Search the Community
Showing results for tags 'உ. ஜெயதீபன்'.
-
Vanni Tech - வன்னியில் தமிழர்களின் சிலிக்கன் பள்ளத்தாக்கு
நன்னிச் சோழன் posted a topic in எங்கள் மண்
Tamil Naatham March 6, 2005 தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் (Information And Communication Technology) ஒரு தேசத்தின் எழுச்சியையும், இருப்பையும் தீர்மானிக்க வல்லது. இந்த வகையில் எங்கள் தமிழ்த் தேசமும் உலகின் தகவல் தொடர்பாடல் வளர்ச்சி வேகதிற்கு ஈடுகொடுத்து தனது தேவைகளை தனது சொந்தக் காலில் நின்று பூர்த்தி செய்யக் கூடிய வகையில் வல்லுநர்களை உருவாக்கும் முயற்சியின் ஒருபடியாக "வன்னிரெக்" 2003 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் ITTPO எனப்படும் சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கில் புகழ் பூத்த தகவல் தொழில் நுட்பவல்லுநரும், வன்னி ரெக்கின் முகாமை நிறுவனமான ITTPO வின் தலைவருமான இரத்தினம் சூரியகுமாரன் இதன் செயற்பாடுகள் பற்றி தெரிவிக்கையில், "இலங்கையிலும் அதற்கு அப்பாலும் மிக மதிப்புடையதும், மிகவும் அறியப் பெற்றதுமான ஒரு கல்வி நிறுவனமாக வன்னிரெக் கடந்த இரண்டரை ஆண்டுகளில் வளர்ச்சியடைந்திருப்பதைக் காண முடிகிறது. இதன் முதலாவது தொகுதி மாணவர்கள் தங்கள் கல்வியை இங்கு நிறைவு செய்து கொண்டு, பட்டமளிப்பு விழாவை ஆகஸ்ட் 2004இல் கொண்டாடினார்கள். இப்பட்டதாரிகள் அநேகமானோர் இப்பிரதேசத்திலேயே தங்கள் தங்கள் துறையில் தொழில் புரிந்து வருகிறார்கள். ஏப்ரல் 2005இல் இராண்டாவது தொகுதி மாணவர்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்து கொள்ளவிருக்கின்றார்கள். வெகுவிரைவில் அடுத்த கல்வியாண்டுக்கான தேர்வுச் செயற்பாடுகளைத் தொடங்குவோம். உலகின் பல பாகங்களையும் சேர்ந்த தொண்டர்கள் வன்னி ரெக்குக்கு தொடர்ந்து வருகை தந்து பாடநெறிகளுக்கும் தொடர்புபட்ட திட்டச் செயற்பாடுகளுக்கும் பங்களிப்பு செய்து வருகின்றார்கள். வன்னி ரெக்குக்கு வருகை தருபவர்கள் இச்சிறிய குறுகிய காலப்பகுதியில் இங்கு ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் கண்டு வியப்புற்று நிற்கிறார்கள். இத்தகைய சிறப்பு ஆற்றல் கொண்ட வேறு எந்த நிறுவனத்தையும் இந்த நாட்டில் தாங்கள் காணவில்லையென அவர்கள் கூறுகின்றார்கள். "வன்னிரெக்" எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறது. பல வழிகளிலும் பங்களிப்புச் செய்த உலகளாவிய புரவலர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருக்கே நாங்கள் இதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த நிறுவனத்தை ஒரு மதிப்புமிகு பல்கலைக்கழகமாக வளர்த்தெடுப்பதே "எங்கள் இலக்கு" என்றார் சூரியகுமார். வன்னி ரெக்கின் முதலாவது அதிபரும் ITTPO வின் பிரதான தகவல் தொழில் நுட்ப அதிகாரியுமான ஜெய் குமாரசூரியரிடம் வன்னி ரெக்கின் வளர்ச்சி மற்றும் செயற்பாடு பற்றி கேட்ட போது: "திட்டமிட்ட பாதையில் திசைமாறாமல் "வன்னிரெக்" சென்று கொண்டிருக்கிறது. சில வழிகளில் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமான வளர்ச்சியை, வெற்றியைக் கண்டிருக்கிறது. இப்படியான இதனது வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதில் பல நிபுணர்களையும் வல்லுனர்களையும் பிரபல்யமானவர்களையும் கொண்டிருந்ததில் வன்னிரெக் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டமான நிறுவனம் தான். புலம்பெயர்ந்த மற்றும் சர்வதேசத் தொண்டர்கள் தொடர்ந்தும் வன்னி ரெக்கக்கு வருகை தந்து தங்களது திறமைகளையும் புலமைகளையும் இங்குள்ள பணியாளர்களுடனும் மாணவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஜக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் ஆகியவற்றில் உள்ள சிறந்த நிறுவனங்களின் சிறந்த நிர்வாக நடைமுறைகள் வன்னி ரெக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பிரதேசத்திற்கும் நாட்டிற்குமான ஒரு மாதிரி நிறுவனமாக இது நிர்வகிக்கப்பட்டு முகாமைப்படுத்தப்பட்டு வருகிறது. வட, கிழக்கு மக்களுக்கு தொழில் நுட்ப அடிப்படையிலான