெய்நம்பி (திருச்செல்வம் அமலதாஸ் – கிளிநொச்சி) லெப்டினன்ட் ஆனந்தராஜ் (தம்பிப்பிள்ளை விஜயரத்தினம் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் தமிழன்பன் (தம்பு சிறீஸ்கந்தராசா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நாதன் (ஐயம்பிள்ளை நந்தகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தாமரைச்செல்வி (வேலு பரிமளம் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் பொன்முடி (யோசப்மரியநாதன் சந்திரஉதயன் – மன்னார்) லெப்டினன்ட் தில்லைநம்பி (இரத்தினம் பாஸ்கரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாணண் (மாணிக்கம் தயாளன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நிமலன் (யோகேஸ்வரன் நிருந்தன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஏகலைவன் (குமாரசாமி நிரஞ்சன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வேந்தன் (பரமசிவம் கிருஸானந்தசிவம் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பெருந்தேவன் (நவரத்தினம் சிவகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பூவாணி (முத்துக்கறுப்பன் விஜயகுமாரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுபா (ஜெகநாதன் ஜெயந்தி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் காதாம்பரி (விநாயகமூர்த்தி கவிதா – முல்லைத்தீவு) லெப்டினன்ட் இளம்பிறை (தங்கராசா பாஸ்கரமோகன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மதுமிதா (கணபதிப்பிள்ளை கலைவேனி – வவுனியா) லெப்டினன்ட் வெற்றிமணி (சின்னத்தம்பி சசிகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் திலகன் (சுப்பையா வசந்தகுமார் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் சுதன் (இராமப்பிள்ளை உதயன் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் எழில்நிலவன் (சின்னத்துரை ஜோசேப் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் காந்தரூபன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் சாமந்தி (சீவரட்ணம் ஜெயந்தினி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி (பராமனந்தன் ஜனார்த்தனி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இசைத்தமிழ் (ஜெகநாதன் பிறேம்குமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நாதன் (அங்கமுத்து சந்திரகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செழியன் (கணபதி ரதீஸ்குமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மெய்யப்பன் (மாணிக்கம் ரவிக்குமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கபிலன் (பாலச்சந்திரன் பிரசாத் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இளந்திரையன் (வீரகத்தி ஜேசுலின் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செழியன் (பிரகலாதன் ரகுநாதன் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் காவியநாயகி (தர்மலிங்கம் சர்மினி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் காஞ்சனாதேவி (சண்டிகா) (சின்னையா அனுசா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சௌந்தன் (சின்னத்தம்பி சிவகுமார் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் புண்ணியராசா (கேதீஸ்) (நவமணியம் நேசன் – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் வரதராயன் (இளையவன் நிமலேந்திரன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் விவேகானந்தி (கந்தராணியம் மதிவதனி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் பொற்செல்வி (இராசதுரை கோமதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் விசித்திரன் (செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருளியன் (அருட்செல்வன்) (அரசரட்னம் வர்ணராசா – திருகோணமலை) வீரவேங்கை ஈழராணி (ஈழவதனி) (சின்னத்தம்பி கனகாம்பிகை – வவுனியா) வீரவேங்கை நாகப்பன் (கந்தையா புண்ணியமூர்த்தி – மட்டக்களப்பு) வீரவேங்கை நித்தியசீலன் (நடராசா அருமைநாயகம் – மட்டக்களப்பு) வீரவேங்கை சிலம்பரசன் (நடராசா தவராசா – அம்பாறை) வீரவேங்கை அருள்மாறன் (இராமரத்தினம் வனேஸ்வரன் – கிளிநொச்சி) வீரவேங்கை நாகமைந்தன் (பத்தநாதன் ஜெயசீலன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை துளசிதரன் (தெய்வேந்திரம் சசிகரன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்வேங்கை (யோகரத்திணம் நகுலேஸ்வரன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை செல்வந்தன் (நாகேந்திரன் காண்டீபன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மலையரசி (வேலாயுதம் தமிழ்ச்செல்வி – திருகோணமலை) வீரவேங்கை மாலதி (இரத்தினசிங்கம் சுகந்தி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சஞ்சிகா (குமாரசாமி பிறேமலா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இந்திரமலர் (கணேஸ் வசந்தகுமாரி – மாத்தளை) வீரவேங்கை கஜேந்திரன் (சுந்தரலிங்கம் விக்னேஸ் – திருகோணமலை) வீரவேங்கை அங்கதன் (தேவராசா விஜயகுமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஆதிரையன் (தியாகராசா யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைவாணன் (சின்னவேல் பத்மநாதன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுகுணன் (அண்ணாமலை சூரியகுமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சேரன் (தர்மலிங்கம் தயாளன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மித்திரன் (முத்துப்பிள்ளை உதயன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இராவணன் (கிருஸ்ணபிள்ளை சுரேஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்வாணி (தம்பிராசா ஜெயரூபன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வாணன் (ரவி) (கந்தசாமி குகதாஸ் – கிளிநொச்சி) வீரவேங்கை மித்திரன் (முத்துத்தம்பி உதயன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிரசாந்தன் (பசுபதி மனோகரன் – கிளிநொச்சி) வீரவேங்கை கோகுலதாசன் (பொன்னுச்சாமி பாஸ்கரன் – வவுனியா) வீரவேங்கை பவானி (வீரசிங்கம் பிறேமிளா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கூர்வேலன் (சுப்பிரமணியம் லக்ஸ்மணன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்மாறன் (தர்மலிங்கம் சந்திரரட்ணம் – முல்லைத்தீவு) வீரவேங்கை கமலன் (சதாசிவம் திருச்செல்வம் – கிளிநொச்சி) வீரவேங்கை முத்துச்செல்வன் (செல்வராசா சிவகுமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாரிவேல் (இளங்குமரன்) (தம்பு சதீஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலாமோகன் (முருகன் ரமேஸ்குமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இனியவன் (கைலாசப்பிள்ளை கோகுலன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிறைசூடி (இராசரத்தினம் இராகவன் – வவுனியா) வீரவேங்கை சபேசன் (செல்வராசா சதீசன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை நிமாலினி (தர்மலிங்கம் சிவகௌரி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பரமேஸ்வரி (சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி – கிளிநொச்சி) 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. 