Search the Community
Showing results for tags 'அ.சேரா'.
-
http://irruppu.com/2021/05/30/வடமராட்சி-ஒப்பரேசன்-லிபர/ 1987ம் ஆண்டு, மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல் கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. மே 25 இரவு தேசிய தலைவர் நவிண்டில் பயிற்சி முகாமில் வடமராட்சியில் உள்ள போராளிகளுக்கு கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டம் நடு இரவு 1. 30 மணி வரை நீடித்தது அந்தக் கூட்டத்தில் யாழ்குடா நாட்டில் எதிரிகளின் தாக்குதல் திட்டம் பற்றியும் அதை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தேசிய தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் தான் முதன்முறையாக தலைவர் அவர்கள் போராளிகளுக்கு பதவிநிலைக்கான பெயர்களை வழங்கினார். வழக்கமாக அதுவரை வீரச்சாவிற்கு பின்பே போராளிகளுக்கு பதவியின் பெயர்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. மே 26 காலை கூட்டம் முடிந்து போராளிகள் முகாமுக்கு திரும்பினர். அன்று காலை 4. 30 பலாலியில் இருந்து 5க்கும் மேற்பட்ட உலங்குவானூர்திகள் வல்லை வெளியூடாக தாழப்பறந்து, முள்ளி, முள்ளியான், மண்டான் பகுதிகளில் தரையிறக்கப்பட்டு ராணுவ நிலைகளை பலப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக வான் பரப்பு பகுதிகளில் உலங்குவானூர்திகள் பல மாறி மாறி வந்த வண்ணம் இருந்தன. மே 26 மணல் காட்டு கடல் பகுதியூடாக சிங்கள கடற்படையினர், வல்லிபுர கோவில் பகுதியில் பெருமளவு ராணுவத்தினரை தரை இறங்கினர். மே 26 காலை 5.30 உடுப்பிட்டி யூனியனுக்கு முன் அமைந்த புலிகளின் அந்த பிரதான மெயின் முகாமில் போராளிகள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுடன்(50 Caliber ) தயாராகிக் கொண்டிருந்த வேளை, குண்டுவீச்சு விமானம் புலிகளின் அந்த பிரதான மெயின் முகாமை தாக்கியது. இதில் வீமன், ரம்போ/சிவா, செட்டி, நாகேந்திரன் உட்பட சில போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். வடமராட்சி தொண்டமனாறு இராணுவ முகாம், பலாலி ராணுவ முகாமுடன் நேரடி தொடர்பில் இருந்தது. வல்வெட்டித்துறை இராணுவ முகாம், மற்றும் பருத்தித்துறை இராணுவ முகாமிலிருந்து மணல்காடு, முள்ளி, முள்ளியான், மண்டானில் இறக்கப்பட்ட ராணுவம் மூலமாக வடமராட்சி பகுதி ராணுவத்தால் முற்றிலும் சுற்றி வளைக்கப்பட்டது. மே 26 அதிகாலை 6.30 மணி தொண்டமனாறு மெயின் முகாம் பொறுப்பாளர் கப்டன் அலன், மற்றும் நரேஷ். இருவரும் அதிகாலையில் வல்லை வெளியில் ராணுவம் தரை இறங்கி உள்ளதா என கண்டறிய துவிச்சக்கரவண்டியில் சென்று பார்க்கின்றனர். பார்த்துவிட்டு இரண்டாவது பொறுப்பாளரிடம் வாக்கியில் இங்கு ஆமி இல்லை என்பதை தெரிவிக்கின்றனர். மறுமுனையில் உள்ள இரண்டாவது பொறுப்பாளர் ராணுவம் கிரேசர், காட்டு வைரவர் பகுதியில் பதுங்கியிருப்பதாக அவர்களிடம் தகவல் சொல்கிறார். இருவரும் துவிச்சக்கரவண்டியில் மீண்டும் தொண்டமனாறு பகுதிக்கு திரும்பும் வேளையில் அப்பகுதியில் ராணுவத்தினர் பதுங்கி இருப்பதை அவர்கள் இருவரும் அறியவில்லை. துவிச்சக்கரவண்டியில் தொண்டமனாறு பகுதிக்கு வரும் அவர்களை ராணுவத்தினர் மறைந்திருந்து தாக்குகின்றனர். இந்த இராணுவத்தினருடனான நேரடி சமரில் கப்டன் அலன் மற்றும் நரேஷ் இருவரும் வீரச்சாவை தழுவிக் கொள்கின்றனர். இந்த