ஒரு பொருளாதாரத் தளத்தை வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். ஒரு காலத்தில் இதுவே வடகிழக்கு மக்களின் முடிக்குரிய அணிகலனாயும், அமையக் கூடும்!" என்று நம்பிக்கையும் கூறினார். வன்னி ரெக்கின் ஆரம்பக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு தன்னார்வத் தொண்டர் தனது அனுபவத்தை விபரிக்கையில், "தேசியத் தலைவர் இவ்வாறானதொரு உயர்தொழில் நுட்பநிறுவனத்தை அமைப்பதையிட்டு மகிழ்ச்சியடைந்திருந்தார். சகல வழிகளிலும் ஆலோசனை வழங்கி ஊக்குவித்தார். தேசிய தலைவர் JAVA தொழில் நுட்பம் பற்றியும் அது எவ்வாறு இயங்கு தளங்களில் தங்கியிராது தொழிற்படுகிறது என்பது பற்றியும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அசைவியக்கத்தைப் பற்றியும் ஒரு தேசத்தின் சுய பொருளாதார அபிவிருத்தியில் அதன் தேவை இன்றியமையாத தன்மை பற்றியும் மிகக் கருத்தாழமிக்க உரையாடலினூடே விளக்கிய போது மகிழ்ச்சியாக இருந்தது. பன்முகப்பட்ட ஆளுமை உள்ள தலைவனின் "தலைமையில்" தமிழ்த் தேசம் தகவல் தொழில் நுட்ப உலகிலும் வீறுநடைபோடும் என்பதை உணர முடிந்தது" என்றார். வன்னி “ரெக்"கின் தாய் நிறுவனமான ITTPO வின் பணிப்பாளர் சபை: சபையின் தலைவர் ரத்தினம் சூரியகுமாரன் சபையின் செயலாளர் ஜென் சுசீந்திரன் சபையின் நிதிப் பொறுப்பாளர் ரவி வீரசிங்கம் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் அலுவலர் ஜெய்குமார சூரியர் பணிப்பாளர் பேராசிரியர் ஜே சந்திரா பணிப்பாளர் சசி பாலசிங்கம் பணிப்பாளர் ரூபன் கணபதிப்பிள்ளை பணிப்பாளர் ரூபன் நவரூபராஜா பணிப்பாளர் Dr.என்.ஏ.ரஞ்சிதன் பணிப்பாளர் சுரேன் சிவா பணிப்பாளர் Dr.எம்.சிறீதரன் கணக்காய்வாளர் தேவ் வாமதேவன் கற்கை முறைமை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் காணப்படும் முறைமைகள் இங்கு பின் பற்றப்படுகின்றது. அவற்றின் முக்கிய அம்சங்கள் வருமாறு. QUARTER SYSTEM WITH CREDITS (1 QUARTER = 10 , 4 QUARTERS G.P.A Based Grading GRADE POINT AVERAGE முறைமை செயற்றிறனை அளவிடப் பிரயோகப்படுகிறது. CONTINUOUS ASESSMENT (தொடர் மதிப்பீடு) MINIMUM GPA MAINTENANCE REQUIREMENT HANDS ON: விரிவுரைகளில் போதிப்பவை உடனடியாகவே செய்முறைப் பயிற்சியாக்கப்படுகிறது. VISITING INSTRUCTORS FROM OTHER COUNTRIES வசதிகள்: LECTURE HALLS, SOFTWARE LAB, HARDWARE LAB, NET WORKING LAB, WIRELESS LAN-WiFi (802.11b) LIBRARY, CAFETERIA, HOSTEL FACILITIES EMPLOYMENT INCUBATION CENTRE ஆகிய வசதிகள் வன்னி "ரெக்"கில் உண்டு. வன்னி ரெக்கில் இலத்திரனியல் விரிவுரையாளராக கடமையாற்றும் பொறியியலாளர் வசந்தராஜா வரோதயன் இங்கு போதிக்கப்படும் கற்கைநெறிகள் பற்றி விபரிக்கையில் "தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய உயர் தொழில்நுட்ப கற்கை நெறிகள் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இவை Computer Communication and Networking, Database Application Development, Electronics, Webbased Application Development என நான்கு பிரதான கூறுகளைக் கொண்டுள்ளன. இக்கற்கை நெறிகள் யாவும் பல்வேறு சர்வதேச வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் FIELD DEPLOYABLE PROJECT எனப்படும் உடனடியாகப் பிரயோகிக்கக் கூடிய வேலைத்திட்டத்தைச் செய்து தாம் கற்றவற்றை உடன் பிரயோகிக்கும் சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். இது அவர்களின் வேலைவாய்ப்பிற்கு பெரிதும் உதவும் என்று கூறினார். சுருக்கமாகச் சொல்வதானால் எம் முன்னாலேயே எமது காலத்திலேயே -எமது தேசத்திலேயே ஒரு MIT (Massachuset Institute of Technology) ஈழத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. எவ்வாறு இங்கு கல்வி கற்கலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இம் மாத இறுதியில் 2 ஆவது அணி தனது கற்கை நெறியை பூர்த்தி செய்கிறது. அடுத்த வாரம் புதிய அணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட இருப்பதாக அறிய முடிகிறது. www.ittpo.org உ. ஜெயதீபன்