21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது. கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது. இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர். இக்கடற்சமர், அலம்பிலிருந்து முன்னகர்ந்த படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல் உட்பட ஓயாத அலைகள் – 1 நடவடிக்கையில் 21.07.1996 நான்காம் நாள் அன்று இரண்டு கடற்கரும்புலிகள், உட்பட்ட 12 போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர். கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் – சங்கத்தானை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் – அக்கரைப்பற்று, அம்பாறை) மேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் – கும்புறுப்பிட்டி, திருகோணமலை) கப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா – குமுழமுனை, முல்லைத்தீவு) கப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் – கரடியனாறு, மட்டக்களப்பு) கப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் – தாளையடி, யாழ்ப்பாணம்) கப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் – திருகோணமலை) லெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி – சேந்தான்குளம், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா – மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி – அக்கரைப்பற்று , அம்பாறை) வீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு) சோழவரலாறு மீண்டும் ஈழத்தில் உயிராயுதம் பாகம் : 05 ல் இவ் கடற்கரும்புலிகளின் உயிரோட்டம் 37:45 – 44:00 வரை நீள்கிறது … ஓயாத இசை அலை ( முல்லைச்சமர் நினைவான பாடல்கள் ) முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம்….. || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்|| தேசக்காற்று
  2. 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட || ஓயாத அலைகள் – 1 || படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் – 1 என்ற பெயர் சூட்டப்பட்டு தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன. இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த வெற்றிகர நடவடிக்கையின் போது தரையிலும் கடலிலும் 320 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். மாவீரத் தியாகிகளே… இவர்களில் முதல் நாள் 18.07.1996 அன்று 158 போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர். லெப்.கேணல் சுதர்சன் (அல்பிரட் யூட்ஜெராட் – முல்லைத்தீவு) மேஜர் திருச்சிற்றம்பலம் (நவநீதன்) (செபமாலை பத்திநாதன் – மன்னார்) மேஜர் கலைரதன் (கலைச்செல்வன்) (சுப்பிரமணியம் ரவீந்திரன் – மட்டக்களப்பு) மேஜர் ஜெயா (முத்துக்குமார் விஜயகுமாரி – யாழ்ப்பாணம்) மேஜர் சுலக்சி (செந்தமிழி) (நல்லையா நவமணி – மட்டக்களப்பு) மேஜர் கண்ணகி (சிவசுப்பிரமணியம் சுபகௌரி – யாழ்ப்பாணம்) மேஜர் தங்கேஸ் (மில்ரன்) (நாகராசா தனசேகர் – வவுனியா) மேஜர் நாயகன் (கணேசன் செந்தூரன் – யாழ்ப்பாணம்) மேஜர் கேசவன் (பசீலன்) (விமலராஜன் வரதராஜன் – திருகோணமலை) மேஜர் நெடுஞ்செழியன் (ராஜ்) (சிவசுப்பிரமணியதேவா அகிலன் – யாழ்ப்பாணம்) மேஜர் தேன்மொழி (றமணி) (அருமைத்துரை யூடிற்றா – மன்னார்) மேஜர் திருமாறன் (பாலசுப்பிரமணியம் சிவகுமார் – திருகோணமலை) கப்டன் குணபாலன் (சின்னத்துரை சந்திரகுமார் – அம்பாறை) கப்டன் சிவகரன் (அத்தநாயக்கா குட்டி – அம்பாறை) கப்டன் சிவராஜ் (குழந்தைவேல் உலகநாதன் – அம்பாறை) கப்டன் மணிமாறன் (ராசப்பர் தேவசகாயம் – அம்பாறை) கப்டன் முத்தமிழன் (கிருஸ்ணப்பிள்ளை மனோகரன் – யாழ்ப்பாணம்) கப்டன் மங்களன் (கிட்ணப்பிள்ளை விக்னேஸ்வரன் – முல்லைத்தீவு) கப்டன் பெரியதம்பி (செல்வராசா தர்மராசா – வவுனியா) கப்டன் தயாளன் (பரமசாமி சந்தோதரன் – யாழ்ப்பாணம்) கப்டன் இமயவரன் (கந்தவனம் தவேந்திரன் – யாழ்ப்பாணம்) கப்டன் புத்தூரன் (ஆறுமுகம் ரவிமோகன் – யாழ்ப்பாணம்) கப்டன் இளந்தேவன் (செல்வராசா தர்மசீலன் – முல்லைத்தீவு) கப்டன் கிருபா (இராசையா கலாநிதி – யாழ்ப்பாணம்) கப்டன் ஜீவினி (கவிதா) (நீலக்குட்டி சுலோசனா – மட்டக்களப்பு) கப்டன் றமா (பாலசிங்கம் சறோஜினி – கிளிநொச்சி) கப்டன் மகாதேவி (செல்லத்தம்பி ஜெயலட்சுமி – யாழ்ப்பாணம்) கப்டன் பிறேமாவதி (தயாகுணம் தயாபரி – யாழ்ப்பாணம்) கப்டன் கோதை (அருட்பிரகாசம் ராணி – யாழ்ப்பாணம்) கப்டன் யசோதா (கணபதிப்பிள்ளை சரஸ்வதி – முல்லைத்தீவு) கப்டன் மதி (திருநாவுக்கரசு சிவசக்தி – யாழ்ப்பாணம்) கப்டன் எழிற்செல்வன் (ரஞ்சித்) (முத்து சிவராசா – யாழ்ப்பாணம்) கப்டன் மதுரன் (இனியவன்) (இராஜரட்னம் கிருஸ்ணகுமார் – யாழ்ப்பாணம்) கப்டன் திருவுடைச்செல்வன் (திருநீலகண்டன்) (வெங்கடாசலம் பாலசுப்பிரமணியம் – கண்டி) கப்டன் மயூரன் (கிட்ணன் செல்வன் – யாழ்ப்பாணம்) கப்டன் சுடர்மணி (தினேஸ்) (ஒப்பிலாமணி தெய்வேந்திரன் – திருகோணமலை) கப்டன் பாபு (சின்னராசா பகீரதன் – யாழ்ப்பாணம்) கப்டன் கதிரொளி (சூசைதாஸ் அஜந்தன் – யாழ்ப்பாணம்) கப்டன் சாலமன் (கதிரன் ரவீந்திரராசா – யாழ்ப்பாணம்) கப்டன் தென்றல் (முருகேசு ஜெயா – யாழ்ப்பாணம்) கப்டன் செங்கொடி (இருதயநாதன் லூட்ஸ்வாசுகி – யாழ்ப்பாணம்) கப்டன் இசையழகன் (கிளறன்ஸ்கிளின்ரஸ் கொலின்ஸ் – யாழ்ப்பாணம்) கப்டன் தமிழேந்தி (கீறோராய்) (குமாரசாமி சிவகேதீசன் – யாழ்ப்பாணம்) கப்டன் கலைமதி (குழந்தையன் சுதாஜினி – யாழ்ப்பாணம்) கப்டன் சமுத்திரன் (சண்முகசுந்தரம் சுந்திரசிவா – யாழ்ப்பாணம்) கப்டன் கீரன் (கிள்ளிவளவன்) (இரத்தினசிங்கம் தவளைக்கிளி – யாழ்ப்பாணம்) கப்டன் புலவர் (சிவபாதசிங்கம் சத்திஜேந்திரன் – யாழ்ப்பாணம்) கப்டன் மணாளராஜன் (மன்னன்) (சிவகுணம் சிவரஞ்சன் – மட்டக்களப்பு) கப்டன் வேங்கையன் (வதனன்) (சுப்பிரமணியம் கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கப்டன் இராமகுமார் (ராம்குமார்) (சந்தனம் யோகேஸ்வரன் – வவுனியா) கப்டன் கவிஞன் (தங்கவேல் ரமேஸ்வரன் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் கடத்தன் (பரமன்) (சின்னராசா தேவராசா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மறவன் (முருகையா தினேஸ்குமார் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் சாந்தகௌரி (ஆரோக்கியம் மேரியசிந்தா – மன்னார்) லெப்டினன்ட் பார்த்தீபா (சுப்பிரமணியம் நாகராணி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ராணி (வேதநாயகம் மங்களேஸ்வரி – திருகோணமலை) லெப்டினன்ட் பிருந்தா (செல்லையா கௌரி – முல்லைத்தீவு) லெப்டினன்ட் சுதனி (பசுபதி ஜீவரானி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுடர்மணி (அன்சர்) (நடராசா நடனகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாகீசன் (இராசையா ஆனந்தரூபன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மேலவன் (வேலவன்) (ஞானப்பிரகாசம் அன்ரனி – வவுனியா) லெப்டினன்ட் தூயவன் (றீயாட்) (சிறீஸ்கந்தராசா செல்வகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தமிழ்வாணன் (மாணிக்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அன்பழகி (நரசிங்கம் மகாலட்சுமி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுதாமதி (நடராசா காளிங்கேஸ்வரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நன்மாறன் (நீக்கிலான் கிரிஸ்ரியோகதாஸ் – மன்னார்) லெப்டினன்ட் அறிவொளி (நடராசா மோகனராசா – வவுனியா) லெப்டினன்ட் நற்காணன் (விஸ்வரட்ணம் பத்மசொரூபன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சின்னக்குட்டி (மாசிலாமணி விஜயகுமார் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் மணியரசன் (குணசேகரம் சந்திரகுமார் – திருகோணமலை) லெப்டினன்ட் சாந்தன் (விக்கினேஸ்வரன் விஜயபாஸ்கரன் – மன்னார்) லெப்டினன்ட் திவ்வியன் (அருள்மணி) (வேதநாயகம் பிரான்சிஸ் – மன்னார்) லெப்டினன்ட் நிலவழகன் (வேலுப்பிள்ளை பிரதீபன் – வவுனியா) லெப்டினன்ட் சேதுகாவலன் (பிரான்சிஸ் மோசஸ் – இரத்தினபுரி) லெப்டினன்ட் சுக்கிரீபன் (விசுவநாதன் நகுலகுலசிங்கம் – கிளிநொச்சி) லெப்டினன்ட் பாரதிதாசன் (ஐங்கரன்) (கைலாயப்பிள்ளை