தாக்குதல் மூலமாக ஒப்பரேஷன் லிபரேஷன் முதல் சண்டை ஆரம்பிக்கின்றது. இந்த சமநேரத்தில் ராணுவம், கடற்படை, விமானப் படையினர் தொண்டமனாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, முகாமிலிருந்து புலிகளின் காவலரணை நோக்கி பாரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பாரிய தாக்குதலில் இரு பகுதியினரும் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த ராணுவத் தாக்குதலின் உக்கிரத்தால் புலிகள் தொண்டமனாறு, மயிலியதனை வல்வெட்டிதுறை நிலைகளில் இருந்து பின்வாங்கி உடுப்பிட்டி பகுதிக்கு செல்கின்றனர். இவ்வேளையில் உலங்கு வானூர்தி மூலம் மக்களுக்கு ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசுகிறது. தாக்குதல் தொடங்குவதை அந்த பிரசுரங்கள் மூலம் அறிவித்த ராணுவம், மக்களை கோயில்கள், பள்ளிக் கூடங்களில் தஞ்சமடையும் படி அறிவுறுத்துகிறது. மே 26 மாலை 6 மணி வரை சண்டை நடைபெறுகிறது. பருத்தித்துறை முகாம் ராணுவத்தால் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. மே 26 மாலை 6 மணியுடன் சண்டை ஓய்கிறது. ஆனாலும் இரவு முழுவதும் கடல் விமானம் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் எல்லாம் தாக்கப்படுகின்றன. வல்வெட்டித்துறை முகாம் உடன் தொண்டமனாறு முகாமுக்கு தரை மூலமாக முன்னேறிய போது வல்வெட்டித்துறை ராணுவத்தினரின் எறிகணை வீச்சில், வேம்படியில் லெப்டினன் யூசி வீரச்சாவை தழுவிக் கொண்டார். மே 27 அதிகாலை 6 மணி இரண்டாம் நாள் சண்டை ஆரம்பமாகியது. வடமராட்சி சுற்றியுள்ள ராணுவ முகாம்களில் இருந்து ராணுவம் ஊர் பகுதிக்குள் முன்னேறுவதற்காக கடும் தாக்குதலில் ஈடுபட்டது. ராணுவம் கம்பர்மலை, விறாச்சிக்குளம் ஊடாக வேதக்கார சுடலை ஊடாக பாரிய தாக்குதலை மேற்கொண்டு உடுப்பிட்டி வல்வெட்டித்துறை பிரதான சாலையை ஊடறுத்து சண்டையை மேற்கொண்டது. இதில் நம்மாள் தலைமையில் ராணுவத்தினருடன் பாரிய சமர் நடைபெற்றது. இதில் போராளிகள் ஜேபி, குண்டு பாலன், கடாபி, பரமு, குட்டி ஆகியோர் சிறுசிறு அணிகளாக முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருந்த வேளையில், உடுப்பிட்டி பத்தர் ஒழுங்கையில் நிலை கொண்டிருந்த மோட்டார் அணியின் தாக்குதலில் ராணுவம் பாரிய இழப்பை இரண்டாம் நாளில் சந்தித்தது. இரண்டாம் நாளில் நடைபெற்ற இந்த சமரில் தக்சன், கஜன் என இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். பின்னர் அணி பின்னோக்கி நகர்ந்து உடுப்பிட்டி யூனியன், இலந்தை காடு, வெள்ளரோட்டு பகுதியில் நிலைகளை அமைத்தனர். சமகாலத்தில் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதிகளை ராணுவம் கைப்பற்றினர். இத்துடன் இரண்டாம் நாள் சண்டை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் இரவு முழுவதும் ராணுவம் மக்கள் மத்தியில் Y12 விமானம் மூலம் நேபாம் குண்டு வீச்சு தாக்குதலிலும், பீப்பாய் மலக்கழிவு தாக்குதலிலும், எறிகணைத் தாக்குதலிலும் ஈடுபடுகிறது. மே 28 காலை மீண்டும் சண்டை ஆரம்பிக்கிறது. புறாபொறுக்கி வெள்ளை ரோட்டில், இலந்தைக்காட்டில் பாரிய சண்டை நடைபெறுகிறது. இச்சண்டையில் புலிகள் பின்வாங்கி இரும்பு மதகடியில் நிலைகளை அமைத்து பலப்படுத்தும் வேலையில் ஈடுபடுகின்றனர். இத்தருணத்தில் பெண்புலிகள் கவிதா, மாலதி தலைமையில் ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சண்டையில் இணைக்கப்படுகின்றனர். மே 29 நெல்லியடிக்கு அருகாமையில் உள்ள இரும்பு மதகடியில் காலை மீண்டும் தாக்குதல் ஆரம்பிக்கிறது. இதனுடன் உலங்குவானூர்தி குண்டுவீச்சு விமானங்கள் சகிதம் முன்னேறி வரும் ராணுவத்தினருடன் புலிகளின் பாரிய மோதல் நடைபெறுகிறது. இத்தாக்குதல் முனையில் மட்டும் 2500 இராணுவத்தினர் சண்டையில் ஈடுபட்டனர். அவர்களுடன் மொத்தமே ஐம்பது போராளிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாலி தயாரிப்பான சியாமா செட்டி விமானங்கள் மக்கள் குடியிருப்புகள் மேல் பலத்த தாக்குதலில் ஈடுபட்டது. இச்சண்டையில் புலிகளும் இராணுவத்தினரும் மிக அருகாமையில் இருந்து பலமாக மோதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலே பெண்புலிகள் நேரடி மோதலில் ஈடுபட்ட முதல் தாக்குதல். உலகிலேயே பெண்கள் மரபுவழி மோதலில் ஈடுபட்டதும் இந்த தாக்குதலே என்ற வீரமிகு பெருமை கொண்டது ஆகும். சண்டை அன்று இரவு வரை நீடித்தது. இத்தாக்குதலின் போது நெல்லியடி மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த சுக்லா, நிரூபன் அணியினர் வழங்கள் பணிகளிலும், காயப்பட்ட போராளிகளை நகர்த்துதல் பணிகளிலும் ஈடுபட்டனர். மே 30 காலை மீண்டும் சிங்களப் படையின் தாக்குதல் தொடங்கியது. விமான, உலங்குவானூர்தி தாக்குதல், மோட்டார் தாக்குதலுடன், நெல்லியடி மாலுசந்தி, மந்திகை ஆகிய இடங்களில் பாரிய தாக்குதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று வடமராட்சி ராணுவத்தினரின் கைகளில் முற்றுமுழுதாக வந்தது. இதனுடன் புலிகள் ஆனைவிழுந்தான் கண்டல் பகுதியூடாக தென் மராட்சி கொடிகாமம் மிருசுவில் பகுதிகளுக்கு பின்வாங்கி நிலை எடுத்துக் கொண்டனர். ‘வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்’ 1987 மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் 5 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்றது. இந்தப் போரில் 817 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15000க்கும் மேற்பட்டமக்கள் தமது இருப்பிடங்களை விட்டுவெளியேறி அகதிகள் ஆக்கப்பட்டனர். பிரித்தானியர் ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட முதல் மரபுச்சமராக இந்த இராணுவ நடவடிக்கை அமைந்திருந்தது. இந்தப் பாரிய இராணுவ நடவடிக்கைக்கு பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ, கேணல் விஜய விமலரத்ன ஆகியோரின் தலைமையில் பல்வேறு படையணிகளில் (பற்றாலியன்கள்) இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 8000 படையினரைக்கொண்ட இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோர் இதற்கான அரசியல் தலைமைத்துவத்தையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். சிறிலங்கா அரசின் கூட்டுப்படை நடவடிக்கைகளில் முதற்கட்டமாக எந்தவிதமான அரச எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்காத அப்பாவித் தமிழ் மக்களை சொந்தவீடுகளில் இருந்து விரட்டி அடித்து அவர்களது நிலங்களைக் கைப்பற்றும் ஒரு இனவாத நடவடிக்கையாக இது அமைந்தது. இந்த இராணுவநடவடிக்கை மூலம் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து வெளிவந்த இராணுவம் வசாவிளான், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம் பெயர்ந்தனர். இதில் பெரும்பாலான