Search the Community
Showing results for tags 'அரம்பையர்'.
-
கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனது வேறு நற்செயலில்லை யென்றானது. காலமோடியதாற் கவிக்காதலி காத்திருக்க விருப்பிலளாயினள் பாலையானது நெஞ்சப் பெருவெளி பாடயாதும் வராது தவிக்கிறேன் சீல மேவிய என் எழில் நங்கையை தேடி யெங்குமலைந்து திரிகிறேன். அன்னவட்கொரு அஞ்சலி செய்தென(து) அருகில் வாவடியென்று துதித்திட பின்னமுற்ற மனத்தினளாயவள் பிணங்கி யந்தத் துணங்கையை யாடிடும் கன்னியர்க்கு உன் காதலைக் காட்டுதி கவிதையேனுனக்கென்று சபித்தனள் என்ன செய்வது என்று அறிகிலேன் எனது வாழ்வில் அவளைவிட்டோர் துணை இன்னுமுள்ளதுவோ இலை நெஞ்சமே! எறியுனக்கினி ஐபிஎல் ஏன் கொலோ!