கமலதாசன் – வவுனியா) லெப்டினன்ட் பரமதேவா (மருதன் சண்முகலிங்கம் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இசைக்கோன் (பத்மநாதன் யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மதி (அரிச்சந்திரன் வசீகரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தயாபரன் (அன்பன்) (நாகேந்திரம் சுதர்சன் – மன்னார்) லெப்டினன்ட் தாமரை (விநாயகமூர்த்தி மலர்விழி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அஜித்தா (குமாரவேலு பகிரதி – கிளிநொச்சி) லெப்டினன்ட் யாழிசை (குகதாசன் ஜெயகௌரி – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் கோமான் (சிவலிங்கம் உதயராயன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வாழேந்தி (செந்தமிழன்) (அன்னலிங்கம் செல்வகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஆதப்பன் (ஈசன்) (பழனிவேல் ரகுமார் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வளவன் (சாந்தகுணசிங்கம் குலேந்திரராஜ் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருச்சுனன் (வேலுப்பிள்ளை பிரதீபன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அற்புதன் (கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மானவீரன் (முத்தையா தனபால் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மகாசோதி (தம்பிமுத்து ரவீந்திரன் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தயாகாரன் (பத்தகுட்டி கதிரமன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கூர்வேலன் (லட்சுமணன் சுந்தரம் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் சிவாகரன் (மயிலுப்போடி ஞானசேகரம் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ராதா (குழந்தைவேல் காளிதாஸ் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கவி (தங்கவேல் தவராஜா – அம்பாறை) 2ம் லெப்டினன்ட் இராஜசீலன் (சுப்பிரமணியம் மதியழகன் – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் கருணாகரன் (பழனியாண்டி புஸ்பராசா – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் செல்வகணேசன் (கந்தசாமி விஜயசங்கர் – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் மணாளன் (மாயழகு பொன்மணிராசா – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் மதி (முருகுப்பிள்ளை இராஜேஸ்வரன் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் செம்பியன் (பேரின்பநாயகம் சால்ஸ்பொனிக்ஸ் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சொக்கன் (மாரிமுத்து முருகேஸ்வரன் – மன்னார்) 2ம் லெப்டினன்ட் மன்மதன் (தேவசிகாமணி முகுந்தப்பிரியன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (இம்ரான்) (தம்பிமுத்து மதியழகன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செல்வம் (பாலச்சந்திரன் வதனி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வதனி (ஜெகநாதன் சசிகலா – மாத்தளை) 2ம் லெப்டினன்ட் வேதினி (தர்மன் தர்சினி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சந்திரா (இராசையா பரமேஸ்வரி – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (இராஜகோபால் மஞ்சுளா – மன்னார்) 2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சிதம்பரப்பிள்ளை மல்லிகாதேவி – மன்னார்) 2ம் லெப்டினன்ட் மணியரசன் (ஆரோக்கியநாதன் ரெஜினோல்ட் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் காவியன் (சுந்தரம் உதயகுமார் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் புயலவன் (கணேசபிள்ளை தமிழ்ச்செல்வன் – திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் அறிவுக்குமரன் (இராமன் உதயகுமார் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நிசா (நிலா) (சண்முகம் பத்மாதேவி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் குகதா (சண்முகலிங்கம் சுஜாதா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இன்பா (நடராஜபிள்ளை உசாநந்தினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை செம்பியன் (காசிப்பிள்ளை கனகசிங்கம் – திருகோணமலை) வீரவேங்கை நிலவழவன் (பிள்ளையான் யோகராசா – அம்பாறை) வீரவேங்கை விமலகுமார் (ஆனந்தன் உதயகுமார் – மட்டக்களப்பு) வீரவேங்கை சுகிர்தன் (சின்னத்தம்பி பரமேஸ்வரன் – மட்டக்களப்பு) வீரவேங்கை கமலகாசன் (தெய்வநாயகம் கேதீஸ்வரன் – மட்டக்களப்பு) வீரவேங்கை தங்கராசா (தம்பிராசா உதயகுமார் – மட்டக்களப்பு) வீரவேங்கை அற்புதமேனன் (பொன்னையா சுப்பிரமணியம் – மட்டக்களப்பு) வீரவேங்கை ஆதிகரன் (பத்மன் பத்மசீலன் – மட்டக்களப்பு) வீரவேங்கை தனபாலினி (நல்லையா சுகந்தினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வேல்விழி (ஐயாத்துரை பத்மலோஜி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மயூரன் (சுப்பிரமணியம் சிவகுமார் – கிளிநொச்சி) வீரவேங்கை இன்பன் (அருளானந்தம் பிறேமானந்தசீலன் – கிளிநொச்சி) வீரவேங்கை திருக்குமரன் (பாலசிங்கம் பாஸ்கரன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோபி (தவநாதன் றொபேட்கோகுலசேகரம் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஒப்பிலாமணி (மனோபாலசிங்கம் இராசசங்கர் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை துரைக்குட்டி (யோகாம்பிள்ளை அன்ரனிராஜ் – முல்லைத்தீவு) வீரவேங்கை வில்லவன் (அருச்சுனன்) (தவராசா ரஜனிக்காந் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மதிநிலவன் (குருநாதன் இராகுலன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வளநாடன் (சிவனேசன் தர்மராயன் – முல்லைத்தீவு) வீரவேங்கை தவயோகன் (மாணிக்கராசா சந்திரமோகன் – கிளிநொச்சி) வீரவேங்கை காங்கேயன் (மயில்வாகனம் நாகநாதன் – முல்லைத்தீவு) வீரவேங்கை சிவநீதன் (மாயவன் மகேந்திரன் – வவுனியா) வீரவேங்கை முரளி (இராமநாதன் ரஞ்சன் – மன்னார்) வீரவேங்கை நல்லதம்பி (தங்கராஜா விநாயகமூர்த்தி – மட்டக்களப்பு) வீரவேங்கை நித்தி (மோகனதாஸ் தவக்குமார் – மட்டக்களப்பு) வீரவேங்கை மைதிலி (தம்பிராசா மஞ்சுளா – வவுனியா) வீரவேங்கை வாணி (இராசலிங்கம் சுமதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை திலகரி (சின்னராசா குமுதினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தளிர் (நித்தியானந்தன் நிசாந்தினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்வானி (யோகலிங்கம் றஜனி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை யாழினி (வரதராசா யோகேஸ்வரி – கிளிநொச்சி) வீரவேங்கை தேனல்லி (கோபால் மணி – மட்டக்களப்பு) வீரவேங்கை அக்கினோ (சிற்றம்பலம் செல்வராணி – அம்பாறை) வீரவேங்கை வேண்மகள் (முருகன் செல்வரதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கமலா (சுப்பிரமணியம் ரதிதேவி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை அபிராமி (சிவப்பிரகாசம் கிருஸ்ணாம்பாள் – கிளிநொச்சி) வீரவேங்கை மாதுமை (மாணிக்கம் வளர்மதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இனியவன் (நோயல் ஜெப்றி – கிளிநொச்சி) வீரவேங்கை நீதிபாலன் (அழகிப்போடி உமாசுதன் – மட்டக்களப்பு) வீரவேங்கை சுவர்ணன் (நல்லதம்பி சோதிலிங்கம் – யாழ்ப்பாணம்) ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர் ஓயாத இசை அலை தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
  3. கடற்சமரை வழிநடத்தும் கடற்புலித் துணைத்தளபதி லெப் கேணல் இரும்பொறை மாஸ்ரர் .... உம் வீரம் அலையெறி பகை வென்றிட எம்மண்ணில் பிறப்பாயா எம் கடற்சேனைத் துணைத்தளபதியே ...?