தமிழர்களின் வீடுகள் எவ்வித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடித்து அழிக்கப்பட்டன. தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள உடுப்பிட்டி, பொலிகண்டி ஆகிய கிராமங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதே அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் இலக்காகவும் இருந்தது. இந்தப்படை நடவடிக்கையில்முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த மேஜர் கோத்தபய ராஜபக்ச,மேஜர் சரத்பொன்சேகா, பிரிகேடியர் ஜி.எச்.டி.சில்வா, லெப்டினன்ட் நார்த் விக்கிரமரத்ன போன்ற முக்கியமான இராணுவ உயர் அதிகாரிகள் இத்தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர். விமானம், தரைவழி, மற்றும் கடல்வழித் தாக்குதல்கள் என மும்முனைகளிலும் படையினர் முன்னேறிச்சென்றனர். படையினர் வெறிகொண்டவர்களாக முன்னேறிச் சென்றவழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களையும் கைது செய்து கப்பலில்ஏற்றி புதிதாக இதற்காக திறக்கப்பட்டபூசா தடுப்பு முகாமுக்குஏற்றிச் சென்றனர். அங்கே கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இதுவரையில் திரும்பவேயில்லை. அதேவேளை போகும் வழியெங்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடுகள் இன்றி சுட்டும் எரித்தும் படுகொலைகள் செய்துகொண்டே சென்றனர். இடம்பெயர்ந்து சென்றவர்கள் வதிரி, புற்றளை, அல்வாய் போன்ற கிராமங்களில் சில வீடுகளிலும், ஆலயங்களிலும், பாடசாலைகளிலும் அகதிகளாக தங்கி இருந்தனர். இவ்வாறுஆலயங்களில் தங்கியிருந்தவர்களை அடையாளம் கண்டநிலையில் அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலை நோக்கி பலாலி இராணுவ முகாமில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட எறிகணைகள் விழுந்துவெடித்ததால் ஆலயத்தில் தஞ்சம்அடைந்திருந்த சுமார் 200 பேர் வரையான தமிழர்கள் உடல் சிதறிப் பலியாகினர். வடமராட்சிஎங்கும் மேற்கொள்ளப்பட்ட ‘ ஒப்பரேசன் லிபரேசன்’ தாக்குதலில் 850பேர் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதோடு 40,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தமது குடியிருப்புக்களை இழந்து அகதிகளாக்கப்பட்டனர். வடமராட்சி லிபரேசன் நடவடிக்கை தாக்குதலின் இலக்காக இருந்த வடமராட்சியில் முழுப்பிரதேசமும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறிலங்கா அரச படையினர் வடமராட்சியின் தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, நெல்லியடி பருத்தித்துறை, மந்திகை ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒவ்வொரு இடங்களிலும் சிறு சிறுமுகாம்களை அமைத்தனர். வடமராட்சியின் முக்கிய தளமாக நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் 1500இராணுவத்தினரைக் கொண்ட பாரிய முகாம் அமைக்கப்பட்டு வெற்றிவிழா கொண்டாடினார்கள். அதேவேளை இந்த இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து தெருக்களில் மனிதர்ளின் உடல்களோடு நூற்றுக்கணக்கான ஆடுகள், மாடுகள், நாய்கள் என்பனவும் இறந்து காணப்பட்டன. பல நாட்கள்வரை தெருவெங்கும் பிணவாடைகள் வீசிக்கொண்டிருந்தன. “தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்” எழுத்துருவாக்கம்: அ.சேரா உதவி ஒருங்கிணைப்பு: ஆதவன், இரவியப்பா