  4. உங்களுக்கு எழுத்துருவிலான பதிவா அல்லது இவ்வகையான பதிவா இலகுவானது என மனம் திறந்து கூறுங்கள் என பணிவன்புடன் கேட்கின்றோம். நன்றி தேசக்காற்று நிர்வாகம்
  5. காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995 ... அதிகாலை 01 : 00 மணி துறைமுகத்தின் உள்ளே ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலோடு , 3 தரையிறங்கு கலங்கள் ( Landing Crafts ) , மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இருக்கிக்கொண்டிருந்தன. துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன. ” டோறா “ அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு , ” சங்காய் “ பீரங்கிப் படகுகள் மூன்று. இரும்புக் காவல். அலைமடியில் தவழ்ந்து அமைதியாகி நெருங்கின கடற்புலிகளின் படகுகள். ” சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின் “ கரும்புலி வீரர்களான நியூட்டனும் – தங்கனும் வெடிகுன்டுகளோடு ” எடித்தாராவை ” அண்மித்தார்கள். ஆரம்பித்தது உக்கிரமான சண்டை. காங்கேசன் கடற்பரப்பு போர்க்களமாய் மாறியது. எம் போராட்ட வரலாறு தன்னில் பதித்துக் கொண்ட மிகப் பெரும் கடற்சமர். ” எடித்தாராவின் “ அடித்தளத்தை , வெடிகுன்டுகளோடு அணைத்து கரும்புலிகள் சிதறடித்தார்கள். அது நான்கு வரிகளில் எழுதிவிடும் சம்பவம் அல்ல. நாற்பதாண்டு காலச் சரித்திரத்தை மாற்ற அவர்கள் புரிந்த அரும்பெரும் செயல்….! இராப்பகலாய் பட்ட கஷ்டங்களின் பெறுபேறு. வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளப்பரிய உயிர்த்தியாகம். ” பெண் கரும்புலிகளின் ” ஒரு வெடிகுண்டு படகு , தரையிறங்கு களம் ஒன்றை நெருங்கியது. அசுரவேகம். மிக அண்மைய…..! போர்களங்கள் அபூர்வமானவை. அவற்றின் பொதுவான இயல்பு என்னவெனில் - நினைத்துப்போவது நிகழாமல் போகும் , நிகழ்ந்துவிடுவது நினையாதாய் இருக்கும். வெடிகுண்டுப்படகு சன்னங்கள் பாய்ந்து சேதப்பட்டுவிட தரையிறங்குகலம் தாக்கப்படவில்லை. ஐந்து மணிநேரச் சரித்திரச் சமர் முடிந்து விடியும்பொழுதில் எங்கள் தாக்குதலணிகள் களத்தை விட்டு வெளியேறினர். நியூட்டன் – தங்கன் – தமிழினி ஆகிய கடற்கரும்புலிகள் வரவில்லை. பூநகரிச் சமரின் போது நாகதேவன் துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் முழ்கிப்போனதால் திரும்பி வரவில்லை…..! - உயிராயுதத்திலிருந்து….. ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
  6. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகனின் 23 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும். 16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள். இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 16.07.1990 அன்று பாலையடி வெட்டைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். கடலில் தவழும் அலையே நான் 16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் 18 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும். 16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது. இவ் வெற்றிகரத் தாக்குதலில் கடலிலே காவியம் படைத்த மாவீரர்கள்… கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் – பதுளை – சிறிலங்கா) கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் – குருநகர், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் – திருகோணமலை) கடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி – இன்பருட்டி, யாழ்ப்பாணம்) கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் – பெரியபோரதிவு, மட்டக்களப்பு) கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்) கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி – யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி – மானிப்பாய், யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்) கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா – மாங்குளம், முல்லைத்தீவு) கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி – யாழ்ப்பாணம்) கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு) காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் ( உயிராயுதத்திலிருந்து… ) தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
  7. எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள். இவர்களின் உயிர்த்தியாகமும், இந்தத் தாக்குதலுக்கான காத்திருப்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், இழப்புக்களும் வீண்போகவில்லை, வீண்போகவும் மாட்டாது. ஒரு ஆண்டிற்கும் மேற்பட்ட கடும் பயிற்சியில்தான் இந்த எல்லாளன் பிறப்பெடுத்தான். இதற்கான வேவு நடவடிக்கைகள் ஆண்டுக்காணக்காக நடைபெற்றன. வேவுப் போராளிகளின் நடவடிக்கையினால்தான் அந்தப் பிரமாண்டமான தளத்தின் பல உண்மைகள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. அநுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கான வேவு நடவடிக்கைக்கென சிறப்பு அணியாக நான்கு பேர் கொண்ட வேவு அணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வேவு அணியின் பொறுப்பாளராக லெப்.கேணல் தமிழ்மாறன் நியமிக்கப்பட்டிருந்தார். அநுராதபுர வான்படைத் தளத்தினை முழுமையாக வேவு அணியினர் கண்காணித்து ஒளிப்படம் (வீடியோ) எடுத்து, எங்கு எங்கு காவலரண்கள் இருக்கின்றன. அங்கு பொருத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன, எந்த எந்தப் பகுதிகளில் விமானங்கள் தரித்து நிக்கின்றன என்பன தொடர்பான முழுமையான தகவல்கள் வேவு அணியினரால் சேகரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களை உள்வாங்கி எல்லாளன் நடவடிக்கைகான செயற்திட்டங்கள் தமிழீழ தேசியத் தலைவரால் நேரடியாக வகுக்கப்பட்டு, படையப் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த றெட்ணம் மாஸ்ரர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலுக்காக 21 கரும்புலிப் போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அத்துடன், இந்தத் தாக்குதலுக்கான திட்டம் வெளியில் அல்ல போராளிகளின் உயர் மட்டங்களில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் இரகசியம் காக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலுக்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த 21 கரும்புலி போராளிகளிடமும் தாக்குதலுக்கான திட்டங்கள் நேரடியாக விபரிக்கப்படும். இந்தத் தகவல்களை உள்வாங்கி தாக்குதல் திட்டங்களை இந்த அணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ ஏனைய கரும்புலிப் போராளிகளுக்கும் அத்திட்டத்தை புரியவைப்பான். இந்தக் கரும்புலி அணியினருக்கான பயிற்சிகள் ‘அல்லா-4’ என்ற பயிற்சித் தளத்தில் சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சில தேவைகள் கருதி வேறு இடங்களிலும் நகர்வுப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பயிற்சி ஆசிரியருடன் லெப்.கேணல் இளங்கோவும் ஒரு பயிற்சி ஆசிரியராக அன்று செயற்பட்டுக்கொண்டிருந்தான். இந்நிலையில் தாக்குதலுக்கு முன்னான மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக அநுராதபுர வான்படைத் தளத்திற்கான இறுதி வேவு நடவடிக்கை லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் மேற்கொண்டிருந்தார்கள். அந்த இறுதி வேவு நடவடிக்கையே 8 மாத காலப்பகுதியாக நடைபெற்றது. அனைத்து தரவுகளும் உறுதிப்படுத்திக்கொண்டு, இறுதி வேவு பார்த்துவிட்டு தளம் திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த வெடிவிபத்து இடம்பெற்றது. சிங்களக் கிராமங்களின் ஊடாக அனுராதபுர காட்டுப்பகுதியில் வேவுப் போராளிகள் சென்றுகொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுக்குழல் துவக்கில் அகப்பட்டு தமிழ்மாறன் காயம் அடைகின்றான். காயத்துக்கான முதலுதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி வேவு அணியினர் நகர்கின்றார்கள். இவர்களின் வருகைக்காக அன்று மன்னார் மாவட்டத்தின் எல்லைப் பகுதி ஒன்றில் தளபதி றெட்ணம் மாஸ்ரர் அவர்களும், லெப்.கேணல் இளங்கோவும் காத்திருக்கின்றார்கள். அடம்பன் பகுதியில் வேவு அணியினர் இவர்களை சந்திக்கின்றார்கள். அங்கிருந்து வாகனம் ஒன்றில் கிளிநொச்சி நோக்கி பயணத்தை தொடர்கின்றார்கள். இந்த காலகட்ட பகுதியில் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை பரவலாக நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்நிலையில் இவர்களது வாகனமும் சிறீலங்காப் படையினரின் கிளைமோர் தாக்குலுக்கு இலக்காகின்றது. ஆனால் உயிர்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. உடனடியாக வாகனத்தில் இருந்த இளங்கோ மற்றும் வேவு அணி போராளிகள் காட்டுக்குள் இறங்கி தாக்குதல் தொடுத்து, எதிரியை விரட்டிக் கலைத்தார்கள். அன்று அந்தக் கிளைமோர் தாக்குதலில் இவர்களுக்கு ஏதும் நடந்திருந்தால், எல்லாளன் நடவடிக்கை அன்றே இடைநிறுத்தப்பட்டிருக்கும். இவ்வாறான சூள்நிலையில்தான் அன்றைய இறுதி வேவு தகவல்களுடன் போராளிகள் தலைமைப்பீடத்தினை சென்றடைந்து அங்கு அனைத்தையும் பற்றி விபரிக்கின்றார்கள். பின்னர் கரும்புலிகள் அணியினருக்கு விளங்கப் படுத்துகின்றார்கள். எல்லாளன் நடவடிக்கைக்குரிய மாதிரிப் (மொடல்) பயிற்சியும் முடிந்துவிட்டது. மாதிரிப் பயிற்சி முடிந்துவிட்டால் இனி இறுதிச் சண்டைதான் என்ற மனசந்தோசதம் போராளிகள் மத்தியில் வந்துவிடும். இதன்பின்னர்தான் தலைவருடன் படம் எடுத்து, உணவு உண்டு அளவளாவி பேசி விடைபெறுகின்றார்கள். யாருக்கும் தெரியாமல் ஊர் மக்கள் உலாவிய அந்த வீதியால்தான் அநுராதபுரம் நோக்கி நகர்கின்றார்கள். அந்த 21 சிறப்புக் கரும்புலிகளும் அந்த இரவுப் பொழுதில் தாம் உலாவிய நகர்களுக்கு விடை கொடுக்கின்றார்கள். இவர்கள் நகர்ந்து சொல்லவேண்டிய தூரம் 50 கிலோ மீற்றருக்கு அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். காட்டுக்குள்ளால் தங்களுக்கு தேவையான வெடிமருந்து உணவுகளுடன் எத்தனையோ ஆறுகளை தாண்டிசெல்லவேண்டிய தேவை. இவ்வாறு நகர்ந்து சென்றுதான் தமது இலக்கினை அடைந்துகொள்கின்றார்கள். இவர்களை அந்த வேவு அணி போராளிகள்தான் இலக்குவரை கொண்டுசென்று விடுகின்றார்கள். உண்மையில் சிங்கப்படையினைபோல் பிணந்தின்னும் கழுகுகளாக அவர்கள் போகவில்லை. இறுதியாக தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைகளை மனதில் சுமந்தபடியே சென்றார்கள். “இதுமுற்றுழுதாக படைத்தளம். அங்கு உங்கள் வீரத்தைகாட்டுங்கள். ஆனால் படை அதிகாரிகள் யாரினாவது குடும்பங்கள், பிள்ளைகள் அங்கு நிற்கக்கூடும். தாக்குதல் நடக்கேக்க அவர்களை பத்திரமாக அகற்றி, அவையளுக்கு ஒன்றும் நடக்காமல் பாத்துக்கொள்ளுங்கள்” என்ற தலைவரின் அக்கறையையும், மனித நேயத்தையும் அந்தக் கரும்புலி அணியினர் புரிந்துகொண்டிருந்தனர். தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைளை நினைவிற்கொண்டு அந்தக் கரும்புலி மறவர்கள் சிங்களத்தின் குகைக்குள் புகுந்துகொள்கின்றார்கள். அந்தவீரர்களின் ஒவ்வொரு நகர்வும் தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். 21 சிறப்பு கரும்புலிகள் தமிழீழ எல்லை கடந்து எதிரியின் எல்லைக்குள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அவர்கள் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். அன்று அதிகாலை பொழுது நகர்ந்துகொண்டிருக்கின்றது. முதன்நாள் இரவு சில தளபதிகளை தலைவர் அவர்கள் தனது இடத்திற்கு அழைத்திருந்தார். காரணம்தெரியாமலேயே தளபதிகள் அங்கு கூடியிருந்தனர். அப்போது, ‘இன்று உங்களுக்கு எல்லாளனை காட்டபோகின்றேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்துவரும் தகவல்களுக்காக தளபதிகளும் தலைவரும் காத்திருக்கின்றார்கள். பெரும் இலட்சிய நெருப்பை சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்து தமிழீழ மண்ணின் வரலாறாக வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கையில், இலக்கினை அடைகின்றார்கள் கரும்புலிகள். இந்த சிறப்பு கரும்புலிகள் அணியினருக்கு வழிகாட்டி அநுராதபுர தளத்திற்குள் கொண்டுசென்று விட்ட வேவு அணியினர், தகவல்களை தலைமைபீடத்திற்கு தெரியப்படுத்தி, உறுதிப்படுத்துவதற்காக ஒளிப்படம் எடுக்கின்றார்கள். தாக்குதல் தொடங்குவதில் இருந்து அநுராதபுரம் தீ மூழும்வரை ஒளிப்படம் எடுத்தவர்கள், கரும்புலிகள் அணியினரின் அனைத்து செயற்பாடுகளையும் தொலைத்தொடர்பு ஊடாக கேட்டுக்கொண்டு அதனை தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டும் நின்றார்கள். அதிகாலை 1.30 மணி, அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற வேளையில், உள்நுழைந்தவர்கள், அதிகாலை 3.00 மணிக்கு தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். 21 கரும்புலிகள் சுமார் ஏழு மணி நேரம் அப்பெரும் தளத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்திருந்தது ஒரு பெரும் சாதனை. சண்டை 10.00 மணிக்கு இறுதிக் கரும்புலியின் வீரச்சாவுடன் நிறைவுக்கு வருகின்றது. இலக்குகளை தாக்கி அழித்துவிட்டு பெரும் வெற்றியைத் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துவிட்டு கரும்புலிகள் அனைவரும் விழிகளை மூடிக்கொண்டார்கள். இவர்களின் வீரச்சாவை உறுதிப்படுத்திக்கொண்டுதான் லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் தாயகம் நோக்கி திரும்புகின்றார்கள். கரும்புலி அணியினரின் தாக்குதலுக்கு பக்கபல உதவியாக விடுதலைப் புலிகளின் வான்புலிகளும் குண்டுகளை வீசி அநுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்துவிட்டு தளம் திரும்பி விடுகின்றார்கள். எதிரியின் சரமாரியான தாக்குதலுக்கு மத்தியிலும் வான்புலிகள் நடத்திய இந்தத் தாக்குதல் வான் புலிகளின் தாக்குதல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சிறீலங்காப் படைக்கு உதவிக்கு வந்த உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டுவீழ்த்தப்படுகின்றது. ஒரு சில மணி நேரங்களுக்குள் பல கோடி பெருமதியான போர் விமானங்களையும், இராணுவ தளவாடங்களை இழந்தது. இந்த அவமானத்தை தாங்கமுடியாத சிங்களத் தலைமைகளும், சிங்களப் படையினரும் தமது ஆற்றமையினை அந்தப் போராளிகளின் வித்துடல்கள் மீது காண்பித்தார்கள். அந்த வழித்தோன்றல் நாகரீகம் சிங்களத்தோடு கூடப்பிறந்தது என்பதை முள்ளிவாய்கால் வரையான படுகொலைகளின் சாட்சியங்களும் இப்போது எடுத்துக்காட்டுகின்றன. அன்று அந்த 21 சிறப்பு கரும்புலிகளும் அநுராதபுரம் வான்படைத் தளத்தில் மட்டும் தீயினை மூட்டவில்லை, பெரும் விடுதலைத் தீயினை உலகில் பரந்துவாழும் தமிழ் மக்களின் இதயங்களில் மூட்டியிருக்கின்றார்கள். நிச்சயம் தமிழீழம் அமைப்பது உறுதி அந்த மாவீரர்களின் இலட்சிய கனவு நனவாவதும் உறுதி. லெப்.கேணல் தமிழ்மாறன். இந்த வீரனை எல்லோருக்கும் வெளியில் தெரியாது. அந்த 21 சிறப்பு கரும்புலிகளுடன் ஒன்றாக அதிகம் பழகியவன். ‘எதிரியே உன் படுக்கையைத் தட்டிப்பார் அதற்குக் கீழும் கரும்புலி உறங்குவான்’ என்ற கவிஞரின் வரிகளில் வேவுப் புலிகளையும் சேர்க்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் சிங்களபடைக்கு அருகில் ஒன்றாக படுத்து உறங்கிய ஒரு துணிச்சல் மிக்க புலி. சிங்களப் படையின் பெரும் இன அழிப்புப் போரில், முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய வீரன். அந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே விதையாக வீழ்ந்தான். - சுபன் நன்றி: ஈழமுரசு (05.11.2010) ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
  8. 1983 ஜூலை 15 அன்று துரோகி ஒருவனின் காட்டிகொடுப்பால் மீசாளைக் கிராமத்தில் சிறிலங்கா கூலிப்படைகளால் சூற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் தொடர்ந்த வேளை நெஞ்சில் குண்டுபாய்ந்து காயமுற எதிரியிடம் தான் உயிருடன் பிடிபடக்கூடாது எனவும் ” ஜி 3 ” துப்பாக்கியை பாசறையில் ஒப்படைக்கும் படியும் தன்னை சூட்டு செல்லுமாறு கட்டளை பிறப்பித்த லெப்ரினன் சீலனின் அவன் வழி அவன் தோழன் வீரவேங்கை ஆனந்தின் நெஞ்சம் விட்டு அகலாத காலப்பெருநேடியில் கலந்து தமிழீழ நெஞ்சங்கள் யாவும் நிறைந்த உன்னதர்களின் 30 ம் ஆண்டு வீரவணக்க நினைவில். லெப் சீலன் வீரவேங்கை ஆனந் சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை. தேசியத்தலைவர் எண்ணத்தில் லெப் சீலன் நினைவலைகள் … வீரசீலம் லெப்டினன்ட் ஆசீர் – சீலன் – இதயச்சந்திரன்அவர்களின் விடுதலைப் பயணத்தின் போரியல் வரலாறு .. லெப் செல்லக்கிளி – லெப் சீலன் தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
  9. தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மக்கள் மத்தியில் நிராயுத பாணியாக அரசியல் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்த போது ,சிறீலங்கா படை ஒட்டுக்குழுவினரால் தாக்கப்பட்டு 13/07/2004 அன்று வீரச்சாவை தழுவி கொண்ட மட்டு நகர் அரசியல் துறை பொறுப்பாளர் லெப்டினன்ட் கேணல் சேனாதிராஜா அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவில்.... தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
  10. கப்டன் ரஞ்சன் (லாலா) ” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் நேரடியாக பொதுமக்களைத் கலந்து கொள்ளும் இராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன். பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத் தாக்குதல் மூலம் “இதுவும் மக்கள் போராட்டம் தான் புரிந்து கொள்ளுங்கள் ! “ என பாடம் புகட்டியவன் ரஞ்சன். இன்று இந்த மக்கள் எழுச்சிகளைக் காணும் போது உனது தியாகங்கள் வீண்போகவில்லை நாளைய தமிழீழ வரலாற்றில் உனது பெயரில் இன்றைய சிறுவர்களால் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும் போல இருக்கும், கண்ணெதிரே நீ இல்லாவிட்டாலும் என் எண்ணங்களை என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள என்றுமே நான் தயங்குவதில்லை. ஒவ்வோர் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியும் உன்னை எனக்கு ஞாபகப்படுத்தியே தீரும், இயக்கத்தின் முழுநேர போராளியாக எழுபத்தி எட்டாம் ஆண்டில் நீ அடியெடுத்து வைத்த நாள் அது தானடா. 78ஆம் ஆண்டு மார்கழியில் இயக்க ரீதியாக அறிமுகமான நீ துண்டுப் பிரசுரம் கொடுத்தல், இயக்கத்திற்கு ஆட்சேர்த்தல், எதிரியின் நடமாட்டங்களை எமக்குத் திரட்டி தருதல் போன்ற வேலைகளை அதுவரையில் செய்து வந்தாய். சிறு அசைவைக்கூட மிகவும் திட்டமிட்டே நடைமுறைப்படுத்த வேண்டிய அந்தக் காலகட்டத்தில் உனது பணி இயக்கத்திற்கு மிகவும் தேவையாக இருந்து. கட்டையான கறுவலான உனது உருவத்தை காணுபவர்கள் உன்னை இயக்கத்தைச் சேர்ந்தவன் என ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். உனது உருவஅமைப்பு இரகசியமான வேலைகளை உன் முலம் செய்து கொள்ளுவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்துகொண்ட ஆரம்ப காலத்தில் நீ பட்ட கஷ்டங்களை இன்று விடுதலைப் பாதையில் காலடி எடுத்து வைக்க எண்ணும் அத்தனை போராளிகளும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள், அப்போது தான் சுதந்திரத்தின் பெறுமதி எத்தகையது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நீயும் நானும் குறிப்பிட்ட அக்காட்டில் கொட்டில் அமைத்து பண்ணை வேலைகளை செய்வதற்காகப் புறப்பட்டோம். யாழ்பாணத்தில் இருந்து வாளியில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் அங்கே சென்றோம். மழையினாலும் புயலினாலும் அந்தப் பாதையில் சீர்குலைந்து காணப்பட்டது பலத்த சிரமத்தின் மத்தியில் எமது பிரயாணத்தை மேற்கொண்டோம். எமது பிரயாணத்தின் கடைசி எட்டு மைல்களையும் நடந்தே போகவேண்டியிருந்து இவ்வளவு தூரம் நடந்து போவது உனக்கு பழக்கமில்லாத விடயமாக இருந்தாலும் உனது ஆர்வம் கையில் வாளியையும் பொருட்களையும் மாறி,மாறித் துக்கிச் சென்று எமது பிரயாணம் முடியும் இடம் வரை கொண்டுபோக வைத்து. இரவு பத்து மணியளவில் நாம் சந்திக்க வேண்டியவரின் வீட்டுக்குச் சென்றதும் ‘அப்பாடா’ என்று நிம்மதியுடன் எமது நோக்கத்தைத் தெரிவித்தோம். ஆனால் நாம் எதிர்பாத்துச் சென்றவர் மனதில் என்னதான் குடியிருந்ததோ? கையை விரித்து விட்டார். மீண்டும் திரும்பி எட்டு மைல்கள் நடந்துவந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் திரும்பி வந்தோம். பளையில் கிடுகு வாங்கிக்கொண்டு மீண்டும் அங்கே சென்றோம்.போக்குவரத்து மேற்கொள்ளவது சிரமமாகவே இருந்து. எமது பிரயாணம் முன்று நாட்கள் தொடர்ந்தது, இரவில் நடைபாதையே எங்கள் மஞ்சம். கொட்டும் மழையும் கிடுகிடுக்கும் பனியும் எங்கள் இலட்சிய உணரவை மீண்டும் பட்டை தீட்டின. வாகனப் பிரயாண முடிவில் எட்டு மைல் தூரமும் மாறிமாறி கிடுகுக் கட்டைத் தூக்கிக்கொண்டு சென்றோம். எமக்கென ஒரு கொட்டில் போட்டு அதனுள்ளேயே படுத்து உறங்கிய அன்று ஏற்பட்ட உணர்வு அலாதியானது தான். ஒரு ஏக்கர் காணியை திருத்தத் தொடங்கினோம். இடையில் இயக்கத்தின் வேறு அலுவல்களுக்காக நான் யாழ்பாணம் வந்துவிட்டேன். உனக்குப் பின் வந்த வேறு சிலருடன் நீ இணைந்து நீ அந்தக் காணியை சிறந்ததொரு பண்ணையாக்கினாய். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு மிளகாய்ச் செய்கையைப் ப்ற்றி படிப்பிக்கக் கூடியளவு அனுபவம் உன்னை ஆக்கிவைத்தது. ‘சித்தாந்த வேறுபாடு’ என்ற பெயரில் இயக்கத்தை நாசஞ் செய்யப் புறப்பட்ட குழு உன்னையும் இயக்கத்தை விட்டு பிரிக்க பெருமுயற்சியெடுத்தது. நீ அவர்களுக்கே புத்திசொல்லி வந்த நீங்கள் வடிவாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கோ என்று சாப்பாடு கொடுத்து அனுப்பிவைத் தாய். இவனுக்காக இவ்வளவு தூராம் அலைந்தோமே என்று புறுபுறுத்து விட்டுச் சென்றனர் அவர்கள். ‘தம்பி’யின் மீது நீ கொண்டிருந்த நம்பிக்கை தொடர்ந்து இயக்கத்தில் உன்னை இயங்க வைத்தது. மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் மாயமான போராட்டத்தில் இடையே வேடிக்கைப் பொருளாகக் கொண்டு வந்தனர் கூட்டணியினர். கிராம யாத்திரை என்ற பெயரில் அவர்களது நாடகம் ஆரம்பமாயிற்று. கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர் குழப்பவாதிகள், அரசின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தினர் பதில் சொல்லத் தெரியாத கூட்டணியினர். நீயும் சங்கரும், சீலனும் உங்களுக்குத் தெரிந்த வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்.S.S.O பதவிகளுக்காகவும் வேலை வங்கிப்படிவத்துக்காகவும் ஏங்கித் திரிந்த கூட்டணியின் தொண்(குண்)டர்கள் சீலனைக் கட்டிப்பிடித்தனர். கட்டிபிடித்தவரின் பின்னால் சென்று உனது சிலிப்பரை தூக்கி முதுகில் வைத்துக் “ஹான்ஸ் அப்” என்று நீ சொன்னதும் நிலை குலைந்தனர் அந்த வீராதிவீரர்கள். நீ வைத்திருப்பது என்ன என்பதை திரும்பியும் பார்க்காமல் தமது எஜமானர்களை நோக்கி ஒடித்தப்பினர். உனது சமயோசித புத்தி அன்று சீலனைக் காப்பாற்றியது. நீரவேலி வங்கிப் பணத்தைக் காப்பாற்றுவதில் நீ எடுத்துக் கொண்ட சிரமங்கள் எழுத்தில் வடிக்கமுடியாதவை இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் அதற்குக் கொஞ்சநேரம் முன்தான் நீ அங்கிருந்து அவற்றை அகற்றியிருப்பாய். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக இராணுவத்தினர் மீதான தாக்குதலை மேற்கொண்ட மூவரில் ஒருவன். மக்கள் நடமாட்டம் நிறைந்த யாழ் நகரில் சீலனின் தலைமையில் கைத்துப்பாக்கியுடன் அச்சாதனையைப் புரிந்தீர்கள். இராணுவத்தினரின் றைபிளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி வந்தபோது பக்கத்து வீட்டு அக்கா “சம்பவம் முடிந்து பெடியன்கள் சென்ற போது நான் கண்டேன்” என்று சொன்னா. என்னமாதிரி சம்பவம் நடந்தது என்று எதுவும் அறியாதது போல விசாரித்துத் தெரிந்துகொண்டாய். நல்லவேளை அவ பதற்றத்தில் இருந்ததாலும் நேடியாகக் காணாததாலும் அந்த இடத்தைவிட்டு மாறவேண்டிய நிலமை ஏற்படவில்லை. பயிற்சிக்காக இந்தியா சென்றாய், பயிற்சி முகாமின் ‘கொத்துரோட்டி ஸ்பெசலிஸ்ட்’ நீ. ஏற்கெனவே உன்னிடம் இருந்த சுறுசுறுப்பு, துணிவு என்பவையும் கராட்டித்திறமயும் பயிற்சி முகாமில் உனது திறமையில் பளிச்சிட வைத்தன. மீண்டும் புலேந்திரனுடன் தமிழீழம் வந்தாய், வரும் போது வள்ளக்காரர் உங்களைப் பேசாலைக் கரையில் இறக்கி விட்டனர். கரை இறங்கிய உங்களை அங்கே குடியிருந்த சிங்களக் காடையர் பிடித்துக்கொண்டனர். எமது மண்ணில் அண்டிப் பிழைக்க வந்தவர்கள் எம்மையே அதிகாரம் செய்து இந்த மண்ணிற்குச் சொந்தக்காரர்களான எம்மை அடிமைகளாக நடத்துகிறார்களே என அனைவரும் குமுறினோம். சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் 30 காபைன் சகிதம் புகுந்து விளையாடினாய். தாக்குதல் முடிந்து வரும் போது காயமுற்ற ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து அழுதாய் உனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப பெருகியதை அன்றுதான் முதன்முறையாகக் கண்டேன். உமையாள்புரத் தாக்குதல், கந்தர்மடத்தாக்குதல் என்பனவும் உன் திறமையைப் பளிச்சிட வைத்தன. யாழ் கச்சேரியில் இராணுவத்தினருக்கும், கூட்டணியினரும் பாதுகாப்பு மகாநாடு கூட்ட இருந்த சமயத்தில் முதல் நாளிரவு மகாநாடு நடக்க இருந்த மண்டபத்திற்கு குண்டு வைத்துப் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அன்று மண்டபத்தின் உட்சுவர்களில் பூவரசம் இலைகளாலும் பூக்களாலும் “பாதுகாப்பு மகாநாடு யாரை பாதுகாக்க” என்று எழுதியிருந்தாய், உனது கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்து பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அன்று பாதுகாப்பு மகாநாடு கூடிய கூட்டணியினர் நீண்டகால இடைவெளிகளின் பின்னர் மெல்ல மெல்ல வந்து பதுங்கு குழியில் பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர். உள்ளூராட்சித் தேர்தலில் பருத்தித்துறையில் ஐ.தே கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்த இரத்தினசிங்கம் உனது ஆசிரியர். ஆனாலும் உனது பார்வையில் துரோகி என்றே இருந்தது. உரிய இடத்திற்கு அனுப்புவதற்கு உனது பங்கையும் வழங்கினாய். மீசாலையில் சீலனை இழந்த வேதனை சில நாட்களாக உன்னுள்ளத்தில் குடிகொண்டிருந்தது. உனது உணர்வுகளுக்கு வாய்ப்பளிக்க ‘திருநெல்வேலித் தாக்குதல்’ சந்தர்ப்பமளித்தது. மதிலுக்கு மேல் நடப்பது உனக்குத் தெரியாமலிருக்கும் என்பதற்காக சீமேந்துக் கற்களை உனது உயரத்திற்கு ஏற்றவாறு அடுக்கினாய் தனியே நின்று தலைவருக்கு அடுத்ததாக நின்றது நீ தான். தலைவருக்கு அருகில் கிறனைட் வீழ்ந்ததும் பதறி விட்டாய். தமிழ் மக்களின் அதிர்ஷ்டம் கைக்குண்டு சக்தியிழந்தது. அன்றைய தாக்குதலில் சுறுசுறுப்பாக எல்லா இடமும் திரிந்தாய். ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது அம்மானை இழந்ததால் இந்த வெற்றியினை நினைத்து பூரிக்கும் நிலையில் நாம் இல்லை. தொடர்ந்து வந்த இனக்கலவரம் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை போராட்டத்தில் உள்வாங்கியது. கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சில நூறு பேரை மட்டுமே நாம் எம்முடன் இணைத்துக் கொண்டோம். அப்போது நடந்த இரண்டு பயிற்சி முகாம்களில் முதாவதற்கு பொன்னம்மானும், இரண்டாவதற்கு நீயும் பொறுப்பாக விளங்கினீர்கள் பயிற்சி முகாம் முடிந்து வந்ததும் அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை பருத்தித்துறையில் நடத்தினாய். பருத்தித்துறை பொலிஸ் நிலையம் வரை அதிரடிப்படையினரை ஒட ஒட விரட்டினாய். அதன் பின்னே பருத்தித்துறை பொலிஸ் நிலையம் உனது தலைமையிலான பொதுமக்களின் போராட்டத்தில் உன்னிடம் வீழ்ச்சியடைந்தது. ஆயுதங்கள் பொலிஸ் நிலைய ஆவணங்களுடன் நீயும் நானும் பொலிஸாரிடம் பறிகொடுத்த மோட்டார் சைக்கிளும் எமது கையில் கிடைத்தன. மோட்டார் சைக்கிள் பறிகொடுத்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உனது நிதானத்தை மேச்சிகொள்வேன். கடல்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீயும் நானும் பயணமானோம் வழியில் போலிஸாரிடம் மாட்டிக்கொண்டோம் எமது பையை சோதனையிட்ட போலிஸார் “இதென்னடா கிறனைட்டோ” என்றுகேட்டபடியே எடுத்த பொருள் கிறனைட்டாக இருக்கவே அதிர்ச்சியடைந்து நின்ற அந்தக் கணநேரத்தில் போலிஸாரிடமிருந்து பிலிம் றோஸ், படங்களை என்பவற்றை பறித்துக்கொண்டு”ஒடிவா” என என்னையும் கூட்டிக்கொண்டு ஒடினாய். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான் எம்மால் பறிகொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் எமது கையில் கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போலிஸ் நிலைய ஆவணத்திலிருந்து கிடைத்த விபரங்களின் படி துரோகி நவரட்ணத்திற்கு உரிய தண்டனை வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாய். ஆனால் உனது சேவை நீண்டகாலம் தமிழினத்திற்குக் கிடைக்கக் கூடாது என்ற துரஷ்டமோ விதி உன்னையும் எம்மையும் பிரித்துவிட்டது. வாகனத்தில் சீலனின் போஸ்டரை ஏற்றிவந்து கிட்டுவின் காருக்கு வழிகாட்டியாக நீ மோட்டார் சைக்கிளில் விக்கியுடன் வந்துகொண்டிருந்தாய், தொண்டமானாற்றில் அதிரடிப்படையினர் உன்னை வழி மறித்த போது நீ அவர்களை போக்குக் காட்டிவிட்டு தப்ப முயன்றாய் ஜீப்பினால் அதிரடிப்படையினர் உன்னை மோத முயன்றனர். வெட்டவெளிப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை நீ திருப்பி அது எதிர்பாராமல் சேற்றினுள் சிக்கியது. சேற்றிலிருந்து எழும்பி தப்பியோடினீர்கள். அதிரடிப்படையினர் சுட்டனர் தப்பி ஒடிய நீங்கள் ஒரு சைக்கிளை எடுத்தபோது சைக்கிள் உரிமையாளர் தடுத்தார். நிலைமையை விளக்கியபோதும் கொடுக்கவில்லை. முடிவு உங்களை நெருங்கி வந்தது. அதிரடிப்படையினர் துப்பாக்கி வேட்டுகளுக்கு நீ இரையானாய். உனது உயிரைக் கொடுத்து பின்னால் காரில் வர இருந்த அனைவரது உயிரையும் நீ காப்பாற்றினாய். உனது தியாகத்தை அர்த்தமுள்ளதாக்கி விட்டாய். உன் உயிரை பலியெடுத்த அதிரடிப்படையினர் நெடிய காட்டில் எமது கண்ணிவெடியில் பலியாகி விட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய நாட்குறிப்பொன்றில் உன்னைச் சுட்டது தானே என ஒருவன் குறிப்பிட்டிருந்தான். அனைவரது இதயத்திலும் “கட்டைக்கறுவல்” ரஞ்சன் நீக்கமற நிறைந்திருக்கிறான். - அஜித் ஒரு போராளியின் குருதிச் சுவட்டிலிருந்து…. ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
  11. அன்பான உறவுகளே ! தாயக கீதம் - மற்றும் போராட்ட விளுமியத்துடன் மாவீரரின் நாமத்துடன் வீசும் தேசகாற்றை உங்கள் உறவுகளுக்கு மத்தியில் வீசசெய்யுங்கள். எம் தேசக்காற்றின் பெயரை வெளித்தெரியாது சில உறவுகள் இதிலிருந்து பதிவுகள் இன்றும் உங்கள் வாசலில் வீசசெய்கின்றன தங்களின் இணைய ஊடகங்கள் ஊடாக - யார் உரைத்தாலும் ஒன்றே என்று நாமும் மெளனித்தே பயனிகின்றோம். ஆனால் எம்மை புதைத்து அதன் மேல் தாங்கள் நடக்க எத்தனிக்கும் போது அது முடியா ஒன்றாகிவிடுகின்றது. துரோகத்தின் வலிமைகள் கை ஓங்கும் வேளை , நாம் தலை குனிந்து போவதற்க்கு இல்லை நிமிர்ந்த வண்ணம் செயலாற்றுவோம். http://thesakkaatu.com/
  12. எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே ! யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப்போதும் இல்லாத பேரழிவை இப்பொது கண்டிருக்கிறது வல்லூர்கள் துணையோடு பொல்லாதவர்கள் சூழ்ந்து நம்மை சூறையாடினர் நிலம் அதிர நீர் அதிர நட்சத்திரங்கள் எல்லாம் அதிர கொத்துக் கொத்தாய் கொன்று முடித்தனர் கொலைகாரப் பாவிகள் நெட்டை மரமென இந்த உலகம் வேடிக்கை பார்த்தது வேற்றுப் புலம்பலாய் நம் நேற்று முடிந்தது - ஆனால் நாளை அப்படி இருக்காது , இருக்கவும் கூடாது நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுத் துயரை நம் மீது படிந்த இந்த வரலாற்றுப் பிழையை நாமே துடைப்போம் நமக்கான விடியலுக்காய் நாமே எரிவோம் என மீண்டும் மீண்டும் எழுகின்ற தமிழினத்துக்கு மற்றுமொரு வரலாற்று கடமை நிமிர்த்தம் பயணிக்கும் ஏராளமான் உறவுகளில் ஒன்றாக தமிழீழப் பறவையாக கனடாவில் இருந்து இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் தமிழீழ நினைவில்' " தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "
  13. " இன்று திசைக் ஒவ்வொன்றாய் எறியப்பட்டு சிளிம்பிபோணோமே எனினும் எங்கள் இதயத் துடிப்பு ஒவ்வொன்றும் தாயின் மடியின் நாமம் உரைத்தே துடிக்கிறது கிளைகள் எங்கெங்கோ பறந்து கிடந்தாலும் எமது வேர்கள் இன்றும் புழுதி நிலத்தின் கீழேதான் கிடக்கிறது எங்கையர் பூமியில் இருந்தும் நாங்கள் வித்தியாசமான முறையில் விரட்டப்பட்டுள்ளோம் சிலர் வீட்டிலிருந்து இன்னோர் வீட்டுக்கு சிலர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு சிலர் நாட்டில் இருந்து இன்னோர் நாட்டுக்கு களைக்கப் பட்டுள்ளோம் இடங்கள் மாறினாலும் ஊர் பிரிந்த துயர்கள் எல்லோருக்கும் பொதுவானது வெளியே தெரியா வண்ணம் நாங்கள் குழி பறிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளோம் சிறை இருத்தலே எமது ஜீவிதம் ஆனது ஊர் பிரிதலே ஈழத் தமிழனுக்கு எழுதிய விதி என ஆகிவிட்டது தாய் நினைவில் துடிதுடித்து சாவதே எங்கள் தலை எழுத்து ஆனது இன்று கம்பி வேலிகளும் காவலரண்களும் எங்கள் விதிகளை ஆழ்கின்றன "

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.